செவ்வாய், 22 டிசம்பர், 2020

50 தொகுதிகளில் ராதாபுரம் பாணி மோசடியை அரங்கேற்றினால் .. நீண்ட சதிகளின் வரலாறு

செல்லபுரம் வள்ளியம்மை
  :  எம்ஜியாரை வைத்து இந்திரா காங்கிரஸ்காரர்கள் செய்த சதி, பத்மநாப கொலையை வைத்து சுப்பிரமணியன் சாமியும் ஆர் வேங்கடராமனும் செய்த சதி. ராஜீவ் காந்தியை கொன்று பழியை திமுக மேல் போட்ட அதிமுக காங்கிரஸ் ராவின் சதி என்று எந்த சதிமோசடிகளை நோக்கினாலும் அவை எல்லாமே திமுகவை தொலைத்து கட்ட பார்ப்பனர்களும் ரா அதிகாரிகளும் இணைந்து நடத்திய மோசடிகள்தான், ராதாபுரம் தொகுதி தேர்தல் வெற்றி என்பது அப்பாவு அவர்களிடம் இருந்து இன்றுவரை திருடப்பட்டு கொண்டு இருக்கிறது என்பதை எப்படி புறம் தள்ளிவிட முடியும் . நீதி துறை . தேர்தல் ஆணையம் எல்லாம் கேலிக்கூத்தாகி உள்ள நிலையில் நடக்க இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் எப்படி பட்ட மோசடிகளை மீண்டும் அரங்கேற்ற அவர்கள் முயல்கிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது . அண்மைக்கால நடவடிக்கைகளை நோக்கினால் இந்த சந்தேகம் நியாயமானவை என்று தோன்றுகிறது

LR Jagadheesan : · அரசு இயந்திரத்தின் முழுமையான


ஒத்துழைப்போடு நடக்க வாய்ப்பிருக்கும் இந்த மோசமான முறைகேட்டை தடுப்பதில் திமுகவும் அதன் கூட்டணி கட்சியினரும் எந்த அளவுக்கு விழிப்போடும் பொறுப்போடும் இருக்கப்போகிறார்கள் என்பது அந்த கூட்டணியின் சட்டமன்றத்தேர்தல் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் காரணியாக இருக்கலாம். சந்தேகம் இருந்தால் அப்பாவு தேர்தல் முடிவு ஏன் இன்றும் வெளியிடப்படாமல் இருக்கிறது என்பதை ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.    ஒரு அப்பாவுக்கு நடந்ததை 50 அப்பாவுகளுக்கு நடத்தினால் தமிழ்நாட்டு அரசியலின் எதிர்காலம் மிக எளிதில் அழியும். அதை செய்யக்கூடியவர்கள் தான் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள்.           அந்த அநீதிகளை தடுப்பதில் திமுக கூட்டணியினர் கவனம் செலுத்தாமல் இருக்கவும் அல்லது செலுத்தவிடாமல் செய்யவும் திட்டமிட்டு இறக்கிவிடப்பட்ட கூலிப்படைகளே மையமும் மணியனின் புதிய எஜமானனுமோ என்கிற சந்தேகம் எழுவது இயல்பே.             

                  திமுக கூட்டணியினர் இந்த இரண்டு ஐந்தாம்படைகளுக்கும் அளவுக்கு மீறி இடம் கொடுக்காமல் அவர்களை ஒதுக்கி புறந்தள்ளிவிட்டு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தில் மட்டுமே அதிகபட்ச கவனம் செலுத்துவதே பொருத்தமாக இருக்கும். இந்த இரண்டு பொய்யர்களும் சேர்ந்தாலும் இரட்டை இலக்க வாக்கை தொடுவார்களா என்பதே சந்தேகம் என்னும் சூழல் நிலவும்போது இவர்களுக்கு எதிராக அளவுக்கு அதிகமாக கவனமோ நேரமோ உழைப்போ விரயம் செய்யத்தேவையில்லை. சிங்க வேட்டைக்குப்போகிறவன் சிறுநரிகளின் ஊளைகளை கண்டுகொள்ளத்தேவையில்லை.

 No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக