புதன், 23 டிசம்பர், 2020

எம்ஜியார் உள்ளும் புறமும் 5 - கவிஞர் கண்ணதாசன் S .S .ராஜேந்திரன்

கவிஞர் கண்ணதாசன் : கழகத்துக்கு யாரவது ஒரு புதிய நடிகன் வருகிறான் என்றால் எம்ஜியார் பரபரப்படைவார்.   அந்த நடிகன்  முன்னனுக்குக் வந்துவிடாதபடி எல்லா வேலைகளையும் செய்வார் . பணமும்

செலவழிப்பார்.       அந்த நடிகனை வைத்து படம் எடுக்கும் கம்பனிக்கு போன் செய்து அந்த படத்தில் குறைந்த சம்பளத்தில் நான் நடித்து தருகிறேன் என்பார் .     இதை அவர் என்னிடமே செய்தார்.      அவரது பேச்சை நம்பி நான் ஊமையன் கோட்டை என்ற படத்தை ஆரம்பித்தேன்.            அற்புதமான கதை . அந்த படம் வெளிவந்திருந்தால் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கும்.              அதற்காக என்னிடமிருந்து சுமார் 21 ஆயிரம் ரூபாய் எம்ஜியார் பெற்றிருக்கிறார். அது ரொக்கமாக கொடுத்த பணம்.        ஆகவே அதை அவர் மறுத்தாலும் எழுத்து பூர்வமான ஆதாரம் என்னிடம் இல்லை. அந்த படத்தை எனக்கு கடனாக கொடுத்தவர்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள். 

பணம் வாங்கி கொண்டாரே தவிர ஒரு நாள் கூட படத்தில் நடிக்கவில்லை.
62 ஆயிரத்தி 500 ருபாயோடு அந்த படம் நிறுத்தப்பட்டது.
நான் கடன்காரன் ஆனேன்.
இனி பெரிய நடிகன் வேண்டாம் என்று முடிவு கட்டி .
பொருளாதாரத்தில் மிகவும் சிரமத்தில் இருந்த டி ஆர் மகாலிங்கத்தை வைத்து போட்டு படம் எடுக்க முடிவு கட்டினேன்.
என்னுடைய எழுத்து திறமையை நம்பியே படம் எடுக்க தொடங்கினேன்.
கொடுத்த பணத்தை கேட்பதற்காக வாகினி ஸ்டூடியோவில் இருந்த எம்ஜியாரை பார்க்க போனேன்
அவர் உடனே அங்கிருந்த  ஒரு அடியாளிடம்  கண்ணதாசனை வெளியே போக சொல் என்றார் .
பணமும் போய் மானமும் போய்விட்டதே என்று கவலையோடு நான் அங்கிருந்து வெளியேறினேன்

மகாலிங்கம் நடித்த மாலையிட்ட மங்கை படம் நடந்து கொண்டிருந்த போது எம்ஜியார் பார்ப்பவர்களிடம் எல்லாம் சவால் விட்டார்.
அதாவது மகாலிங்கத்தை கழக தோழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்  படம் படு தோல்வி அடையும் என்று கூறிக்கொண்டு இருந்தார்.

அதற்காகவே எனது படத்தில் எங்கள் திராவிட பொன்னாடே என்ற பாடலை வைத்தேன்.

படம் வெளியாயிற்று.
படத்தின் ஆரம்பத்திலேயே அந்த பாட்டு வந்தது .
கழகத்தோழர்கள் கைதட்டி வரவேற்றார்கள் .
பிறகு மகாலிங்கம் வரும் இடங்களில் எல்லாம் ரசிகர்களை கைதட்டி வரவேற்றார்கள்.
பாட்டுக்காகவே அந்த படம் பிரமாதமாக ஓடியது.
 பிறகு மகாலிங்கத்தை பற்றி எம்ஜியார் கன்னாபின்னா என்று பேச தொடங்கினார்.
வேறு வக்கில்லாமல் வேறு வழியில்லாமல் வயிறு வளர்க்க கட்சி பாடல் பாட வந்திருக்கிறான் என்று ஏச தொடங்கினார்.
கட்சியில் மகாலிங்கத்துக்கு செல்வாக்கு வந்துவிடுமோ என்று பயந்தார்.
மகாலிங்கத்தை யாரும் கூட்டத்திற்கு கூப்பிரவேண்டாம் என்று எல்லோருக்கும் சொல்லி அனுப்பினார் .
கோல்டன் ஸ்டுடியோவில் மகாலிங்கத்தை பற்றி என்னிடமே ஆபாசமாக பேசினார்.
அடுத்த நாள் சிவகங்கை சீமை படத்திற் எடுப்பதற்கு நண்பர் எஸ் எஸ் ராஜேந்திரனை ஒப்பந்தம் செய்தேன்.

உடனே எம்ஜியார் என்ன தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராஜேந்திரனுக்கு மார்க்கெட் இல்லை என்றும், படம் விற்பனையானது என்றும் தான் நடித்து தருவதாகவும் கூறினார்.
என்னுடயை பங்காளிகள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

ராஜேந்திரனை எப்போதும் நம்பலாம் எம்ஜியார் கழுத்தை அறுத்துவிடுவார் என்கிறார்கள்.

என்னிடம் எவ்வளவோ முயன்றும் தோல்வி அடைந்த எம்ஜியார் வேறு வழியை கையாண்டார்.

தன் ரசிகர்கள் மூலம் படம் மட்டம் படம் மட்டம் என்று பிரசாரம் செய்தார்.

ராஜேந்திரன் நடித்த பல கம்பனிகளுக்கு டெலிபோன் செய்து பல படங்களை ரத்து செய்து வைத்தார் .

முடிவில் அவர் ஜெயித்தார்.

சினிமா உலகில் இருந்து ராஜேந்திரனை அடியோடு ஒழித்தே விட்டார் . பாவம் ராஜேந்திரன்.. அண்ணாவுக்கும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் இவர் செய்யாத உதவியே இல்லை.

கழகத்தின் ஆரம்ப காலங்களில் தனது சம்பாத்தியத்தில்  பெரும் பகுதியை

கழகத்திற்காக செலவிட்டவர்  ராஜேந்திரன்.

கழகத்தில் இதயபூர்வமாக வேலை செய்தவர்

 இன்னும் சொல்லப்போனால் அண்ணாவின் வெறி பிடித்த தொண்டன் அவர்.

 ராஜேந்திரன் டி வி நாராயணசாமி அதற்கும் மேல்.

இருவரும் கழகம் கழகம் என்று உயிரை விட்டவர்கள்.

 தாங்கள் சம்பாதிப்பதற்காக அவர்கள் கட்சிக்காரர்களை அவர்கள் எப்போதும் பயன்படுத்தியதே இல்லை

எம்ஜியாரால் பழிவாங்கப்பட்ட அவர்கள் இன்று கடனாளியாக இருக்கிறார்கள்.

கழகம்தான் அவர்களை காப்பாற்றியது .

உண்மையாக உழைத்த ராஜேந்திரன் இன்று வாடுகிறார் . போலி நடிகர் இன்று புகழ் உச்சியில் இருக்கிறார்.

சிவகங்கை சீமைக்காக என்னிடம் ராஜேந்திரன் பணம் வாங்கி கொண்டு போகும்போதெல்லாம் பாதிப்பணத்தை  கழக தொண்டர்கள் அவரிடம் இருந்து

வாங்கி கொண்டு போனதை நான் பார்த்திருக்கிறேன்.

மறவர் மண்ணிலே பிறந்த அந்த தமிழனுக்கு மரியாதையை இல்லை .

யாரை நோவது?

நன்றி கெட்ட தமிழ் சமூகத்தைதான் நோகவேண்டும்.

எவன் இந்த மண்ணுக்கு சொந்தக்காரனோ அவனை தெருவிலே விட்டு வேடிக்கை பார்ப்பதுதான் தமிழன்.

 தமிழனுக்கு செய்யும் நன்றி கடன். ... தொடரும் .

முந்தைய பாகங்கள்  பின்வரும் இணைப்புக்களில் உள்ளது 

எம்ஜியாரின் உள்ளும் புறமும் ( 1 ) .கவிஞர் கண்ணதாசன்

எம்ஜியாரின் உள்ளும் புறமும் (2 ) ...கவிஞர் கண்ணதாசன் 

எம்ஜியார் உள்ளும் புறமும் -3 ! கவிஞர் கண்ணதாசன் ..

எம்ஜியார் உள்ளும் புறமும்- 4 - கவிஞர் கண்ணதாசன்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக