வெள்ளி, 7 அக்டோபர், 2011

டெல்லியில் ஆன்ட்டியிடம் பேசிவிட்டோம்

‘‘கருணாநிதி டெல்லி போவதாக இருந்தாரே... எப்ப போகப்போகிறாராம்...?’’

‘‘கனிமொழியின் ஜாமீன் மனு ஒன்றாம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டால் டெல்லி போக வேண்டியது இருக்கும் என்று நம்பினார். அதனால் தன்னுடைய காரைக்கூட முன்கூட்டியே டெல்லிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் ஜாமீன் மனு 17-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதால் டெல்லி போவதை ரத்து செய்துவிட்டார். கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தால் அவர் டெல்லி போகலாம் என்கிறார்கள்.’’
‘‘டெல்லியில் கனிமொழி வெளியே... தயாநிதி உள்ளே என்று பேசிக்கொள்கிறார்களாமே...’’

‘‘கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மீண்டும் கைதானால் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிடும் என்று சொல்கிறார்கள். ஆனாலும் தயாநிதிக்கு வந்த ஆபத்து இன்னும் நீங்கவில்லை என்றே டெல்லி தகவல்கள் சொல்கிறது. வரும் 10-ம் தேதியை ஒட்டி அடுத்த குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் ஆவதற்கு முன்பே கூட தயாநிதி மாறன் கைதாகலாம் என்று சொல்கிறார்கள்.’’
‘‘ஆனால் தயாநிதி தரப்பில் வேறு மாதிரி சொல்கிறார்களே...’’ ‘‘அவர்கள் ‘டெல்லியில் ஆன்ட்டியிடம் பேசிவிட்டோம். எந்த பிரச்னையும் இல்லை’ என்று சொல்லி வருகிறார்கள். கூடவே ‘தமிழகத்திலும் பவர் சென்டரில் இரு ப்பவர்களுடன் பேசிவிட்டோம். விரைவில் பிரச்னை தீர்ந்துவிடும்’ என்று தைரியமாகச் சொல்லி வருகிறார்கள். உண்மையில் பவர் சென்டரில் இருக்கும் யாரும் இவர்களுடன் பேசவில்லையாம். இது போலதான் டெல்லி ஆன்ட்டி விவகாரமும் இருக்கலாம் என்று சொல்கிறார்கள்’’

thanks kumudam+hari

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக