வெள்ளி, 9 ஜூலை, 2021

சாராவின் உடல் .. சாராவின் உரிமை (its sara’s body. Its sara’s choice)

Yazh V M சாராவின் உடல் .. சாராவின் உரிமை (its sara’s body. Its sara’s choice)
குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா? வேண்டாமா?
என்பதை ஒரு பெண் தான் முடிவெடுக்க வேண்டும் என பெண்ணின் reproductive rights பற்றி அழுத்தமாகவும் தெளிவாகவும் பதிவு செய்திருக்கும் மலையாளத் திரைப்படம்
Amazon prime-இல் வெளியாகி இருக்கும் Sara’s.
தனக்குக் குழந்தை வேண்டாம் என இளம் வயதிலிருந்தே நினைக்கும் சாரா, கர்ப்பம் ஆவதிலிருந்து குழந்தை பிறப்பது வரை அனைத்தையும் கெட்ட கனவாக நினைக்கும் சாரா,
தன் முடிவிற்காகவே சில பல relationships-ஐ breakup-உம் செய்கிறார்.
ஒரு பெரிய film maker ஆக வேண்டும் என்பதை வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருக்கும் அவர், தன்னைப் போல இயல்பாகவே குழந்தைகள் மீது அவ்வளவு விருப்பமில்லாமல் இருக்கும் ஜீவன் என்பவரை சந்திக்கிறார்.
இருவருக்கும் அதுவே ஒரு பெரிய sync-ஐ ஏற்படுத்த, காதலில் விழுந்து,
காதலில் சில observations-ஐ அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேளையிலேயே, குடும்ப அழுத்தத்தினால், திருமணம் என்ற கட்டமைப்பிற்குள் சிக்க வலியுறுத்தப்படுகின்றனர்.


தன் career-கு திருமணம் பல வகையில் இடையூறாக இருக்கும் என சாரா நினைக்க,
அப்படி எதுவும் ஏற்படாது என ஜீவன் உறுதியளிக்க, ஒரு வாரத்தில் 4 நாட்கள் ஜீவனும், 3 நாட்கள் சாராவும் சமைக்க வேண்டும் என்ற அருமையான ஒப்பந்தத்துடன் தொடங்குகிறது அவர்கள் உறவு. ஆனாலும் நம் நாட்டில் திருமணம் என்ற நிறுவனம்,
இரு குடும்பமே சேர்ந்து வாழும் அவலாமாகவே உள்ளது என்பதையும், அதில் ஆண்-பெண் இருவரின் personal space எவ்வளவு கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகிறது என்பதையும் காட்டியிருக்கும் விதம் அருமை.
குடும்பத்தினரிடம் தாங்கள் குழந்தைப் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று கூறி அவர்களின் தேவையற்ற அட்வைஸ்-களைக் கேட்டுக் கொண்டும், தன் வாழ்க்கை இலட்சியத்திற்காக ஆணாதிக்க cine field-இல் போராடிக் கொண்டிருக்கும் சாரா accidental-ஆக கர்ப்பமாக, அக்குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம் என ஜீவன் நினைக்க, அவரையும் breakup செய்து கனவுகளைத் துரத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துவாரோ என நாம் நினைத்துக் கொண்டிருந்த போது, என்ன நடக்கிறது என்பதே படம்.
“நான் நடிக்க permission கொடுத்தும் நடிக்கல” எனக் கூறும் ஒரு முன்னாள்  நடிகையின் கணவர், பள்ளிகளில் sex education for adolescence என்ற பாடத்தை நீங்களே படித்துக் கொள்ளுங்கள் எனக் கூறும் அறிவியல் ஆசிரியர் எனப் போகிற போக்கில் பல காட்சிகளையும் அழகாக இணைத்திருக்கிறார் இயக்குநர்.      

இந்தியா போன்ற ஆணாதிக்க சமூகத்தில், திருமணம் என்பது ஆண் பெண் கூடி வாழ்வதற்கான ஏற்பாடாக இல்லாமல், சமையல், குழந்தை வளர்ப்பு போன்ற வேலைக்கு வேலைக்காரி எடுப்பது போன்ற கொடூரமான நிறுவனமாக இருக்கிறது என 1935-லேயே கூறியவர் பெரியார். அதில் இன்றும் மாறுதல் ஏற்பட்டதாக தெரியவில்லை. ஏனெனில், 2019-ல் நடத்தப்பட்ட National Statistical Office-இன் ஆய்வு முடிவுகள், ஒரு நாளைக்கு சமையல், குழந்தை வளர்ப்பு போன்றவற்றில் இந்தியப் பெண்கள் 243 நிமிடங்களை (4 மணி நேரம்) செலவழிப்பதாகவும், ஆண்கள் வெறும் 25 நிமிடங்கள் மட்டுமே செலவிடுகின்றனர் எனவும் கூறுகிறது. கொடூரமான இத்திருமண அமைப்பில் பெண்கள் தலையில் கட்டப்படும் ஒரு பெரிய சுமை குழந்தை பெற்று வளர்ப்பதாகும். என்ன தான் குழந்தையைப் பெற்றுக் கொள்ள இயற்கையாக பெண்ணால் தான் முடியும் என்ற போதிலும் அந்த குழந்தையைப் பராமரிக்க, வளர்க்க என அனைத்தையும் பெண்ணிற்கான வேலையாகவே வைத்திருக்கிறது
ஆணாதிக்க சமூகம். அதற்காக அளவற்ற தியாகங்களை செய்து வாழ்க்கை இலட்சியங்களையெல்லாம் தொலைத்து அக்குழந்தைகளை வளர்ப்பதில் வாழ்வின் precious young stageஐ இழப்பது பெண்கள் தான். ஆண்களுக்கும் சமையல், வீட்டுப் பராமரிப்பு, பிள்ளை வளர்ப்பு போன்ற எதற்கும் சம்பந்தமில்லை என்ற விதியோடு இயங்கும் இச்சமூகத்திற்குப் பிள்ளை பெற்றுப் போடலைனா பெண்களுக்கு ஒன்றும் குறைந்து விடப் போவதில்லை என முற்போக்கான கருத்துக்களைப் பேசியவர் பெரியார். தன் வாழ்வைத் தானே நிர்ணயிக்கும், தன் முடிவுகளில் தெளிவாக இருக்கும், அதைத் தைரியமாக எடுத்துரைக்கும் வகையில் பெரியார் காண விரும்பிய சுதந்திரப் பெண்ணாகவே சாரா இருக்கிறார்.    

தன் மாமியாரையும் இக்குழந்தைகளைப் பெற்று என்ன சாதித்தீர்கள் என சிந்திக்கத் தூண்டுகிறார் சாரா. Parenting isn’t just about reproduction. கல்யாணம், குழந்தை என அனைவரும் ஒரே pattern-ஐ தான் பின்பற்ற வேண்டும் என்றில்லை என்பதையும், abortion செய்வதையே கிரிமினல் குற்றம் போலக் காட்டும் தமிழ் சினிமாக்கள் மத்தியில், unplanned accidental கருவை சுமக்க வேண்டுமா? அதைக் கலைக்க வேண்டுமா? என்பதை பெண் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் அழுத்தமாக பதிவு செய்கிறார் படத்தில் வரும் ஒரு ஆண் மகப்பேறு மருத்துவர். உண்மையிலேயே parenting பற்றி தெரியாமலே accidental ஆக குழந்தை பெற்றுக் கொள்பவர்களே இந்திய சமூகத்தில் அதிகம் என்பது நாம் அறிந்ததே. அதையும் அருமையாக விளக்குகிறது இப்படம்.

காலம் காலமாக திருமணம் செய்வதும், கணவரின் குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனித்து கொள்வதும் தான் நல்ல பெண்களின் இலக்கணம், அவ்வாறாக இல்லாமல் சுயமாக யோசித்து, தன் கருத்துக்களைத் தைரியமாகப் பேசும் ஒரு பெண் திமிரு பிடிச்சவ என்ற கருத்தை நிலை நிறுத்தி கொண்டிருக்கும் தமிழ் திரையுலகம், தாய்மை, பெண்மை என pregnant ஆகிற scene தொடங்கி பிள்ளை பெறும் scene வரை பல விதமாக glorify செய்யவும் தவறியதில்லை. அப்படிப் பார்க்கும் போது, “Great Indian Kitchen”, “Sara’s” போன்ற mainstream படங்களைப் படைக்கும் மலையாளத் திரையுலகத்தைப் பாராட்டியே ஆக வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக