சனி, 10 ஜூலை, 2021

திமுக ! ஒரு பிளேன் டீ தொண்டனின் ஆதங்கம்

தினகரன் அரசு  : தம்பி உதயசூரியன் பதிவு!
தலைமைக்கு கருத்து சொல்லும் அளவிற்கெல்லாம் எமக்கு அரசியல் முதிர்ச்சியும், அனுபவமும் கிடையாது. ஆனாலும் மனது முழுவதும் ஒரு சில காயங்கள் ஆறாமல் இருக்கிறது, அதனை சரி செய்ய வேண்டும் எனும் நோக்கத்தில் தான் இந்தப்பதிவு
மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களை நாம் மனதார வரவேற்கிறோம்
அதில் மாற்றுக் கருத்து இல்லை, இன்றைக்கு கமலஹாசன் கம்பெனியிலிருந்து திமுகவிற்கு வந்தவர்கள் கமலஹாசன் கம்பெனி ஆரம்பிப்பதற்கு முன்பு எங்கு இருந்தார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
இன்று இவர்கள் வந்திருப்பது முழுக்க முழுக்க நாம் ஆட்சியில் இருக்கிறோம் எனும் ஒற்றை காரணம் தவிர வேறு எதுவும் இருக்காது,
ஆனால் பிறந்ததிலிருந்து திமுக, தாத்தா காலத்தில் இருந்து திமுக என்று இருப்பவர்களை அரவணைத்து செல்லாத மாவட்ட செயலாளர்களையோ, நாம் தோல்வியடைந்த இடங்களில் தோல்விக்கு காரணமானவர்களையோ தலைமை எந்த கேள்வியும் கேட்காமல், கோஷ்டிப் பூசலை சரி செய்யாமல், உட்கட்சி பிரச்சினைகளை ஆதாரங்களோடு சேகரித்து அதற்கான நடவடிக்கை எடுக்காமல், நாம் மாற்றுக் கட்சியினரை இங்கே இழுத்து பிடிப்பதெல்லாம் தேவையில்லாத வேலை

இன்று இங்கு வருப்பவர்கள் நாளை எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், ஆனால் பிறந்ததிலிருந்து திமுக என்று நெஞ்சில் பச்சை குத்திக் கொண்டு பலர் இங்கே இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள், அவர்களை எங்கேயும் செல்லாமலும் அவர்கள் இன்னமும் கழகத்திற்காக உழைக்கும் வகையிலும் தலைமை நடந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் ,

ஆனால் தளபதியாரோடு ஒரேயொரு புகைப்படம் எடுத்தால் வாழ்நாள் முழுவதும் போதுமென எங்கேயோ கிராமத்தில் ஒரு கழகக்காரர் இருப்பார், அவர் சிந்தை முழுவதும் கழகமாகவே இருக்கும், அவர்களை தூக்கி பிடியுங்கள்.
அண்ணா "ஆட்சி வந்துவிட்டது கட்சி போய்விடுமோ" என்றார் ஆனால் திமுக எந்த காலத்திலும் போகாது என்று தலைவர் தளபதியார் வழியில் நின்று கொண்டிருக்கக்கூடிய உடன்பிறப்புகளை அரவணைத்து செல்ல வேண்டியதும் கழகத்தின் பணி தான்.
வாழ்க அண்ணா
வாழ்க கலைஞர்
எக்காலமும் தளபதியார் வெல்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக