சனி, 10 ஜூலை, 2021
இலங்கை வடக்கில் தலைதூக்கும் வன்முறை குழு மோதல்கள்
கோண்டாவில், செல்வபுரம் பகுதியில் ஜூன் 30ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில், ஒருவரின் கை துண்டாடப்பட்டதுடன் எட்டுப் பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார், மூவரைக் கைது செய்திருந்தனர்.அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் ,
‘ஆவா’ என்ற வன்முறை குழுவில் இருந்து சிலர் பிரிந்து, ‘லீ’ என்ற வன்முறை குழுவை ஆரம்பித்து உள்ளனர் எனவும் அந்தக் குழுவுக்கு உத்வேகம் அளிக்கும் பாடலை உருவாக்கி இணையத்தில் பதிவேற்றியமையால் தான் ‘லீ’ குழுவை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு , பாடல் உருவாக்கிய கலையகத்தையும் (ஸ்டூடியோ) தீயிட்டு கொளுத்தியதாக வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவுக்கு பண உதவிகள், வெளிநாட்டில் இருந்து குறிப்பாக, சுவிஸ் நாட்டில் இருந்து கிடைக்கப்பெறுவதாக பொலிஸார் கூறியிருந்தனர்.
பனியாக்களின் நோக்கம் கொங்கிஸ்தான்! (கொங்குநாடு அல்ல) முதலைகளுக்கு முழுங்கும் ஆசை வந்துவிட்டது!
Vivekanandan Ramadoss : கோவை, திருப்பூர் மக்கள் தினமலரின் பொறுக்கித்தனத்திற்கு கடும் எதிர்ப்பைக் காட்ட வேண்டியது அவசியம்.
ஏற்கனவே ஜி.எஸ்.டி யால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் கொங்கு மண்டல சிறு, குறு தொழில் நிறுவனங்களை அழிக்கும் சதியே கொங்குப் பகுதியை யூனியன் பிரதேசமாக்கும் விவாதம்.
ஏற்கனவே கோவையின் தொழில் தமிழர்களிடம் இருந்து பறிபோய்க் கொண்டிருக்கிறது.
யூனியன் பிரதேசமாகும் பட்சத்தில் மக்கள் பிரதிநிதிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு கொங்குப் பகுதி வட மாநில பனியாக்களின் கோட்டையாகவே மாறும்.
ஒரு யூனியன் பிரதேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு எந்த அதிகாரமும் இருக்காது என்பதற்கு பாண்டிச்சேரியும், டெல்லியும் சமகால சாட்சிகளாக இருக்கின்றன.
ஒன்றிய அரசால் தற்போது நியமிக்கப்பட்ட அமைச்சர்களில் 7 அமைச்சர்கள் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். உத்திரப் பிரதேசம் பெரிய மாநிலமாக இருப்பதில் அவர்களுக்குள்ள பாசிடிவ் இது. 39 எம்.பிக்கள் இருக்கும்போதே தமிழ்நாட்டு எம்.பிக்களால் தமிழர்களுக்கு எதிரான ஒன்றிய அரசின் திட்டங்களை தடுக்க முடிவதில்லை.
இந்த நிலையில் 10 எம்.பிக்களை வைத்துக் கொண்டு எந்த உரிமையை மாநிலத்திற்கு பெற முடியும்.
கொங்குநாடு தனி யூனியன் பிரதேசமாகிறது .. மேற்கு மண்டலம் .. தினமலர்
தினமலர் :மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என, தி.மு.க.,வினர் கூறி வருவதால் கடும் அதிருப்தியில் உள்ள மோடி அரசு, அதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
தமிழகத்தின் மேற்கு பகுதியான கொங்கு மண்டலத்தை, 'கொங்கு நாடு' என்ற பெயரில், தனி யூனியன் பிரதேசமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை துவக்கியுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்குப் பின், அரசியல் களம் மந்த நிலையை நோக்கிச் செல்லும் என அனைவரும் நினைத்த நேரத்தில், பா.ஜ., மேலிடத்தின் அடுத்தடுத்த நகர்வுகள், அதை சூடு பிடிக்க வைத்துள்ளன.
புதிதாக பதவியேற்ற தமிழக அரசு, ஜி.எஸ்.டி., கூட்டத்தில் எதிர்ப்பு, 'நீட்' தேர்வின் தாக்கத்தை ஆய்வு செய்ய குழு அமைத்தது என, மத்திய அரசுடன் மோதல் போக்கை பின்பற்றி வருகிறது. இதன் உச்சகட்டமாக தமிழக சட்டசபையில், 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையை களங்கப்படுத்தி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் உறுப்பினர் ஈஸ்வரன் பேசியது, மத்திய அரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒன்றிய புதிய அமைச்சரவை..42% பேர் மீது கிரிமினல் கேஸ்,90% கோடீஸ்வரர்கள்..இவர் ஒருவரது சொத்து மட்டும் 380கோடி
Vigneshkumar - tamil.oneindia.com : டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை சில நாட்களுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், புதிய அமைச்சரவையில் உள்ள 42% பேர் மீது கிரிமனல் வழக்குகளும், 90% பேர் கோடீசுவரர்கள் என்றும் ஜனநாயகத்திற்கான சீர்திருத்த அமைப்பு (ADR) தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி இரண்டாவது முறையாகக் கடந்த 2018ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தது முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது அமைச்சரவை எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்ததது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.
சுமார் 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவி விலகினர்.
புதிய அமைச்சரவை புதிய அமைச்சரவை மேலும், 43 பேர் புதிதாக அமைச்சர்களாகப் பதவியேற்றனர். புதிய அமைச்சரவையில் மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகமாக இருந்தது.
தமிழ்நாட்டில் இருந்து எல் முருகன் இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஏற்கனவே இணை அமைச்சராக இருந்த சிலர் கேபினெட் அமைச்சராகப் பதவி உயர்வைப் பெற்றனர்.
திமுகவில் இணையும் தோப்பு வெங்கடாசலம்
நக்கீரன் செய்திப்பிரிவு : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவை அடுத்து திமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், சமீபகாலமாக திமுகவில் மாற்று கட்சியினர் தங்களை இணைத்துக் கொண்டுவருகின்றனர்.
நேற்றுமுன்தினம் (08.07.2021) மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறிய டாக்டர் மகேந்திரன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர். இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நாளை திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உட்பட 300 பேருடன் நாளை காலை 10.30 மணிக்கு அவர் திமுகவில் இணைய உள்ளார் எனக் கூறப்படுகிறது.
கொங்கு நாடு பிரிவினையில் கனிமவள அரசியல்
பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு முந்தைய வரலாற்றில் இந்தியா என்ற பெயர் கிடையாது. ஆனால், சங்க இலக்கியங்களிலும், பிரிட்டிஷ் கால படைப்புகளிலும் தமிழ்நாடு என்ற பெயர் இருந்துள்ளது. பழம்பெருமையையும், வரலாற்றையும் கொண்டது தமிழ்நாடு. உலக மொழிகளிலேயே, குறியீடு, கல்வெட்டு, ஓலைச்சுவடி, பட்டயங்கள், அச்சு, கணிணி மொழி என்று அனைத்து காலத்திலும், அறிவியல் வளர்ச்சியிலும் தனிச்சிறப்பைப் பெற்றது தமிழ் மொழி.
திராவிட மாடல்' வளர்ச்சிக்கு உதவுவீர்: பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
hindutamil.in : அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் ‘திராவிட மாடல்’ வளர்ச்சி. அந்த நோக்கத்துடன் தமிழ்நாடு வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமூகநீதி - சமத்துவம் - சுயமரியாதை - மொழிப்பற்று - இன உரிமை - மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடிதளத்தில் நிற்கும் இயக்கம் தான் திமுக. நமது வளர்ச்சி என்பதும் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’க் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அக்குழுவின் உறுப்பினர்கள் எஸ்தர் டஃப்லோ,.ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன், ஜீன் டிரீஸ், திரு.எஸ்.நாராயண், தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
சசிகலா : தோற்றுவிட்டேன் என்று ஜெயலலிதா அழுதார்... வீட்டுக்கு வந்து மோடி கேட்டும் மறுத்தார் - வெளிப்படையாக நினைவுகளை
News18 Tamil : சொத்துகுவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்துள்ள சசிகலா அ.தி.மு.க கட்சித் தொண்டர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்ந்து பேசிவருகிறார்.
அந்த தொலைபேசி உரையாடலின் போது மீண்டும் அ.தி.மு.க தலைமைப் பொறுப்பை ஏற்பேன் என்று கூறிவருகிறார்.
அதனால், அ.தி.மு.கவில் சலசலப்பு ஏற்பட்டுவருகிறது. இந்தநிலையில், தி விக் ஆங்கில வார இதழுக்கு சசிகலா பேட்டியளித்தார்.
அந்தப் பேட்டியில் ஜெயலலிதாவுடனான ஆரம்ப கால நட்பு முதல் ஜெயலலிதாவின் இறுதி நாள் வரை பல்வேறு நிகழ்வுகளை சசிகலா பகிர்ந்துள்ளார்.
அதில், ‘எம்.ஜி.ஆரின் இறந்த செய்தி அறிந்து நானும், அக்காவும்(ஜெயலலிதா) வேகமாக ராமாவரம் தோட்டத்துக்கு விரைந்தோம்.
அப்போது அங்கே கதவு மூடப்பட்டிருந்தது. நாங்கள் அதனை உடைத்து திறந்தோம். அப்போது அக்கா அழுது கொண்டிருந்தார்.
தமிழ்நாடு பாஜகவில் கர் புர் .. காத்திருந்தவன் பெண்டாட்டிய நேத்து வந்த ....
Prakash JP : கமலாலயத்திலிருந்து ஏகப்பட்ட "கர் புர்" சத்தங்கள் காதை துளைக்கின்றன...
மத்திய அமைச்சரவை மாற்றம் தான் அதற்கு காரணமாம்.
காலம் காலமாக தமிழ்நாட்டில் கட்சி வளர்த்த நாடார் மக்கள் பாஜக மீது ஏக கோபத்தில் இருக்கிறார்களாம்.
ஏற்கனவே நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் போன்றவர்களுக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கிய போதும் நாடார் புள்ளிகள் பொறுமையாக அமைதி காத்தார்களாம்.
ஆனால் தற்போது முருகனுக்கு மட்டும் இணை அமைச்சர் பதவி வழங்கிவிட்டு தங்களை புறக்கணித்து விட்டதாக புலம்புகிறார்களாம்.
காலம் காலமாக கட்சிக்கு உழைத்த பொன்னாருக்கு கடைசி வாய்ப்பாக இந்த முறை அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நினைத்து இருந்த நிலையில்,
மூத்த தலைவர் பொன்னருக்கே அமைச்சர் பதவி தராதது நாடார்கள் மத்தியில் ஏகப்பட்ட புகைச்சலை கிளப்பி உள்ளதாம்.
தமிழிசைக்கு அமைச்சர் பதவி கொடுக்காமல் டம்மியான கவர்னர் பதவி கொடுத்தது கூட உள்நோக்கம் கொண்டதோ என்று தற்போது சந்தேகத்துடன் பார்க்கிறார்களாம் நாடார் புள்ளிகள்.
மாநில தலைவர் பதவியையும் அண்ணாமலைக்கு வழங்கியிருப்பதை பார்க்கும் போது தங்களை கை கழுவி விட்டு கொங்கு பக்கம் மொத்தமாக பாஜக திசை திரும்பி விட்டதாக கருதுகிறார்களாம்
பங்களா தேசம் தொழிற்சாலை தீவிபத்து 52 பேர் உயிரிழப்பு
மாலைமலர் : தொழிற்சாலையில் தீப்பிடித்ததால் தொழிலாளர்கள் உயிருக்குப் பயந்து மாடியில் இருந்து கீழே குதித்ததில், சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
24 மணி நேரமாக பற்றி எரியும் தொழிற்சாலை- 52 பேர் உயிரிழப்பு
தொழிற்சாலை தீப்பற்றி எரிவதால் எழுந்த கரும்புகை
வங்காளதேச தலைநகர் டாக்கா அருகே உணவு மற்றும் குளிர்பானம் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தொழில்துறை நகரமான ரூப்கஞ்சில் உள்ள அந்த தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் ஊழியர்கள் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தபோது, தொழிற்சாலையின் ஒரு பகுதியில் தீப்பற்றி, பின்னர் மளமளவென பரவியது.
இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் மேல் தளங்களில் உள்ள ஊழியர்களால் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். உயிருக்குப் பயந்து பலர் மாடியில் இருந்து கீழே குதித்தனர். இதில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
திமுக ராஜ்யசபா லிஸ்டில் டாக்டர் கனிமொழியும் உள்ளார் ... (என் வி நடராசன் பேத்தி)
tamil.oneindia.com : சென்னை: திமுகவில் ஒரு முக்கியமான விஷயம் கசிந்து வருகிறது.. அதுவும் கனிமொழி என்பவரின் பெயர் உச்சரிக்கப்பட்டு வருகிறது..
யார் இந்த கனிமொழி? என்ன காரணம்? தமிழகத்தில் ராஜ்ய சபா உறுப்பினர் பதவி காலியாக இருக்கிறது.. ஒரே சமயத்தில் இதற்கான அறிவிப்புகள் வெளியானால், 2 இடங்களை திமுக கூட்டணியும் ஒரு இடத்தை அதிமுகவும் கைப்பற்றும் வாய்ப்பு இருக்கிறது.
அல்லது தனித்தனியே வெளியானால் 3 இடங்களையுமே திமுகவே கைப்பற்றும்..
அப்படி தங்களுக்கு கிடைக்கும் 3 இடங்களில் ஒன்றை காங்கிரஸுக்காக திமுக விட்டு தரலாம் கொடுக்கலாம் என்கிறார்கள்
அப்படி ஒரு இடம் கிடைத்தால், தமிழகத்திலிருந்து குலாம் நபி ஆசாத்தை மாநிலங்களவைக்கு அனுப்ப காங்கிரஸ் தரப்பில் ஒரு யோசனை இருக்கிறது..
திமுக தரப்பிலிருந்து யாரை அனுப்புவது என்ற ஆலோசனையும் நடந்து வருகிறது. இதற்கு நிறைய பெயர்கள் லிஸ்ட்டில் உள்ளன.. கொங்கு மண்டலத்தை சேர்ந்த கார்த்திகேய சிவசேனாதிபதிக்கு நிறைய சான்ஸ் உள்ளதாம். காரணம், எஸ்வி வேலுமணிக்கு கடைசிவரை தொகுதிக்குள் டென்ஷனை ஏற்படுத்தியவர்.
21 எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு அரசு விருதும், ஊக்கத்தொகையும் வழங்கியது
மின்னம்பலம் : சென்னை தலைமை செயலகத்தில் 21 எழுத்தாளர்களுக்கு சிறந்த படைப்புக்கான விருது மற்றும் ஊக்கத்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
ஆண்டுதோறும் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பாக சிறந்த படைப்புகளை அடையாளம் கண்டு விருதும், ரூ.40,000 ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2018-2019 மற்றும் 2019-2020ஆம் ஆண்டிற்கு தேர்வான 21 சிறந்த படைப்புகளின் எழுத்தாளர்களுக்கு சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் முதல் தவணைத் தொகையாக தலா இருபதாயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தார்.
விருதுபெற்ற எழுத்தாளர்கள்
முனைவர் ந.அறிவரசன்- கபிலரின் செயற்கையற்ற வாழ்வும் மொழிநடையும்,
திருமதி.எஸ்.வசந்தா -திருக்குறளில் பௌத்தம்
திரு.எம்.பிரேம்குமார்-மாமன்னர் அசோகர்
திமுக ! ஒரு பிளேன் டீ தொண்டனின் ஆதங்கம்
தலைமைக்கு கருத்து சொல்லும் அளவிற்கெல்லாம் எமக்கு அரசியல் முதிர்ச்சியும், அனுபவமும் கிடையாது. ஆனாலும் மனது முழுவதும் ஒரு சில காயங்கள் ஆறாமல் இருக்கிறது, அதனை சரி செய்ய வேண்டும் எனும் நோக்கத்தில் தான் இந்தப்பதிவு
மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களை நாம் மனதார வரவேற்கிறோம்
அதில் மாற்றுக் கருத்து இல்லை, இன்றைக்கு கமலஹாசன் கம்பெனியிலிருந்து திமுகவிற்கு வந்தவர்கள் கமலஹாசன் கம்பெனி ஆரம்பிப்பதற்கு முன்பு எங்கு இருந்தார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
இன்று இவர்கள் வந்திருப்பது முழுக்க முழுக்க நாம் ஆட்சியில் இருக்கிறோம் எனும் ஒற்றை காரணம் தவிர வேறு எதுவும் இருக்காது,
ஆனால் பிறந்ததிலிருந்து திமுக, தாத்தா காலத்தில் இருந்து திமுக என்று இருப்பவர்களை அரவணைத்து செல்லாத மாவட்ட செயலாளர்களையோ, நாம் தோல்வியடைந்த இடங்களில் தோல்விக்கு காரணமானவர்களையோ தலைமை எந்த கேள்வியும் கேட்காமல், கோஷ்டிப் பூசலை சரி செய்யாமல், உட்கட்சி பிரச்சினைகளை ஆதாரங்களோடு சேகரித்து அதற்கான நடவடிக்கை எடுக்காமல், நாம் மாற்றுக் கட்சியினரை இங்கே இழுத்து பிடிப்பதெல்லாம் தேவையில்லாத வேலை
வெள்ளி, 9 ஜூலை, 2021
சாராவின் உடல் .. சாராவின் உரிமை (its sara’s body. Its sara’s choice)
Yazh V M சாராவின் உடல் .. சாராவின் உரிமை (its sara’s body. Its sara’s choice)
குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா? வேண்டாமா?
என்பதை ஒரு பெண் தான் முடிவெடுக்க வேண்டும் என பெண்ணின் reproductive rights பற்றி அழுத்தமாகவும் தெளிவாகவும் பதிவு செய்திருக்கும் மலையாளத் திரைப்படம்
Amazon prime-இல் வெளியாகி இருக்கும் Sara’s.
தனக்குக் குழந்தை வேண்டாம் என இளம் வயதிலிருந்தே நினைக்கும் சாரா, கர்ப்பம் ஆவதிலிருந்து குழந்தை பிறப்பது வரை அனைத்தையும் கெட்ட கனவாக நினைக்கும் சாரா,
தன் முடிவிற்காகவே சில பல relationships-ஐ breakup-உம் செய்கிறார்.
ஒரு பெரிய film maker ஆக வேண்டும் என்பதை வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருக்கும் அவர், தன்னைப் போல இயல்பாகவே குழந்தைகள் மீது அவ்வளவு விருப்பமில்லாமல் இருக்கும் ஜீவன் என்பவரை சந்திக்கிறார்.
இருவருக்கும் அதுவே ஒரு பெரிய sync-ஐ ஏற்படுத்த, காதலில் விழுந்து,
காதலில் சில observations-ஐ அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேளையிலேயே, குடும்ப அழுத்தத்தினால், திருமணம் என்ற கட்டமைப்பிற்குள் சிக்க வலியுறுத்தப்படுகின்றனர்.
பனகல் அரசர் வாழ்வும் பணியும்.. 1921 முதலே வேலை வாய்ப்பில் வகுப்புரிமைக்கு பாடுபட்டார்
வாலாசா வல்லவன் : பனகல் அரசரின் இயற்பெயர் இராமராயநிங்கார் என்பதாகும்.
பழைய சென்னை மாகாணத்தில் குண்டூர் மாவட்டத்தில் இருந்த பனகாலு என்ற ஜமீன் குடும்பத்தில் 9.7.1866இல் இவர் பிறந்தார்.
இளமையில் தெலுங்கையும், சமற்கிருதத்தையும் இவர் காள அஸ்தியில் பயின்றார்.
ஆங்கிலக் கல்வி கற்பதற்காக இவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். முதலாம் படிவத்தில் (ஆறாம் வகுப்பு) திருவல்லிக் கேணி பெரியதெருவில் உள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்க்க முயன்றனர். திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளி தெலுங்கு மொழி பார்ப்பனர்களால் நடத்தப்பட்டு வந்தது. இவர் பார்ப்பனரல்லாதார். எனவே அங்கு இவரைச் சேர்த்துக்கொள்ள மறுத்தனர். பின்பு சர்.பிட்டி. தியாகராயர் நேரில் வந்து இவரை அப்பள்ளியில் சேர்த்துவிட்டுச் சென்றார்.
அப்பள்ளியில் இவர் சிறப்பாகப் படித்துப் பதினொன்றாம் வகுப்பில் அப்பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார்.
சர்.பிட்டி. தியாகராயர் நேரில் வந்து இவரைப் பாராட்டினார். இச்செய்தியை தியாகராயர் இறந்தபோது சட்ட மன்றத்தில் நடந்த இரங்கல் கூட்டத்தில் பனகல் அரசர் நினைவு கூர்ந்தார்.
கவிஞர் தாமரைக்கு பேராசிரியர் சுப வீரபாண்டியன் வழக்கறிஞர் அறிவிக்கை
- சுப. வீரபாண்டியன்
எந்த ஆதாரமும் இல்லாமல் தொடர்ந்து என்னைப் பற்றி அவதூறுகளைச் சமூக வலைத்தளங்களிலும், நேர்காணல்களிலும் பரப்பிக் கொண்டிருக்கும் கவிஞர் தாமரை அவர்களுக்கு, இன்று (09.07.2021) உயர்நீதிமன்ற வழக்கறிஞர் குமாரதேவன் மூலம் 'வழக்கறிஞர் அறிவிக்கை' (Lawyer's Notice) அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும் என்றும், தவறினால், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மீது, சுப. வீரபாண்டியன் ஆகிய என் சார்பில், மானநட்ட வழக்குத் தொடரப்படும் என்றும் அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது
கவிஞர் தாமரைக்கும் அவரது கணவர் தியாகுவுக்கும் இடையே உள்ள பிரச்சனையில் பேராசிரியர் சுப வீரபாண்டியனையும் அவர் வீணாக இழுத்துவிடுவது எந்த நியாயமும் இருப்பதாக தெரியவில்லை. இது முழுக்க முழுக்க தாமரைக்கும் தியாகுவுக்கும் இடையேயான குடும்ப பிரச்சனைதான்.
Flash Back :வெள்ளி, 9 ஜூன், 2017 subavee.con
:"சுபவீயை வெளுத்த தாமரை" என்று தலைப்பிட்டு மகிழ்ந்துள்ளது இவ்வாரம் வெளிவந்துள்ள குமுதம் ரிப்போர்ட்டர்(02.06.2017). சென்ற வாரமே சமூக வலைத்தளங்களில், கவிஞர் தாமரையின் இந்தப் பதிவேற்றத்தை நான் பார்த்தேன். அவரே எழுதியிருப்பாரா அல்லது அவரது பெயரில் யாரேனும் (Fake id) பதிவிட்டிருப்பார்களா என்ற ஐயத்தை நண்பர்கள் சிலர் எழுப்பினர். எப்படியிருந்தாலும் அது குறித்துப் பெரிதாகக் கவலை கொள்ள வேண்டாம் என்று தோன்றியது. அதனால் அதனை அமைதியாகக் கடந்து போய்விட்டேன்.
தமிழ்நாட்டில் தி மு க தோன்றிய காலத்திலேயே இலங்கை திமுக தோன்றியது
Manavai Asokan : இன்றைய தினம் 9 /7/ 21 யாழ்ப்பாணத்தில் வெளிவரும் " காலைக்கதிர் " பத்திரிக்கையில் என்னுடைய. தந்தையார். மறைந்த. திரு. ஏ. எஸ். மணவைத்தம்பி ஜயா அவர்கள் இலங்கையில் இருந்து தமிழ்நாடுக்கு புறப்பட்டுச் செல்லும் படம்
வெளியாகியுள்ளது. ஆசிரியர் அவர்களுக்கு நன்றி : மணவை அசோகன்.
Radha Manohar : தங்களின் தந்தையரின் இலங்கை திராவிட முன்னேற்ற கழகம் பற்றிய வரலாற்று செய்திகளை பதிவிட்டால் மிகவும் நன்று . இது விடயத்தில் பலருக்கும் தெரியாத செய்திகள் தங்களுக்கு தெரிந்திருக்கும் தங்களின் வரலாற்று சான்றாக நல்ல படங்களும் இருக்கும் என்றெண்ணுகின்றேன் .
Manavai Asokan : Radha Manohar அண்ணனுக்கு. வணக்கம். சில ஆய்வுகளை தேடிக் கொண்டு உள்ளேன்.. சந்தர்ப்பம் வரும் வேளையில் நிச்சயம் வெளியிடுவேன்...நன்றி. மணவை அசோகன்.
Radha Manohar : Manavai Asokan இலங்கையில் திராவிட முன்னேற்ற கழகம் இருந்தது என்ற செய்தியே இன்று மக்களுக்கு தெரியவில்லை. இலங்கை வரலாற்றில் இ தி மு க ஒரு அழுத்தமான பாத்திரத்தை வகித்திருக்கிறது
அதன் தோற்றமும் அது முன்னெடுத்த அரசியலும் சமூக விழிப்புணர்வும் காலவெள்ளத்தில் மறக்கடிக்க படக்கூடாது யாழ்ப்பாணத்தில் நடந்த சத்தியாகிரகத்தில் தங்கள் தந்தை உட்பட தலைவர் இளஞ்செழியன் போன்றோர் கலந்து கொண்டிருக்கிறார்கள் இலங்கையின் பல பாகங்களிலும் .வடபகுதியிலும் கூட பல கூட்டங்களை நடத்தி இருக்கிறார்கள்
இது பற்றிய ஒரு வரலாற்று பதிவாக ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூரும் நிகழ்வுகளை நடத்தலாமே?
சேப்பாக்கம் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது எப்படி? - உதயநிதி ஸ்டாலின் MLA விளக்கம்!
உதயநிதி ஸ்டாலின் மேடைப்பேச்சு:-
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், பொறுப்பேற்ற நாள் முதல் தொகுதியின் அனைத்து பகுதிகளுக்கு சென்று வருகிறேன். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் 100 மனுக்கள் வந்தால் அதில் 60 மனுக்கள் கல்வி உதவித்தொகை தொடர்பாக வருகிறது.
உபியில் பெண் தொண்டரின் சேலையை உருவிய பாஜக .. அலறி துடித்த சமாஜ்வாதி.. வீடியோவை மோடிக்கு அனுப்பிய பிரியங்கா காந்தி
tamil.oneindia.com- Hemavandhana : லக்னோ: ஒரு வேட்பாளரின் அதுவும் ஒரு றி அழுத பெண்.. உபியில் அக்கிரமம்.. வீடியோபெண் தொண்டரின் சேலையை உருவி பொதுவெளியில் அசிங்கப்படுத்தி உள்ளனர்..
மானப்பங்கப்படுத்தியும் உள்ளனர்.. இப்படி ஒரு கேவலம், யோகியின் உபியில் அரங்கேறி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க போகிறது.. இதனால் மாநிலமே பிஸியாக சுழன்று வருகிறது.. இதற்கான மனு தாக்கல்கள் நேற்று முடிவடைந்துள்ளன.
அதன்படி, 825 தொகுதி உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் தேர்தல்களுக்கு வேட்புமனுக்களும் பெற்றப்பட்டன.. இதை தொடர்ந்து அங்கு 12க்கும் மேற்பட்ட இடங்களில் மோதல்கள் ஏற்பட்டு உள்ளது.
அதில் லக்னோவிலிருந்து 130 கி.மீ தூரத்தில் உள்ள லக்கிம்பூர் கெரி என்ற பகுதியிலும் மோதல் வெடித்தது. இப்படிப்பட்ட கலவர சூழலில்தான் ஒரு கொடுமை சம்பவம் நடந்துள்ளது...
சமாஜ்வாதி கட்சியின் ஒரு பெண் தொண்டரின் சேலையை பிடித்து அந்த கூட்டத்தில் இழுத்துள்ளார்கள்.. அந்த பெண்ணை பொதுவெளியிலேயே மானப்பங்கப்படுத்தியும் உள்ளனர்..
மேயர் ரேஸில் மகேந்திரன்: கொங்கு திமுகவில் குழப்பம்!
மின்னம்பலம் :மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்து அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் நேற்று (ஜூலை 8) சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அப்போது பேசிய அவர், “நான் திமுகவின் தொண்டனாக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளேன். என்னோடு மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த 78 நிர்வாகிகளும் சேர்ந்திருக்கிறார்கள். மேலும் திமுகவில் இணையும் 11 ஆயிரத்து 188 பேரின் விவரங்கள் அடங்கிய தொகுப்பையும் தலைவரிடம் ஒப்படைத்துள்ளேன். இது கொரோனா காலமாக இல்லாமல் இருந்தால் கோவையில் விழாவாக நடத்தியிருப்போம். ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு மதிப்பு கொடுத்து அதை பிறகு நடத்துவோம்.
என்னுடைய அரசியல் பயணம் இரண்டரை வருடம்தான். நான் நம்பிக்கையாக மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தேன். ஆனால் அங்கே தலைமையின் செயல்பாடு சரியாக இல்லை. இந்த இரண்டு மாதத்தில் திமுக அரசின் செயல்பாடு மக்களுக்காக இருப்பதால், நான் திமுகவுக்கு வந்துள்ளேன். எனக்கு என்ன பொறுப்பு கொடுக்கோணும் என்பது தலைவருக்கு தெரியாமலா இருக்கும்” என்று கூறினார்.
தலிபான்களிடம் சரண் அடையும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள்
தினத்தந்தி :காபுல், ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படையினருக்கும் பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.
தலிபான்களை ஒழிக்கும் நடவடிக்கையில் உள்நாட்டு அரசுக்கு உதவியாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் 20 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது.
ஆனால், இந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர தலிபான்களுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நடைபெற்ற அமைதிப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆப்கானிஸ்தான் அரசுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அமெரிக்க படை மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்பன உள்ளிட்ட முடிவுகள் எட்டப்பட்டன.
அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து செப்டம்பர் 11-ம் தேதிக்குள் வெளியேறவும் முடிவு செய்யப்பட்டது.
ஹைதி அதிபர் படுகொலை? – அமெரிக்கா மற்றும் கொலம்பியாவை சேர்ந்த 17 கூலிப்படையினர் கைது!
பிரான்சில் இந்திய அரசின் ரூ.176 கோடி சொத்துக்களை முடக்கியதா தனியார் நிறுவனம்?
theekkathir.in : பாரீஸ்:
வரி பிரச்சனையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள 176 கோடி ரூபாய் மதிப்பிலான
இந்தியாவுக்குச் சொந்தமான 20 சொத்துகளை முடக்க அந்நாட்டு நீதிமன்றத்தின்
உத்தரவை கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.ஆனால் இந்திய சொத்துகளை முடக்கியது குறித்து அரசுக்கு
எந்தஅறிவிப்பும் கிடைக்கவில்லை என்று ஒன்றிய பாஜக அரசு கூறுகிறது.
2006 மற்றும் 2007 ஆம் ஆண்டில் பிரிட்டனைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனமான கெய்ர்ன் எனெர்ஜி தனது பங்குகளை இந்தியாவில் உள்ள கெய்ர்ன் நிறுவனத்திற்கு மாற்றியது. ஆனால் இந்த பங்குகளை மாற்றியதால் முதலீட்டு ஆதாயத்தை கெய்ர்ன் இந்தியா நிறுவனம் அடைந்துள்ளதாக கூறி அந்த நிறுவனத்திற்கு ரூ.10,247 கோடி வரி விதித்து இந்திய வருமான வரித்துறை உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து 2012 ஆம் ஆண்டில் கெய்ர்ன் நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கியும் அந்நிறுவன பங்குகளை விற்றும் வரி வசூலில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அரசுவிதித்த வரி விதிப்பிற்கு எதிராக கெய்ர்ன் நிறுவனம் சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சில ஆண்டுகளாக நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு இந்த விவகாரம் வரி பிரச்சனை அல்ல என்றும் முதலீடுதொடர்பானது என்றும் ரூ.10,247 கோடி வரி விதித்தது நியாயமில்லை என்றும் கடந்தஆண்டு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித் தது. கெய்ர்ன் நிறுவனத்திற்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு ரூ.12,700 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
வாரத்துக்கு ஒருநாள் மதுபானம் இலவசம் -தெலுங்கானா அரசு திட்டம்
மாலைமலர் :கொரோனாவால் குறைந்த மதுபான விற்பனையை அதிகரிக்க தெலுங்கானா அரசு புதுவிதமான யுக்தியை கையில் எடுக்கிறது.
வாரத்துக்கு ஒருநாள் மதுபானம் இலவசம் -தெலுங்கானா அரசு திட்டம்
பொதுவாக அரசு மக்கள் நலன் சார்ந்த பொருட்களை இலவசமாக வழங்கும். தமிழகத்தில் டிவி, மிக்சி, மின்விசிறி, ஆடுகள் போன்றவை இலவசமாக வழங்கப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கிள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
ஆனால் தெலுங்கானா அரசு வித்தியாசமான முயற்சியை கையில் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மதுபானங்களை இலவசமாக கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீட் ஆய்வுக்குழு அமைக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமில்லை: சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒன்றிய அரசு!
மின்னம்பலம் :நீட் ஆய்வுக்குழு அமைக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமில்லை: ஒன்றிய அரசு!
நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்யக் குழு அமைத்தது, மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் 10ஆம் தேதி அமைத்து உத்தரவிட்டது. நீட் தேர்வின் பாதிப்பு குறித்த ஆய்வு செய்யும் பணிகள் 90 சதவிகிதம் முடிவடைந்துள்ளதாக இக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இக்குழுவை எதிர்த்து தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நியமனம்!
நக்கீரன் செய்திப்பிரிவு : தமிழகத்தின் பா.ஜ.க. தலைவராக பதவி வகித்த எல்.முருகன், மத்திய மீன்வளம், கால்நடை, பால்வளத்துறை மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சராக நேற்று (07/07/2021) பதவியேற்றுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து, அமைச்சர் எல்.முருகன் இன்று (08/07/2021) காலை டெல்லியில் உள்ள அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
பாரதிய ஜனதா கட்சியின் விதிப்படி ஒருவர் ஒரு பதவி மட்டுமே வகிக்க முடியும் என்பதால்,
தமிழக பா.ஜ.க.வின் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே ஏற்பட்டது.
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க.வின் தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலையை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.
இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ஜெ.பி.நட்டா குறிப்பிட்டுள்ளார்.
வியாழன், 8 ஜூலை, 2021
ஜெர்மனியின் கொலோன் பல்கலை. தமிழ்த்துறைக்கு ரூ.1.25 கோடி நிதியுதவி”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
கலைஞர் செய்திகள் :ஜெர்மனியில் அமைந்துள்ள கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை தொடர்ந்து, தொய்வின்றி இயங்க ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
“தமிழ் மொழியின் வளர்ச்சியில், ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்ப் பிரிவும் முக்கியப் பங்காற்றி வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் இந்தியவியல், தமிழியில் ஆய்வு நிறுவனம் 1963ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
தம்பிதுரை, ரவீந்திரநாத், அன்புமணி, வாசன் பட்டியலில் பெயர் இடம்பெறாதது ஏன்?..
உயர்கல்வி மன்றத்தின் தலைவராக பொன்முடி நியமனம்!
minnambalam :உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரை தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் தலைவராக நியமித்து இன்று (ஜூலை 8) முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் கல்வி மேம்பாட்டுக்காக புதியத் திட்டங்களை வகுப்பது, பேராசிரியர்களுக்கு நவீன தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளை அளிப்பது, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவது, புதிய கல்லூரிகள், பல்கலைக் கழகங்களைத் தொடங்குவதற்கான விதிமுறைகளை உருவாக்குவது ஆகியவற்றுக்காக தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் உருவாக்கப்பட்டது.
'பள்ளி பாடப்புத்தகங்களில் ஒன்றிய அரசே இடம்பெறும்'' - தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர் ஐ. லியோனி பேட்டி!
நக்கீரன் - சக்தி : தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவர் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல்லைச் சேர்ந்த பட்டிமன்ற நடுவர் ஐ. லியோனி தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நியமித்திருக்கிறார்.
திண்டுக்கல்லில் உள்ள பிரபல பள்ளியான புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்துவந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த ஐ. லியோனி பட்டிமன்றப் பேச்சாளராகவும் இருந்தவர்.
தனது பேச்சாலும் திறமையாலும் பட்டிமன்ற நடுவராகவும் நகைச்சுவை தென்றலாகவும் விளங்கிவந்தார். அதோடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு 25 வருடங்களுக்கு மேலாக கழகப் பணியாற்றியதின் மூலம் தலைமை கழகப் பேச்சாளர் ஆனார்.
அதன் மூலம் முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞரின் மனதிலும், இன்னாள் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் மனதிலும் இடம்பிடித்தார்.
நீலகிரியில் கிறீன் டீ சாக்லேட் .. தேயிலை தொழிலை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசின் முயற்சி
கலைஞர் செய்திகள் : தேயிலை விவசாயிகளை ஊக்குவிக்க புது உத்தி; நீலகிரியில் அறிமுகமானது க்ரீன் டீ சாக்லேட்!
உலக சாக்லேட் தினத்தை முன்னிட்டு நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலையில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட ஹோம் மேட் சாக்லேட் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
தேயிலை விவசாயிகளை ஊக்குவிக்க புது உத்தி; நீலகிரியில் அறிமுகமானது க்ரீன் டீ சாக்லேட்!
மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தேயிலை விவசாயம், உருளைக் கிழங்கு சாகுபடி, பாரம்பரியமிக்க சாக்லேட், கேக் போன்ற பல்வேறு பணிகள் நீலகிரியில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆங்கிலேயர்களால் அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்வது ஹோம் மேட் சாக்லேட். இங்கு நிலவும் தட்பவெட்ப காலநிலை, கொக்கோ போன்ற தரமான பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்படும் நீலகிரி ஹோம் மேட் சாக்லேட் உலக அளவில் புகழ் பெற்றதாகும்.
மஹிந்த ராஜபக்ஷ: “சீனாவே எமது உண்மையான நண்பன்; ஆசியாவின் எழுச்சியை சீனாவே வழி நடத்தும்”
BBC : சீனாவே தமது உண்மை நண்பன் என்றும் இனி ஆசியாவின் எழுச்சியையும் சீனாவே வழிநடத்தும் என்பதுதான் யதார்த்தம் எனவும், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டு விழாவில் இணைய வழியாக நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு பொதுச் செயலாளரும், சீன ஜனாதிபதியுமான ஷி ஜின்பிங்கை தனது உரையில் விழித்துப் பேசிய மஹிந்த ராஜபக்ஷ, இரண்டு முகாம்களாகப் பிரித்ததன் காரணமாக சிரமங்களை எதிர்கொண்டிருந்த உலகுக்கு சீனாவே உதவியது என்றும் குறிப்பிட்டார்.
“சீனா எமது வரலாற்று நட்பு நாடாகும்.
அந்த நீண்ட வரலாற்றில் சீனா எம்முடன் செயற்பட்டுள்ள விதத்துக்கு அமைய, சீனா எமக்குள்ள உண்மையான நண்பர் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்” எனவும் தனது உரையில் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
யூடுப் சானலில் சாதித்து காட்டிய வில்லேஜ் குக்கிங் கிராமத்து இளைஞர்கள்
Abilash Chandran : வில்லெஜ் குக்கிங் சானலின் வளர்ச்சி கூறுவதென்ன?
ஊடகங்களில் மிக வேகமாக பணம் சம்பாதிக்க, புகழ் பெற சாத்தியமுள்ளது
சினிமா தான். அதிலும் ஒரு படைப்பாளியாக விரும்புவோர் உதவி இயக்குநராகி,
பல வருடங்கள் போராடி ஒரு தயாரிப்பாளரைப் பெற்று, பல மாதங்கள் உழைத்து திரைக்கதையை உருவாக்கி,
நடிகர்களை ஒப்பந்தம் செய்து, படப்பிடிப்பு நடுவில் நின்று விடக் கூடாதே எனப் பதபதைத்துக் கொண்டு எடுத்து முடித்து,
திரையரங்குகள் அமைந்து வந்து வெளியிட்டு, மக்களிடமும் ஊடகத்திலும் கவனிப்பும் பாராட்டும் கிடைத்து …
அப்பாடா என்றாகி விடும்.
வருடத்தில் நூற்றுக்கணக்கில் வெளியாகும் படங்களில் விரல் விட்டு எண்ணுமளவுக்கு படங்களே இப்படி இயக்குனருக்கு பணமும் பெயரும் சம்பாதித்து தருகின்றன.
புதன், 7 ஜூலை, 2021
பன்னீர் மகன் ரவீந்திரநாத்தின் Minister கனவை கலைத்த எடப்பாடியாரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்
Mailai Nathan ஐயா OPS அவர்கள் தனது மகனாருக்கு எப்படியாவது மத்தியில் ஒரு இணையமைச்சர் பதவியாவது வாங்கிட வேண்டி செய்யாத வேலையில்லை, ஏறாத படியில்லை,
அதற்காக தான் ஊரே பேசிய காலங்களில் எல்லாம் அமைதியாய் கடந்து,
ஊர் அடங்கிய பின் "ஒன்றிய" விவகாரத்தை சரியாக இரண்டு நாட்களுக்கு முன் கையிலெடுத்ததே கூட பதிவின் முதல் வரி 'வரவு'க்காக தான்,
ஐயாவின் இந்த படியேறுதலை சரியாக யூகித்து சி.வி.சண்முகத்தை விட்டு "பாஜக கூட்டணியால் தான் அதிமுகவுக்கு தோல்வி" என பேச வைத்து வெட்டினார் பாருங்கள் ஐயா எடப்பாடியார்
ஒரு பெருங்குழியை அடடா.... என்ன ஒரு வெட்டு .... பாவம் OPSஆர் கட்டியெழுப்பிய கோட்டையெல்லாம் அதனுள் புதைந்து தரைமட்டமானது
இதில் பாருங்கள், இப்படி மாறி மாறி இவர்களுக்குள்ளாகவே குழிவெட்டும் வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் இந்த இருவரும் இணைந்து தான் அதிமுகவை வழிநடத்தி சென்று கொண்டிருக்கும் "தலைமை ஒருங்கிணைப்பாளர்களாம்"
MGR நாமம் வாழ்க ! அம்மா நாமம் வாழ்க !!
முடிதிருத்தும் பட்டதாரி பெண் சீதா தங்கவேலு
பாண்டியன் சுந்தரம் : சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதுதான் நிலை.
அவர் முதலில் கத்தரிக்கோலையும் கத்தியையும் தன் கைகளில் எடுத்தபோது,
எந்த மனிதனும் சுழலும் நாற்காலியில் உட்கார்ந்து தன்னுடைய தலை அல்லது கன்னங்களை அவருக்குக் காட்ட மாட்டான்.
அதற்குப் பதிலாக, 'உங்கள் தந்தை எங்கே, எப்போது திரும்பி வருவார்?'என்று அவர்கள் கேட்பார்கள்.
கோவைக்கு அருகிலுள்ள பல்லடம் என்ற சிறிய நகரத்தில் உள்ள சிறிய தங்கம் டீலக்ஸ் கடைக்கு வந்த ஆண்கள் அவரை ஏளனம் செய்வார்கள்.
சிலர் கடைக்குள் அவரைப் பார்க்கும் தருணத்தில் அந்த இடத்தை விட்டே வெளியேறுவார்கள்.
ஆனால் இப்போது, புவனேதேவி சிகை அலங்காரக் கடைக்கு வெளியே ஒரு நீண்ட வரிசை காத்துக் கிடக்கிறது.
ஏனென்றால் அவர் உள்ளே இருக்கிறார்... தேவி தங்கவேலு! தனது 20 வயதுகளின் பிற்பகுதியில், பல்லடத்தில் இந்த நாட்களில் மிகவும் விரும்பப்பட்ட முடிதிருத்தும் நிபுணர் இவர். 20 அடிக்கு 20 அடி புவனேதேவி முடி திருத்தும் கடையில் 2 சுழலும் நாற்காலிகளும், மற்றும் 4 நெகிழி நாற்காலிகளும் எல்லா நேரங்களிலும் இப்போது நிரம்பி வழிகின்றது....
அமரர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் கொலை .. டெல்லியில் உள்ள வீட்டில் ..
BBC : காலம்சென்ற முன்னாள் இந்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி டெல்லியில் தமது வீட்டில் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் கூறுகிறது.
68 வயதான இவர், வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தார்.
தெற்கு டெல்லியில் வசந்த் விகாரில் உள்ள தமது வீட்டில் இவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னொருவரை போலீஸ் தேடி வருவதாகவும் டெல்லி போலீஸ் துணை ஆணையரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது ஏ.என்.ஐ. செய்தி முகமை.
அவரது வீட்டில் துணை துவைப்பவராக இருந்தவர், அவரது இரண்டு உதவியாளர்களுடன் செவ்வாய்க்கிழமை இரவு இந்தக் கொலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்கள் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கலைஞர் செய்திகள் :தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
“தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் (Tamilnadu Textbook and Educational Services Corporation) தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களைத் தயாரித்து, அச்சிட்டு விநியோகம் செய்வதற்காகத் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஓர் அரசு நிறுவனம் ஆகும்.
இக்கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலும் வழங்கப்படுகின்றன.
ஒன்றிய அமைச்சர் ஆகிறார் எல்.முருகன் -43 பேர் கொண்ட பட்டியல்
மாலைமலர் :இன்று ஒன்றிய அமைச்சர்களாக க பதவியேற்க உள்ள 43 பேர் கொண்ட பட்டியலில் ஜோதிராதித்ய சிந்தியா, சர்பானந்த சோனோவால் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது.
மத்திய மந்திரி ஆகிறார் எல்.முருகன் -43 பேர் கொண்ட பட்டியல் வெளியீடு
பிரதமர் மோடி 2-வது முறையாக பதவி ஏற்றதற்கு பிறகு அமைச்சரவையில் சபையில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இப்போது முதன்முதலாக மந்திரி சபையில் மாற்றம் செய்யப்படுகிறது. இன்று மாலை மந்திரிகள் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது.
ஒன்றிய அமைச்சர்களாக 43 பேர் இன்று பதவியேற்க உள்ளதாக செய்தி வெளியானது.
அதன்பின்னர் விரிவாக்கம் செய்யப்படும் மந்திரிசபையில், இன்று மந்திரிகளாக பதவியேற்க உள்ள 43 பேர் கொண்ட பட்டியல் வெளியானது. அதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பெயர் இடம்பெற்றுள்ளது.
கரிகால் சோழப் பேராறு - காவிரியின் உண்மை பெயர்! கல்வெட்டு ..கி பி 1890 ..
Sundar P : காவிரி ஆற்றுக்கு “கரிகால் சோழப் பேராறு” என்றும் பெயர் இருந்திருக்கிறது.
இதனை கி.பி.1890-லேயே கல்வெட்டுத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனைக் குறிக்கும் கல்வெட்டை தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி நான்கில் 394-ம் கல்வெட்டாக அரசு பதிவு செய்துள்ளது.
வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் தலைமையிலான குழுவினர் அண்மையில் இந்தக் கல்வெட்டு இருக்குமிடத்தை தேடி கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய குடவாயில் பாலசுப்ர மணியன்....
“குலோத்துங்க சோழன் காலத்திலிருந்தே கரிகால சோழ கரையை பலப்படுத்த ‘விநியோகம்’ என்ற பெயரில் வரிவசூல் முறை இருந்தது என்பதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.
இது, காவிரிக்கு கரிகால சோழ பேராறு என்று இன்னொரு பெயர் இருந்ததை உறுதிப்படுத்துகிறது.
மூன்றாம் ராஜராஜ சோழன் அரியணை ஏறிய நான்காம் ஆண்டில் (கி.பி.1220) முசுறி (முசிறி) என்ற மும்முடிச் சோழன் பேட்டையில் காவிரியிலிருந்து பிரியும் வாய்க்காலில் ஒரு மதகுப் பாலம் கட்டப்பட்டது.
மேற்கு வங்கத்தில் வருகிறது மேலவை! மம்தா தேர்தலில் நிற்க தேவை இல்லை ..
தினமலர் : மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. ஆனால் அந்த கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி குறைந்த வாக்குகளில் சுவெந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார்.
முதல்வராக பதவி ஏற்ற மம்தா பானர்ஜி இன்னும் 6 மாதத்திற்குள் மீண்டும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.-வாக வேண்டும். தற்போதைய கொரோனா சூழ்நிலையில் தேர்தலை நடத்தும் நோக்கத்தில் தேர்தல் ஆணையம் இல்லை. இடைத்தேர்தல் நடைபெறாவிடில் முதல்வர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுவிடும். ஏற்கனவே தேர்தலின்போது பா.ஜனதா அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக மம்தா குற்றம்சாட்டினார்.
பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் காலமானார்
மாலைமலர் : உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார். இவர் 1944-ல் சினிமாவில் அறிமுகமாகி தேவதாஸ், கங்கா யமுனா, ஆன், தஸ்தான் உள்பட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார்.
வயது மூப்பு காரணமாக இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. அந்த வகையில் கடந்த வாரம், இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த திலீப்குமார், இன்று காலை காலமானார். இவருக்கு வயது 98. திலீப் குமாரின் மறைவு பாலிவுட் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஒன்றிய அரசுப் பணிகளுக்கு பொதுத் தகுதித் தேர்வு! 22 ஆம் ஆண்டுமுதல்
மின்னம்பலம் : 2022ஆம் ஆண்டு முதல் மத்திய அரசுப் பணிகளுக்கு பொதுத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
குடிமைப் பட்டியல் 2021 எனப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள் குறித்த மின் புத்தகத்தை நேற்று (ஜூலை 6) பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், மத்திய அரசுப் பணிக்கு இளைஞர்களைத் தேர்வு செய்யும் முறையை எளிமைப் படுத்துவதற்காக பொது தகுதித் தேர்வு நடத்தப்படும்.
இந்த சீர்திருத்தம் என்பது இளைஞர்கள் மீது பிரதமர் மோடி வைத்திருக்கும் அக்கறையின் பிரதிபலிப்பாகும். நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்குச் சமமான வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காக இந்த முறை கொண்டு வரப்படுகிறது. பொது தகுதித் தேர்வை நடத்துவதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் தேசிய ஆட்சேர்ப்பு முகமை அமைக்கப்பட்டுள்ளது.
பலாத்காரம் செய்து கொலை’ தூக்கில் உயிருக்கு போராடிய சிறுமியை பார்த்தும் மனம் இறங்காத கொடூரன். கேரளா
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிபெரியார் அருகே சுரக்குளம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூன் (22). தோட்ட தொழிலாளி. கடந்த 30ம் தேதி வீட்டில் தனியாக இருந்த அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததோடு, தூக்கில் தொங்க விட்டார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் இந்த தகவல் அம்பலமானது.
அதைத் தொடர்ந்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து அர்ஜூனிடம் போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர். இந்த விசாணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து போலீசார் கூறியது: அர்ஜூனுக்கு ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் உண்டு. ஆகவே செல்போனில் ஏராளமான ஆபாச படங்களை டவுன்லோட் செய்து வைத்து உள்ளார். அவரது பக்கத்துவீட்டில் வசிக்கும் தோட்ட தொழிலாளி வேலைக்கு சென்ற பிறகு அவர்களது வீட்டுக்கு சென்று அவர்களது 6 வயது குழந்தைக்கு மிட்டாய், பலகாரம் வாங்கி கொடுத்து பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
'ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக தடகள வீரர்களுக்கு ஊக்கத் தொகை'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
nakkeeran :ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர்களுக்கு ரூபாய் 5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு இன்று (06/07/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் இளைஞர்களுக்கு விளையாட்டில் ஆர்வத்தைப் பெருக்கவும், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கு கொள்ளவும் அரசு தேவையான பயிற்சிகளையும், ஊக்கத்தொகைகளையும் தொடங்கி வழங்கி வருகிறது. அந்த வகையில், ஜப்பான் டோக்கியோவில் 23/07/2021 முதல் 08/08/2021 வரை நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தடகள விளையாட்டில் 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் பங்கேற்க உள்ள தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.ஆரோக்கிய ராஜிவ் மற்றும் நாகநாதன் பாண்டி மற்றும் 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலப்பு பிரிவில் சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர் மற்றும் ரேவதி வீரமணி என மொத்தம் 5 தடகள வீரர்களுக்கு அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக தலா ரூபாய் 5 லட்சம் வீதம் ரூபாய் 25 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்
ஸ்டேன்ஸ் சாமி மரணமும், BK-16 வழக்கும்! மராட்டிய பேஷ்வா படைகளை, ஆங்கிலேயர்களுடன் இணைந்து தலித் படை வீரர்கள் வெற்றி கொண்ட ...
Sivakumar Shivas : *Fr. ஸ்டேன்ஸ் சாமி மரணமும், BK-16 வழக்கும் !!!.*
Fr. ஸ்டேன்ஸ் சாமி எதற்காக UAPA - வில் கைது செய்யப் பட்டார் என்பதை புரிந்து கொள்ள சற்று பின்னோக்கிப் போக வேண்டும் !!!.
மராட்டிய பேஷ்வா படைகளை, ஆங்கிலேயர்களுடன் இணைந்து தலித் படை வீரர்கள் வெற்றி கொண்ட இடம், மகாராஷ்டிரா மாநிலம் பீமா கொரேகான் !!!.
இவ்விடத்தில் அம்பேத்கர் சென்று அஞ்சலி செலுத்தியதன் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக இங்கு 2017 - ஆம் ஆண்டு எல்கார் பரிசத் (Elgar Parishad) என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது !!!.
இந் நிகழ்ச்சி மாவோயிஸ்ட் சார்புடையவர்களால் நடத்தப் பட்டுள்ளதாக கூறி, ஓராண்டு கழித்து 2018 ஜூன் மாதத்தில்,
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை UAPA சட்டப் பிரிவில் கைது செய்யத் தொடங்கினார்கள் !!!.
சுரேந்திர காட்லிங், ரோனா வில்சன், சுதிர் தவாலே, மகேஷ் ராவத், சோமா சென் ஆகிய ஐந்து பேர் முதலில் கைது செய்யப் பட்டனர் !!!.
இவர்கள் அனைவரும் இந்தியாவின் மதிப்பு மிக்க சமூக செயற்பாட்டாளர்கள் !!!.
இவர்களுடன் இணைத்து, அந்த எல்கர் பரிசத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘கபீர் கலா மஞ்ச்’ கலைக்குழுவைச் சேர்ந்த சாகர் கோர்கே, ரமேஷ் கைச்சார், ஜோதி ஜாக்டாப் ஆகிய மூவரும் UAPA-வில் கைது செய்யப் பட்டனர் !!!. மொத்தம் எட்டு பேர் !!!.
செவ்வாய், 6 ஜூலை, 2021
தமிழ்நாட்டில் ‘பசுமைக்குழு’ அமைப்பு” : சுற்றுச்சூழலை பாதுகாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி
பிரேம் குமார் - கலைஞர் செய்திகள் : சுற்றுச்சூழல், காலநிலையை கருத்தில் கொண்டு மாநில அளவில் பசுமைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
“தமிழ்நாட்டில் ‘பசுமைக்குழு’ அமைப்பு” : சுற்றுச்சூழலை பாதுகாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை!
மாநில அளவில் பசுமைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி 10 பேர் கொண்ட மாநில பசுமைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் இந்த பசுமைக்குழு செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் தொழில்துறை, ஊரகவளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 9 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர மாவட்ட ஆட்சித் தலைவரை தலைவராகக் கொண்டு 6 உறுப்பினர்களைக் கொண்டு மாவட்ட அளவிலான பசுமைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு ஒன்றிய அரசு அனுமதி தராது" - அமைச்சர் துரைமுருகன் பேட்டி!
நக்கீரன் :காவிரி, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, டெல்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (06/07/2021) சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,
"மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு அனுமதி தராது என ஷெகாவத் கூறினார். தமிழ்நாட்டின் கருத்தைக் கேட்காமல் ஒன்றிய அரசு அனுமதி வழங்காது என அமைச்சர் கூறினார். கர்நாடகா ஒப்புதல் வாங்கிவிட்டதால் மட்டுமே மேகதாது அணை கட்டி விட முடியாது என அமைச்சர் ஷெகாவத் கூறினார். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தரமாக ஒரு தலைவரை நியமிக்கக் கோரியுள்ளோம். மார்க்கண்டேய நதி குறுக்கே கர்நாடகா தன்னிச்சையாக அணை கட்டியது குறித்த பிரச்சனையையும் எழுப்பினோம்" எனத் தெரிவித்தார்.
பீட்டர் அல்போன்ஸ் ஆணைய தலைவரான உண்மை காரணம்! திமுகவினரை தவிர்க்கிறாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்?
மின்னம்பலம் : சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் தேர்தலில் வாய்ப்பு வழங்க இயலாது.
அதனால் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காத மாசெக்கள் வருத்தப்படாதீர்கள். உங்கள் மாவட்டங்களில் உங்கள் பொறுப்பில் உள்ள தொகுதியில் நம் கூட்டணி சார்பாக யார் நின்றாலும் வெற்றி பெற வையுங்கள்.
அதை வைத்து உங்களுக்கு நான் மார்க் போடுவேன். தேர்தலுக்குப் பின் திமுக ஆட்சியில் உங்களுக்கு உரிய பதவிகளை கொடுப்பேன்” என்று பேசினார்.
ஸ்டாலினின் இந்த வார்த்தைகளை ஏற்று சீட் கிடைக்காத மாவட்டச் செயலாளர்கள் பலர் தங்கள் பெற்றுக் கொடுத்த வெற்றிக்கேற்ப புதிய அரசில் தங்களுக்கு ஏதாவது வாரியத் தலைவர் பதவியோ ஆணைய பதவியோ கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் ஆட்சி அமைத்த பின் கொரோனா கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கிய முதல்வர் ஸ்டாலின் அதைத் தவிர வேறெதிலும் கவனம் செலுத்தவில்லை. ஜூன் மாத பிற்பகுதியில் இருந்துதான் பிற விஷயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.
இருப்பைவிட அதிகமாகத் தடுப்பூசி செலுத்தியது எப்படி?- அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
தமிழ் - இந்து : தமிழக அரசு நிர்வாகத் திறமையுடன் கரோனா தடுப்பூசிகளைக் கூடுதலாகச் செலுத்தியிருக்கிறது என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஜூலை 06) அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
"ஜூலை 21-ம் தேதியிலிருந்து இந்தியாவில் தயாராகும் ஒட்டுமொத்தத் தடுப்பூசிகளின் அளவில் 75 சதவீதத்தை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்குப் பிரித்து அனுப்பும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. தமிழகத்திற்குக் கூடுதல் தடுப்பூசிகள் வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மேலும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் முகாமிட்டு இதனை நேரடியாகத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை திரும்பப் பெறுக - மு.க.ஸ்டாலின் கடிதம்
மாலைமலர் :ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதா தொடர்பாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்துக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை திரும்பப் பெறுக - மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை கடந்த ஜூன் 18-ம் தேதி வெளியிட்டது மத்திய அரசு. அந்த மசோதா வெளியானதிலிருந்து கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகை சேர்ந்த கலைஞர்கள் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.
தமிழ் திரையுலகில் இந்த மசோதாவுக்கு கமல், சூர்யா, கவுதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், விஷால், கார்த்தி உள்ளிட்ட பலரும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து உள்ளனர்.
ஒருவர் 150 வயது வரை வாழ முடியுமா? நீண்ட வயது வாழ முடியுமா? புதிய ஆய்வு
indian express tamil : ஒருவர் 150 வயது வரை வாழ முடியுமா? சில நம்பிக்கைகளும் எச்சரிக்கைகளும்
இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் யாராவது 122 வயதைத் தாண்டி வாழ்வார்கள் என்பது கிட்டத்தட்ட 100% சாத்தியம் ஆகும் என்று ஒரு புள்ளிவிவர ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
யதார்த்தத்தில் ஒரு மணிதன் எவ்வளவு காலம் வாழ முடியும்?
ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிவுகளின்படி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீனே கால்மெண்ட் என்ற மூதாட்டி 122 வயது மற்றும் 164 நாட்கள் வரை வாழ்ந்து 1997ம் ஆண்டு இறந்தார் என்பதே சாதனை.
அவருடைய இந்த 24 ஆண்டு சாதனையை யாராவது முறியடிப்பார்களா என்பது எந்த அளவுக்கு சாத்தியம், முறியடிக்க முடியும் என்றால் எப்போது சாத்தியம்?
இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் யாராவது 122 வயதுக்கு மேல் வாழ்வார்கள் என்பதற்கு கிட்டத்தட்ட 100% வாய்ப்பு உள்ளது என்று ஒரு புள்ளிவிவர ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
மற்றொரு ஆய்வில், இது உயிரியல் மற்றும் உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் மற்ற விஷயங்கள் சரியாக இருந்தால் ஒரு மனிதன் 150 வயது வரைகூட வாழ முடியும் என்று கணித்துள்ளனர்.
12 பாஜக எம்எல்ஏக்களுக்கு ஓராண்டு சட்டமன்ற இடைநீக்கம்!.. மகாராஷ்ட்ரா சபாநாயகர் .
மாலைமலர் : சட்ட மன்றத்தை வழிநடத்திய தற்காலிக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவுக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் தகாத வார்த்தைகளால் பேசியதுடன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மகாராஷ்டிர சட்டமன்றத்தில் பாஜக கடும் அமளியில் ஈடுபட்டது. சபையை வழிநடத்திய தற்காலிக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவுக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் அவதூறான வார்த்தைகளால் பேசியதுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவர்களை அமைதியாக இருக்கும்படி பாஸ்கர் ஜாதவ் கேட்டுக்கொண்டும், உறுப்பினர்கள் அமைதியடையவில்லை.
இதனையடுத்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அமளியில் ஈடுபட்ட 12 பாஜக எம்எல்ஏக்களை ஒரு வருடத்திற்கு இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
7 பேர் விடுதலைக்கு குடியரசு தலைவரை நிர்பந்திக்க முடியாது -சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
tamil.oneindia.com - Arsath Kan : சென்னை: பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவரை நிர்பந்திக்க முடியாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
மதுரையில் உள்ள மத்திய சிறைச்சாலையை ஆய்வு மேற்கொண்ட அவர் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் கூறினார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கை தற்போது குடியரசுத் தலைவர் கையில் உள்ள நிலையில், அவரை நிர்பந்திக்க முடியாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஆட்சியில் 7 பேர் விடுதலை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் அந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் பன்வாரிலால் உரிய முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தியதாக அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறார்.
ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபன்களின் வசமாகிறதா? வெளிநாட்டுக்கு தப்பி ஓடும் ஆப்கான் படை வீரர்கள்
BBC : ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் தாக்குதலுக்கு அஞ்சி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுமார் 1,000 ராணுவ வீரர்கள் அண்டை நாடான தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்களது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர்கள் பின்வாங்கியதாக தஜிகிஸ்தானின் எல்லைப் பாதுகாப்புப் படைகூறியுள்ளது.
கடந்த சில வாரங்களாக ஆப்கானிஸ்தானின் பல்வேறு இடங்களிலும் தாலிபன் இயக்கத்தினர் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நேட்டோ படையினர் வெளியேறியிருக்கும் நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடக்கின்றன.
எஞ்சியிருக்கும் வெளிநாட்டுப் படையினர் வரும் செப்டம்பருக்குள் வெளியேற கெடுவிதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் ஏற்கெனவே வெளியேறிவிட்டனர்.
அதிமுக ஆட்சியில் அகற்றப்பட்ட திருக்குறள் மீண்டும் அரசு பேருந்துகளில்!
கலைஞர் செய்திகள் :தமிழ்நாட்டில், கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவியதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
பின்னர் கொரோனா பரவல் குறையத் தொடங்கியதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜூலை 12-ம் தேதி காலை 6 மணி வரை தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்துள்ளது.
கடந்த ஊரடங்கு தளர்வு அறிவிப்பின்போது 11 மாவட்டங்களில் மட்டுமே பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தற்போது, அனைத்து மாவட்டத்திற்கும் பேருந்து சேவை இயக்கத்திற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.
இதனைத் தொடர்ந்து இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகள் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.
விஜய் டிவி வண்டவாளத்தை வெளிச்சம் போட்ட வனிதா.. தைரியத்தை பாராட்டும் ரசிகர்கள்
.cinemapettai.com - அகிலன் : விஜய் டிவியில் நடக்கும் கேவலமான விஷயத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வனிதா.. தைரியத்தை பாராட்டும் ரசிகர்கள்
நடிகை வனிதா விஜயகுமாரை சுற்றி எப்போதுமே ஏதாவது ஒரு சர்ச்சை இருந்து கொண்டே இருக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற வனிதா சக போட்டியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஏதாவது ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி கொண்டே இருந்தார்.
அதன் பின்னர் திடீரென மூன்றாம் திருமணம் செய்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார்.
பின்னர் சில நாட்களிலேயே மூன்றாவது கணவருடன் பிரச்சினை ஏற்பட்டு அந்த திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது.
பெரியாரை விமர்சித்தால் தாங்கி கொள்ளும் பெரியார்வாதிகள் பிரபாகரனை விமர்சித்தால் ... பாசிச மாயை
தமிழ் மறவன் : திமுகவை ஆதரிக்கிற பல புலி ஆதரவாளர்கள் குறிப்பாக பல பெரியாரிய இயக்கத்வர்களே சொல்லும் கருத்து...
"திமுக 2009ல செய்தது தவறுதான்! நாங்க அதை மறந்துட்டோம் அல்லது இப்போது பேசும் நேரமல்ல"
எத்தனை வன்மம் நிறைந்த கருத்து இது?
இவர்கள்தான் அதீத காழ்ப்புணர்வோடு அரக்கர்களை எதிர்த்து, திமுகவின் மீது அக்கறை செலுத்துகிறார்கள்.
திமுகவின் மீது கடுகளவு காழ்ப்புணர்வு உங்கள் ஆழ்மனதில் இருந்தாலும், அதுவே புலிகள் ஆதரவாக பரிணாமம் பெற்று வெளிவரும்!
அப்படி கட்டமைக்கப்பட்ட சிந்தனையை விதைத்து ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது பார்ப்பனீயம்.
பார்ப்பனீயத்தின் இச்சூழ்ச்சி நீர்த்துப் போகாமல் இருக்கவே ஆரிய வலதுசாரி தமிழ்தேசிய இயக்கங்கள் புலிகளை புனித பிம்பமாக காட்ட தொடர்ச்சியாக வேலை செய்கின்றன.
இதன்மூலம், பெரியாரிய இயக்கங்களில் உள்ள புலிகள் ஆதரவாளர்களையும், திராவிட இயக்கங்களிலிருந்து பிரித்தாளவும், ஓர் நம்பிக்கையின்மையை உருவாக்கி வருங்காலத்தில் திமுகவிற்கு எதிராக அவர்களை தயாரிக்கவும் தீட்டப்பட்ட பெரும் திட்டத்தின் ஓர் துவக்கமே பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு!
20 அருவிகள் ஓடும் கொடநாடு! ஒரு மர்மராணியின் முடிவற்ற பேராசையின் தொடர் கதை .
செல்லபுரம் வள்ளியம்மை : நடக்கக்கூட இடமில்லாதபடி கட்டுக்கட்டாக பணம்., - Senior Journalist Nakkeeran Prakash | Kodanadu Estate
கற்பனைக்கும் எட்டாத கொடநாடு எஸ்டேட்டின் பிரமாண்டம். ஊட்டி மலைப்பகுதியில் மிக மிக அழகான பகுதி கொடநாடு . அதற்குள்ளியே சுமார் இருபது அருவிகள் ஓடுகிறது. சுமார் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் ரம்மியமான சூழலில் இருக்கிறது. .
ஜெயலலிதா இங்கிலாந்து மகாராணிக்கு நிகரான வாழ்வு பற்றிய கனவில் மிதந்ந்த பேராசைக்கு அளவே இல்லை.
ஜெயலலிதாவின் அடியாட்களாக ராமச்சந்திர உடையரும் அட்வெட் ஜெனரலாக இருந்த கிருஷ்ணமூர்த்தீயும் பாஸ்கரனும் அதன் இங்கிலாந்து முதலையை மிரட்டி அடிமாட்டு விலைக்கு வாங்கினார்கள்.
சசிகலாவை தற்காலிகமாக வெளியேற்றி விட்டு பன்னீர் நத்தம் விசுவநாதன் எடப்பாடி போன்ற ஐவர் குழுவிடம் கட்சி நிதி வசூலிப்பு நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது
பின்பு சசிகலா மீண்டும் ஜெயலலிதாவிடம் வந்த பிற்பாடு கணக்கில் தாறுமாறாக இடிக்க தொடங்கியது
திங்கள், 5 ஜூலை, 2021
15 வயது சிறுமியை இணையத்தில் வாங்கிய மாலைதீவு முன்னாள் அமைச்சர் இலங்கையில் கைது
thesamnet.co.uk :இலங்கையில் இணையத்தில் விற்கப்பட்ட 15 வயதுச்சிறுமி – மாலைத்தீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் கைது !
இலங்கையில் 15 வயது சிறுமி பாலியல் தேவைகளுக்காக இணையத்தளம் ஊடாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மாலைத்தீவு பிரஜை, மாலைத்தீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சரொருவர் என தெரியவந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கல்கிசையில் 15 வயதான சிறுமியொருவர் பாலியல் தேவைகளுக்காக பலருக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் சிறுமியின் தாய் உட்பட 32 சந்தேகநபர்கள் கைதுசெய்யபப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த சிறுமியுடன் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் 45 வயதான மாலைதீவு பிரஜையொருவரை குற்றப்புலனாய்வு திணைக்களம் கைதுசெய்தது.
தெ. பார்வர்ட் பிளாக் திருமாறன் கைது ,, நிதி அமைச்சர் பி டி ஆர் மீது அவதூறு
தினகரன் :நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பேசியவர் கைது..!
சென்னை: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பேசியவர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் திருமாறன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெப்துனியா : சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றார் என்பதும் தமிழகத்தின் முக்கிய அமைச்சர் பொறுப்பான நிதி அமைச்சர் பொறுப்பை மதுரையைச் சேர்ந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பதவி ஏற்றார் என்பதும் தெரிந்ததே
தடுப்பூசி கையிருப்பில் இல்லை: சுகாதாரச் செயலாளர்!
மின்னம்பலம் : தமிழ்நாட்டில் தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்கள் ஆர்வமாக தடுப்பூசி முகாம்களின் வாசலில் காத்திருந்து, தடுப்பூசி இல்லாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. அதனால், கடை ஊழியர்களுக்கும், வணிகர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
அதன்படி, இன்று(ஜூலை 5) சென்னை தியாகராய நகரில் வணிகர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இதில், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஸ்டேன் சுவாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள், செயல்பாட்டாளர்கள் இரங்கல்
இதனால் எல்கார் பரிஷத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 6ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
காகிதம் இல்லாத மின்னணு பட்ஜெட்- சபாநாயகர் அப்பாவு தகவல்
மாலைமலர் :கால மாற்றத்துக்கு ஏற்ப காகிதம் இல்லாத மின்னணு பட்ஜெட்டை கொண்டுவர வேண்டும் என்று பெரும்பாலான உறுப்பினர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை: சபாநாயகர் அப்பாவு இன்று மதியம் தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக சட்டசபையில் காகிதம் இல்லாத மின்னணு பட்ஜெட்டை தாக்கல் செய்வது பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது. அது தொடர்பான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
கால மாற்றத்துக்கு ஏற்ப காகிதம் இல்லாத இதுபோன்ற மின்னணு பட்ஜெட்டை கொண்டுவர வேண்டும் என்று பெரும்பாலான உறுப்பினர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஜவ்வரிசி மரவள்ளிக் கிழங்கிலிருந்து .. சேலத்தில் தான் கண்டுபிடிக்க பட்டது
Discover Salem : நாம் பயன்படுத்தி வரும் ஜவ்வரிசி மரவள்ளிக் கிழங்கிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது சேலத்தில் இருந்து தான் உங்களுக்குத் தெரியுமா?
ஜவ்வரிசி வரலாற்றில் ஒரு போலியை அசலாக, அரசாங்கமே அங்கீகாரம் தந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட வேடிக்கை நிகழ்ந்தது.
ஜவ்வரிசியின் ஆங்கிலப் பெயர் சேகோ. இது ஸாகு என்ற ஒரு வகை பனை மரத்தின் பதநீரைக் காய்ச்சி, இறுதியில் கிடைக்கும் மாவு போன்ற பொருளை சிறு சிறு குருணைகளைப் போல் உருட்டித் தயாரிக்கப்படுகிறது.
இந்தோனேசியாவின் ஜாவா தீவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் ஜாவா அரிசி என அழைக்கப்பட்டு, அதுவேபின்னர் ஜவ்வரிசி என மறுவியது.
ஆனால், நாம் இன்றைக்கு பயன்படுத்துவது இந்தோனேஸிய பனைமரத்து ஜவ்வரிசிக்கு மாற்றாக உள்நாட்டில் கண்டு பிடிக்கப்பட்ட மரவள்ளிக் கிழங்கைக் கொண்டு
செய்யப்பட்டதாகும்.
ஆம்...
ஜாவா அரிசிக்கு மாற்றாகத் தயாரிக்கப்பட்ட போலியையும் பின்னாளில் ஜவ்வரிசி என்ற பெயரில் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட சுவாரஷ்யமான வரலாற்றை பார்ப்போம்.
சுய இன்ப பழக்கம்: கொரோனா வைரஸிலிருந்து காக்குமா? - நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துமா?
ஜாரியா கோர்வெட் - பிபிசி ஃப்யூச்சர் : நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பது - உண்மையும், நம்பிக்கைகளும்.
(கொரோனா உலகத் தொற்று தொடங்கிய நிலையில் பிபிசி தமிழில் வெளியான கட்டுரை இது. நோய் எதிர்ப்பு ஆற்றல் குறித்த உரையாடல் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதால் இந்தக் கட்டுரை மறுபிரசுரம் செய்யப்படுகிறது.)
உலக வரலாற்றில் இதுவரை ஏற்பட்ட மோசமான, உலகம் தழுவிய தொற்று நோய்களிலேயே மிக மோசமானது 1918ல் ஏற்பட்ட ஸ்பேனிஷ் இன்ஃபுளூயன்சாதான். உலக மக்கள் தொகையே 200 கோடியாக இருந்த அந்த காலகட்டத்தில் 50 கோடி பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டது. பலகோடி பேர் உயிரிழந்தனர்.
அந்த காலத்தில் வெளியான விக்ஸ் வேபோரப் விளம்பரம் ஒன்றில் அமைதியாக இருக்கும்படியும், மலமிளக்கி சாப்பிடும்படியும், விக்ஸ் தடவும்படியும் 'அறிவுரைகள்' செய்யப்பட்டிருந்தது.
விக்ஸ் மட்டுமல்ல, விக்சுக்குப் போட்டியாக பல 'அற்புத சுகமளிக்கும்' மருந்துகள் சந்தையில் தோன்றி வியாபாரம் செய்யத் தொடங்கின. மில்லர்ஸ் ஆன்டிசெப்டிக் பாம்பு எண்ணெய், டாக்டர் பெல்ஸ் பைன் டார் தேன், ஷென்க்ஸ் மாண்ட்ரேக் மாத்திரைகள், டாக்டர் ஜோன்ஸ் தைலம், ஹில்ஸ் கஸ்கரா குனைன் புரோமைட் போன்றவை அவற்றில் சில.
கவிஞர் தாமரைக்கு தியாகுவின் மக்கள் சுதா காந்தி கடிதம் (2)
Sudha Thiagu : கவிஞர் தாமரை அவர்களுக்கு, (2)
இனி உங்கள் பதிவிற்குள் நான் வருகிறேன்.
என் அப்பா மீது விசாரணை நடத்த ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழு அமைத்ததைச் சொல்கிறீர்கள், ஓரளவு விசாரணையை முடித்ததாகவும் சொல்கிறீர்கள், அந்தக் கோப்புகள் வீர சந்தனம் ஐயா மறைந்துவிட்டதால் காணாமல் போனது என்கிறீர்கள். அந்த கோப்புகளில் ஒரு படி உங்களிடம் இருந்திருக்க வேண்டும் அல்லது அந்தக் குழுவின் ஏனைய நான்கு பேரில் ஒருவரிடமாவது இருந்திருக்க வேண்டும். சரி அது இருக்கட்டும். இப்போது அந்த விசாரணையை விரைவாகத் தொடங்குங்கள். அன்றே விசாரணைக் குழு அமைக்கும் முடிவு தெரிந்த உடனேயே அப்பா அதற்கு ஒப்புக் கொண்டார். வெளிப்படையாகப் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தும் விட்டார். அந்தக் குழுவிற்கு முழு ஒத்துழைப்பை அவர் தந்திருக்கிறார். அவர் ஒப்புக் கொள்ளாமல் இந்த விசாரணைக் குழு அமைந்துவிட வில்லை. இப்போதும் அந்த விசாரணையை எதிர்கொள்ள அவர் தயாராகவே இருக்கிறார் (அப்பாவிடம் அதை உறுதிப்படுத்தி விட்டே சொல்கிறேன்). உங்களிடம் இப்போது உள்ள ஆதாரங்கள் ஆவணங்களை அடிப்படையாக வைத்து விசாரணைக் குழுவின் பணியைத் தொடங்கச் செய்யுங்கள். அந்தக் குழுவில் உள்ள ஏனைய நான்கு பேரைக் கொண்டு விசாரணையைத் தொடங்கச் செய்வதில் உங்களுடைய நகர்வுகள் என்ன? நீங்கள் அதில் எந்தக் கட்டத்தில் உள்ளீர்கள்? எப்போது நீங்கள் விசாரணையை தொடங்கச் செய்யப் போகிறீர்கள். எந்த விசாரணைக்கும் முழுமையாக உட்பட அப்பாவிற்கு தயக்கம் இல்லை. விரைவில் அப்பணிகளைத் தொடங்க வேண்டுகிறேன்.
26 தனிப்பிரிவு காவலர்கள் ஒரே நாளில் கூண்டோடு டிரான்ஸ்பர்!
மாவட்ட தலைமை இடத்தில் உள்ள தனிப்பிரிவுக்கு உதவியாக ஒவ்வொரு காவல்நிலையத்திற்கும் தனியாக தலைமைக் காவலர் அல்லது சிறப்பு எஸ்.ஐ.யும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்தந்த காவல்நிலைய எல்லைக்குள் நடந்த நிகழ்வுகள், குற்றச்சம்பவங்கள் மட்டுமின்றி, நடக்கப்போகும் நிகழ்வுகளையும் ஒற்றறிந்து தலைமையிட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர், தேவைப்பட்டால் நேரடியாக எஸ்பிக்கும் தகவல் அளிக்க வேண்டியது தனிப்பிரிவு காவல்நிலைய தலைமைக் காவலர்களின் பணியாகும்.
இ பாஸ் ரத்து.. மாநிலம் முழுக்க பஸ் இயக்கம்.. தமிழ்நாட்டில் இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் தளர்வுகள்
Shyamsundar - tamil.oneindia.com : சென்னை: தமிழ்நாட்டில் இன்றில் இருந்து கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் அமலுக்கு வருகின்றன.
தமிழ்நாட்டில் இன்று 3867 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 35294 ஆக உள்ளது.
பெரும்பாலான மாவட்டங்களில் லாக்டவுன் தளர்வுகளுக்கு பின்பும் கேஸ்கள் குறைந்து வருகிறது.
தினசரி கேஸ்கள் கடந்த 2 வாரமாக வேகமாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றில் இருந்து ஜூலை 12ம் தேதி வரை கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வருகின்றன.
பல்வேறு செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு, 4 ஜூலை, 2021
பிலிப்பைன்ஸில் விழுந்து நொறுங்கியது விமானப்படை விமானம்
அந்த விமானம் விபத்துக்குள்ளான வேளையில், அதில் 92 பேர் பயணித்துள்ளனர். எனினும், ஆகக் குறைந்தது 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பிலிப்பைன்ஸ் விமானப்படையின் சி -130 என்ற விமானமே இவ்வாறு தரையிறங்கியுள்ளது.ஜோலோ தீவில் தரையிறங்கும் போதே விபத்து சம்பவித்துள்ளது என அந்நாட்டு விமானப்படை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. "மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன" என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு 10 ஆண்டும் ஆர்க்டிக் பனி அடுக்கு 13 சதவீதம் கரைகிறது - நெருங்கும் ஆபத்து
மார்க் கின்வெர் - சுற்றுச்சூழல் செய்தியாளர் : புவிக்கு கவசமாக உள்ள பனி அடுக்குகளில் பிளவு.
ஆர்க்டிக் கடல் பனி அடுக்குகள் உலகின் வெப்ப நிலையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த இயற்கையான வெப்ப கட்டுப்பாட்டு அமைப்புக்கு ஏற்படும் பிரச்சனை உண்மையிலேயே புவிக் கோளுக்கு கவலைக்குரிய செய்தி.
ஒவ்வொரு பத்தாண்டும் ஆர்க்டிக் பனி அடுக்குகள் பரவிக் கிடக்கும் பகுதியில் குறைந்தது 13.1 சதவீதம் காணாமல் போவதாக அமெரிக்காவின் விண்வெளி முகமையான நாசா கூறுகிறது. இது 1981 முதல் 2010 வரையான ஆண்டுகளின் சராசரி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்க்டிக் பகுதியில் பனி அடுக்குகள் சுருங்குவதற்கு, மனிதர்கள் வெளியிடும் பசுமை இல்ல வாயுக்கள் வளிமண்டலத்தில் அளவுக்கு அதிகமாக சேர்வதுதான் முதன்மையான காரணம் என, கடந்த 2007ஆம் ஆண்டு பருவநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையிலான குழுவின் நான்காவது மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச பஞ்சாயத்து தேர்தலில் பாஜக முன்னணியில் .. அகிலேஷ் யாதவ் கட்சிக்கு பின்னடைவு!
மாலைமலர் :மொத்தம் உள்ள 75 இடங்களுக்கு நடைபெற்ற மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பா.ஜனதா 67 இடங்களை கைப்பற்றி சாதித்தது.
பஞ்சாயத்து தேர்தலில் பின்னடைவு... சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு தயாராகும் அகிலேஷ் யாதவ்
ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங்குடன் அகிலேஷ் யாதவ் சந்திப்பு
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதாவுக்கு தோல்வி ஏற்பட்டது. பிரதமர் மோடி தொகுதியான வாரணாசி மற்றும் அயோத்தி நகரங்களில் ஆளும்கட்சி படுதோல்வியை தழுவியது.
இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் ஒன்றான மாவட்ட தலைவர் எனப்படும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றியை பெற்றது.
மேகதாது இன்று டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்!
நக்கீரன் செய்திப்பிரிவு : கர்நாடக அரசின் மேகதாது அணை, காவிரி உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்றிரவு டெல்லி செல்கிறார். அதைத் தொடர்ந்து, நாளை (05/07/2021) டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத்தை அமைச்சர் துரைமுருகன் நேரில் சந்தித்துப் பேசுகிறார்.
இந்த சந்திப்பின் போது, காவிரி பங்கீடு, மேகதாது அணை விவகாரம், கேரளா, ஆந்திரா மாநிலங்களுடனான நதிநீர் விவகாரங்களும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேகதாது அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மதுரை கலைஞர் நூலகத்திற்காக காத்திருக்கிறோம்! . மாவட்டங்கள் தோறும் இது போன்று பெரும் நூலகங்கள் அமையட்டும்
Karthikeyan Fastura : பள்ளி, கல்லூரிகளில் நாம் பயிலும் கல்வி என்பது ஆரம்பப் பாடமே.
பள்ளிகளில் ஒரு வருடம் முழுக்க 6 புத்தகங்களை ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு சப்ஜெக்ட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாக படிக்கும் போது நிறைய படிப்பது போன்று,
சுமை போன்று தோன்றுகிறதோ? என்ற ஐயம் எனக்கு உண்டு.
ஒருவேளை இந்த பாட புத்தகங்களை அறிமுகப்படுத்தி இந்த புத்தகம் படிக்க நன்றாக இருக்கிறது.
முழுசா படிச்சு பாரு என்று சொல்லியிருந்தா எப்படி இருக்கும் என்று யோசித்திருக்கிறேன்.
பள்ளியில் எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு வந்தது சிங்கம்புணரி அரசுமேல்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் போது. அப்போது பள்ளி ஆரம்பித்த சிறிதுநாளிலேயே ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கிவிட்டது.
பள்ளி நடக்கும். தலைமை ஆசிரியர் மற்றும் வெகுசில ஆசிரியர்களே இருந்தனர். புத்தகம் கொடுத்தார்கள்.