புதன், 23 டிசம்பர், 2020

இன்சூரன்ஸ் பற்றிய தவறான புரிதல் ! Term Insurance தவிர்ந்த ஏனைய பாலிசிகள் பற்றிய உண்மை... Karthikeyan Fastura

No photo description available.

Karthikeyan Fastura : · இன்சுரன்ஸ் பற்றி சமீபகாலமாக ஒரு தவறான புரிதல் மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. Term Insurance தவிர்த்து மற்ற இன்சுரன்ஸ் பாலிசி எல்லாம் வீண் என்பது போன்ற கருத்தாக்கம் தான் அது. எந்த இன்சுரன்ஸ் பாலிசியும் தவறானது/வீண் என்று சொல்லமுடியாது. நீங்கள் முழுமையாக அந்த பாலிசியை கட்டவேண்டும் . ஒவ்வொன்றும் வெவ்வேறு தேவைகளுக்காக உருவாக்கப்படுகிறது. Term Insurance என்பது குடும்பத்தின் வருமானத்தை ஈட்டும் ஒரு குடும்ப தலைவர் அல்லது தலைவி, தனக்கு ஒரு ரிஸ்க் ஏற்பட்டால் தனது குடும்பம் எந்தவிதத்திலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தனது ஆண்டு வருமானத்தை காட்டிலும் 20 மடங்கிற்கு மேல் ஒரு பெரும் தொகையை காப்பீடு செய்துகொள்வது. இதனால் அவரது குடும்பம் எளிதாக பாதுகாக்கப்படும். இன்று எல்லாவிதமான இறப்புகளுக்கும் இது பொருந்துகிறது.

ஆனால் இதை எல்லோரும் எடுத்துவிட முடியாது. ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு குறையக்கூடாது. நல்ல உடல்நலம் வேண்டும். உயிர் பாதுகாப்பிலாத ரிஸ்க்கான வேலையாக, தொழிலாக, துறையாக இருக்கக்கூடாது. ஊனமுற்றவர்கள், கணவரை இழந்த பெண்கள் எடுக்க முடியாது. இதயநோய், சக்கரைவியாதி உள்ளவர்களாலும் எடுக்க முடியாது. 45 வயதிற்கு மேல் இருந்தாலும் கிடைப்பது கடினம். அல்லது மிக அதிக ப்ரீமியம் கட்டவேண்டும். ஆகவே வேலைக்கு செல்ல தொடங்கியவுடன் இளைஞர்கள் இதை அவசியம் எடுத்துவிடவேண்டும். அது தான் மிகக்குறைந்த பிரீமியத்தில் நல்ல தொகைக்கு காப்பீடு கிடைக்கும். மற்ற வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் Term Insurance சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. Premium குறைவாக இருக்கிறது
Term இன்சுரன்ஸ் எடுக்கமுடியாதவர்களுக்கு ஆயுள்காப்பீடு என்பது சேமிப்புடன் கூடிய காப்பீடு நல்லதே. அதிலும் நன்றாக செயல்படும் இன்சுரன்ஸ் நிறுவனங்களில் எடுக்கும்போது இன்னும் கொஞ்சம் பலன் அதிகம்.
Term இன்சுரன்ஸ் தவிர்த்து மூன்று வகையான முக்கியமான இன்சுரன்ஸ் இருக்கிறது.
Guaranteed Money Back Policy - ரிஸ்க் இல்லாத சேமிப்பு பாலிசி இது. ரிஸ்க் உள்ள பிற முதலீடுகளுடன் ஒப்பிடும்போது Returns குறைவு தான். 5-7% IRR கொடுக்கும்.
Participated Insurance Policy - இதுவும் ரிஸ்க் இல்லாத சேமிப்பு பாலிசி தான். Guaranteed / Non-Guaranteed என்று பிரித்திருப்பார்கள். கம்பெனியின் வருமானத்தில் பங்கு கொடுப்பதால் முழு உத்திரவாதம் கொடுக்கக்கூடாது என்பது IRDAI சொல்கிறது.
ULIP Policy என்பது மியுச்சுவல் பண்டும், இன்சுரன்ஸ் பாலிசியும் இணைந்தது. சந்தையுடன் இணைந்திருப்பதால் ரிஸ்க் இருக்கிறது. முழுமையான காலத்திற்கு விட்டுவைத்தால் போட்டகாசு திரும்ப வந்துவிடும். ஆனால் நல்ல Returns கொடுக்கும் திட்டம் இது. 20% வரை ஆண்டிற்கு வருமானம் கொண்டுவருகிறது.
இனி ஒவ்வொரு பாலிசி பற்றியும் அடுத்தடுத்த பதிவுகளில் எளிமையாக விளக்கமுயற்சிக்கிறேன். அதற்கு முன்பு இந்த படத்தை பார்த்துவிடுங்கள். எந்தெந்த இன்சுரன்ஸ் நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்ள உதவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக