செவ்வாய், 22 டிசம்பர், 2020

RSS குருமூர்த்தியால் கதை கந்தலாகிய தமிழக பாஜக.. முட்டி மோதும் மயிலாப்பூர் .. ஒரு வாட்சாப் டைரி குறிப்பு

நூடுல்ஸ் சிக்கலை சாணக்கியன் குருமூர்த்தி தனது அறிவால் இடியாப்பச் சிக்கலாக்கி பாஜகவின் 2.5 வாக்கு வங்கியை ஆளுக்கு கால் பங்கு என்று பிரிக்க பத்து பேரை இறக்கி மண்ணை குத்துகுத்தாக அள்ளிப்போட்டிருக்கிறாராம்

மீண்டும் தமிழ்நாடு பாஜகவில் ஆரிய திராவிட யுத்தம் தொடங்கியிருக்கிறது. முதல் கட்டப் போரில் தமிழிசை , பொன்னர் இருவரும் தோற்று ஒதுங்கினர்கள். அவர்கள் மட்டுமல்ல . அவர்கள் சார்ந்த சமூகமும் மொத்தமாக பாஜகவுக்கு கணக்கை முடித்து சிட்டையைக் கொடுத்துவிட்டார்களாம்.   இனி அண்ணாச்சி வகையறா வாக்குகளும் நோட்டுகளும் பாஜகவுக்கு இல்லை . அதிலே ஆடிப்போன பாஜக மேலிடம், வென்ற எச் ராஜா எஸ் வீ சேகர் சார்ந்தோரிடம் தற்சமயம் கொஞ்சம் அமைதியாக இருங்கள். சிலரைப் பொறிவைத்துப் பிடிக்க உங்கள் பதவிகளைத் தற்சமயம் தாருங்கள். சில வேலைகள் முடிந்ததும், மீண்டும் உங்கள் ராஜாங்கமே நடக்கும் என்று கெஞ்சிக் கூத்தாடி முருகன் அண்ணாமலை போன்றோர்களுக்கு டம்மி சேர்களைக் கொடுத்து உட்காரவைத்திருந்தது நாம் அறிந்ததே . பதவி என்று வந்தால் அதில் எவ்வளவு ஸ்கோர் பண்ணணுமோ அதைச் செய்து இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்ட நியூலி அப்பாய்ண்டட் சங்கிகள், களமிறங்கி காசும் காரியமும் பார்க்க ஆரம்பிக்க...

மயிலாப்பூர் கும்பலுக்கு எரிச்சலும் கடுப்பும் நாளுக்கு நாள் பெட்ரோல் கேஸ் விலை போல் ஏற ஆரம்பித்து விட்டதாம்.
மயிலாப்பூர் கும்பல் அதிமுக கூட்டணியில் இந்தமுறை சில சீட்டுகளை அள்ளலாம் என்று ஆசைப்பட ,
பார்ப்பனரல்லாத சங்கிகள், குறுக்கே புகுந்து ஆட்டையைக் கலைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதிமுகவை ஆடு முட்டியதும் வண்டு கொட்டியதும் இதன் பிண்ணணியில் தானாம்.
அக்கரகாரத்திலே அட்வைஸ் வாங்கி அதிமுக சீட் கொடுத்ததெல்லாம் முன்னால, இப்போ இங்கே நாங்க இருக்கிறோம் எங்களை கன்சிடர் பண்ணுங்க என்று சவுக்கைச் சுழட்டியிருக்கிறார்கள் பார்ப்பனரல்லாத சங்கிகள்.
இதற்கிடையில் நான் ஆறு மாதத்துக்கு வாங்கி வைத்த லதா ஆத்துக்காரர் கால்ஷீட்டை என்ன பண்றது ன்னு குருமூர்த்தி புலம்பிக் கொண்டிருக்கிறாராம்‌ .
நாக்பூர் தலைமையகம்
அமீத்ஷா இருவரும் ஆளுக்கொரு உத்தி சொல்ல, வீட்டுக்குள்ள இருந்துகிட்டே பிரச்சாரம் பண்றேன் , டுவிட்டர் அக்கவுண்ட் பாஸ்வேர்டு தற்ரேன் இவ்வளவு தான் என் உச்சகட்ட உழைப்பு எடுத்துத்தரமுடிந்த எழுச்சி சீரமைக்க முடிந்த சிஸ்டம் (ரஜினி ) என்று வட்டிகேட்கிற கறார்தனத்தோடு வட்டிஸ்டார் சொல்லிவிட , இவர்களை ஒருங்கிணைத்து
இதுவரை ஒரு டீ பார்ட்டி கூட நடத்தத் துப்பில்லாத குருமூர்த்தி டெல்லி அழைப்புக்கு புல்டாக்டைம் ரீசார்ஜ் செய்து மொபைலையே பார்த்துக்கொண்டு இருக்கிறாராம்.
போதாக்குறைக்கு தமிழருவி மணியன் வேறு நானே முதல்வர் வேட்பாளரா நாலு நாள் நடிச்சுக்கவா என்று கஜினி சஞ்சய் ராமசாமிக்கு மாறுவேடம் போட முயலும் சின்ன சத்தியராஜ் போல புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.
ஆக கமலாய வட்டாரத்தில் கலகம் பல திசைகளிலும் சுழன்று அடிக்கிறது . காரணம் பார்பனர் பார்பனரல்லாதோர் . திராவிடம் ஊதிவிட்ட அதே தீப்பொறி. மூழ்க மூழ்கவே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக