சனி, 26 டிசம்பர், 2020
BJP ஸ்மிரிதி இரானி மீது லஞ்ச குற்றச்சாட்டு பதிவு . ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்டார் . துப்பாக்கி வீராங்கனை வர்த்திகா சிங்
nakkheeran.in - நக்கீரன் செய்திப்பிரிவு :
பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்மிருதி இரானி. இவர் மத்திய ஜவுளி மற்றும் பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துவருகிறார். இந்தநிலையில், சர்வதேசத் துப்பாக்கிச் சுடும் வீராங்கனை வர்திகா சிங், மத்திய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராவதற்குப் பணம் கோரியதாக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி மற்றும் மேலும் இருவர் மீது குற்றம் சாட்டி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
மத்திய அமைச்சரின் இரண்டு உதவியாளர்களான
விஜய் குப்தா மற்றும் ரஜ்னிஷ் சிங் ஆகியோர், தன்னை மத்திய
பெண்கள் ஆணையத்தில் உறுப்பினராக்குவதற்கு முதலில் 1 கோடி ரூபாய்
கேட்டதாகவும், பின்னர் அதனைக் குறைத்து, 25 லட்சம் ரூபாய் கேட்டதாகவும்,
அவர்களில் ஒருவர் தன்னிடம் ஆபாசமாகப் பேசியதாகவும் குற்றம் சட்டியுள்ள
வர்திகா சிங், தன்னை அந்த ஆணையத்தின் உறுப்பினராக நியமித்துப்
பொய்யான கடிதம் ஒன்றையும் அவர்கள் அளித்ததாகவும் அந்தப் புகாரில்
கூறியுள்ளார்.ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டவர்களில்
ஒருவரான விஜய் குப்தா, வர்திகா சிங் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைக்
கூறி, தன் மீது அவதூறு பரப்ப முயல்வதாகக் காவல் துறையிடம் புகார்
அளித்திருப்பதும், அதனைத் தொடர்ந்து வர்திகா சிங் மீது வழக்குப் பதிவு
செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக