செவ்வாய், 22 டிசம்பர், 2020

புதிய கொரோனா வைரஸ்: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

/minnambalam.com : இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை விமான நிலையத்துக்கு இங்கிலாந்திலிருந்து வந்த 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 புதிய கொரோனா வைரஸ்: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

இங்கிலாந்தில் சமீப நாட்களாக கொரோனா வைரஸ் புதிய வடிவம் பெற்று வேகமாகப் பரவி வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. முன்பு பரவிய வைரஸைக் காட்டிலும், இது 70 சதவிகிதம் அதிகளவு பரவி வருகிறது என்றும், நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை கூறியுள்ளது. இதனால் பிரிட்டனிலிருந்து வரும் அனைத்து விமானங்களையும், அயர்லாந்து, நெதர்லாந்து, இத்தாலி, ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளும் தடை விதித்துள்ளன.  இந்தியாவிலும் பிரிட்டன் விமானங்களுக்குத் தடை விதிப்பதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், ”இங்கிலாந்தில் கொரோனா பரவும் சூழல் நிலவுவதால், அந்நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து விமானங்களுக்கும் வரும் 31ஆம் தேதி இரவு 23:59 வரை தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை டிசம்பர் 22ஆம் தேதி இரவு 23:59 மணியிலிருந்து அமலுக்கு வரும். எனினும், சரக்கு விமானங்கள் மற்றும் சிவில் போக்குவரத்துத் துறை இயக்குநரகத்தால் அனுமதி அளிக்கப்பட்ட விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது.

மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்கள், இங்கிலாந்திலிருந்து பயணிகள் யாரையும் நம் நாட்டுக்கு அழைத்து வரக்கூடாது. இங்கிலாந்திலிருந்து இந்தியாவின் எந்த ஒரு பகுதிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பயணிகள் அழைத்து வரப்படவில்லை என்பதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இங்கிலாந்திலிருந்து வரும் அனைத்து விமானங்களின் (ஏற்கனவே புறப்பட்ட விமானங்கள், 22ஆம் தேதி இரவு 23:59 மணிக்குள் இந்தியாவிற்கு வரும் விமானங்கள்) பயணிகளையும் விமான நிலையங்களில் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, அதற்கான மருத்துவச் செலவுகளை ஏற்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக