வெள்ளி, 7 அக்டோபர், 2011

வெள்ளவத்தை வர்த்தகரிடம் கப்பம் கோரியவர்கள் யாழில் கைது

வெள்ளத்தை வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் கோரிய இரண்டு பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.தமிழ் வர்த்தகர் ஒருவரிடம் 25 லட்ச ரூபா கப்பம் கோரப்பட்டதாகவும், கப்பம் கோரிய இருவரும் தமிழர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.பிள்ளைகளைக் கடத்திச் சென்று கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து கப்பம் கோரப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த இருவரும், வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு போன்ற பிரதேசங்களில் உள்ள தொலைபேசிகளின் ஊடாக மிரட்டல் விடுத்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரும் முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் ஐந்து லட்ச ரூபா கப்பம் பெற்றுக் கொண்டுள்ளனர். தனது மைத்துனர் ஒருவரிடம் சந்தேக நபர்களில் ஒருவர் இவ்வாறு கப்பம் பெற்றுக் கொண்டுள்ளார்.சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக