செவ்வாய், 6 ஜூலை, 2021

பெரியாரை விமர்சித்தால் தாங்கி கொள்ளும் பெரியார்வாதிகள் பிரபாகரனை விமர்சித்தால் ... பாசிச மாயை

May be an image of outdoors and monument
May be an image of 1 person and flower

தமிழ் மறவன் :  திமுகவை ஆதரிக்கிற பல புலி ஆதரவாளர்கள் குறிப்பாக பல பெரியாரிய இயக்கத்வர்களே சொல்லும் கருத்து...
"திமுக 2009ல செய்தது தவறுதான்! நாங்க அதை மறந்துட்டோம் அல்லது இப்போது பேசும் நேரமல்ல"
எத்தனை வன்மம் நிறைந்த கருத்து இது?
இவர்கள்தான் அதீத காழ்ப்புணர்வோடு அரக்கர்களை எதிர்த்து, திமுகவின் மீது அக்கறை செலுத்துகிறார்கள்.
திமுகவின் மீது கடுகளவு காழ்ப்புணர்வு உங்கள் ஆழ்மனதில் இருந்தாலும், அதுவே புலிகள் ஆதரவாக பரிணாமம் பெற்று வெளிவரும்!
அப்படி கட்டமைக்கப்பட்ட சிந்தனையை விதைத்து ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது பார்ப்பனீயம்.
பார்ப்பனீயத்தின் இச்சூழ்ச்சி நீர்த்துப் போகாமல் இருக்கவே ஆரிய வலதுசாரி தமிழ்தேசிய இயக்கங்கள் புலிகளை புனித பிம்பமாக காட்ட தொடர்ச்சியாக வேலை செய்கின்றன.
இதன்மூலம், பெரியாரிய இயக்கங்களில் உள்ள புலிகள் ஆதரவாளர்களையும், திராவிட இயக்கங்களிலிருந்து பிரித்தாளவும், ஓர் நம்பிக்கையின்மையை உருவாக்கி வருங்காலத்தில் திமுகவிற்கு எதிராக அவர்களை தயாரிக்கவும் தீட்டப்பட்ட பெரும் திட்டத்தின் ஓர் துவக்கமே பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு!


திமுகவின் மீது கடும் வன்மம் கொண்ட திருமுருகன்காந்தியின் பங்களிப்பு இக்கூட்டமைப்பில் மிக அதிகம்
பகிரங்கமாகவே திமுக ஆதரவு இயக்கங்களை புறக்கணித்த, எதிர்ப்புணர்வு கொண்ட கூட்டமைப்பை கண்டிக்காமல், கலந்து கொண்டு சிறப்பித்து வரலாற்றில் பெரும்பிழை செய்துவிட்ட பெரியாரிய இயக்கங்கள் தொடர்ச்சியாக பிரபாகரன் பிம்ப அரசியலை ஆதரிப்பது திராவிடக் கோட்பாட்டிற்கு பெரும் ஆபத்தை விளைவிப்பதை மீண்டும் ஓர் பெரியாரே பிறந்து வந்தாலும் கை மீறிய நிலையை தடுக்கவே முடியாது!
புத்தரின் தலையை கொய்து யானை முகத்தை பொருத்திய சனாதனம் பெரியார் எனும் ஆளுமையின் தலையை கொய்து பிரபாகரன் எனும் பிம்பத்தை பொருத்திவிட முயல்வதை சரியாக புரிந்துக் கொள்ள இயலாதவர்களுக்கு என் ஒரே கேள்வி...
"நீங்க எஎல்லாம் என்னதான் பெரியாரைப் படிச்சீங்க?"
        - மு.தமிழ் மறவன்

 part 2 அனுபவம் புதுமை.  ஓர் கருஞ்சட்டை தோழரிடம் பெரியாரை குறித்து அவதூறாகவே பேசுங்களேன்!
மிக பொறுமையாகவும் தெளிவாகவும் அவர் அதற்கு விளக்கம் அளிப்பார்.
சரி, இப்போது அதே கருஞ்சட்டை தோழரிடம் பிரபாகரனை குறித்து அவதூறாக கூட வேண்டாம் விமர்சனம் வைத்துப் பாருங்கள்
திடீரென கோபம் வரும், நீ அரை வேக்காடு உங்களுக்கு அரசியலே தெரியவில்லை என்பார்கள்
நீ சங்கி ஆர்எஸ்எஸ் என்பார்கள்
இன்னும் அதிகமாக பதட்டப்படுவார்கள்!
ஏன்???
சிந்திக்க கற்றுக் கொடுத்த தந்தை பெரியாரை பற்றி அவதூறே ஆனாலும் சிந்தித்து பதிலளிக்கிறான் அவதூறாக பேசியவன் தன் தவறை உணரும் படியாக சிந்திக்க தூண்டுகிறான்
நாயக பிம்பம்,
உணர்ச்சி அரசியல் மற்றும்
சாகச வெறியால் உந்தப்பட்டு புலிகளை ஆதரிக்கிற இவர்களுக்கு பிரபாகரன் மீதான விமர்சனங்களை உணர்ச்சியை கொண்டே எதிர்கொள்கின்றனர்.
அறிவுத் தலைவனை அறிவாலும்
உணர்ச்சி நாயகனை உணர்ச்சிகளாலும் அணுகுவது இயல்புதானே!
"முன் ஏர் செல்லும் வழிதான் பின் ஏர் செல்லும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக