செவ்வாய், 22 டிசம்பர், 2020

"காதலையே" படுகொலை செய்வது என்ற நுணுக்கமான ஆயுதம் "பாசம்".

  Image may contain: 1 person, sleeping, text that says '...ஜாதி கடந்த காதலை அரிவாள்கள் தடுப்பதைவிட தாய், தந்தை, குடும்பப் பாசங்கள் தான் அதிகமாகத் தடுக்கின்றன. உண்மையில், பாசம் எனும் ஆயுதம் மற்ற எல்லா ஆயுதங்களையும் விடக் கொடுமையானது. குரூரமானது. ஜாதி கடந்த காதல்களுக்கு மட்டுமல்ல; ஒரு பெண்ணின் சுயமரியாதைக்கும், பெண் தன் வாழ்வைத் தானே நிர்ணயித்துக் கொள்வதற்கும் எதிரானது இந்தப் பாசங்கள் தான். காட்டாறு "சாதி கடந்து காதலித்தால் சாவு நிச்சயம்" என்ற மரண மயத்தை உண்டாக்குவது போன்ற படங்கள் ஆதிக்க ஜாதிகளுக்கே பயன்படும். வெற்றிபெற்ற ஆயிரக்கணக் கான காதல்களைப் படமாக்குங்கள். அவையே ஆணவக் கொலைகளை அழிக்கும். ...திரைப்படங்கள் மட்டுமல்ல; ஜாதி ஒழிப்புக் களத்தில் போராடும் இயக்கங்கள்கூட இந்து மதப் பண்பாட்டின் அபாயத்தைப் பேச மறுக்கின்றன. இந்து மத சாஸ்திரங்களை விவாதிக்கக்கூடத் தயங்குபவர்களால் ஆணவக்கொலைகளின் இலை, தழைகளைக்கூட அசைக்கமுடியாது.'

AThi Asuran : · அரிவாள்களைவிடக் குரூரமானது பாசம்! 1. இந்தப் படத்தில் மட்டுமல்ல; பெரும்பான்மையான ஆணவப் படுகொலைகளில் ஆயதங்கள் வெவ்வேறாக இருக்கும். அரிவாள், ரயில் தண்டவாளம், விஷம் என மாறுபடும். ஆனால் இவை எல்லாவற்றையும்விட கொடுமையான ஆயுதம் - இன்னும் நாம் விவாதிக்காத - விவாதிக்க விரும்பாத ஆயுதம் 'பாசம்' அரிவாள்களால் வெட்டப்பட்ட படுகொலைகளைப் பற்றி மட்டுமே நாம் விவாதிக்கிறோம். அரிவாள் படுகொலைகளுக்கும்கூட தாய்ப்பாசமோ, தந்தைப் பாசமோ, குடும்பப்பாசமோ தான் பின்னணியாக இருக்கின்றன. ஜாதி கடந்த காதலை அரிவாள்கள் தடுப்பதைவிட தாய், தந்தை, குடும்பப் பாசங்கள் தான்

அதிகமாக,  மிக மிக அதிகமாகத் தடுக்கின்றன.
திருமணம் செய்து கொண்ட பிறகு தான் ஆணவப் படுகொலைகள் நடக்கின்றன. திருமணம் என்ற நிலைக்கே செல்லவிடாமல் ஜாதி கடந்த "காதலையே" படுகொலை செய்வது என்ற நுணுக்கமான ஆயுதம் "பாசம்".
உண்மையில், பாசம் எனும் ஆயுதம் மற்ற எல்லா ஆயுதங்களையும் விடக் கொடுமையானது. குரூரமானது. ஜாதி கடந்த காதல்களுக்கு மட்டுமல்ல; ஒரு பெண்ணின் சுயமரியாதைக்கும்,
ஒரு பெண் தன் வாழ்வைத் தானே நிர்ணயித்துக் கொள்வதற்கும் எதிரானது இந்தப் பாசங்கள் தான்.
இந்தப் பாசங்களுக்கு அடிப்படையானது பண்பாடு, பாரம்பரியம், குடும்பப் பெருமை. இவற்றை ஒரே சொல்லில் கூற வேண்டுமானால் அது "மதம்".
2. ஜாதி கடந்து திருமணம் செய்வதை இந்து மத வேதங்களின் சாரமான, மனுசாஸ்திரம் தடை செய்கிறது.
“துவிஜர்களுக்கு ( பார்ப்பன, சத்திரிய, வைசிய ஜாதிகளுக்கு) முக்கியமாக விவாகஞ்செய்யும்போது, தன் வருணத்திலேயே விவாகஞ் செய்ய வேண்டும். தன் வருணத்தில் பெண் கிடைக்காத ஆபத்துக்காலத்திலும் சூத்திரப் பெண்ணை மணம் செய்யக்கூடாது.” - மனுசாஸ்திரம், அத்தியாயம் 2, ஸ்லோகம் 12, 13
"உயர்ந்த ஜாதிக் கன்னிகையைப் புணர்ந்த தாழ்ந்த ஜாதியானுக்கு மரண வரையில் தண்டனை விதிக்க வேண்டியது. தன் ஜாதிக் கன்னிகையைப் புணர்ந்தவன் அவள் தந்தை கேட்கும் பொருளைக் கொடுத்து அக்கன்னிகையைக் கலியாணஞ்செய்து கொள்க.
- 8 வது அத்தியாயம் 366 வது ஸ்லோகம்
இதுபோன்ற இந்துமதச் சட்டங்கள் தான் இந்து மதத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அனைவருக்கும் பண்பாடாகவும், பாரம்பரியமாகவும் உள்ளது. இதன் விளைவுகளாகத் தான் ஆணவப்படுகொலைகள் நடக்கின்றன.
இந்து மதத்தையும், வேதங்களையும், சாஸ்திரங் களையும் பற்றி மூச்சுக்கூட விடாமல் ஆணவப் படுகொலை களை ஒழித்துவிட முடியாது.
வெற்றிமாறன்கள் மட்டுமல்ல; திரைப்படங்கள் மட்டுமல்ல; ஜாதி ஒழிப்புக் களத்தில் போராடும் இயக்கங்கள்கூட இந்து மதப் பண்பாட்டின் அபாயத்தைப் பேச மறுக்கின்றன.
ஆணவப் படுகொலைகள், ஜாதிய வன்கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகள் எதுவாக இருந்தாலும் அவை நடப்பதற்கான அடிப்படைக் காரணம். நமது பண்பாடு, பழக்க வழக்கம், சம்பிரதாயம், சடங்குகள் போன்றவையே. இவை இந்து மதத்தின் வேதங் களையும், சாஸ்திரங்களையும் அஸ்திவாரங்
களாகக் கொண்டவை. இந்து மத சாஸ்திரங்களை விவாதிக்கக்கூடத் தயங்குபவர்களால் ஜாதியத்தின் - ஆணவக்கொலைகளின் இலை, தழைகளைக்கூட
அசைக்கமுடியாது.
3. இது போன்ற படங்களும், ஆணவப்படுகொலைகளைப் பற்றி விரிவாக விவாதிக்கும் ஊடகங்களும் ஜாதி, மதம், இனம், மொழி கடந்து காதலித்து, திருமணம் செய்து,
வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் பற்றிப் பேசுவதில்லை. விவாதிப்பதில்லை. நேர்காணல்களை வெளியிடுவதில்லை. ஆபத்துகளை மட்டும் காட்சிப்படுத்திக்கொண்டே இருக்கும் இந்தப் போக்கு ஆணவப் படுகொலைகளை அதிகப்படுத்தவே பயன்படும்.
திராவிடர் கழகம் அதன் தலைமைநிலையத்தில் ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான ஜாதி, மத மறுப்புத் திருமணங்களை நடத்தி வைக்கிறது. தி.வி.க. வும், த.பெ.தி.க.வும் ஒவ்வொரு மாதத்திலும்
நூற்றுக்கணக்காக ஜாதி கடந்த மணங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. மூன்று அமைப்புகளுமே அதற்கான பதிவுச் சான்றுகளை வைத்துள்ளார்கள். சந்தேகமிருப்பவர்கள் சரிபார்த்துக்கொள்ளலாம்.
இவை அல்லாமல் எந்த முற்போக்கு இயக்கங்களிலும் பங்கெடுக்காமல், அவற்றின் பெயரைக்கூட கேள்விப்படாமல் சமுதாயத்தில் ஏராளமானவர்கள் ஜாதி, மதங்கடந்த திருமணங்களை நடத்திக்
கொண்டுதான் இருக்கிறார்கள். பெண் கிடைக்காமல் கேரளா சென்று பட்டியலினப் பெண்களைத் திருமணம் செய்துவரும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் எண்ணிக்கையை இதில் சேர்க்கவில்லை.
பெரும்பான்மையாக நடந்து வரும் இதுபோன்ற சாதகமான விசயங்களைப் படமாக்குவது தான் ஆணவப்படுகொலைகளை எதிர்க்கப்பயன்படும். இதை விட்டு விட்டு, "சாதி, மதம் கடந்த காதலித்தால் சாவு
நிச்சயம்" என்ற மரண மயத்தை உண்டாக்குவது போன்ற படங்கள் ஆதிக்க ஜாதிகளுக்கே பயன்படும். வெற்றிபெற்ற ஆயிரக்கணக்கான காதல்களைப் படமாக்குங்கள். அவையே ஆணவக்கொலைகளை
அழிக்கும். #PaavaKadhaigal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக