புதன், 7 ஜூலை, 2021

பன்னீர் மகன் ரவீந்திரநாத்தின் Minister கனவை கலைத்த எடப்பாடியாரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்

Mailai Nathan  ஐயா OPS அவர்கள் தனது மகனாருக்கு எப்படியாவது மத்தியில் ஒரு இணையமைச்சர் பதவியாவது வாங்கிட வேண்டி செய்யாத வேலையில்லை, ஏறாத படியில்லை,
அதற்காக தான் ஊரே பேசிய காலங்களில் எல்லாம் அமைதியாய் கடந்து,
ஊர் அடங்கிய பின்  "ஒன்றிய" விவகாரத்தை சரியாக இரண்டு நாட்களுக்கு முன் கையிலெடுத்ததே கூட பதிவின் முதல் வரி 'வரவு'க்காக தான்,
ஐயாவின் இந்த படியேறுதலை சரியாக யூகித்து சி.வி.சண்முகத்தை விட்டு "பாஜக கூட்டணியால் தான் அதிமுகவுக்கு தோல்வி" என பேச வைத்து வெட்டினார் பாருங்கள் ஐயா எடப்பாடியார்
ஒரு பெருங்குழியை  அடடா....   என்ன ஒரு வெட்டு .... பாவம் OPSஆர்  கட்டியெழுப்பிய கோட்டையெல்லாம் அதனுள் புதைந்து தரைமட்டமானது
இதில் பாருங்கள், இப்படி மாறி மாறி இவர்களுக்குள்ளாகவே குழிவெட்டும் வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் இந்த இருவரும்  இணைந்து தான் அதிமுகவை வழிநடத்தி சென்று கொண்டிருக்கும் "தலைமை ஒருங்கிணைப்பாளர்களாம்"
MGR நாமம் வாழ்க ! அம்மா நாமம் வாழ்க !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக