பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான முனைவர் தொ.பரமசிவன் காலமானார்!!
nakkheeran.in :
தமிழகத்தின் பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவன் (70) உடல்நலக் குறைவால் காலமானார். பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.
தமிழில் இயங்கி வந்த முக்கியமான பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் தொ.பரமசிவன். 'அறியப்படாத தமிழகம்', 'பண்பாட்டு அசைவுகள்' போன்ற நூல்கள் அவரின் முக்கியப் படைப்புகளாகத் திகழ்கின்றன. தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தனது நூல்களின் மூலம் தேடித்தந்தவர். அவரது 'அழகர்கோயில்' நூல், கோயில் ஆய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் தற்போது வரை திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக