வெள்ளி, 9 ஜூலை, 2021

தமிழ்நாட்டில் தி மு க தோன்றிய காலத்திலேயே இலங்கை திமுக தோன்றியது

May be an image of 12 people, people standing and text that says 'சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் மணவைத் தம்பி இலங்கைப் பிரஜையாக இருக்க முடியாத நீலையில் 1972இல் நாடு திரும்புகிறார் அவரை விமான நிலையத்தில் வழியனுப்பி வைக்கின்றனர் எஸ். டி.எஸ். தம்பதியர். முன்னால் மணவையின் மகன் மணவை அசோகன் சிறுவனாக.'

Manavai Asokan  : இன்றைய தினம் 9 /7/ 21  யாழ்ப்பாணத்தில்  வெளிவரும்  " காலைக்கதிர் "  பத்திரிக்கையில்  என்னுடைய. தந்தையார்.  மறைந்த. திரு.  ஏ. எஸ்.  மணவைத்தம்பி  ஜயா  அவர்கள்  இலங்கையில் இருந்து  தமிழ்நாடுக்கு  புறப்பட்டுச்  செல்லும்  படம்  
வெளியாகியுள்ளது.  ஆசிரியர்  அவர்களுக்கு  நன்றி :  மணவை  அசோகன்.
Radha Manohar  : தங்களின் தந்தையரின் இலங்கை திராவிட முன்னேற்ற கழகம் பற்றிய வரலாற்று செய்திகளை பதிவிட்டால் மிகவும் நன்று . இது விடயத்தில் பலருக்கும் தெரியாத செய்திகள் தங்களுக்கு தெரிந்திருக்கும் தங்களின் வரலாற்று சான்றாக நல்ல படங்களும் இருக்கும் என்றெண்ணுகின்றேன் .
Manavai Asokan  :  Radha Manohar அண்ணனுக்கு. வணக்கம். சில ஆய்வுகளை தேடிக் கொண்டு உள்ளேன்.. சந்தர்ப்பம் வரும் வேளையில் நிச்சயம் வெளியிடுவேன்...நன்றி. மணவை அசோகன்.
Radha Manohar  : Manavai Asokan இலங்கையில் திராவிட முன்னேற்ற கழகம் இருந்தது என்ற செய்தியே இன்று மக்களுக்கு தெரியவில்லை. இலங்கை வரலாற்றில் இ தி மு க ஒரு அழுத்தமான பாத்திரத்தை வகித்திருக்கிறது
அதன் தோற்றமும் அது முன்னெடுத்த அரசியலும் சமூக விழிப்புணர்வும் காலவெள்ளத்தில் மறக்கடிக்க படக்கூடாது யாழ்ப்பாணத்தில் நடந்த சத்தியாகிரகத்தில் தங்கள் தந்தை உட்பட தலைவர் இளஞ்செழியன் போன்றோர் கலந்து கொண்டிருக்கிறார்கள் இலங்கையின் பல பாகங்களிலும் .வடபகுதியிலும் கூட பல கூட்டங்களை நடத்தி இருக்கிறார்கள்
இது பற்றிய ஒரு வரலாற்று பதிவாக ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூரும் நிகழ்வுகளை நடத்தலாமே?


இது பற்றி சிந்திக்குமாறு அன்புடன் தங்களை வேண்டுகொள்கிறேன் .
Manavai Asokan  : திராவிட முண்ணேற்றக் கழகம் தமிழ் நாட்டில் தோறிய. காலக் கட்டத்தில் தான் இலங்கையில் தி.மு.க. தோன்றியது.. .தமிழ்நாட்டில் தி.மு.க. கட்சி தொங்கும் விழாவிற்கு. சிறப்பு ஆழைப்பாளர்களாக. எனது தந்தையார்.கலந்துக் கொள்ளவேண்டும் என்று.
பேரரிஞர் அண்ணா தன்னுடைய. கரத்தால் சிறப்பு ஆழைப்பிதல் அனுப்பியிருந்தார். அதனை ஏற்று தந்தையார் அவர்கள் .சென்னை இராயபுரத்தில் தொடங்கிய. தி.மு.க. கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.
இலங்கை மலையகத்தில் திராவிட முண்ணேற்றக் கழகம் மிக. பிரமாண்மாக. வளர்ந்தது...மக்கள் மனதில் நம்பிக்கை வளர்ந்தது... முக்கியமாக. நான் ஒன்றை கூறிப்பிடவேண்டும்.. தி.மு.காவின் வளர்ச்சி மாற்றுக் கட்சியினர். விரும்பவில்லை முக்கியமாக. அந்த. நேரத்தில் இருந்த. அரசாங்கமும் விரும்வில்லை.. அதனால் பல. இன்னல்களை அரசாங்கம் வழங்கியது..
எனுடைய. தந்தையார். இனி இல்லாத பிரச்சனைகளை தினமும் சந்தித்தார்.. அதனால் வேதனை அடையவில்லை மாறாக ஊக்கம் அடைந்தார். ஒரு உண்மை சொல்லப்போனால்.
அவருடைய. இலங்கை அரசியல் விபரங்களை
பற்றிய. புத்தகம் விரைவில் எழுதவுள்ளேன்.
அதற்கான. குறிப்புகளை சேகரித்துக் வைத்துள்ளேன்.
அதன் வாயிலாக... என் தந்தையின் உதவிகள் பெற்று நன்றி மறந்தவர்களையும் முக்கியமாக. பெயருடன் குறிப்பிடுவேன். முக்கியமாக. இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்கள் பலர் அரசியல் கட்சிக்கு அப்பாட்
பட்டு தமிழகம் வரும் பொழுது எனது தந்தையார்
அவர்களை நேரில் வந்து சந்தித்திருக்கின்றனர்.
தமிழ் பேசும் தலைவர்கள்.. அனைவருமே. வந்திருக்கின்றனர். மேலும் விபரங்கள் என்னுடைய. புத்தகத்தில் வரவிருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக