திங்கள், 5 ஜூலை, 2021

காகிதம் இல்லாத மின்னணு பட்ஜெட்- சபாநாயகர் அப்பாவு தகவல்

 மாலைமலர் :கால மாற்றத்துக்கு ஏற்ப காகிதம் இல்லாத மின்னணு பட்ஜெட்டை கொண்டுவர வேண்டும் என்று பெரும்பாலான உறுப்பினர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை: சபாநாயகர் அப்பாவு இன்று மதியம் தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக சட்டசபையில் காகிதம் இல்லாத மின்னணு பட்ஜெட்டை தாக்கல் செய்வது பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது. அது தொடர்பான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
கால மாற்றத்துக்கு ஏற்ப காகிதம் இல்லாத இதுபோன்ற மின்னணு பட்ஜெட்டை கொண்டுவர வேண்டும் என்று பெரும்பாலான உறுப்பினர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.



இதுதொடர்பாக முதல்-அமைச்சருடன் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. அப்போது அவர், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மின்னணு பட்ஜெட் பற்றி நன்றாக தெரிந்து கொள்ளும் வகையில் பயிற்சி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதன்படி அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக