வெள்ளி, 7 அக்டோபர், 2011

குரும்பசிட்டியில் 21 வருடங்களின் பின் பொதுமக்கள் நேற்று மீளக்குடியமர்வு

  வலி.வடக்கு குரும்பசிட்டியில் 21 வருடங்களின் பின்னர் மக்கள் மீளக்குடியமர நேற்று அனுமதிக்கப்பட்டனர். bகுரும்பசிட்டி பொன்.பரமானந்தர் வித்தியாலயத்துடன் இணைந்ததாக 200 ஏக்கர் நிலப்பரப்பு மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் எவரும் கலந்துகொள்ளாமல் அரச அதிகாரிகளும், மக்கள், பாடசாலை மாணவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இந்த ஆரம்ப நிகழ்வு குரும்பசிட்டி பொன்பரமானந்தர் வித்தியாலயத்தில் நேற்று முற்பகல்10.30 மணிக்கு தெல்லிப்பழை பிரதேச செயலர் எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ் மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்இந்த நிகழ்வில் உரையாற்றிய அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 40 ஆயிரம் மில்லியன் ரூபா இதுவரை வழங்கப்பட்டுள்ளது. யாழ்.குடாநாட்டில் கடந்த ஒரு வருட காலத்தில் 25 ஆயிரம் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.உங்களுக்கு தேவை அதிகம் இருக்கின்றது.அவற்றை உடனடியாக நிறைவேற்றாமல்விடினும் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
அங்கு உரையாற்றிய இராணுவத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க,இந்தச்சிறுவர்கள்தான் எங்களின் வளங்கள். இவர்களை உரிய முறையில் நாட்டின் அபிவிருத்திக்காக வளர்தெடுக்கவேண்டும் என்றார்.நேற்றையதினம் குரும்பசிட்டியின் ஜே/242, ஜே/243 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளே விடுவிக்கப்பட்டுள்ளன.அத்துடன் குரும்பசிட்டி பொன் பரமானந்தர் வித்தியாலயம் மற்றும் அதற்கு அருகில் அமைந்திருந்த அம்மன் கோயில் என்பன உட்பட 200 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக