வெள்ளி, 7 அக்டோபர், 2011

விஷாலும் திரிஷாவும் ஆசை நிறைவேறியது

விஷாலும் திரிஷாவும் மிக நெருங்கிய நண்பர்கள். ஏன்...? இவர்கள் இருவரையும் வைத்து பல கிசுகிசுக்கள் வந்துள்ளது. இவர்கள் இதுவரை சேர்ந்து நடித்ததில்லை. அப்படியிருந்தும் கிசுகிசுக்கள் வந்தது என்றால் இவர்கள் நட்பை நாம் புரிந்துகொள்ள முடியும்.


விஷால் நடித்து ஹரி இயக்கிய படம் தாமிரபரணி. இந்த படத்தில் நாயகியாக நடிக்க வேண்டியவர் திரிஷா தானாம். ஆனால் அது நடக்காமல் போனது. திரிஷாவுடன் இருக்கும் நெருக்கமான நட்பை திரையிலும் காட்ட வேண்டும் என்பது விஷாலின் நீண்ட நாள் ஆசை. அது இப்போது தான் நிறைவேறி இருக்கிறது.
விஷால் அடுத்து நடிக்கும் சமரன் படத்தில் திரிஷா தான் ஹீரோயின். படத்தின் இயக்குனர் திரு. இவர் விஷால் நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் இயக்குனர். 

விஷால் விரைவில் ஒரு நேரடி தெலுங்கு படத்திலும் நடிக்க இருக்கிறார். தமிழுக்கும் அந்த கதைக்கும் சம்பந்தம் இல்லையாம். பாலாவின் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக