ஞாயிறு, 4 ஜூலை, 2021

பிலிப்பைன்ஸில் விழுந்து நொறுங்கியது விமானப்படை விமானம்

tamilmirror.lk தென் பிலிப்பைன்ஸில், இராணுவ விமானமொன்று இன்று (04) ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது.

அந்த விமானம் விபத்துக்குள்ளான வேளையில், அதில் 92 பேர் பயணித்துள்ளனர். எனினும், ஆகக் குறைந்தது 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பிலிப்பைன்ஸ் விமானப்படையின் சி -130 என்ற விமானமே இவ்வாறு தரையிறங்கியுள்ளது.ஜோலோ தீவில் தரையிறங்கும் போதே விபத்து சம்பவித்துள்ளது என அந்நாட்டு விமானப்படை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. "மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன" என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக