செவ்வாய், 6 ஜூலை, 2021

விஜய் டிவி வண்டவாளத்தை வெளிச்சம் போட்ட வனிதா.. தைரியத்தை பாராட்டும் ரசிகர்கள்

 .cinemapettai.com - அகிலன் :  விஜய் டிவியில் நடக்கும் கேவலமான விஷயத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வனிதா.. தைரியத்தை பாராட்டும் ரசிகர்கள்
நடிகை வனிதா விஜயகுமாரை சுற்றி எப்போதுமே ஏதாவது ஒரு சர்ச்சை இருந்து கொண்டே இருக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற வனிதா சக போட்டியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஏதாவது ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி கொண்டே இருந்தார்.
அதன் பின்னர் திடீரென மூன்றாம் திருமணம் செய்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார்.
பின்னர் சில நாட்களிலேயே மூன்றாவது கணவருடன் பிரச்சினை ஏற்பட்டு அந்த திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது.


இந்நிலையில், சமீபத்தில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக வனிதா அறிவித்திருந்தார். மேலும், நிகழ்ச்சியில் தன்னை அவமானப்படுத்தியதாகவும்,
பாலியல் சீண்டலுக்கு ஆளானதாகவும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல பதிவுகளை பதிவிட்டு வரும் வனிதாவின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
அப்படி ரசிகர் ஒருவரின் பாராட்டுக்கு பதிலளித்துள்ள வனிதா, “பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களில் பெண்களே ஏன் துணை நிற்க வேண்டும்.
இது போன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கற்றுக் கொள்ள வேண்டும். நோ மீன்ஸ் நோ” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக