வெள்ளி, 7 அக்டோபர், 2011

பிரதிபா பாட்டீலுக்கு ரூ.6 கோடியில் அதிநவீன கார் தேவையா?


புதுடெல்லி : மக்களிடம் ஏழ்மை தலைவிரித்தாடும் நிலையில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு ஸி6 கோடியில் அதிநவீன கார் தேவையா என்று பா.ஜனதா எம்.பி. வருண் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து, டுவிட்டர் இணையதளத்தில் வருண் காந்தி கூறியிருப்பதாவது: ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு மத்திய அரசின் சார்பில் அதிநவீன வசதிகள் கொண்ட மெர்சிடிஸ் கார் வாங்கப்பட்டுள்ளது. இதில் கூட்டங்கள் நடத்துவதற்கான இட வசதி உள்ளது.
 ராணுவத்தில் பயன்படுத்தப்படும் சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் கையெறி குண்டுகளால் பாதிக்காத வகையில் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன தகவல் தொடர்பு சாதனங்கள், தீயணைப்பு கருவிகள், சுற்றுவட்டாரத்தில் விஷவாயு பரவி இருந்தாலும் காருக்குள் சுத்தமான காற்று வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் மதிப்பு ஸி6 கோடி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வறுமையில் வாடுகின்றனர். வறுமைக்கோட்டுக்கான வரம்பு ஒரு நாளுக்கு ஸி32 என்று நிர்ணயிக்கப்படுகிறது. அந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கைத் தரம் உள்ளது. இப்படிப்பட்ட ஏழ்மையான இந்தியா போன்ற நாட்டில் அதன் ஜனாதிபதிக்கு ஸி6 கோடியில் கார் தேவைதானா?

எனவே, ஆடம்பர செலவுகளை குறைத்து, மக்களின் ஏழ்மையை போக்கி, அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்த மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு வருண் காந்தி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக