வெள்ளி, 7 அக்டோபர், 2011

ரூ.2,276 விலையில் மலிவான கம்ப்யூட்டர்: இந்தியாவில் அறிமுகம்!

புதுடெல்லி:இந்தியாவில் மாணவர்களுக்கு பாதி விலையில் கம்ப்யூட்டர்களை வழங்க மத்திய அரசு திட்டமிட்டது. இதைத்தொடர்ந்து `டாடா விண்ட்' என்ற கம்ப்யூட்டர் நிறுவனத்துக்கு முதல் கட்டமாக 1 லட்சம் கம்ப்யூட்டர்கள் (லேப்டாப்) உற்பத்தி செய்ய மத்திய அரசு ஆர்டர் வழங்கியது.

இந்த நிறுவனம் தயாரித்துள்ள கம்ப்ïட்டர் நேற்று டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகிலேயே மிகவும் விலை குறைந்த இந்த கம்ப்யூட்டருக்கு, `ஆகாஷ்' என்று பெயரிடப்பட்டு இருக்கிறது.இந்த விழாவில் மத்திய மனிதவளத்துறை மந்திரி கபில் சிபல் கலந்து கொண்டு, 7 அங்குல அகல தொடு திரை மற்றும் வீடியோ வசதி கொண்ட நவீன கம்ப்ïட்டரை அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

மாணவர்களின் தொழில் நுட்ப திறனை அதிகரிக்க வேண்டும் என்றும், கிராம மாணவர்களுக்கும் நகர மாணவர்களைபோல அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இந்த கம்ப்ïட்டரின் விலை தற்போது ரூ.2,276 ஆகிறது. இது, பாதி விலையில் மாணவர்களுக்கு, வரும் 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் வழங்கப்படும்.

கூடுதலாக மேலும் 10 லட்சம் கம்ப்ïட்டர்களை உற்பத்தி செய்ய கம்ப்யூட்டர் நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுக்க இருக்கிறோம். அப்போது இதன் விலை ரூ.1,750 ஆக இருக்கும். ஒரு கம்ப்யூட்டரின் விலையை 500 ரூபாய்க்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த கம்ப்ïட்டர்கள் 9-வது வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு கபில் சிபல் பேசினார். நிகழ்ச்சியில் அவர், சில மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினார். மத்திய மனித வளத்துறை ராஜாங்க மந்திரி டி.புரந்தேஸ்வரியும் கலந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக