அனால், நடிகர் ரஜினிகாந்த் திடீரென
நேற்று ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பல்லோ நிர்வாகம், “கொரோனா குறித்து எந்த
அறிகுறியும் ரஜினிகாந்திற்கு இல்லை. ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அவர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் சோர்வு தவிற வேறு எந்த
பிரச்சினையும் இல்லை. ரஜினிகாந்த் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக
கண்காணித்து வருகிறார்கள். ரத்த அழுத்தம் சீரான பின்னரே அவர் டிஸ்சார்ஜ்
செய்யப்படுவார்” முதற்கட்டமாக அறிக்கை வெளியிட்டது.
சனி, 26 டிசம்பர், 2020
நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது: டிஸ்சார்ஜ் குறித்து நாளை முடிவு- மருத்துவமனை தகவல்
malaimalar : நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை சீராக உள்ளதாகவும், டிஸ்சார்ஜ் குறித்து நாளை முடிவு செய்யப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது: டிஸ்சார்ஜ் குறித்து நாளை முடிவு- மருத்துவமனை தகவல்
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும்
அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில்
பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர்
கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, படப்பிடிப்பு தற்காலிகமாக
நிறுத்தப்பட்டது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை
செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது.
இன்று
மாலை 6 மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘ரஜினிகாந்த் உடல்நிலை சீராக
உள்ளது. அவருக்கு எடுக்கப்பட்ட பல்வேறு பரிசோதனை முடிவுகளில் அச்சப்படும்
வகையில் எதுவும் இல்லை. இன்னும் பரிசோதனைகள் செய்ய வேண்டியுள்ளது. அவர்
டிஸ்சார்ஜ் செய்யப்படுவது குறித்து நாளை முடிவு எடுக்கப்படும்’’
எனத்தெரிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக