செவ்வாய், 6 ஜூலை, 2021

12 பாஜக எம்எல்ஏக்களுக்கு ஓராண்டு சட்டமன்ற இடைநீக்கம்!.. மகாராஷ்ட்ரா சபாநாயகர் .

 மாலைமலர் : சட்ட மன்றத்தை வழிநடத்திய தற்காலிக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவுக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் தகாத வார்த்தைகளால் பேசியதுடன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மகாராஷ்டிர சட்டமன்றத்தில்  பாஜக கடும் அமளியில் ஈடுபட்டது. சபையை வழிநடத்திய தற்காலிக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவுக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் அவதூறான வார்த்தைகளால் பேசியதுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பேரவையில்  கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவர்களை அமைதியாக இருக்கும்படி பாஸ்கர் ஜாதவ் கேட்டுக்கொண்டும், உறுப்பினர்கள் அமைதியடையவில்லை.
இதனையடுத்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அமளியில் ஈடுபட்ட 12 பாஜக எம்எல்ஏக்களை ஒரு வருடத்திற்கு இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக