சனி, 26 டிசம்பர், 2020

BJP ஸ்மிரிதி இரானி மீது லஞ்ச குற்றச்சாட்டு பதிவு . ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்டார் . துப்பாக்கி வீராங்கனை வர்த்திகா சிங்

nakkheeran.in - நக்கீரன் செய்திப்பிரிவு : பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்மிருதி இரானி. இவர் மத்திய ஜவுளி மற்றும் பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துவருகிறார்.             இந்தநிலையில், சர்வதேசத் துப்பாக்கிச் சுடும் வீராங்கனை வர்திகா சிங், மத்திய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராவதற்குப் பணம் கோரியதாக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி மற்றும் மேலும் இருவர் மீது குற்றம் சாட்டி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.                                     மத்திய அமைச்சரின் இரண்டு உதவியாளர்களான விஜய் குப்தா மற்றும் ரஜ்னிஷ் சிங் ஆகியோர், தன்னை மத்திய பெண்கள் ஆணையத்தில் உறுப்பினராக்குவதற்கு முதலில் 1 கோடி ரூபாய் கேட்டதாகவும், பின்னர் அதனைக் குறைத்து, 25 லட்சம் ரூபாய் கேட்டதாகவும், அவர்களில் ஒருவர் தன்னிடம் ஆபாசமாகப் பேசியதாகவும் குற்றம் சட்டியுள்ள வர்திகா சிங், தன்னை அந்த ஆணையத்தின் உறுப்பினராக நியமித்துப் பொய்யான கடிதம் ஒன்றையும் அவர்கள் அளித்ததாகவும் அந்தப் புகாரில் கூறியுள்ளார்.

இரட்டை இலையை முடக்க சதி: அமைச்சர் அதிர்ச்சித் தகவல்!

minnambalam :அதிமுகவின் உச்சமாக கருதப்பட்ட பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அக்கட்சி முதல் முறையாக சட்டமன்றப் பொதுத் தேர்தலை 2021 ஆம் ஆண்டு சந்திக்க இருக்கும் நிலையில்... இன்னமும் கட்சிக்குள் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன.முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் முக்கிய கூட்டணி கட்சிகள் இந்த நடவடிக்கையை முழுமையாக வரவேற்கவில்லை. குறிப்பாக அதிமுக வின் முக்கிய கூட்டணி கட்சியான பாஜக பல்வேறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறது.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தில் தற்போதைய துணை முதல்வரான பன்னீர்செல்வத்துக்கு முழுமையான ஒப்புதல் இல்லை என்றும் கட்சி நிர்வாகிகளின் நெருக்கடி காரணமாகவே அந்த முடிவுக்கு அவர் தள்ளப்பட்டார் என்றும் அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது: டிஸ்சார்ஜ் குறித்து நாளை முடிவு- மருத்துவமனை தகவல்

malaimalar : நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை சீராக உள்ளதாகவும், டிஸ்சார்ஜ் குறித்து நாளை முடிவு செய்யப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது: டிஸ்சார்ஜ் குறித்து நாளை முடிவு- மருத்துவமனை தகவல் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது.

துருக்கியில் மிகப்பெரிய தங்கப்புதையல் கண்டுபிடிப்பு

latest tamil news

dinamni: புதுடில்லி : துருக்கியில், மிகப் பெரிய தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு, உலகின் பல நாடுகளின், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட அதிகம் என்பது ஆச்சரியம்.இந்த தங்கத்தின் மதிப்பு, கிட்டத்தட்ட, 44 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என சொல்லப்படுகிறது. இந்த தங்க புதையலின் எடை, 99 டன். கொரோனா காலத்தில் இப்படி ஓர் அதிர்ஷ்ட வரவு. புதையல் கிடைத்ததை அடுத்து, பொருளாதார பாதிப்புகளை ஓரளவு எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அந்நாட்டில் ஏற்பட்டுள்ளது.துருக்கியில், உர நிறுவனம் ஒன்று வாங்கிய நிலத்தில் இந்த தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், இங்கு தங்கம் வெட்டி எடுக்கப்படும் என்றும், துருக்கி பொருளாதாரத்துக்கு இது மிகவும் உதவும் என்றும் கூறப்படுகிறது. கடந்த, 2018ல் இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 77 ஆயிரம் கோடி டாலராகும்.

உதயநிதி திருவல்லிக்கேணியில் போட்டி?

latest tamil news
dinamalar.com : சென்னை: வரும் சட்டசபை தேர்தலில், திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி தரப்பினர் முடிவு செய்துள்ளனர். அத்தொகுதியில் போட்டியிட, மாவட்ட நிர்வாகிகளும், பகுதி நிர்வாகிகளும் விரும்புவதால், சொந்த கட்சியிலேயே உதயநிதிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சென்னை நகரில் உள்ள, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து, ஜெ.அன்பழகன் இரண்டு முறை, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது மறைவுக்கு பின், தற்போது, அத்தொகுதி காலியாக உள்ளது. வரும் சட்டசபை தேர்தலில், அத்தொகுதியில், உதயநிதி போட்டியிட வேண்டும் என, இளைஞரணியினர் விரும்புகின்றனர்.
பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிப்பது, வாக்காளர்கள் பட்டியலில், இறந்தவர்களின் ஓட்டுக்கள் நீக்குவது, புதிய வாக்காளர்கள் சேர்ப்பது போன்ற பணிகளை, உதயநிதி தரப்பினர் முடுக்கி விட்டுள்ளனர். மதன் தலைமையில், சேப்பாக்கம் பகுதி நிர்வாகிகள், உதயநிதியை வெற்றி பெற வைக்க வேண்டும் என, களப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆதரவாளர்களை மதுரைக்கு அழைக்கும் மு.க.அழகிரி

ஆதரவாளர்களை மதுரைக்கு அழைக்கும் மு.க.அழகிரி

மின்னம்பலம்  தமிழகம் முழுவதுமுள்ள ஆதரவாளர்கள் வரும் ஜனவரி 3ஆம் தேதி மதுரை வர அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.    திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கலைஞர் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி மீண்டும் அரசியல் வெளிச்சத்துக்கு வந்துவிட்டார். திமுகவிலிருந்து தனக்கு எந்த அழைப்பும் வரவில்லை எனவும், அப்படி வந்தாலும் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை என்றும் அறிவித்தார் அழகிரி.      அத்துடன், ஆதரவாளர்களை அழைத்துப் பேசி அரசியலின் அடுத்த நகர்வை அறிவிக்க உள்ளதாகக் கூறினார். அழகிரி உள்பட யார் கட்சி ஆரம்பித்தாலும் அது திமுகவுக்கோ, திமுகவின் வாக்கு வங்கிக்கோ பாதிப்பை ஏற்படுத்தாது என திமுக தரப்பிலிருந்து கனிமொழி பதிலளித்தார்.

இந்த நிலையில் அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில், வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். இந்த ஆலோசனை கூட்டம் ஜனவரி 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணியளவில் மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் நடைபெறும் என்று அறிவித்தார். 

103 கிலோ தங்கம் திருட்டு சி பி ஐ மீது வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி.. சிபிஐ வசம் இருந்த 103 கிலோ தங்கம்???

Jeyalakshmi C - tamil.oneindia.com : சென்னை: சிபிஐ வசம் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். 

சிபிஐக்கு பெரிய களங்கமாக கருதப்படும் தங்க கட்டிகள் காணாமல் போன விவகாரத்தில், சிபிஐ அதிகாரிகள் சென்னையில் தனியாக விசாரணையை தொடங்கியுள்ளனர். சென்னை பாரிமுனையில் செயல்படும் தனியார் தங்க ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.                                    இந்த சோதனையின்போது, குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தில் 400.47 கிலோ தங்கத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் பறிமுதல் செய்யப்பட்ட அந்த தங்கம், அதே நிறுவனத்தில் உள்ள பாதுகாப்பு லாக்கரில் பத்திரமாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.                 அந்த லாக்கரின் சாவிகள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. கடந்த பிப்ரவரி மாதம் அந்த லாக்கரை திறந்து பார்த்தபோது, 400.47 கிலோ தங்கத்தில், 103.864 கிலோ தங்கம் மாயமாகிவிட்டது

ரஜினி படங்களின் ஆயிரம் ரூபா டிக்கெட்டும் மூடப்படும் திரை அரங்குகளும்


Image may contain: outdoor

கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக திரை அரங்குகள் மூடப்பட்டு வருகின்றன என்பது எல்லோரும் அறிந்த உண்மை . அதற்கான காரணிகளாக கூறப்படுவது வீடியோக்கள் சிடிக்கள் வருகையும் தற்போதைய இணையதள வசதியும்தான் என்பதுவும் கூட ஓரளவு உண்மைதான்.
ஆனால் இவை எல்லாம் மேலெழுந்தமான உண்மைகள்.
திரை அரங்குகளின் மூடுவிழாக்களில் பெரும் பங்கை ஆற்றியது மிகப்பெரிய மாசாலா படங்கள்தான் . அதிலும் குறிப்பாக ரஜினியின் சிவாஜி படம்தான் திரை அரங்குகளுக்கு ஒரு சாபக்கேடாக அமைந்தது என்று கூறப்படுகிறது . குறிப்பாக இது பற்றி திரு மதிமாறன் ஒரு காணொளியில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்.
அரங்குக்கு சென்று திரைப்படங்கள் பார்ப்பது ஒரு சுகானுபவம். வெறுமனே அந்த படங்களை மட்டும் பார்ப்பதல்ல ரசிக்கத்தன்மை என்பது.
அந்த திரை அரங்கம் அங்கு கூடும் மக்களின் உணர்ச்சி கலவைகள் . அந்த மனிதர்களின் வேர்வையும் வேறு பல வாசனை திரவியங்களும் . கூடவே சில நேரம் சிகரெட் வாசனைகளும் கூட ஒரு வினோத உணர்வுகளை தந்து மீண்டும் அதை அனுபவிக்க தூண்டுவதுண்டு.
மக்கள் மகிழ்வாக கூடும் வாய்ப்பு என்பது மனிதவாழ்வின் உன்னத தருணங்களாகும்.

பாலத்தின் கீழே The Free School Under the Bridge’ என்கிற இந்தப் பள்ளி

Image may contain: 1 person, sittingபாண்டியன் சுந்தரம் : குடும்ப வருமானம் மளிகைக் கடை ஒன்று மட்டுமே என்ற நிலையிலும் பாலத்தின் கீழே பள்ளி அமைத்து பாடம் எடுக்கிறார் ராஜேஷ் குமார் சர்மா! இந்தியாவில் இன்னமும், இன்றும் பல குழந்தைகளுக்குக் கல்வி எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. குழந்தைகள் பள்ளியில் சேர ஊக்குவிக்கும் வகையில் பல்வகை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், பல்வேறு காரணங்களால் குழந்தைகள் கல்வி கற்க இயலாத நிலையே காணப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தைகள் கல்வி கற்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ராஜேஷ் குமார் சர்மா. அவர்கள் வாழ்க்கையில் முன்னேறத் தேவையான அடிப்படைக் கல்வி வழங்கப்படுவதை உறுதிசெய்கிறார். ராஜேஷ் கடந்த 13 ஆண்டுகளாக வகுப்பெடுக்கிறார். நலிந்த பிரிவினைச் சேர்ந்த சுமார் 300 குழந்தைகளுக்கு டெல்லியின் யமுனா நதிக்கரைக்கு அருகே இருக்கும் மெட்ரோ பாலத்தின் கீழ்தான் வகுப்பெடுத்து வருகிறார். Image may contain: 1 person
‘The Free School Under the Bridge’ என்கிற இந்தப் பள்ளி இரண்டு கால அட்டவணையில் இயங்குகிறது. காலை 9 முதல் 11 மணி வரை 120 மாணவர்கள் படிக்கின்றனர். மதியம் 2 முதல் 4.30 மணி வரை 180 மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் ஏழு ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களில் சிலர் தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தன்னார்வலர்களாக இணைந்துகொண்டு நான்கு முதல் பதினான்கு வயது வரையிலும் உள்ள மாணவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கின்றனர்.

தமிழ்நாட்டின் கல்வி விவசாயம் மருத்துவம் நீர்மேலாண்மை மொழி மாநில உரிமை சாலை வசதிகள்

மு.ரா.விவேக் : சுதந்திர இந்தியாவில் ஒரு பிராந்திய கட்சி மாநிலத்தை கைப்பற்றியது என்று சொன்னால் அது தமிழ்நாட்டின் தி.மு.கழகம் தான், அண்ணாவிற்கு பிறகு, கலைஞர் 1969 ஆம் ஆண்டு முதன்முதலில் தமிழகத்தின் முதல்வரானார் அதாவது இந்தியாவிற்கு சுகந்திரம் கிடைத்து 22 ஆவது ஆண்டில்-அப்பொழுது தான் இந்திய ஒன்றியத்தை சீரமைக்க அகில இந்திய காங்கிரஸ் முதல் ஐந்தாண்டு திட்டம் ,இரெண்டாவது ஐந்தாண்டு திட்டம் என்று அறிவித்து இந்திய நாடே உட்கட்டமைப்பை செய்து கொண்டிருந்தநேரம்!
மீண்டும் சொல்கிறேன் 1969 Feb 10 கலைஞர் தமிழ்நாட்டின் முதல்வராக பதவி ஏற்கிறார்-திரும்பிய பக்கமெல்லாம் சவால்கள்!
கல்வி
விவசாயம்
மருத்துவம்
நீர்மேலாண்மை
மொழி
மாநில உரிமை
சாலை வசதிகள்
உட்கட்டமைப்புகள்
பகுத்தறிவு பிரச்சாரம்
சமூகநீதி கொள்கைகள்
இடஒதுக்கீடு உரிமைகள்
கலை   இலக்கியம்     சுயாட்சி முழக்கம்

தினமும் 200 கேஸ் போடணும்...?" -ஹெல்மட் இருந்தால் மாஸ்க் போடவில்லை .. மாஸ்க் இருந்தால் ஹெல்மட் போடவில்லை என்று கேஸ்

ஹெல்மட் இருந்தால் மாஸ்க் போடவில்லை என்று ஒரு கேஸ், மாஸ்க் இருந்தால் ஹெல்மட் போடவில்லை என்று ஒரு கேஸ் எனப் பதிவு செய்கின்றனர். எங்களில் பலருடைய ஒரு நாள் வருமானமே...nakkheeran.in - மகேஷ் : police case

 கரோனாவிலிருந்து தற்போதுதான் மக்கள் தங்களுடைய இயல்புநிலைக்கு மாறி வருகின்றனர். கரோனா பாதிப்பு தமிழகத்தில் தீவிரமாக இருந்த நேரத்தில், பலர் வேலைவாய்ப்பை இழந்து தவித்தனர். இதனால், மக்களின் வாழ்வாதாரமே பெரிய கேள்விக் குறியாகி இருந்தது. கடந்த மார்ச்சிலிருந்து அக்டோபா் வரை முழுமையான பாதிப்பைச் சந்தித்த மக்கள், அடுத்த இரண்டு மாதங்களில் சில தளர்வுகளைப் பெற்றுள்ளனர். ஆனால், மீண்டும் கரோனாவின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாகத் தற்பொழுது வரும் தகவல் பலருக்கும் பதற்றத்தைக் கிளப்பிவிட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகக் காவல்துறை கடந்த சில மாதங்களாக எந்தவிதப் பெட்டி கேஸும் போடாமல் இருந்த நிலையில், கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்களை வளைத்து வளைத்துப் பிடித்து பெட்டி கேஸ் போட்டு வருகின்றனர். இந்தத் திடீர் அதிரடி நடவடிக்கை எதற்காக என்று விசாரித்தோம் அதில், "தமிழகக் கூடுதல் காவல்துறை தலைவராக உள்ள ராஜேஷ் தாஸ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெல்லைக்கு வந்தபோது, அவருக்காகச் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அறிந்துகொள்ள நெல்லை வந்தார். 

வெள்ளி, 25 டிசம்பர், 2020

கலைப்புலி தாணுவும் வைகோவும் .. இதுவும் ஒரு பழைய அரசியல் டைரி குறிப்புத்தான்

Raja Rajendran :
· தாணு தொடர்கிறார். வைகோவின் அன்பும், சாதுர்யங்களுமே தன்னைக் கலைஞரிடமிருந்து பிரிய வைத்துவிட்டது என வருந்தி எழுதுகிறார் ! வைகோ இன்று திமுகவுடன் நெருக்கமாக இருப்பதால் அவரால் மனம் திறந்து பேச முடியவில்லை என்பது ஒவ்வொரு பத்தியிலும் தெரிகிறது ! 1993 -ல் பத்து லட்சம் கடனை வைகோ சொல்லி தாணு கொடுத்து, அது வராது என்கிற நிலையில், தானே தந்துவிடுவதாக வைகோ உறுதி கூறி, இன்றுவரை அது வரவில்லை என்கிறார் ! எம் ஆர் சி நகரில் தான் வாங்கிய புதுவீட்டை இரண்டு மாதங்கள் பயன்படுத்திவிட்டு திரும்பத் தருகிறேன் என்றுவிட்டு, ஐந்து வருடங்கள் ஓசியில் (ஓசி என்பது என் செருகல் ;)) வசித்தார் என்கிறார் !
இப்படியெல்லாம் எதையெதையோ கொட்ட நினைப்பவருக்கு என்னமோ தடுக்கிறது. தொடரும் போடுவதற்கு மேலே வைகோ தனக்கு செய்த உதவிகளை வரும் வாரம் சொல்கிறேன் என்று முடிக்கிறார். இன்னும் கொஞ்ச வருடங்கள் கழித்து எழுதியிருக்கலாம் தாணு சார் 😉
போனவாரம் அழகிரி பற்றி ஏதோ சொல்லவிருந்தாரே என்று அதற்காகத்தான் உள்ளே போனேன். வைகோவுடன் தாணு இருந்த நெருக்கத்தை அழகிரி சந்தேகித்திருக்கிறார். அவ்வளவுதான். அதைத்தான் போன வாரமே பாத்துட்டமே ? எட்டப்பர் வகையறா பேர் போட்டு போஸ்டர் ஒட்டினா சந்தேகம் வரத்தானே செய்யும் ?

சுதாகரன் விடுதலையைத் தடுக்கும் சசிகலா .. சுதாகரனுக்கும் சசிக்கும் என்னதான் பிரச்சனை? பழைய கொடுக்கல் வாங்கல் ?

minnambalam : ெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சுதாகரன் விடுதலையை சசிகலா தடுத்துவருவதாக தகவல்கள் வந்துள்ளன.

சுதாகரன் விடுதலையைத் தடுக்கிறாரா சசிகலா:  சிறைக்குள் நடப்பது என்ன?

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். வழக்கு நடந்த காலங்களில் சுதாகரன், ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருந்த நாட்களை கழித்தால் அவர் இந்நேரம் விடுதலையாகி இருக்க வேண்டும். ஆனால், அவருக்கு நீதிமன்றம் விதித்துள்ள பத்துகோடி ரூபாய் அபராதத் தொகையை இதுவரையில் செலுத்தாமல் சசிகலா தரப்பு காலதாமதம் செய்துவருவதாகச் சொல்கிறார்கள் சிறைத்துறை வட்டாரங்களில்.

கொரோனா தடுப்பூசி ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் ... 4 மாநிலங்களில் ஒத்திகை!

minnambalam : இந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் இருக்கின்றன. அமெரிக்காவின் பிஃபைசர் நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பூசிக்கு இந்தியாவின் ஒப்புதலுக்காக அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதுபோன்று ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து புனேவின் சீரம் நிறுவனம் கொரோனா தடுப்பூசி சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அதோடு, பரிசோதனை மேற்கொண்டு வரும் கோவிஷீல்டு மருந்தை அவசர கால பயன்பாட்டுக்காக கொண்டுவர இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி கேட்டுள்ளது.இந்நிலையில், கொரோனா தடுப்பூசிகளை வெளியிடுவதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் மேயராக 21 வயது மாணவி தெரிவு .. நாட்டிலேயே வயதில் குறைந்த மேயர் Kerala

நக்கீரன் : நாட்டிலேயே முதல் முறையாக 21 வயது இளம்பெண் ஒருவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள முடவன்முகன் பகுதியைச் சேர்ந்த இளங்கலை பட்டதாரியான ஆர்யா ராஜேந்திரன் என்ற 21வயது இளம்பெண், கேரளாவில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.

>அவர் வசித்து வந்த பகுதியின் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட அவர், வெற்றி பெற்றதோடு தற்பொழுது திருவனந்தபுரத்திற்கு மேயராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாட்டிலேயே முதன்முறையாக, மிகவும் இளம்பெண் ஒருவர், மாநகராட்சியின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வயதிலேயே மேயர் பதவியைப் பெற்ற அவருக்கு வாழ்த்துகள் குவிந்துவருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது - ஐதராபாத்தில் அப்பல்லோ மருத்துவமனை Rajinikanth Health LIVE Updates

மாலைமலர்  :  ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம்
கோப்பு படம்
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது.

இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீரென ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   
அவருக்கு, ‘கொரோனா குறித்து எந்த அறிகுறியும் இல்லை.
ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் முதல்கட்டமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

கவிஞர் வைரமுத்து : நல்ல செய்தியோடும் நல்ல தமிழோடும் ஒரு கலைப்படையோடும் உங்களைச் சந்திக்க வருகிறேன்

Mathivanan Maran - tamil.oneindia.com : சென்னை: நல்ல செய்தியோடும் நல்ல தமிழோடும் ஒரு கலைப்படையோடும் உங்களைச் சந்திக்க வருகிறேன் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வைரமுத்து தமது சமூக வலைதளப் பக்கத்தில் எழுதியுள்ளதாவது: 90 ஆண்டுகளுக்கு முன்னால் பேசும் படம் தோன்றியபோது அது பாடும் படமாகவே பிறந்தது. வசனங்களைவிடப் பாடல்களே வரவேற்கப்பட்டன. பாடகனாகத் திகழ்ந்தவனே நடிகனாகக் கொண்டாடப்பட்டான். 

இதிகாசம் - புராணம் - இலக்கியம் - வரலாறு - சமூகம் - சீர்திருத்தம் - சமயம் - போராட்டம் எல்லாமே பாடல் வழியேதான் பரிமாறப்பட்டன.. தமிழர்களுக்குப் பாட்டு என்பது கலைக்கருவி மட்டுமன்று; கற்பிக்கும் கருவி. தமிழர்களின் காதல், வீரம் - விழுமியம், பண்பாடு - பக்தி - பாரம்பரியம் - பொதுவுடைமை - பகுத்தறிவு - தேசியம் - திராவிடம் - குடும்பம் - தத்துவம், வெற்றி - தோல்வி, நம்பிக்கை - நிலையாமை, இறந்தகாலம் - எதிர்காலம் எல்லாவற்றையும் பள்ளி செல்லாமலே கற்றுக் கொடுக்கும் பாடப் புத்தகமாகப் பாட்டுப் புத்தகம் திகழ்ந்தது. பாடல்களுக்கு மத்தியில் கலைக்களைகளும் முளைத்திருக்கின்றன என்ற போதிலும் தமிழர்களின் ஒரு நூற்றாண்டு வாழ்வின் வழியே திரைப்பாடலும் தடம்பதித்தே வந்திருக்கிறது என்பதைப் பண்டித உலகம்கூட மறுதலிக்க முடியாது. தொல்லிசை அறிந்த பாவாணர்களும், பழந்தமிழ் அறிந்த பாவலர்களும், தங்கள் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கித் திரையிசையை உயர்த்தியிருக்கிறார்கள்.

குயிலி வீரமாகாளியாகவும் தீப்பாஞ்ச அம்மனாகவும் வணக்கப்படுகிறாள்

No photo description available.
Sundar P : · ‘குயிலியின் தியாகத்தில் வேலு நாச்சியாரின் வெற்றி’ என்ற நூலிலிருந்து ..... முத்துவடுகநாதர் கொலைக்குப்பின்னர் விருப்பாச்சியில் வேலுநாச்சியாரின் படைகள் போர்பயிற்சி மேற்கொள்கின்றன. அப்போது சிலம்பு வாத்தியார் வெற்றிவேல் குயிலியை அழைத்து நீ என்ன சாதி? என்று வினவுகிறார். குயிலி, "நான் சாம்பான் சாதி" என்று கூறுகிறாள். தாழ்ந்த சாதிப் பெண், தாழ்வு மனப்பான்மையுடன் கட்டளைக்குக் கீழ்படிந்து நடப்பாள். அதை பயன்படுத்தித் தன் திட்டத்தை நிறைவேற்ற படிப்பறிவில்லாத குயிலியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கணக்கிட்டுக் கொண்டு வேலுநாச்சியாரின் இருப்பிடம், படை பலம் குறித்து தான் எழுதிய ஒரு கடிதத்தை கொடுக்கிறார் சிலம்பு வாத்தியார். கடிதத்தை மல்லாரி ராயன் எனும் ஆங்கிலேய அடிமையிடம் கொண்டு சேர்க்கவும் உத்தரவிட்டார் வெற்றிவேல்..
கடிதத்தை வாங்கிக்கொண்டு , தன் குடிலுக்குச் சென்று படித்துப் பார்த்த குயிலி குத்தீட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு சிலம்பு வாத்தியாரின் இருப்பிடம் நோக்கி விரைகிறாள். சிலம்பு வாத்தியாரை குத்தீட்டியால் குத்திக் கொல்லுகிறாள் குயிலி

இந்தி நடிகர் சோனு சூட்டின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்..? அவிழும் மர்மங்கள்!

Image may contain: 1 person
சாவித்திரி கண்ணன் : · சோனு சூட்டின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்சா..? அவிழும் மர்மங்கள்! இந்தியாவின் உச்சபட்ச ஸ்டார்களுக்கு இல்லாத ஒரு மிகப் பெரிய மதிப்பும், மரியாதையும் நடிகர் சோனுசூட்டுக்கு உருவாகிக் கொண்டுள்ளது! இருபது வருடங்களாக திரைப்படங்களில் நடித்தாலும் பெரிய ஹீரோ இல்லை! பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்கள் தான்! அதுவும் எண்ணி 71 படங்கள் தான்! தெலுங்கானாவின் சித்திபேட் மாவட்ட துபதண்டா ஆதிவாசிகள் சோனு சூட்டுக்கு கோயில் கட்டியுள்ளனர்!
ஆந்திராவில் ஒரு சரத்சந்திரர் பெயரிலான ஒரு பெரிய கல்வி நிறுவனம் பல்கலை கழகம் தொடங்கி கல்லூரி வரை ஒரு துறையின் பெயரையே சோனுசூட் என்று பெயரிட்டுள்ளது. ஏன்? எதற்கு என விடை தெரியவில்லை.
வெல்டிங் கடை தொடங்கி ஓட்டல் வரை சோனுசூட் பெயர் சூட்டப்பட்டு வருகிறது.

ஹிந்து சமூகம் பாழானதற்கு பிராமணன்தான் காரணம்! காஞ்சி (old) பெரியவாள் சந்திர சேகர ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (அப்பாடா)

Image may contain: 1 person, text that says '"ஹிந்து சமூகம் பாழானதற்குப் பிராமணன்தான் காரணம் என்பது என் தீர்மானமான அபிப்பிராயம்." -மகா பெரியவா சந்திரசேகரேந்திர சரசுவதி மிகள்(தெய்வத்தின் ல்-முதல் பகுதி)'

  Dhinakaran Chelliah : ·பிராம்மணீயம் “வர்ண தர்மத்தைப் பற்றி தப்பான அபிப்பிராயம் உண்டாகியிருப்பதற்குப் பிராமணன்தான் காரணம். யுகாந்தரமாக ஆத்ம சிரேயஸும், தேச க்ஷேமமும், லோக க்ஷேமமும் தந்து வந்த தர்மம் குலைந்து போனதற்கு பிராம்மணன்தான் பொறுப்பாளி. பிராமணன் தன் கடமையாகிய வேத அத்யயனத்தையும், கர்மாநுஷ்டானத்தையும் விட்டான். கடமையை விட்டான். அப்புறம் ஊரை விட்டான். கிராமங்களை விட்டுப் பட்டணத்துக்கு வந்தான். தனக்குரிய ஆசாரங்களை, அதன் வெளி அடையாளங்களை விட்டான். கிராப் வைத்துக் கொண்டான். ஃபுல்ஸுட் போட்டுக் கொண்டான். தனக்கு ஏற்பட்ட வேதப்படிப்பை விட்டு வெள்ளைக்காரனின் லௌகிகப் படிப்பில்போய் விழுந்தான். 

அவன் தருகிற உத்தியோகங்களில் போய் விழுந்தான். அதோடு, அவனுடைய நடை உடை பாவனை எல்லாவற்றையும் ‘காபி’ அடித்தான். வழிவழியாக வேத ரிஷிகளிலிருந்து பாட்டன், அப்பன்வரை ரக்ஷித்து வந்த மகோந்நதமான தர்மத்தைக் காற்றிலே விட்டுவிட்டு, வெறும் பணத்தாசைக்காகவும் இந்திரிய சௌக்கியத்துக்காகவும், புதிய மேல் நாட்டுப் படிப்பு, ஸயன்ஸ், உத்தியோகம், வாழ்க்கை முறை, கேளிக்கை இவற்றில் போய் விழுந்து விட்டான்.”

படகர்கள் நீலகிரிக்கு வந்தவர்கள் பேச்சு ! நீலகிரி தொல்குடியினர் கூட்டமைப்பு PTVG உறுப்பினர்கள் மீது, காவல்துறையில் புகார்

Lakshmanasamy Odiyen Rangasamy : · படகர்கள் நீலகிரிக்கு வந்தவர்கள் என்ற பேச்சுக்காக படுகா தேச கட்சியைத் சேர்ந்தவர்கள் நீலகிரியின் தொல்குடியினர் கூட்டமைப்பான PTVG உறுப்பினர்கள் மீது, காவல்துறையில் புகாரளித்திருக்கிறார்கள். நல்லவேளையாக படுக சமூக அமைப்புகள் இந்தப் புகாரை மனமுவந்து கொண்டாடவில்லை ஆனால் ஆச்சரியமாக எந்த ஒரு பழங்குடி அமைப்பும் ஒரு கண்டனக்குரலைக்கூட எழுப்பவில்லை. வெள்ளையர்களால் 1931 ல் பழங்குடிகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட படுகர்களை சுதந்திரம் அடைந்த பிறகு1950 ல் அரசு நீக்குகிறது. 1951 ல் நீக்கியதற்கு 60 ஆண்டுகள் கழித்து படகர்கள் வழக்குத்தொடுக்கிறார்கள்..அதில் 'மத்திய பழங்குடியின ஆராய்சிமையம் இந்த பிரச்சினை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வளவு காலம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இப்போது தேர்தலையொட்டி அது விஸ்வரூபமெடுக்கிறது என நினைக்கிறேன்.

பாமகவினர் மீண்டும் வன்முறையை கையில் ...... வெற்றி அளிக்குமா?

  

Vijayaragavan Rajasekaran : · பாமகவினர் செந்தில்குமார் தயாநிதி மாறன் போன்றோரை தாக்கியதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அந்த கட்சியை விமர்சித்து பேசியதால் வன்முறை என்பது வெறும் மேல்பூச்சு. அவர்களின் வன்முறை வெறி செயலுக்கு பல காரணங்கள் இருக்கிறது. அவர்களால் தங்கள் எதிர்பார்ப்புக்கேற்ப இன்னமும் கூட்டணியை உறுதி செய்ய முடியவில்லை. காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் திமுகவிற்கு ஆதரவாக இருப்பதால் பாமகவின் வாக்கு வங்கியில் ஓட்டை விழுந்துள்ளது. ஒருவேளை கனலரசனுக்கு திமுக சார்பில் சீட் கிடைத்து போட்டியிட்டு வெற்றி பெற்று தங்கள் கட்சி பூஜ்யமானால் அது பாமகவுக்கு மிகப் பெரிய பின்னடைவு.

திமுகவின் வெற்றி தமிழகம் முழுவதும் உறுதி செய்யப்பட்டாலும் வட மாவட்டங்களில் திமுகவின் பெரு வெற்றி பாமகவின் அழிவுக்குத்தான் கட்டியம் கூறும். பாமகவால் அரசியல் ரீதியாக முன்பு போல தலை நிமிர்ந்து களமாட முடியாது.

வியாழன், 24 டிசம்பர், 2020

வைக்கம் போராட்டம்தான் தீண்டா மையையும் சாதிக் கொடுமையும் எதிர்த்து முதன்முதலாக நடைபெற்ற அறப்போராட்டம்!

No photo description available.
  Chozha Rajan : · பெரியார் எடுத்த காரியம் தோற்றதில்லை! 1924 ஆம் ஆண்டு ராமசாமி நாயக்கர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அதுவரை, திருச்சியில் இயங்கி வந்த காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை ஈரோட்டுக்கு மாற்றினார். தனது இல்லத்தையே அலுவலகமாக ஆக்கிக் கொண்டார். அந்த ஆண்டு மே மாதம் ராமசாமி நாயக்கருக்கு வைக்கம் நகரிலிருந்து ஒரு தந்தி வந்தது. பின்னர் ஒரு கடிதம் வந்தது. அதில் இருந்த விஷயம் பின்னாளில் இந்தியாவையே திரும்பச் செய்த முக்கியமான விஷயம். அது என்ன?
திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் ஒரு சிறு நகரம் வைக்கம். ஈழவர்கள் போன்ற பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் அந்த நகரின் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடக்கக் கூட முடியாது.
இதை எதிர்த்து போராட்டம் நடத்திய ஈழவ சமுதாயத் தினரும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரும் கைதானார்கள். ஒரு கட்டத்தில் போராட்டம் நடத்தவே ஆளில்லை என்ற நிலை உருவானது.
ஈ.வெ.ராமசாமி நாயக்கர்தான் இந்த போராட்டத்தை திறமையாக நடத்துவார் என்று முடிவெடுத்தனர். இதைத் தொடர்ந்து பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்பும், கேசவ மேனனும் சேர்ந்து கையொப்பமிட்டு ராமசாமி நாயக்கருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்கள்.

திமுகவின் கிராம சபை கூட்டங்களுக்கு தடை ! தமிழக அரசு அறிவிப்பு

malaimalar : கிராமசபை என்ற பெயரை தவறாக பயன்படுத்தி அரசியல் பொதுக்கூட்டம் கூட்டினால் நடவடிக்கை. 

அரசியல் ஆதாயம் தேடுவதற்காக கிராமசபை என்ற பெயரில் கூட்டங்கள் நடத்துவது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் .     கிராமசபையை ஊராட்சி மன்றத்தலைவர், மாவட்ட ஆட்சியர் மட்டுமே கூட்ட வேண்டும்.     சட்டத்தால் அதிகாரம் பெற்றவர்களை தவிர தனி நபரோ, அரசியல் கட்சிகளோ, கூட்டத்தை கூட்டுவது சட்டத்திற்கு எதிரானது .    அனுமதி பெறாமல் கிராமசபையை கூட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு உத்தரவு .    கிராமசபை என்ற பெயரில் சில அரசியல் கட்சிகள் அரசியல் சார்ந்த கூட்டங்களை நடத்தி வருகின்றன.      சட்ட விதிமுறைகளுக்கு முரணானது மட்டுமன்றி கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது.     ஊரகப் பகுதி மக்களின் குறைகளை களைந்து கிராம முன்னேற்றம் காண வழி வகுக்கிறது கிராமசபை என தமிழக ஊரக வளர்ச்சித்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான முனைவர் தொ.பரமசிவன் காலமானார்!!

nakkheeran.in : தமிழகத்தின் பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவன் (70) உடல்நலக் குறைவால் காலமானார். பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. தமிழில் இயங்கி வந்த முக்கியமான பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் தொ.பரமசிவன். 'அறியப்படாத தமிழகம்', 'பண்பாட்டு அசைவுகள்' போன்ற நூல்கள் அவரின் முக்கியப் படைப்புகளாகத் திகழ்கின்றன. தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தனது நூல்களின் மூலம் தேடித்தந்தவர். அவரது 'அழகர்கோயில்' நூல், கோயில் ஆய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் தற்போது வரை திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேசத்தில் 185 கல்லூரிகளில் 51 கல்லூரிகளை பிஜேபி அரசு இழுத்து மூடுகிறது.

Govt announces second phase of public outreach in J&K as first begins today

Velmurugan Balasubramanian : · மத்திய பிரதேசத்தில் 51 அரசு கல்லூரிகளை இழுத்து மூட பிஜேபி அரசு முடிவு தமிழகத்தை விட 3 மடங்கு நிலப்பரப்பு கொண்ட மாநிலம் மத்திய பிரதேசம். ஆனால், அங்கு மொத்தமே 185 கல்லூரிகள் தான் உள்ளன. அந்த 185 கல்லூரிகளில் தற்போது 51 கல்லூரிகளை பிஜேபி அரசு இழுத்து மூடுகிறது. தமிழ் நாட்டில் 1100 கல்லூரிகள் உள்ளன. அது தவிர 600 பாலிடெக்னிக்குகள் உள்ளன. வட இந்தியா எந்த அளவு கல்வியில் பின்தங்கியுள்ளது என்பதையும் தமிழ் நாடு எந்த அளவு முன்னேறியுள்ளது என்பதையும் தமிழர்கள் சிந்திக்க வேண்டும். அப்படி சிந்திக்காவிடில் பிஜேபி தமிழ் நாட்டையும் பின்தங்கிய மாநிலமாக்கிவிடும்

.Bhopal: The Shivraj Singh Chauhan government of Madhya Pradesh, facing financial constraints, is now going to close 51 government colleges in the state. At the same time, the colleges that have 80 per cent of students will be merged into other colleges. The government is doing this so that expenses can be cut. 51 government colleges will be closed 

காலிஸ்தான் செயல்பாட்டாளர் நிஜ்ஜார் கைது . சைபிரசில் இருந்து விமானத்தில் இந்தியாவுக்கு

NIA arrests absconding Khalistani terrorist Nijjar from IGI airport | India  News - Times of India

webdunia :இந்தியாவிலிருந்து தப்பி சென்ற காலிஸ்தான் தீவிரவாதி சைப்ரஸ் தீவிலிருந்து மீண்டும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். சீக்கியர்களின் தனி மாநில கோரிக்கையான காலிஸ்தான் போராட்டத்திற்காக பல சதி திட்டங்களை தீட்டியவர் குர்ஜீத் சிங் நிஜ்ஜார். இவரும் இவரது கூட்டாளிகளும் தொடர்ந்து காலிஸ்தான் தனி மாநில கோரிக்கையை முன்னிருத்தி சமூக அமைதியை குலைக்கும் வகையில் பல்வேறு வீடியோக்கள், செய்திகளை வெளியிட்டு வந்தனர். இவர்மீது கடந்த ஆண்டு சட்டவிரோத தடுப்பு நடவடிக்கையின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில் குர்ஜீத் சிங் மாயமானார். அவரை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு முகமை தேடி வந்த நிலையில் அவர் சைப்ரஸ் தீவிறு தப்பி சென்றது தெரிய வந்தது. இதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த ஐஎன்ஏ அவரை சைப்ரஸிலிருந்து நாடு கடத்த செய்துள்ளது.

கோபாலபுரத்தில் மு.க.அழகிரி . புதிய கட்சி ஆரம்பிக்க முடிவு ?

nakkeeran : சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தயாளு அம்மாளின் உடல் நலத்தை மு.க.அழகிரி விசாரித்தார். அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனது பங்கும் இருக்கும் என மு.க.அழகிரி கூறிய நிலையில் தனது தாயாரை சந்தித்துள்ளார்.

அர்னாப் கோஸ்வாமி நடத்திய ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சிக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்த பிரிட்டன்

அர்னாப் கோஸ்வாமி நடத்தி ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சிக்கு சுமார் ரூ.20 லட்சம் அபராதம் விதித்துள்ளது பிரிட்டன். எதற்காக? ரிபப்ளிக் டிவியின் இந்தி சேனல் ரிபப்ளிக் பாரத். இந்த தொலைக் காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட, 'பாரத் பூச்தா ஹே' (பாரதம் கேட்கிறது) என்கிற விவாத நிகழ்ச்சியில், ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக, வெறுப்புணர்வைத் ண்டும் வகையில் பேசியதாக, பிரிட்டன் அரசு 20,000 பவுண்ட் ஸ்டெர்லிங் அபராதம் விதித்திருக்கிறது.அர்னாப் கோஸ்வாமி கைது - தாக்கப்பட்டார் என்கிறது ரிபப்ளிக் தொலைக்காட்சி - நடந்தது என்ன?

அந்தப் பேச்சு பிரிட்டன் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை நெறிமுறைப்படுத்தும் ஆஃபீஸ் ஆஃப் கம்யூனிகேஷன்ஸின் (ஆஃப் காம்) விதிகளை மீறுவதாக இருப்பதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது பிரிட்டன்.

அத்துடன், இந்த நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்பப்படக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது பிரிட்டனின் ஆஃப் காம்.  "பாரதம் கேட்கிறது" நிகழ்ச்சியில், பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறும்.

தேர்தல் விதிகள் திருத்தத்தை எதிர்த்து திமுக வழக்கு... விசாரணை.. தபால் வாக்கு விவகாரம்

dhinkaran :சென்னை: சட்டப் பேரவை தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்கலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தும் விதிகள் திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தேர்தலில் வாக்காளர்கள் சுதந்திரமாக எந்த வற்புறுத்தலும் இல்லாமல் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். அதைத்தான் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் தெளிவுபடுத்துகிறது. இந்த சட்டப்பிரிவு 60(சி) சட்ட திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமானால் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு அரசின் ஆலோசனை பெற்று அதன் பிறகுதான் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.

ஆனால், எந்த முன்னறிவிப்போ ஆலோசனையோ இல்லாமல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 60(சி)ல் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

விவசாயிகள் நிபந்தனை : திருத்தங்களை ஏற்கமாட்டோம்’ - மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க விவசாயிகள் ...

‘திருத்தங்களை ஏற்கமாட்டோம்’ - மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க விவசாயிகள் நிபந்தனை

dailythanthi.com வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைக்கு நிபந்தனை விதித்து உள்ளனர். புதுடெல்லி,வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு உள்ள பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், தங்கள் போராட்டத்தை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால், தீர்வுக்கான முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.இதனால் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் கடுமையான குளிர் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் விவசாயிகள் தங்கள் போர்க்கோலத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால் நேற்று 28-வது நாளை எட்டியும் போராட்டம் எவ்வித தொய்வும் இன்றி நடந்து வருகிறது.முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளான நேற்று விவசாயிகள் தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லி போராட்டக்களத்திலும் சிறப்பு நிகழ்வுகள் அரங்கேறின.

யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகசாலை... மீண்டும் மீண்டும் துளிர்த்து எழுந்த கதை

Arun Ambalavanar -Jaffna Fashion : · பூபாலசிங்கம் புத்தகக்கடையின் கதை இது யாழ்ப்பாணத்தின் கலாச்சார அடையாளம். கவிஞர் நுஃமானால் பாடல்பெற்ற தலம். ஈழத்துப் புத்தக விற்பனைச் சந்தையின் முக்கிய பாத்திரமாக பூபாலசிங்கம் புத்தகசாலை அமைவதை எவரும் அறிவர். அதன் தாபகர் அமரர் ஆர்.ஆர். பூபாலசிங்கம் அவர்கள் வர்த்தகப் பிரமுகரான குடும்பப் பின்னணியிலோ அதன் செல்வாக்கிலோ வர்த்தகத்துறையைத் தேர்ந்தவரல்ல. 1922 ஜுன் மாதம் 03ஆம் திகதி நயினாதீவில் பிறந்த இவர் இளமையிலேயே தந்தையை இழந்தவர். இளமையின் ஏழ்மையால் பிழைப்புக்காக சிறுவயதிலேயே பத்திரிகைப் பையனானவர். “பூபாலசிங்கம் அவர்கள் சிறுவயதிலிருந்து புத்தகத் தொழிலில் இறங்கி வளம் பல கண்ட சீமான்” என்று அந்நாளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சு.வித்தியானந்தன் தன் இரங்கலுரையில் குறிப்பிடுகின்றார். அவர் தொடர்ந்து “பூபாலசிங்கம் புத்தகசாலை தமிழறிஞர் சந்திக்கும் ஒரு அறிவுக் கூடமாகக் காட்சியளிக்கிறது” என்கிறார்.

எம்ஜியார் உள்ளும் புறமும் 6 கவிஞர் கண்ணதாசன் . ஆட்களை அடையாளம் காட்டுவதே எனது நோக்கம்


கவிஞர் கண்ணதாசன்:
.: ஆக்குவார் அழிப்பார் அவர் ஆட்களை உண்டாக்குவார் அழிப்பார்.                          சொந்த காரணங்களுக்காக யாரையும் பிடிக்கவில்லை என்றால் தனது படங்களில் அவரை போடக்கூடாது என்று தடுப்பார்.                            ஏற்கனவே சில பகுதிகளை எடுத்து விட்டிருந்தாலும் அதை வெட்டி விட்டு வேறொரு நடிகரை போட்டு எடுக்க சொல்வார். தயாரிப்பாளருக்கு ஏற்படும் நஷ்டத்தை பற்றி கவலைப்பட மாட்டார்.                  (தன்வரையில் திறமை இல்லாத ஒருவர் பிறரருக்கு திறமையை உற்பத்தி செய்யும் திறமையை அவரிடம் மட்டும்தான் கண்டேன்) 

அப்படி இவரால் பாழ்படுத்த பட்டவர்களில் குலதெய்வம் ராஜகோபால் ஒருவர் ஈவு இரக்கம் இல்லாமல் அவரது பழிவாங்கும் குணத்தால் பலர் வேலை இல்லாமல் அலைந்தார்கள் . சிலர் சிவாஜியோடு ஒட்டிக்கொண்டு பிழைத்தார்கள். சிவாஜியை பொறுத்தவரை அவருக்கு பழிவாங்கும் குணம் எப்போதும் கிடையாது.

இன்னாரை போடு என்று சொல்லமாட்டார் .போடாதே என்று தடுக்கவும் மாட்டார்.        அவரை வெட்டுவேன் குத்துவேன் என்றவர்களை கூட தன்படத்தில் இருந்து ஒதுக்கவில்லை.     ஆனால் எம்ஜியார் பிறருடைய தொழிலாத்தான் முதலில் கெடுப்பார்.      திமுகவில் இருந்து நான் விலகிய சில ஆண்டுகளில் என்னையும் பழிவாங்க அவர் முயன்றார்.

நாம் தமிழர் ரவுடி செல்லத்துரை வெட்டிகொலை . கொலை முயற்சி கடத்தல் தொடர்புகள் காரணம்?

Hemavandhana -tamil.oneindia.com : சேலம்: சேலத்தில் முன்விரோதம் காரணமாக நாம் தமிழர் கட்சி பிரமுகரை வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,              இது சம்பந்தமான பகீர் பின்னணி வெளியாகி உள்ளது. சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை.. 34 வயதாகிறது.. 

இவர் ஒரு ரவுடி.. கொலை, கொலை முயற்சி, ரே‌‌ஷன் அரிசி கடத்தல் என ஏகப்பட்ட வழக்குகள் இவர் மீது உள்ளது. இவருக்கு 2 மனைவிகள்.  செல்லதுரை  நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து தீவிரமாக களப்பணி ஆற்றி வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று, முதல் மனைவியான ஜான்சி என்பவருடைய வீட்டுக்கு வந்தார்.. பிறகு இரவு 7,30 மணிக்கு, அங்கிருந்து காரில் கிளம்பி, அம்மாபேட்டையில் உள்ள 2-வது மனைவியான சுஜி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.                      எருமாபாளையம் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக காரில் வந்த ஒரு கும்பல் திடீரென செல்லதுரை கார் மீது வேகமாக மோதியது...           2 கார்களில் இருந்து வந்த மர்ம கும்பலானது, செல்லதுரையின் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கியது.. இதனால் சுதாரித்து கொண்ட செல்லதுரை, காரில் இருந்து தப்பித்து இறங்கி ஓட பார்த்தார்.. ஆனால், அந்த கும்பல் விரட்டி சென்று, தலையிலேயே சரமாரியாக வெட்டியது. இதில் செல்லதுரை சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார்.

புதன், 23 டிசம்பர், 2020

இன்சூரன்ஸ் பற்றிய தவறான புரிதல் ! Term Insurance தவிர்ந்த ஏனைய பாலிசிகள் பற்றிய உண்மை... Karthikeyan Fastura

No photo description available.

Karthikeyan Fastura : · இன்சுரன்ஸ் பற்றி சமீபகாலமாக ஒரு தவறான புரிதல் மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. Term Insurance தவிர்த்து மற்ற இன்சுரன்ஸ் பாலிசி எல்லாம் வீண் என்பது போன்ற கருத்தாக்கம் தான் அது. எந்த இன்சுரன்ஸ் பாலிசியும் தவறானது/வீண் என்று சொல்லமுடியாது. நீங்கள் முழுமையாக அந்த பாலிசியை கட்டவேண்டும் . ஒவ்வொன்றும் வெவ்வேறு தேவைகளுக்காக உருவாக்கப்படுகிறது. Term Insurance என்பது குடும்பத்தின் வருமானத்தை ஈட்டும் ஒரு குடும்ப தலைவர் அல்லது தலைவி, தனக்கு ஒரு ரிஸ்க் ஏற்பட்டால் தனது குடும்பம் எந்தவிதத்திலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தனது ஆண்டு வருமானத்தை காட்டிலும் 20 மடங்கிற்கு மேல் ஒரு பெரும் தொகையை காப்பீடு செய்துகொள்வது. இதனால் அவரது குடும்பம் எளிதாக பாதுகாக்கப்படும். இன்று எல்லாவிதமான இறப்புகளுக்கும் இது பொருந்துகிறது.

ரஜினி, கமலுக்கு விழும் அடியில் விஜய் உட்பட எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரக்கூடாது- சீமான்

Veerakumar -tamil.oneindia.com : சென்னை: ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு அரசியலில் விழும் அடியில், விஜய் உட்பட எந்த நடிகரும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றக் கூடாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்தார். சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் சீமான். அப்போது, ஜனநாயகம் பேசக்கூடிய நீங்கள் ஒருவர் கட்சி ஆரம்பிக்கும் போது எதிர்ப்பது ஏன் என்ற நிருபரின் கேள்விக்கு சீமான் பதிலளிக்கையில், ரஜினிகாந்த் திரைப்படத்தை யாரும் குறை சொல்லவில்லையே. 71 வயதில் எதற்காக ஹீரோவாக நடிக்கிறீர்கள் என்று நாங்கள் கேட்கவில்லையே. 

அரசியல் என்பதில் எங்களுக்கு ஒரு கோட்பாடு இருக்கிறது. பல நெடுங்காலமாக ஒடுக்கப்பட்ட இனமாக தமிழ் இனம் உள்ளது. ஒரு இனத்தின் பிள்ளைகள் எழுச்சியுற்று எழும் போது, எங்கிருந்தோ வந்து ஒரு திரை கவர்ச்சியை போட்டு மூடுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? தமிழர் எழுச்சி பெறுவது மிகவும் அரிதான விஷயம். அது இப்போது நடக்கிறது. எங்களை வழி நடத்துவதற்கு எங்களுக்குள் ஒருவர் இல்லையா? இதற்கு மகாராஷ்டிராவில் இருந்து ஒருவர் வரவேண்டுமா? மானம், வீரம், அறம் ஆகிய மூன்றும் உயிர் என்று வாழ்ந்த தமிழினத்துக்கு இது ஒரு தன்மான இழப்பு. எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரை விட்டுவிட்டு ரஜினிகாந்தை மட்டும் பிடிக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். அவர்களையெல்லாம் விட்டு விட்டதால்தான் இப்போது இவர்களை பிடிக்க வேண்டியதாக இருக்கிறது

தி.மு.க. பாணியில் பா.ம.க.வை கழட்டிவிட வேண்டும்” - எடப்பாடிக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் வலியுறுத்தல் !

nakkheeran.in : பா.ம.க.வுக்கு தி.மு.கவின் கதவு அடைக்கப்பட்டுவிட்டதால்,

“டாக்டர் ராமதாஸின் பேர அரசியலுக்குத் துணை போக வேண்டாம்” என்று தெற்கு மற்றும் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் தங்கள் தலைமையை அறிவுறுத்தியுள்ளனர். 2019 நாடாளுமன்ற தேர்தலோடு 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கும்  இடைத் தேர்தல் நடந்தது. அதில் வட தமிழகத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகள் இருந்ததால் தான் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள,  நாம் பா.ம.க.வின் பேர அரசியலுக்கு சரண் அடைந்தோம். ஆனால், பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததோடு மட்டுமின்றி  வட தமிழகத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகளில் 7 -ஐ தி.மு.க விடம் பறிகொடுத்துவிட்டு, 3 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றோம்.

 அதிலும் சோளிங்கரில் நம் கட்சி மட்டுமே வன்னியர் வேட்பாளரை நிறுத்தியதால் வெற்றி பெற்றோம். அதேசமயம், ஆம்பூர், பாப்பிரெட்டிபட்டியில் நாம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். ஆனால், தர்மபுரி பாராளுமன்றத்திற்கு போட்டியிட்ட டாக்டர் அன்புமணியை விட இந்த இரண்டு தொகுதியிலும் தி.மு.க வேட்பாளருக்கே அதிக வாக்குகள் கிடைத்தது.

ரஜினி படப்பிடிப்பில் கொரோனா ... தனிமைப்படுத்தி கொண்ட ரஜினியும் படக்குழுவும்.. ஐதராபாத்தில்

மாலைமலர் : படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், நடிகர் ரஜினி கொரோனா சோதனை செய்து தனிப்படுத்திக் கொண்டார். 

நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் தனி கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட இருப்பதால், அதற்கு முன்பாக தனது காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி ‘அண்ணாத்த’ படக்குழுவினரை அறிவுறுத்தினார்.                         இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 9 மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பர் 14-ந் தேதி ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி நடந்து வந்தது.                                    இதில் ரஜினி, குஷ்பு, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.                       இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில் ரஜினிக்கு நெகட்டிவ் என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஐதராபாத்தில் நடிகர் ரஜினிகாந்த் தன்னைப் படுத்திக் கொண்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் ரஜினி சென்னை திரும்ப இருக்கிறார்.

ஜம்மு - காஷ்மீர் எதிர்க்கட்சி கூட்டணி அபார வெற்றியை நோக்கி ..உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்

dhinamalar :ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பா.ஜ., இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்தாண்டு ஆகஸ்டில் ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில், மாவட்ட வளர்ச்சி கவுன்சிலுக்கான தேர்தல், சமீபத்தில் நடந்தது. மொத்தமுள்ள, 20 மாவட்டங்களில், தலா, 14 இடங்கள் என, 280 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.இதில், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட, ஏழு எதிர்க்கட்சிகள் இணைந்து, 'குப்கர் தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணி' என்ற பெயரில் போட்டியிட்டன.

ஜம்மு பிராந்தியத்தில், பா.ஜ., 57 இடங்களிலும், எதிர்க்கட்சிகள் கூட்டணி, 37 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. அதே நேரத்தில், காஷ்மீர் பிராந்தியத்தில், எதிர்க்கட்சிகள் கூட்டணி, 71 இடங்களிலும், பா.ஜ., மூன்று இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.ஒட்டு மொத்தமாக, எதிர்க்கட்சிகள் கூட்டணி, 108 இடங்களிலும், பா.ஜ., 60 இடங்களிலும், காங்கிரஸ், 22 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.எதிர்க்கட்சி கூட்டணி, 13 மாவட்டங்களையும், பா.ஜ., ஏழு மாவட்டங்களையும் கைப்பற்றும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவில் பலுசிஸ்தான் விடுதலை செயல்பாட்டாளர் பலூச் மர்ம மரணம் .. பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் விடுதலை

கரீமா பலோச் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.

BBC :கனடாவில் தங்கியிருந்த பாகிஸ்தான் மனித உரிமைச் செயற்பாட்டாளர் கரீமா பலூச் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.  37 வயதான கரீமா மேற்கு பாகிஸ்தானில் உள்ள பதற்றம் மிகுந்த பலுசிஸ்தான் பகுதியை சேர்ந்தவர்.    பாகிஸ்தான் அரசு, ராணுவம் ஆகியவை குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்துவந்த இவர் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவுடன், அங்கிருந்து தப்பி வந்து கடந்த 5 ஆண்டுகளாக கனடாவில் தங்கியிருந்தார்.   கனடாவில் இருந்தபடியே சமூக ஊடகம் வழியாகவும், நேரடியாகவும் பலுசிஸ்தான் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவந்தார்.    அவர் காணாமல் போனதாக டொரன்டோ நகர போலீஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் உறுதிப்படுத்தினர்.   ஆனால், "சந்தேகப்படுவதற்கு உரிய சூழ்நிலை ஏதும் இல்லை" என்று போலீசார் கூறினர்.

மனுநீதி சோழனே ஒரு கற்பனை தான்! – ‘படைவீடு’ தமிழ்மகன்

பீட்டர் துரைராஜ்- aramonline.in: ஒரு பத்திரிகையாளன் பார்வையில் வரலாற்றை உள்வாங்கி, கடந்த கால வரலாற்றை சமகால அரசியலோடு தொடர்புபடுத்தும் கண்ணிகளைக் கண்டறிந்து வரலாற்று புதினங்களை படைப்பதில் வல்லவர் தமிழ்மகன்! மறைக்கட்ட வரலாறுகளை, திரிக்கப்பட்ட வரலாறுகளின் உண்மைத் தன்மையை நாவல் வழியே சொல்வதன் மூலம் ஒரு மிகச் சிறப்பான வரலாற்று பங்களிப்பை செய்து வருகிறார்!

பொதுவாக வரலாற்று நாவல் என்றால் சேர,சோழ,பாண்டியன் கதைகளைத்தான் நாம் படித்து இருப்போம். அதில் சண்டை இருக்கும்; காதல் இருக்கும்; வருணனை இருக்கும். ஆனால் வரலாற்றில் மறைக்கப்பட்ட , போரை விரும்பாத மன்னனின் கதையை இந்த நாவல் பேசுகிறது.அந்த வகையில் இது ஒரு வித்தியாசமான நாவல்

14 ம் நூற்றாண்டின் கடைசி தமிழ் மன்னனின் கதையை ‘படைவீடு’ என்ற வரலாற்று நாவல் மூலம் தமிழ்மகன் தந்துள்ளார். தமிழ்நாட்டில் சாதி எப்படி நிலைபெற்றது, இடங்கை- வலங்கை மோதலின் அடிப்படை என்ன ? ஆடி மாதங்களில் படவேட்டம்மன் கோவில் திருவிழா வட தமிழகத்தில் பரவலாக ஏன்  நடைபெறுகிறது, களப்பிரர் காலம் “இருண்ட காலமாக” மாற்றப்பட்டது எப்படி என்பது போன்ற செய்திகளை இந்த நாவல் மூலம்  விளங்கிக்கொள்ள இயலும்.

வனவாசத்தை முழுதும் படிக்காமல் தப்புப் தப்பாக வேண்டுமென்றே திரித்து வெளியிடுகிறார்கள்


  அ. வெற்றிவேல் : · வெறும் ஐந்து கவிதைகள் எழுதிய கண்ணதாசனை , அவரின் potential யை அறிந்து “ கவிஞர்” என்று அடைமொழியிட்டு பொள்ளாச்சி மேடையில் அறிமுகப்படுத்திய கலைஞரை - இடையில் 1965 ல் மனம் வருந்திப் போனாலும் பின்னாளில் - 1971 ல் மனம் திருந்திய மைந்தனாகி கவியரசராகித் திரும்பி வந்து தன் ஆத்ம நண்பனுக்கு பிறந்த நாள் விழா எடுத்து, அது சமயம் தன் நண்பனைக் குறித்து எழுதிய “ கலைஞரைப் பாராட்டுகிறார் கவிஞர்”என்ற புத்தகத்தில் இருந்து சில பகுதிகள் ”கலைஞருக்கு வயது கொஞ்சம் குறைவாக இருப்பதால் அகில இந்தியாவிலும் அவர் திறமை இன்னும் உணரப் படாமல் இருக்கலாம். ஆனால் இந்திய வரலாற்றில் அவர் ஒரு பகுதி என்பதைக் காலம் காட்டத்தான் போகிறது
பாதுஷா அக்பருக்குப் பிறகு பாரதம் இந்திராவையும் மூவேந்தர்களுக்குப் பிறகு தமிழகம் ஒரு கருணாநிதியையும் சந்திக்கின்றன
நான் யாரை யாரையெல்லாம் மதிக்கிறேனோ அவர்களுக்கு திருவிழா எடுப்பது என் மனதுக்குப் பிடித்த வேலை. அறிஞர் அண்ணா அவர்களின் ஐம்பதாம் ஆண்டின் நிறைவை நான் தான் உலகுக்குச் சொன்னேன். மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் நூறாவது ஆண்டு நிறைவை நான் தான்

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆசிரியை படுகொலை ... கொன்ற கணவன் சரவணன் மடக்கி பிடிப்பு

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆசிரியை படுகொலை!  minnambalam :ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே ஆசிரியை ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சக்கந்தியான் வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (35). தனியார் வாகன ஓட்டுநரான இவர் பரமக்குடியில் வசித்து வருகிறார். இவரது மனைவி சிவபாலா (32). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளன. சிவபாலா ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

எம்ஜியார் உள்ளும் புறமும் 5 - கவிஞர் கண்ணதாசன் S .S .ராஜேந்திரன்

கவிஞர் கண்ணதாசன் : கழகத்துக்கு யாரவது ஒரு புதிய நடிகன் வருகிறான் என்றால் எம்ஜியார் பரபரப்படைவார்.   அந்த நடிகன்  முன்னனுக்குக் வந்துவிடாதபடி எல்லா வேலைகளையும் செய்வார் . பணமும்

செலவழிப்பார்.       அந்த நடிகனை வைத்து படம் எடுக்கும் கம்பனிக்கு போன் செய்து அந்த படத்தில் குறைந்த சம்பளத்தில் நான் நடித்து தருகிறேன் என்பார் .     இதை அவர் என்னிடமே செய்தார்.      அவரது பேச்சை நம்பி நான் ஊமையன் கோட்டை என்ற படத்தை ஆரம்பித்தேன்.            அற்புதமான கதை . அந்த படம் வெளிவந்திருந்தால் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கும்.              அதற்காக என்னிடமிருந்து சுமார் 21 ஆயிரம் ரூபாய் எம்ஜியார் பெற்றிருக்கிறார். அது ரொக்கமாக கொடுத்த பணம்.        ஆகவே அதை அவர் மறுத்தாலும் எழுத்து பூர்வமான ஆதாரம் என்னிடம் இல்லை. அந்த படத்தை எனக்கு கடனாக கொடுத்தவர்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள். 

பணம் வாங்கி கொண்டாரே தவிர ஒரு நாள் கூட படத்தில் நடிக்கவில்லை.
62 ஆயிரத்தி 500 ருபாயோடு அந்த படம் நிறுத்தப்பட்டது.
நான் கடன்காரன் ஆனேன்.
இனி பெரிய நடிகன் வேண்டாம் என்று முடிவு கட்டி .
பொருளாதாரத்தில் மிகவும் சிரமத்தில் இருந்த டி ஆர் மகாலிங்கத்தை வைத்து போட்டு படம் எடுக்க முடிவு கட்டினேன்.
என்னுடைய எழுத்து திறமையை நம்பியே படம் எடுக்க தொடங்கினேன்.
கொடுத்த பணத்தை கேட்பதற்காக வாகினி ஸ்டூடியோவில் இருந்த எம்ஜியாரை பார்க்க போனேன்

எம்ஜியார் உள்ளும் புறமும்- 4 - கவிஞர் கண்ணதாசன் - பாவம் வெங்கிடசாமி - கோல்டன் நாயுடு !

கவிஞர் கண்ணதாசன் : 
   25 ஆண்டுகளுக்கு முன்பு தோழர் எம்ஜியார் மிகுந்த கஷ்ட திசையில் இருந்தார் . ஒரு மனிதன் கஷ்ட திசையில் இருந்தார் என்பது கேலிக்கு உரிய விஷயம் அல்ல. எல்லாருமே சேற்றுக்கு பிறகு சந்தனத்தை கண்டவர்கள்தான் . ஆனால் கஷ்டகாலத்தில் உதவி செய்தவனை மறந்து 

விடுவதும் , தன்னிடம் அவன் உதவிக்கு வரும்போது சித்திரவதை செய்வதும் கொடிய பாவமாகும். செய்நன்றி கொன்றவருக்கு உய்வே கிடையாது என்கிறார் வள்ளுவர். எம்ஜியார் கஷ்டப்பட்ட காலங்களில் அவருக்கு உதவியவர்களில் முக்கியமானவர் ஜூபிடர் பிக்சர்ஸ் மானேஜராக இருந்தவர் டி எஸ் வெங்கிடசாமி அவர்கள் இவர் யு ஆர் ஜீவரத்தினத்தின் கணவராகும். எனக்கு பாட்டெழுத முதல் முதலில் சந்தர்ப்பம் கொடுத்தவர் அவர்தான் எனது வனவாசத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன். பாகவதர் நடித்த அசோக்குமாரில் ஒரு சிறு வேஷத்தில் நடித்த எம்ஜியாரை ஜுபிடர் பிக்சர்ஸ் தங்கள் ராஜகுமாரி படத்தில்  கதாநாயகனாக போட்டார்கள்.

அந்த படத்துக்கு வசனம் எழுதியவர் கலைஞர் கருணாநிதிதான்.     அவரது வசனம் படத்தில் ஒரு சிறப்பான அம்சம் .   அதையொட்டிய காலங்களில் ஜூபிட்டர்ஸ் பிக்சர்ஸுக்கு பாட்டெழுத நானும் போயிருந்தேன்.

அங்கே மானேஜரை அறைக்கு நேராக இருந்த நாற்காலிகளில் தோழர் சக்கரபாணியும் எம்ஜியாரும் உட்கார்ந்து இருப்பார்கள்.    நானும் அங்கே உட்கார்ந்து இருப்பேன்.   எம்ஜியாரை வெகு நேரம் காக்க வைக்காமல் சீக்கிரம் கூப்பிட்டு பணம் கொடுத்து அனுப்புவார் வெங்கிடசாமி .    அவர் மற்றவர்களை மதிக்க தெரிந்தவர்.   சாதாரண துணை நடிகரை கூட அவமானப்படுத்த மாட்டார்.

செவ்வாய், 22 டிசம்பர், 2020

இளையராஜா vs பிரசாத் ஸ்டூடியோ... என்னதான் பிரச்சனை? இளையராஜா வாதம் பலவீனமாக உள்ளது?

nakkheeran.in - இரா.சிவா : >தமிழ் இனத்தின் இசை சொத்தாகக் கருதப்படும் இளையராஜாவிற்கும் இத்தனையாண்டு காலமாக அவர் இசையமைத்து வந்த பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்திற்கும் இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்துவருகிறது. இசைஞானி இளையராஜாவை ஸ்டூடியோ நிர்வாகம் வெளியேறக் கூறியது முதல் இன்று வரை என்னதான் நடக்கிறது?Ilaiyaraaja

 பிரசாத் ஸ்டூடியோவானது சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரபல சினிமா ஸ்டூடியோ ஆகும். சின்னத்திரை, வெள்ளித்திரை படப்பிடிப்புத் தொடங்கி பின்தயாரிப்பு பணிகளுக்கான வேலையில் ஈடுபடுவது வரையிலான அத்தனை வசதிகளும் இதன் வளாகத்திற்குள் உள்ளடங்கியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, இசைஞானி இளையராஜா இங்குதான் இசையமைத்துவந்தார். இன்று நாம் கொண்டாடும் இசைஞானியின் அத்தனை பாடல்களும் இந்த வளாகத்திற்குள் பிறப்பெடுத்தவையே. பிரசாத் ஸ்டூடியோவின் நிறுவனரான எல்.வி.பிரசாத் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி வந்த அறையே இத்தனையாண்டு காலமாக இளையராஜா இசையமைத்து வந்த அறையாகும். இங்கிருந்து தனது இசைப் பணிகளைக் கவனித்து வந்த இளையராஜாவுக்கு இந்த அறை சற்று கூடுதல் சிறப்பு வாய்ந்தது. தனது குடும்பத்தினருடன் செலவழித்த நேரத்தைவிட அதிகப்படியான நேரத்தை இளையராஜா இங்குதான் செலவழிப்பது வழக்கம். "காலை 7 மணிக்கு அவரது கார் பிரசாத் ஸ்டூடியோ வளாகத்திற்குள் நுழைந்துவிடும். அவரது கார் உள்ளே நுழைகிறது என்றால், மணி 7 ஆகிவிட்டது என்று நாம் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்" என்கின்றனர் பிரசாத் ஸ்டூடியோவின் அக்கம் பக்கத்துவாசிகள். 

உருமாறிய கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கிறது

dhinamalar : ஜெனிவா: பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டு சில நாடுகளில் பரவியுள்ள உருமாறிய கொரோனா வைரஸ், கட்டுப்பாட்டுக்குள் தான் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ், உருமாற்றம் பெற்று அதிக வீரியத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது 70 சதவீதம் அதிக வேகமாக பரவுவதாகவும் கூறப்படுகிறது. பிரிட்டனில் இருந்து சென்ற பயணிகள் வாயிலாக சில நாடுகளிலும் இத்தகைய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திமுக சுவரொட்டிகளில் பெரியார் அண்ணா கலைஞர் ஸ்டாலின் படங்கள் மட்டுமே .. திமுக அறிவிப்பு

minnambalam : பேனர், சுவரொட்டிகள் தொடர்பாக திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பேனரில் இவர்களது புகைப்படம் மட்டும்தான் : ஸ்டாலின் உத்தரவு!

சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக இப்போதே தயாராகிவிட்டது. ஸ்டாலின் காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொள்ளும்போதே, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் கனிமொழி, உதயநிதி உள்ளிட்டோர் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டனர். சமீபத்தில் நடந்த திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக அமைச்சர்கள் அனைவரையும் தோற்கடிக்க வேண்டும். 200 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற இலக்கை ஸ்டாலின் நிர்ணயித்தார். நாளை முதல் 16 ஆயிரத்து 500 ஊராட்சி மற்றும் வார்டுகளில் திமுக கிராமசபை மற்றும் வார்டு கூட்டங்களை நடத்த இருக்கிறது.

97 பக்க ஊழல் புகார் பட்டியல் - ஆளுநரிடம் கொடுத்தார் முக ஸ்டாலின்

maalaimalar : அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் திமுக தலைவர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை: சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது திமுக தலைவர் முக ஸ்டாலினுடன், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டிஆர் பாலு உள்பட முக்கிய தலைவர்கள் உடன் இருந்தனர்.

இதனை தொடர்ந்து ஆளுநர் உடனான சந்திப்பிற்கு பிறகு திமுக தலைவர்
முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
  அப்போது அவர் கூறியதாவது;-
“அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் பல்வேறு புகார்கள் கொடுத்திருக்கிறோம். ஆனால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

50 தொகுதிகளில் ராதாபுரம் பாணி மோசடியை அரங்கேற்றினால் .. நீண்ட சதிகளின் வரலாறு

செல்லபுரம் வள்ளியம்மை
  :  எம்ஜியாரை வைத்து இந்திரா காங்கிரஸ்காரர்கள் செய்த சதி, பத்மநாப கொலையை வைத்து சுப்பிரமணியன் சாமியும் ஆர் வேங்கடராமனும் செய்த சதி. ராஜீவ் காந்தியை கொன்று பழியை திமுக மேல் போட்ட அதிமுக காங்கிரஸ் ராவின் சதி என்று எந்த சதிமோசடிகளை நோக்கினாலும் அவை எல்லாமே திமுகவை தொலைத்து கட்ட பார்ப்பனர்களும் ரா அதிகாரிகளும் இணைந்து நடத்திய மோசடிகள்தான், ராதாபுரம் தொகுதி தேர்தல் வெற்றி என்பது அப்பாவு அவர்களிடம் இருந்து இன்றுவரை திருடப்பட்டு கொண்டு இருக்கிறது என்பதை எப்படி புறம் தள்ளிவிட முடியும் . நீதி துறை . தேர்தல் ஆணையம் எல்லாம் கேலிக்கூத்தாகி உள்ள நிலையில் நடக்க இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் எப்படி பட்ட மோசடிகளை மீண்டும் அரங்கேற்ற அவர்கள் முயல்கிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது . அண்மைக்கால நடவடிக்கைகளை நோக்கினால் இந்த சந்தேகம் நியாயமானவை என்று தோன்றுகிறது

LR Jagadheesan : · அரசு இயந்திரத்தின் முழுமையான


ஒத்துழைப்போடு நடக்க வாய்ப்பிருக்கும் இந்த மோசமான முறைகேட்டை தடுப்பதில் திமுகவும் அதன் கூட்டணி கட்சியினரும் எந்த அளவுக்கு விழிப்போடும் பொறுப்போடும் இருக்கப்போகிறார்கள் என்பது அந்த கூட்டணியின் சட்டமன்றத்தேர்தல் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் காரணியாக இருக்கலாம். சந்தேகம் இருந்தால் அப்பாவு தேர்தல் முடிவு ஏன் இன்றும் வெளியிடப்படாமல் இருக்கிறது என்பதை ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.    ஒரு அப்பாவுக்கு நடந்ததை 50 அப்பாவுகளுக்கு நடத்தினால் தமிழ்நாட்டு அரசியலின் எதிர்காலம் மிக எளிதில் அழியும். அதை செய்யக்கூடியவர்கள் தான் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள்.           அந்த அநீதிகளை தடுப்பதில் திமுக கூட்டணியினர் கவனம் செலுத்தாமல் இருக்கவும் அல்லது செலுத்தவிடாமல் செய்யவும் திட்டமிட்டு இறக்கிவிடப்பட்ட கூலிப்படைகளே மையமும் மணியனின் புதிய எஜமானனுமோ என்கிற சந்தேகம் எழுவது இயல்பே.             

ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் சிறையில் அடைக்கப்பட்டார்

nakkeeran :  நீதிபதிகளையும், நீதிமன்ற ஊழியர்களையும் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் அவதூறாகப் பேசியதாக தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தது. அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், கர்ணனை நேரில் அழைத்து விசாரணை நடத்தியதாகவும், இனிமேல் வீடியோ வெளியிடமாட்டேன் என உறுதியளித்திருந்தார் எனவும் காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை ஏன் கைது செய்யவில்லை என நீதிபதிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்..... இந்தநிலையில், சென்னையை அடுத்த ஆவடியிலிருந்த ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். 

தமிழக தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்: தேர்தல் ஆணைய குழுவினரிடம் அதிமுக, திமுக வலியுறுத்தல்

hindutamil.in  : சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணைய குழுவினர் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் பாண்டியன், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.படங்கள்: க.ஸ்ரீபரத்.. தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தலை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைய குழுவினரிடம் அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.

 தமிழக சட்டப்பேரவை தேர்த லுக்கு சில மாதங்களே உள்ளன. இதையடுத்து, தேர்தல் முன்னேற் பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலர் (பொது) உமேஷ் சின்கா தலைமையில், துணை தேர்தல் ஆணையர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஷ் குந்த்ரா, பிஹார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஹெச்.ஆர்.வத்சவா, தேர்தல் ஆணைய இயக்குநர் பங்கஜ் வத்சவா, தேர் தல் ஆணைய செயலர் மலேய் மாலிக் ஆகியோர் அடங்கிய உயர் நிலைக் குழுவினர் நேற்று சென்னை வந்தனர்.

புதிய கொரோனா வைரஸ்: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

/minnambalam.com : இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை விமான நிலையத்துக்கு இங்கிலாந்திலிருந்து வந்த 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 புதிய கொரோனா வைரஸ்: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

இங்கிலாந்தில் சமீப நாட்களாக கொரோனா வைரஸ் புதிய வடிவம் பெற்று வேகமாகப் பரவி வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. முன்பு பரவிய வைரஸைக் காட்டிலும், இது 70 சதவிகிதம் அதிகளவு பரவி வருகிறது என்றும், நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை கூறியுள்ளது. இதனால் பிரிட்டனிலிருந்து வரும் அனைத்து விமானங்களையும், அயர்லாந்து, நெதர்லாந்து, இத்தாலி, ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளும் தடை விதித்துள்ளன.  இந்தியாவிலும் பிரிட்டன் விமானங்களுக்குத் தடை விதிப்பதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், ”இங்கிலாந்தில் கொரோனா பரவும் சூழல் நிலவுவதால், அந்நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து விமானங்களுக்கும் வரும் 31ஆம் தேதி இரவு 23:59 வரை தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை டிசம்பர் 22ஆம் தேதி இரவு 23:59 மணியிலிருந்து அமலுக்கு வரும். எனினும், சரக்கு விமானங்கள் மற்றும் சிவில் போக்குவரத்துத் துறை இயக்குநரகத்தால் அனுமதி அளிக்கப்பட்ட விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது.

RSS குருமூர்த்தியால் கதை கந்தலாகிய தமிழக பாஜக.. முட்டி மோதும் மயிலாப்பூர் .. ஒரு வாட்சாப் டைரி குறிப்பு

நூடுல்ஸ் சிக்கலை சாணக்கியன் குருமூர்த்தி தனது அறிவால் இடியாப்பச் சிக்கலாக்கி பாஜகவின் 2.5 வாக்கு வங்கியை ஆளுக்கு கால் பங்கு என்று பிரிக்க பத்து பேரை இறக்கி மண்ணை குத்துகுத்தாக அள்ளிப்போட்டிருக்கிறாராம்

மீண்டும் தமிழ்நாடு பாஜகவில் ஆரிய திராவிட யுத்தம் தொடங்கியிருக்கிறது. முதல் கட்டப் போரில் தமிழிசை , பொன்னர் இருவரும் தோற்று ஒதுங்கினர்கள். அவர்கள் மட்டுமல்ல . அவர்கள் சார்ந்த சமூகமும் மொத்தமாக பாஜகவுக்கு கணக்கை முடித்து சிட்டையைக் கொடுத்துவிட்டார்களாம்.   இனி அண்ணாச்சி வகையறா வாக்குகளும் நோட்டுகளும் பாஜகவுக்கு இல்லை . அதிலே ஆடிப்போன பாஜக மேலிடம், வென்ற எச் ராஜா எஸ் வீ சேகர் சார்ந்தோரிடம் தற்சமயம் கொஞ்சம் அமைதியாக இருங்கள். சிலரைப் பொறிவைத்துப் பிடிக்க உங்கள் பதவிகளைத் தற்சமயம் தாருங்கள். சில வேலைகள் முடிந்ததும், மீண்டும் உங்கள் ராஜாங்கமே நடக்கும் என்று கெஞ்சிக் கூத்தாடி முருகன் அண்ணாமலை போன்றோர்களுக்கு டம்மி சேர்களைக் கொடுத்து உட்காரவைத்திருந்தது நாம் அறிந்ததே . பதவி என்று வந்தால் அதில் எவ்வளவு ஸ்கோர் பண்ணணுமோ அதைச் செய்து இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்ட நியூலி அப்பாய்ண்டட் சங்கிகள், களமிறங்கி காசும் காரியமும் பார்க்க ஆரம்பிக்க...

எம்ஜியார் உள்ளும் புறமும் -3 ! கவிஞர் கண்ணதாசன் .. மலையாளிகள் பற்றி .

கவிஞர்  கண்ணதாசன் : தமிழ்நாட்டில் மலையாளிகள் வாழக்கூடாது என்றோ  ,  

அவர்கள் கேரளாவுக்கு ஓடி விடவேண்டும் என்றோ கருணாநிதி எப்போதாவது சொன்னாரா?     இல்லை திமுக பேச்சாளர்களாவது அப்படி பேசினார்களா  ?  இல்லை நானாவது  எழுதினேனா?     இந்தியாவில் இரண்டு கேரளா ராஜ்ஜியங்கள் இருக்க முடியாது என்றுதான் கருணாநிதி சொன்னார்.    அந்த கருத்தில் இந்தியாவில் உள்ள எவருக்கும் அபிப்பிராய பேதம் இருக்க முடியாது .    தேசிய ஒருமைப்பாடு என்பது எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து எல்லோரும் ஒற்றமையாக இருப்பதுதானே தவிர    சிலர் மீது மட்டும் குதிரை ஏற இடம் கொடுப்பதல்ல.     

தமிழ்நாட்டில் ஒரு மலையாளி முதலமைச்சராக வரலாமா?     வரலாம் தாராளாமாக வரலாம்    அரசியல் சட்டம் அதை அங்கீகரிக்கிறது.   ஆனால் தார்மீக அடிப்படையில் கேரளாவில் ஒரு தமிழன் முதலமைச்சராக வரமுடியுமானால்,    குஜராத்தில் ஒரு மராட்டியர் வரமுடியுமானால்,  வங்காளத்தில் ஒரு ஆசாமி வரமுடியுமானால் ,தமிழ்நாட்டில் வேறு ஒரு மாநிலத்துக்காரர் வரலாம்.    லட்சக்கணக்கான தமிழர்கள் வாழும் பம்பாயில் மராட்டிய  அசெம்பிளிக்கு இரு தமிழர்கள் தேர்ந்தெடுக்க படுகிறார்கள் .   அவர்களில் யாரவது மந்திரசபையில் சேர்த்து கொள்ளப்பட்டார்களா?   இல்லை . அவர்களில் ஒருவர் முதலமைச்சராக வருவதை அனுமதிப்பார்களா?

"காதலையே" படுகொலை செய்வது என்ற நுணுக்கமான ஆயுதம் "பாசம்".

  Image may contain: 1 person, sleeping, text that says '...ஜாதி கடந்த காதலை அரிவாள்கள் தடுப்பதைவிட தாய், தந்தை, குடும்பப் பாசங்கள் தான் அதிகமாகத் தடுக்கின்றன. உண்மையில், பாசம் எனும் ஆயுதம் மற்ற எல்லா ஆயுதங்களையும் விடக் கொடுமையானது. குரூரமானது. ஜாதி கடந்த காதல்களுக்கு மட்டுமல்ல; ஒரு பெண்ணின் சுயமரியாதைக்கும், பெண் தன் வாழ்வைத் தானே நிர்ணயித்துக் கொள்வதற்கும் எதிரானது இந்தப் பாசங்கள் தான். காட்டாறு "சாதி கடந்து காதலித்தால் சாவு நிச்சயம்" என்ற மரண மயத்தை உண்டாக்குவது போன்ற படங்கள் ஆதிக்க ஜாதிகளுக்கே பயன்படும். வெற்றிபெற்ற ஆயிரக்கணக் கான காதல்களைப் படமாக்குங்கள். அவையே ஆணவக் கொலைகளை அழிக்கும். ...திரைப்படங்கள் மட்டுமல்ல; ஜாதி ஒழிப்புக் களத்தில் போராடும் இயக்கங்கள்கூட இந்து மதப் பண்பாட்டின் அபாயத்தைப் பேச மறுக்கின்றன. இந்து மத சாஸ்திரங்களை விவாதிக்கக்கூடத் தயங்குபவர்களால் ஆணவக்கொலைகளின் இலை, தழைகளைக்கூட அசைக்கமுடியாது.'

AThi Asuran : · அரிவாள்களைவிடக் குரூரமானது பாசம்! 1. இந்தப் படத்தில் மட்டுமல்ல; பெரும்பான்மையான ஆணவப் படுகொலைகளில் ஆயதங்கள் வெவ்வேறாக இருக்கும். அரிவாள், ரயில் தண்டவாளம், விஷம் என மாறுபடும். ஆனால் இவை எல்லாவற்றையும்விட கொடுமையான ஆயுதம் - இன்னும் நாம் விவாதிக்காத - விவாதிக்க விரும்பாத ஆயுதம் 'பாசம்' அரிவாள்களால் வெட்டப்பட்ட படுகொலைகளைப் பற்றி மட்டுமே நாம் விவாதிக்கிறோம். அரிவாள் படுகொலைகளுக்கும்கூட தாய்ப்பாசமோ, தந்தைப் பாசமோ, குடும்பப்பாசமோ தான் பின்னணியாக இருக்கின்றன. ஜாதி கடந்த காதலை அரிவாள்கள் தடுப்பதைவிட தாய், தந்தை, குடும்பப் பாசங்கள் தான்

அதிகமாக,  மிக மிக அதிகமாகத் தடுக்கின்றன.
திருமணம் செய்து கொண்ட பிறகு தான் ஆணவப் படுகொலைகள் நடக்கின்றன. திருமணம் என்ற நிலைக்கே செல்லவிடாமல் ஜாதி கடந்த "காதலையே" படுகொலை செய்வது என்ற நுணுக்கமான ஆயுதம் "பாசம்".
உண்மையில், பாசம் எனும் ஆயுதம் மற்ற எல்லா ஆயுதங்களையும் விடக் கொடுமையானது. குரூரமானது. ஜாதி கடந்த காதல்களுக்கு மட்டுமல்ல; ஒரு பெண்ணின் சுயமரியாதைக்கும்,

விவசாயிகள் போராட்டம் இன்னும் பலருக்கு சரிவரப் புரியவில்லை..!

Image may contain: 2 people  சாவித்திரி கண்ணன் : · இந்தியாவை ஆட்சி செய்வது அம்பானியா? அதானியா? மோடியா? விவசாயிகள் போராட்டம் இன்னும் பலருக்கு சரிவரப் புரியவில்லை..! ஏன் விவசாயிகள் இவ்வளவு ஆக்ரோசமாகப் போராடுகிறாங்க…அப்படி என்ன பெரிய தீமை நடந்திருச்சு..? ஒன்னும் பெரிசா நடந்திடலை..! விவசாயத்தையும்,உணவு பாதுகாப்பையும் தன் பொறுப்பிலிருந்து அம்பானிக்கு கொஞ்சமும், அதானிக்கு கொஞ்சமுமாக அரசாங்கம் பிரித்து தாரை வார்த்துவிட்டது! அவ்வளவு தான்! அதெப்படி கொடுக்க முடியும்? இப்படி புரூடா விடக்கூடாது’’ ன்னு சொல்றவங்க பொறுமையாக ஐந்து நிமிடம் இதைப் படியுங்கள்!
விவசாயிகளுக்கும், அரசாங்கத்திற்குமான தொடர்பு என்ன? விவசாயிகள் அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பது என்ன?
’’எனக்கு ஒன்னுன்னா அரசாங்கம் துணையிருக்கு’’ என்ற ஒரு நம்பிக்கை தான் அரசாங்கத்திற்கும், விவசாயிக்குமான உறவுப்பாலமாகும்!
அடுத்ததாக தாங்கள் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்வதை, எவனும் அடித்து,பறித்து அடிமாட்டு விலைக்கு அபகரிச்சுட்டுப் போகாமல், நியாயமான விலைக்கு விற்க உதவணும்!

எம்ஜியாரின் உள்ளும் புறமும் (2 ) ...கவிஞர் கண்ணதாசன் நாங்களே தேடிக்கொண்ட வினை

சுபாவத்திலேயே எம்ஜியாருக்கு ஆணவம் உண்டு     அவரது ஒரு படம் வெற்றிகரமாக ஓடிவிட்டால் மற்ற  தயாரிப்பாளர்களை சித்திரவதை செய்து விடுவார்.  யாரையும் அலட்சியமாகவே பார்ப்பார்.

அதே நேரத்தில் அவரது பலவீனமும் அவருக்கு தெரியும்.        தான் ஒரு திறமையான நடிகன் இல்லை என்பதை அவர் உணர்ந்து  இருந்தார்     அதனால் மற்ற நடிகர்களின் படங்கள் வெளிவரும்போது தனது ரசிகர்களை அனுப்பி கேலி செய்வது ... மற்ற போஸ்டர்கள் மீது சாணி வீச செய்வது . 

தன் படங்களுக்கு முன் கூட்டியே டிக்கெட் வாங்கி தந்து ரசிகர்களை கைதட்ட செய்வது ஆகிய அனைத்தும் செய்வார்.       கதைகளில் உருக்கமான சீன்கள் இருந்தால் தன்னால் நடிக்க முடியாது என்று கதாசிரியருக்கு தெரியமாலே சீன்களை மாற்றிவிடுவார்.         கதாசிரியர்களிடம் சொல்லும் போது நீங்கள் எழுதியதை ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என்பார்.     ஒவ்வொரு படத்திலும் தன்னை புகழ்ந்து பாடலை எழுதுவதை விரும்புவார் .    அத்தகைய பாடல்களுக்குதான் முதலிடம் தருவார்.     இந்த வகையில் அவரது திறமையை மெச்சுகிறேன்.     ஜனங்களை எதிலே மயங்க வைப்பது எப்படி நீண்ட நாள் வசூல் சக்கரவர்த்தியாக இருப்பது என்பதெல்லாம் அவருக்குதெரியும். சிலரை பலகாலம் ஏமாற்றலாம் பலரை சிலகாலம் ஏமாற்றலாம் ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற முடியாது என்றொரு பழமொழி உண்டு.   அந்த பழமொழியை பொய்யாக்கியவர் எம்ஜியார்.

திங்கள், 21 டிசம்பர், 2020

அதிமுக தலைமையகத்தில் மோதல் ! பொதுக்குழுவை கூட்ட ஓபிஎஸ் எதிர்ப்பு!

 

dinakaran :  இபிஎஸ்சுடன் கடும் வாக்குவாதம் * மூத்த தலைவர்கள் பஞ்சாயத்து ..சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக நடந்த விவாதத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் இடையே கடும் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் நடைபெறுகிறது. இந்த தேர்தலை எதிர் கொள்வது குறித்து அதிமுக தலைவர்கள பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், யார் தலைமையில் கூட்டணி என்பது குறித்து அதிமுக, பாஜ கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, கூட்டணி தொடர்பாக பாஜ மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா கடந்த மாதம் தமிழகம் வந்து அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, வரும் சட்டசபை தேர்தலில் பாஜவுக்கு 60 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அதிமுக தலைமைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. குறிப்பிட்ட சில தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று இபிஎஸ், ஓபிஎஸ்சிடம் பாஜ தலைவர்கள் பட்டியல் கொடுத்துள்ளனர். இந்நிலையில், தேமுதிக மாவட்ட செயலாளர் கூட்டத்தில், 2011ம் ஆண்டு தேர்தல் போன்று தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் 41 இடங்கள் ஒதுக்க வேண்டும், இல்லையென்றால் தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்யப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பாமகவும் குறைந்தபட்சம் 50 இடங்களை கேட்கும் என்று கூறப்படுகிறது.

அறிவாலயத்தில் ஐபேக் கெடுபிடிகள்!

மின்னம்பலம் மற்ற எந்த கட்சியின் அலுவலகத்தை விடவும், திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில்தான் பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக உணருவார்கள். அந்த அளவுக்கு திமுக தலைவராக இருந்தபோது கலைஞரையே பத்திரிகையாளர்கள் நினைத்தால் எளிதில் சந்திக்க முடியும்.

அறிவாலயத்தில் ஐபேக் கெடுபிடிகள்!

அப்பேற்பட்ட அறிவாலயத்தில் நேற்று (டிசம்பர் 20) மாவட்டச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை கொரோனா ஊரடங்குக்குப் பிறகு ஸ்டாலின் நேரடியாக சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக பத்திரிகையாளர்களும், பத்திரிகை, தொலைக்காட்சி கேமராமேன்களும் திரண்டிருந்தனர்.

அதானி நிறுவனத்துக்குப் பயிற்சியா?: மின்துறை அமைச்சர் தங்கமணி பதில்!

minnambalam.com :தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களைத் தனியார் மூலம் ஒப்பந்த ஊழியர்களை நிரப்புவது தொடர்பான ஒப்பந்தப் புள்ளிகளைத் தேர்வு செய்வதற்கு மின்வாரியம் ஒப்புதல் அளித்து, அதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இதன் மூலம் ஐடிஐ முடித்தவர்கள் மின் வாரியத்தில் வயர்மேன் வேலைக்கு நேரடியாகச் சேர முடியாது என்று கூறப்பட்டது.எனவே இதற்கு எதிர்க்கட்சிகளும், மின்துறை தொழிற்சங்கங்களும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், “புதிய துணை மின் நிலையங்களைத் தனியாருக்கு 2 ஆண்டுக்கால ஒப்பந்தத்தில் தாரைவார்த்துள்ள ஆட்சியாளர்கள், தமிழகம் முழுவதும் உள்ள 650 மின் விநியோக உட்கோட்டங்களில் உள்ள பணிகளுக்கு, அவசர அவசரமாக ஒரு கோட்டத்திற்கு 1 கோடியே 80 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய்க்கு உள்நோக்கத்துடன் ஒப்பந்தம் போடுவது, மின்சாரத் தாக்குதலுக்கு ஒப்பான அதிர்ச்சியை அளிக்கிறது.

மின்வாரியத்தில் ஏற்கெனவே பணியில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்க ஒப்புக் கொள்ளப்பட்ட 380 ரூபாய் தினக்கூலியைத் தர மறுக்கும் தமிழக அரசு, தனியாரிடம் தினக்கூலிக்கு அளிக்க வேண்டிய தொகை ரூ.412 என அதிகப்படுத்தி ஒப்பந்தம் போடவேண்டிய அவசியம் என்ன? தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவில் மண் அள்ளிப்போடும் இதுபோன்ற செயல் கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்திருந்தார்.