செவ்வாய், 22 டிசம்பர், 2020

உருமாறிய கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கிறது

dhinamalar : ஜெனிவா: பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டு சில நாடுகளில் பரவியுள்ள உருமாறிய கொரோனா வைரஸ், கட்டுப்பாட்டுக்குள் தான் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ், உருமாற்றம் பெற்று அதிக வீரியத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது 70 சதவீதம் அதிக வேகமாக பரவுவதாகவும் கூறப்படுகிறது. பிரிட்டனில் இருந்து சென்ற பயணிகள் வாயிலாக சில நாடுகளிலும் இத்தகைய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஜே.ரியான் கூறியதாவது: உலகின் பல நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது.


latest tamil news


அதாவது சூழல் நமது கட்டுப்பாட்டை மீறி இல்லை என்பதுதான் உண்மை. உருமாறிய கொரோனா வைரைஸக் கட்டுப்படுத்த சரியான வழிமுறைகள் கையாளப்பட்டு வருகின்றன. நாம் இப்போது செய்து கொண்டிருப்பதை தொடர்ந்து செய்தால் போதுமானது. ஆனால், இன்னும் சற்று தீவிரத்தன்மையுடனும், நீண்டகாலத்துக்கும் செய்வது வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைக்கும். அப்போதுதான் உருமாறிய கொரோனா வைரஸ் சற்று வீரியத்தன்மை உள்ளதாக இருந்தாலும் அதை நம்மால் தடுத்து நிறுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக