இந்த படத்தில் இருப்பவர் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக் சந்திரகுமார் அவர்கள். இந்நிலையில் ரமிழ்வின் கோமாளி விண்ணர்கள்
என்ன செய்தி போட்டிருக்கிறார்கள் என்பதையும் பாருங்கள்.
பாராளுமன்ற நவராத்திரி விழாவில் அரசாங்கத் தமிழ் அமைச்சர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை
இலங்கை பாராளுமன்றத்தில் இன்று நவராத்திரி விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியைத் தவிர வேறெந்த தமிழ் அமைச்சர்களோ பாராளுமன்ற உறுப்பினர்களோ கலந்துகொள்ளவில்லை.
இன்று வியாழக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் பூஜைகள் ஆரம்பமாயின. இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் சிங்கள, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
எனினும் அரசாங்க தரப்பின் சார்பாக பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய தமிழ் அமைச்சர்களோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ எவரும் கலந்துகொள்ளாமை குறித்து விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வருகை தந்திருந்த உயர் அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக