வியாழன், 24 டிசம்பர், 2020

எம்ஜியார் உள்ளும் புறமும் 6 கவிஞர் கண்ணதாசன் . ஆட்களை அடையாளம் காட்டுவதே எனது நோக்கம்


கவிஞர் கண்ணதாசன்:
.: ஆக்குவார் அழிப்பார் அவர் ஆட்களை உண்டாக்குவார் அழிப்பார்.                          சொந்த காரணங்களுக்காக யாரையும் பிடிக்கவில்லை என்றால் தனது படங்களில் அவரை போடக்கூடாது என்று தடுப்பார்.                            ஏற்கனவே சில பகுதிகளை எடுத்து விட்டிருந்தாலும் அதை வெட்டி விட்டு வேறொரு நடிகரை போட்டு எடுக்க சொல்வார். தயாரிப்பாளருக்கு ஏற்படும் நஷ்டத்தை பற்றி கவலைப்பட மாட்டார்.                  (தன்வரையில் திறமை இல்லாத ஒருவர் பிறரருக்கு திறமையை உற்பத்தி செய்யும் திறமையை அவரிடம் மட்டும்தான் கண்டேன்) 

அப்படி இவரால் பாழ்படுத்த பட்டவர்களில் குலதெய்வம் ராஜகோபால் ஒருவர் ஈவு இரக்கம் இல்லாமல் அவரது பழிவாங்கும் குணத்தால் பலர் வேலை இல்லாமல் அலைந்தார்கள் . சிலர் சிவாஜியோடு ஒட்டிக்கொண்டு பிழைத்தார்கள். சிவாஜியை பொறுத்தவரை அவருக்கு பழிவாங்கும் குணம் எப்போதும் கிடையாது.

இன்னாரை போடு என்று சொல்லமாட்டார் .போடாதே என்று தடுக்கவும் மாட்டார்.        அவரை வெட்டுவேன் குத்துவேன் என்றவர்களை கூட தன்படத்தில் இருந்து ஒதுக்கவில்லை.     ஆனால் எம்ஜியார் பிறருடைய தொழிலாத்தான் முதலில் கெடுப்பார்.      திமுகவில் இருந்து நான் விலகிய சில ஆண்டுகளில் என்னையும் பழிவாங்க அவர் முயன்றார்.

எழுதினால் கண்ணதாசன் எழுதவேண்டும் அல்லது பாட்டு வேண்டாம் என்று சொல்லகூடிய புரொடியூசர்களையும் அவர் மாற்ற முயன்றார்.

 அதற்கு கட்டுப்பட்டாக வேண்டிய நிலையில் இருந்த சிலர் என்னை கைவிட வேண்டிய நிலைக்கு ஆளானார்கள் .

ஆனால் பொருளாதாரத்தில் அவர்கள் என்னை கைவிடவில்லை.

ரகசியமாக வந்து ஒரு வாழ்த்து எழுதி வாங்கிக்கொண்டு முழு பணத்தையும் கொடுத்து விட்டு போய்விடுவார்கள்.

என்னை அழிக்கும் முயற்ச்சியில் மட்டும்தான் எம்ஜியாரால் வெற்றி பெறவே முடியவில்லை.

காரணம் வருஷத்தில் எம்ஜியார் நடிக்கும் படங்கள் நாலுதான் இருக்கும் .

அதில் வரும் வருமானம் எனது ஒரு நாள் செலவுக்கு ஆகாது.

ஆனால் சிவாஜி நடிக்கும் படங்கள் வருஷத்தில் பத்து அல்லது பதினைந்து இருக்கும்

சிவாஜி எம்ஜியார் இருவருமே இல்லாத படங்கள் சுமார் இருபத்து ஐந்து இருக்கும்.

அதனால் என் தொழிலை கெடுக்க எம்ஜியாரால் முடியவில்லை.

பத்திரிக்கை வானொலி நாடகமேடை எனஅனைத்திலும் எனக்கு தொடர்பு இருப்பதால் நானே காப்பாற்ற வேண்டிய எல்லா குடும்பத்தையும் காப்பாற்ற முடிந்தது.

 ஆனால் அதக்ரு வழி இல்லாதவர்கள் நிலை?

குலதெய்வம் ராஜகோபால் வீடு ஒருமுறை ஏலத்திற்கு அதை நிறுத்துவதற்கு .நானே பணத்தை கட்டினேன். 

இப்போது எம்ஜியாரின் அரசியலை நான் விமர்சனம் செயதால் என் தொழில் கெட்டுவிடுமோ என்று பயந்து சிலர் எனக்கு எழுதுகிறார்கள்.

அவர்கள் பயப்பட தேவையில்லை.

 என்னைவிட திறமைசாலி ஒருவன் வந்தால் நானே அவனை அடையாளம் கண்டு கொள்வேன்.

என்னிடமிருந்து யாரும் எதையும் பறித்து விடலாம் .

ஆனால் கண்ணன் அருளால் என் கையில் இருக்கும் பேனாவை  யாரும் பறிக்க  முடியாது .

இந்த விமர்சனம் சொந்த விரோதம் என்று யாரும் கருதினால் அது மடமை.

இன்று எனக்கும் எம்ஜியாருக்கும் சொந்த விரோதம் கிடையாது .

உங்களுடைய தரத்துக்கு இது அவசயம்தானா என்று பலர் கடிதம் எழுதுகிறார்கள்.

இது ஜனநாயகத்தின் தலையெழுத்து .நான் என்ன செய்ய ?

தரம் கெட்டவர்களுக்கு வாய்ப்பு ஏற்படும் பொழுது அவர்களை பற்றி சொல்லித்தான் தீரவேண்டி இருக்கிறது.

கருணாநிதியை ஆட்சியில் இருந்து ஒழிக்க விரும்புகிறீர்களா .? மெத்த சரி.

அந்த இடத்தில் எம்ஜிஆர் வருவதா ?  அதை யார் அனுமதித்தாலும் என்னால் ஜீரணிக்க முடியாது.

இந்த அரசியலில் எனக்கு பட்டம் பதவி மண்ணாங்கட்டி  தெருப்புழுதி எதுவும் தேவை இல்லை.

ஆட்களை அடையாளம் கண்டுகொள்வதில் தமிழ் மக்களுக்காக வழி காட்டுவதே என் நோக்கம்.     முற்றும்

முந்தைய பாகங்கள் .

எம்ஜியாரின் உள்ளும் புறமும் ( 1 ) .கவிஞர் கண்ணதாசன் . அரங்கமும் அந்தரங்கமும் .  

 எம்ஜியாரின் உள்ளும் புறமும் (2 ) ...கவிஞர் கண்ணதாசன் நாங்களே தேடிக்கொண்ட வினை

எம்ஜியார் உள்ளும் புறமும் -3 ! கவிஞர் கண்ணதாசன் .. மலையாளிகள் பற்றி   

எம்ஜியார் உள்ளும் புறமும்- 4 - கவிஞர் கண்ணதாசன் - பாவம் வெங்கிடசாமி - கோல்டன் நாயுடு !    

எம்ஜியார் உள்ளும் புறமும் 5 - கவிஞர் கண்ணதாசன் S .S .ராஜேந்திரன்

1 கருத்து:

  1. தாய்மார்களுக்கு ஒரு கடிதம் விடுபடுகிறது என்று நினைக்கிறேன். பக்கம் எண்கள் 32-35

    பதிலளிநீக்கு