சனி, 8 அக்டோபர், 2011

அநன்யாவின் அஜீத் சூர்யா கனவு!

    பொதுவாக நாயகிகள் ஒரு படம் நடித்து ஹிட்டாகிவிட்டால் அடுத்து அஜீத், சூர்யா, விக்ரம் என பெரிய ஹீரோக்கள் தான் கனவில் வருவார்கள். அதே போல் அநன்யாவுக்கும் அந்த ஆசை வந்துள்ளது.
நாடோடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அநன்யா. சீடன் படத்தில் தனுசுடன் நடித்தார். சீடன் மலையாலத்தில் ஹிட் படம். ஆனால் தமிழில் தோல்வியடைந்தது.
சமீபத்தில் வெளியான எங்கேயும் எப்போதும் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார் அநன்யா. இப்படம் ஹிட்டானதால் அனன்யாவுக்கு மேலும் தமிழ் பட வாய்ப்புகள் குவிகிறது. அவரும் சந்தோஷத்தில் இருக்கிறார்.
இதுபற்றி அனன்யா கூறும்போது மலையாளத்தில் நான்கு படங்கள் கைவசம் உள்ளன. ஒரு தமிழ் படத்திலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கிறேன். எங்கேயும் எப்போதும் படம் ஹிட்டானது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்துக்கு பின் எனக்கு நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வருகின்றன. அஜித், சூர்யா போன்றோருடன் நடிக்க ஆர்வம் உள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக