இதன்மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 23ஆவது முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் பதவியேற்றுள்ளார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சட்டத்தரணி வி.மணிவண்ணன், 21 வாக்குகளைப் பெற்று முதல்வராகத் தெரிவானார். எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான ஆனல்ட் 20வாக்குகளைப் பெற்றார். யாழ்.மாநகர சபையில் அங்கம் வகிக்கும் 45 உறுப்பினர்களில் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் மகாலிங்கம் அருள்குமரன் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் 3 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். மீதமான 41 உறுப்பினர்களில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 10 உறுப்பினர்களும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்கள் உட்பட 21 உறுப்பினர்கள் வி.மணிவண்ணனுக்கு ஆதரவு வழங்கினார்கள்.
வியாழன், 31 டிசம்பர், 2020
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இ பி டி பி கூட்டணி மணிவண்ணன் யாழ் மாநகர புதிய மேயராக வெற்றி பெற்றார்
பிகாரில் ஆளும் நிதிஷ் குமார் கட்சியில் இருந்து 17 எம் எல் ஏக்கள் தேஜஸ்வி யாதவின் எதிர்க்கட்சி கூட்டணிக்கு தாவுகிறார்கள் . பாஜக கூட்டணி ஆட்சி கவிழ்கிறது
ஆளும் நிதிஷ்குமாரின் JD (U) ஜன தளத்தை சேர்ந்த 17 எம் எல் ஏக்கள் எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி லாலு தலைமையிலான ராஷ்ட்ரிய ஜன தளத்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது .
இது நடந்தால் பிகாரில் நடக்கும் பாஜக நிதிஷ்குமார் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து போகும் . புதிய ஆண்டில் பிகாரில் புதிய ஆட்சி உருவாகும் சாத்திய கூறுகள் உள்ளது
அதிமுக விளம்பரமும் சன் டிவியும்.. தமிழகத்தின் நம்பர் ஒன் டிவி ய முடக்குவது தான் அவர்கள் டார்கெட்?
காப்பரேட்டு விவசாயம்... பெட்ரோல் விலை தினமும் ஏறுவது போல விளைபொருட்கள் விலைகளும் உயரும் .. பஞ்சாப் விவசாயிகள் போராட காரணம் இதுதான்
கார்ப்பரேட் விவசாய பொருட்கள் |
சன் டிவி குழுமம் மீது திமுக ஆதரவாளர்கள் கடுமையான விமர்சனம் ! ... உங்க பூஜாரிதனமும் வேண்டாம் ..பொங்கச்சோறும் வேண்டாம் .
பாகிஸ்தானில் கோவிலை தீ வைத்து எரித்து, இடித்து அழித்த ஜமாத் உலேமா இ இஸ்லாம் எஃப் கும்பல்
இதற்கிடையில், அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் கரக் மாவட்டம் தெறி என்ற கிராமத்தில் இந்து மத கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் வாரம் தோறும் அப்பகுதியில் வசித்துவரும் இந்துக்கள் வழிபாடு செய்வது வழக்கம்.
பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துப்புரவு தொழிலாளி!
காவல் நிலையத்திலேயே திருட்டு: பெண் போலீஸ் கைது!
காணும் பொங்கலுக்கு கடற்கரைகளில் மக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை .. வழிபாட்டு தலங்களில் நேரக்கட்டுபாடு தளர்வு
திராவிட கருத்தியல் பேசும் பக்கங்களை முடக்கும் ஃபேஸ்புக்” - தி.மு.க தலைவருக்கு ‘We Dravidians’ கடிதம்!
‘வீ திராவிடியன்ஸ்’ குழுமத்தின் கதிர் ஆர்.எஸ் எழுதியுள்ள இக்கடிதத்தில், "நாங்கள் வீ திராவிடியன்ஸ் என்ற ஆங்கில முகநூல் ஏட்டை கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இவ்வேட்டின் தமிழ் தெலுகு கன்னடம் மலையாளம் இந்தி ஆகிய பதிப்புகள் தங்களை நேரில் சந்தித்து தங்கள் வாழ்த்துகளைப் பெற்று கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வேடு மேலும் வளர்ந்து தற்போது மராட்டி பெங்காலியையும் சேர்த்து மொத்தம் 8 மொழிகளில் செயல் படுகிறது. திராவிட கருத்தியலைப் பரப்பும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டு எந்த லாப நோக்கமுமின்றி இயக்கப் பற்றுள்ள பல மாநில இளைஞர்களின் உதவியுடன் இந்தியாவில் திராவிட கருத்தியலுக்காக தேசிய அளவில் செயல்படும் ஒரே ஏடாக திகழ்கிறது வீ திராவிடியன்ஸ் ஏடு.
நூலக உரிமை மறுக்கப்பட்ட மனிதர்கள் . தமிழக அகதி முகாம்களில் வாழும் இலங்கை ..
மழைக்காக ஹோமம்,வேள்வி, யாகம், அபிஷேகம், ஜபம், திருமஞ்சனம்.. ... அப்பட்டமான பொய்கள்!
புதன், 30 டிசம்பர், 2020
நேர்மை எனும் பொய் ! தமிழருவி மணியனின் பயந்தாங்கொள்ளித்தனம் என்பது ஒழுக்கமோ நேர்மையோ அல்ல
Abilash Chandran : · நேர்மை எனும் பொய் தமிழருவி மணியன் தான் ஒரு நேர்மையாளர், ஒழுக்கசீலர் அதனால் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்கிறார். இது உண்மையெனில் ரஜினியை அரசியலுக்கு இழுத்து வரும் டீலிங்கில் அவருக்குப் பின்னிருந்த இயக்கியவர்கள் யார் என வெளிப்படையாக சொல்லட்டும். காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரும் பாஜகவின் அர்ஜுனமூர்த்தியும் எப்படி ஒரே கட்சியில் இருவேறு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட முடியும் என விளக்கட்டும். அவர் செய்ய மாட்டார்.
ஏனென்றால் ரகசியங்களைப் பாதுகாப்பதே அவரைப் போன்ற அரசியல்வாதிகளின் பிரதான லட்சியம். ரகசியத்திற்கும் நேர்மைக்கும் தூரத்து உறவு கூட இல்லை. காந்தி ஒரு உதாரணம். அவர் எதையும் மறைத்ததில்லை, தனது பாலியல் விழைவுகளைக் கூட பிரசுரித்தார். மணியன் போன்றவர்களோ திரைமறைவு வேலைகளை செய்து அதிகாரத்தைப் பிடிப்பது, அது குறித்த உண்மைகளை வெளியே சொல்லாமல் காப்பது என இருக்கிறார். காந்தி இருந்திருந்தால் ஒரு பிய்ந்த நெருப்பை எடுத்து இவரை சாத்தியிருப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.....
அதானி, அம்பானிக்கு சொந்தமான 1,500 ... செல்போன் கோபுரங்களை அடித்து நொறுக்கிய விவசாயிகள்!!
dinakaran : சண்டிகர் : டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பஞ்சாபில்
நடைபெற்ற போராட்டத்தின் போது, அம்மாநிலத்தில் உள்ள 1500க்கும் மேற்பட்ட
செல்போன் டவர்கள் சேதப்படுத்தப்பட்டன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3
வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி, பஞ்சாப், அரியானா உட்பட
பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 40 விவசா ய சங்கங்களை சேர்ந்தவர்கள் டெல்லி
எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.நேற்று இந்த போராட்டம்
ஒரு மாதத்தை கடந்தது.
இதனிடையே டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக
பஞ்சாப்பில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், அதானி, அம்பானி
போன்றவர்களின் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான செல்போன்
கோபுரங்களை அடித்து நொறுக்கி வருகின்றனர். வேளாண் சட்டங்களால்
பெருநிறுவனங்களுக்கே லாபம் என குற்றம் சாட்டி வரும் விவசாயிகள், தங்கள்
கோபத்தை அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகளின் மீது காட்டுவதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் பிரச்சாரத்திற்கு அழைத்துவரப்பட்ட பழனியம்மாள் 65 வயது மூதாட்டி மரணம்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த இரு தினங்களாகத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
நடிகை சித்ரா விவகாரம்! ஹேம்நாத் ரவியின் அப்பா காவல் ஆணையரிடம் கொடுத்த பரபரப்பு புகார்!
2.45 மணிக்கு நடந்த இந்த மரணத்தைப் பற்றி விசாரிக்க 45 நிமிடம் கழித்துத்தான் போலீசார் வந்திருக்கிறார்கள். சித்ரா எத்தனை மணிக்கு அந்த ஹோட்டலுக்கு வந்தார் என்பதற்கு எந்தப் பதிவும் இல்லை. சித்ராவின் அறையிலிருந்து ஹேம்நாத் எத்தனை மணிக்கு வெளியே சென்றார் என்பதற்கான பதிவு எதுவும் இல்லை. சித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடப்பதை ஹேம்நாத்தும் அந்த ஹோட்டல் மேனேஜரான கணேஷ் என்பவரும்தான் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் சித்ராவை தூக்கில் இருந்து கழட்டி இறக்கியிருக்கிறார்கள். இதுவே சட்டவிரோதம் என்கிறார்கள் காவல்துறையைச் சார்ந்தவர்கள்.
இலங்கையின் 117 வயது மூதாட்டி காலமானார் - "மூத்த தாய்" என அரசால் சான்றளிக்கப்பட்டவர்
திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்களை பாதிக்கும் ஸ்மார்ட் கார்டு திட்டம் ரத்தாகும் : துரைமுருகன் பேச்சு
dhinakaran :பொன்னை:வேலூர் அடுத்த காட்பாடி தொகுதி முத்தரசிகுப்பம் கிராமத்தில் நேற்று, அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற திமுக மக்கள் சபை கூட்டம் பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்எல்ஏ தலைமையில் நடந்தது. இதில், ஒன்றிய செயலாளர் கருணாகரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். பின்னர், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: ரஜினி தனது உடல்நிலை மற்றும் மனநிலையை கருத்தில் கொண்டுதான் அரசியல் கட்சி துவங்கும் முடிவை கைவிட்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன். தமிழக அரசு பொங்கலுக்கு ₹2,500 வழங்கும் திட்டத்தை திமுக தடுக்கவில்லை. மக்கள் பணியாற்றக்கூடிய அரசு ஊழியர்கள் மூலமாகத்தான் வழங்க வேண்டும், பொங்கல் தொகையாக ₹5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றுதான் திமுக வலியுறுத்தி வருகிறது.
அரசியலில் ஈடுபட மாட்டேன்"- தமிழருவி மணியன் அறிவிப்பு!
nakkheeran.in - பா. சந்தோஷ் : காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இறப்பு என்னை தழுவும் வரை இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன். மாணிக்கத்திற்கும் கூழாங் கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை. என் நேர்மை, தூய்மை, ஒழுக்கம் போற்றப்படாத அரசியல் களத்தில் விலகி நிற்பதே விவேகமானது. தி.மு.க.வில் இருந்து விலகும் போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார்; நான் போகிறேன்; வர மாட்டேன். 2 திராவிடக் கட்சிகளால் தமிழகத்தின் பொது வாழ்க்கைப் பண்புகள் பாழடைந்துவிட்டன. மக்கள் நலன் சார்ந்த மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலர வேண்டும் என கனவு கண்டேன். காமராஜர் ஆட்சியை தமிழகம் தரிசிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க தொடர்ந்து முயன்றதுதான் குற்றம்." இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.,,, நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட போவதில்லை என்று நேற்று அறிவித்த நிலையில், தமிழருவி மணியனும் அரசியலில் ஈடுபட போவதில்லை என அறிவித்துள்ளார்..... முன்னதாக அரசியல் கட்சித் தொடங்குவேன் என அறிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த், தமிழருவி மணியனை மேற்பார்வையாளராக நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனக்கு இரண்டு கண்கள்; ஒன்று மோடி, மற்றொன்று ரஜினி: அர்ஜுன மூர்த்தி பேட்டி
இந்நிலையில் அர்ஜுன மூர்த்தி இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் கூறும்போது, ''எனக்கு இரண்டு கண்கள். ஒன்று மோடிஜி மற்றொன்று ரஜினி. ஏனெனில் இவர்கள் இருவருமே இந்திய மக்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் எதாவது சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள். தற்போது மருத்துவர்களின் ஆலோசனைகளைக் கேட்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில், ரஜினி இந்த முடிவை எடுத்துள்ளார். இதை எதிர்த்தோ, மறு கருத்துக் கூறியோ, விமர்சனமோ செய்யக்கூடாது என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்
பறையிசையோ ஒப்பாரியோ எம் மக்களிசையல்ல,அது ஆதிக்க அடக்குமுறையின் குறியீடு ?
Kalidoss Tamilmani : · இப்பவும் சொல்கிறேன், பறையிசையோ ஒப்பாரியோ எம் மக்களிசையல்ல,அது ஆதிக்கம் எம்மீது சுமத்திய அடக்குமுறையின் குறியீடு.அதை ஏதோ எம்மக்களின் பெருமித வாழ்க்கைபோலக் காட்டி நிறுவமுயல்வதென்பது மலம் அள்ளுவோர் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று மோடி எழுதிய புத்தகத்துக்குச் சமமானது.பறையிசை என்பது போர்களில்,வேட்டையாடப்போகையில்,திருவிழாக்களில் பூசாரி முதற்கொண்டோருக்கு சாமி(!) வரவழைப்பதற்காய் என மனிதனுக்குள்ளிருக்கும் மிருகத்தனத்தை வெளிப்படுத்தி வெறியேற்றப் பயன்படுத்திய ஒரு வெறியிசை அவ்வளவுதான்,அதேபோல் ஆதிக்கக்கூட்டத்து வீட்டுச் சாவுகளில் அழுவதற்குக்கூட சேரிப்பெண்கள் தேவைப்பட்டார்கள் பிற்பாடு இவ்வகை ஒப்பாரிப்பெண்கள் ஜெயலலிதாவின் சிறைப்பயணங்களுக்கு பூவை கூட்டத்தால் வாடகைக்கு விடப்பட்டார்கள்.....
துரைமுருகனிடமிருந்து ஸ்டாலினை காக்க வேண்டும்!- வீடியோ!
திமுகவின் கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளராகவும், தலைமைக் கழகப் பேச்சாளராகவும் இருந்த குடியாத்தம் குமரன் வேலூர் எம்பி தேர்தலில் கதிர் ஆனந்த் வெற்றிபெற்ற சில நாட்களில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டார். கலைஞர் மறைந்த சில நாட்கள் கழித்து அவருக்கு வேலூரில் இரங்கல் கூட்டம் நடந்தபோது அதில் குடியாத்தம் குமரன் பேச முயன்றிருக்கிறார். ஆனால் அவர் பேசவேண்டாம் என்று துரைமுருகன் சொல்லிவிட்டார். ஆனபோதும் குமரன் அந்த நிகழ்வில் கலைஞர் பற்றிப் பேசியிருக்கிறார். தன்னை துரைமுருகன் பேச விடாமல் தடுத்த கோபத்தில் அன்று இரவு சக நிர்வாகியிடம் செல்போனில் பேசும்போது துரைமுருகனைப் பற்றி கடுமையாகப் பேசியிருக்கிறார் குமரன். அந்த நிர்வாகி அதை அப்படியே ஒலிப்பதிவு செய்து கதிர் ஆனந்துக்கு அனுப்பி வைத்துள்ளார். கதிர் ஆனந்த் இதை தன் அப்பா துரைமுருகனிடம் போட்டுக் காட்ட கோபமான துரைமுருகன் அதை அப்படியே பத்திரமாக வைக்கச் சொல்லியிருக்கிறார்.
அறந்தாங்கி சிறுமி பாலியல் குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை... 6 மாதத்தில் தீர்ப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமம் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஜெயப்பிரியாவை காணவில்லை என்று அவரது பெற்றோர் ஏம்பல் காவல் நிலையத்தில் ஜூன் 30ஆம் தேதி புகார் அளித்தனர். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைக் காணவில்லை என்று புகார் அளித்த நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
ராம்மோகனராவின் லேப்டாப்பில் கள்ளக் காதலியின் நிர்வாண படங்கள்
Balasubramania Adityan T : · *சேகர் ரெட்டி அலுவலக ஹாட் டிஸ்க் மற்றும் ரகசிய டைரியில் அடுத்ததாக சிக்கப்போகும் அதிமுக புள்ளிகள் ரெய்டுக்கென ஐஆர்எஸ் அதிகாரிகள் மற்றும் அதிரடிப்படையினர் தயார் நிலையில் உள்ளதாக தகவல்* ------------------- *வரை முறை மற்றும் பாரபட்சமே இல்லாமல், அதிமுக முக்கிய புள்ளிகள் மற்றும் அனைத்து மட்ட அதிகாரிகள் என மிகப் பெரிய அளவில் சூறையாடலில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதையே ராமமோகன் ராவ் வீடுகளில் சிக்கிய தங்கக் குவியலும் சேகர் ரெட்டியின் பணம் மற்றும் தங்கக் குவியல் முறைகேடாக சம்பாதிததை வெளிக்காட்டுகிறது.
சிபிஐ மற்றும் வருமான வரித்துறையினரிடம் சிக்கிய எடப்பாடி. பழனிச்சாமி, அன்புதான், செந்தில் பாலாஜி, நத்தம் விஸ்வநாதன் ஞானதேசிகன், சேகர் ரெட்டி, ராமமோகன ராவ், திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், லோதா அண்ணாநகர் சேட்டு, ரமேஷ், சேலம் இளங்கோவன், ஆகியோர்களை தொடர்ந்து வருமானவரித்துறை மற்றும் சிபிஐ -யின் வளையத்தில ரெட்டியின் நேரடி மற்றும் நெருங்கிய அரசியல் வட்டாரத்தில் உள்ள அடுத்ததாக சிக்கப் போகும் அரசியல் முக்கிய புள்ளிகளான விஜயபாஸ்கர் எஸ் ஆர் விஜயகுமார், உள்பட பல அதிமுக புள்ளிகள் மற்றும் 12 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பற்றிய தகவல்கள் இந்த ரகசிய டைரியில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன*
தமிழினவாதிகளே ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்க்காதீர்கள்.. சிறுதெய்வ வழிபாடு தமிழ்ப் பண்பாட்டு அசைவு – ஆய்வாளர்களே!
இந்திய சினிமாத்துறைக்குள் உடுருவும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள்
Thamizh Ezhil : அடிப்படைவாத இஸ்லாமிய சக்திகள் மிகத் திட்டமிட்ட முறையில், எவ்வித சந்தேகமும் வராத விதமாக இந்திய சினிமாத் துறைக்குள் ஊடுருவலை மேற்கொண்டுள்ளன. ஜமாதி இஸ்லாமி இந்தியாவின் முதல் பயங்கரவாத இயக்கம் இது
இஸ்லாத்திற்கும் குரானும் ஹதீஸும் போதாது என்ற நிலையை பின் வந்த முல்லாகள் உணர்ந்தார்கள் அதன் காரணமாக நுழைக்கப்பட்டது இஜ்திஹாத் -இஜ்திஹாதின் உருவாக்க படவில்லை என்றால் இன்றைய நவீன காலப் பிரச்சினைகள் பலவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வது சாத்தியமற்றதாகி இருக்கும்.
உச்சகட்ட வெறுப்பு.. நடுரோட்டில் பேனரை கிழித்து எரித்து.. தாறுமாறாக திட்டிய ரஜினி ரசிகர்!
சாய் லட்சுமிகாந்த் : பாஜகவிற்கு தற்போதுள்ள மிகப்பெரிய நெருக்கடி என்ன?? தேனியில் ஓட்டு மெஷினை மாற்றியதை போல் திமுகவுக்கு விழுந்த ஒரு குறிப்பிட்ட சதவிகித ஓட்டை எல்லாம் ரஜினி பெயர்ல எழுதினா சந்தேகம் வராதுனு நினைச்சு தான் ரஜினியை கூட்டி வர பிரம்மபிரயத்தனம் பன்னாங்க. ஆனா இப்ப ஓட்டு மெஷினை மாற்றி வைத்து தனக்கு தான் இவ்வளவு ஓட்டு விழுந்ததுனு சொன்னா ஒரு பய நம்ப மாட்டான். மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம... பாவம்யா... தோல்வியை ஒப்புக்கொள்வதை தவிர வேறு வழியில்லை. அதுவும் தேர்தல் முடிவின் போது அவர்கள் டெப்பாசிட் கூட வாங்க இயலாது போகும் போது ரொம்பவே கேவலப்பட்டு தான் போவார்கள்.
51 வயது மனைவியை மின்சாரம் பாயச்செய்து கொன்ற 28 வயது கணவன்
செவ்வாய், 29 டிசம்பர், 2020
மருத்துவர்களை அம்பட்டர்களாக அழைத்த பார்ப்பனீய மனு அநீதி! அம்பட்டர், நாவிதர், பரியாரி போன்ற .
103 கிலோ தங்கம் மாயமான விவகாரம்: கள்ள சாவி போட்டு எடுத்தது அம்பலம்
dailythanthi.com 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் சி.பி.ஐ. கட்டுப்பாட்டில் இருந்த பெட்டகத்தை கள்ள சாவி போட்டு எடுத்தது சி.பி.சி.ஐ.டி விசாரணையில் அம்பலமானது. சென்னை, சென்னையில் சி.பி.ஐ. போலீசார் பறிமுதல் செய்த 103 கிலோ தங்கம் மாயமான வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வீடியோ ஆதாரங்களை கைப்பற்றினார்கள். சென்னை பாரிமுனையில் செயல்படும் தனியார் தங்க ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் கடந்த 2012-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது, குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தில் 400.47 கிலோ தங்கத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மீன்பிடி பிரச்சினைக்கு நேருக்கு நேர் பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்திய இலங்கை மீனவர்கள் விருப்பம்.. மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
tamil.theleader.lk :குறுகிய கடல் மீன்பிடித்தல் தொடர்பான பல தசாப்தங்களாக ஏற்பட்ட சர்ச்சைக்கு அரசாங்கங்கள் நிரந்தர தீர்வைக்பெற்றுக் கொ டுக்காமையினால் இப்பிரச்சினையை திர்ப்பதற்காக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நேருக்கு நேர் கலந்துரையாடலுக்கு இரு நாட்டு மீனவர்களும் விருப்பம்தெரிவித்துள்ளனர். இதற்கான அறிவிப்பை இரு நாட்டு மீன்பிடி தலைவர்களும் வெளியிட்டுள்ளனர்
இந்தியாவின் தெற்கு முனை மற்றும் இலங்கையின் வடக்கு முனையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடிக்கும் பாக்கு நீரிணையைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் மீன் இருப்புக்கள் குறைந்துவிடும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், இலங்கை கடற்கரையில் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடித்தல் இரு நாடுகளுக்கும் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது.
பிஹாரில் முதல்வர் பதவியை பாஜகவிடம் ஒப்படைக்கத் தயாராகும் நிதிஷ்குமார் . JDU - BJP உறவுக்கு லவ் ஜிகாத் சட்டத்தால் சிக்கல்
hindutamil.in : பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக உறவிற்கு லவ் ஜிகாத் சட்டத்தால் சிக்கல் உருவாகி உள்ளது. இதனால், தம் முதல்வர் பதவியை பாஜகவிடம் ஒப்படைத்து விட்டு தேசிய அரசியலில் தீவிரம் காட்டத் தயாராகிறர் நிதிஷ்குமார். நாடு முழுவதிலும் நடைபெறும் காதல் திருமணங்களில் இந்து பெண்களை மணமுடிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் மீது ‘லவ் ஜிகாத்’ புகார் எழுந்துள்ளது. இதனால், பாஜக ஆளும் மாநிலங்களில் லவ் ஜிகாத்தை தடுக்க மதமாற்றத்திற்கு எதிரான சட்டம் அமலாகி வருகிறது. முதல் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் அமலானதை அடுத்து, மத்தியபிரதேசமும் இச்சட்டத்தை அமலாக்குவதில் இறங்கியுள்ளது. தொடர்ந்து இந்த சட்டம், பாஜக ஆதரவில் ஆளும் பிஹாரிலும் கொண்டுவர முயற்சிக்கப்படுகிறது.
சசிகலா ஜனவரி 27-ந்தேதி சிறையில் இருந்து விடுதலை!
அந்த கடிதத்தில் சசிகலா இருக்கும் பரப்பன அக்ரஹார சிறையில் 2017-ம் ஆண்டில் இருந்து இதுவரை முன் கூட்டியே விடுதலையானவர்களின் பெயர் பட்டியலை உதாரணம் காட்டியுள்ளார்.
மற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்தது போல் சசிகலாவையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதி இருந்தார்.
திமுக ஆட்சி வந்த உடன் மக்கள் கொடுத்த மனுக்களை தூசுதட்டி தீர்த்து வைப்போம்: முக ஸ்டாலின்
இரும்புக் கடையில் பாடப்புத்தகங்கள்: கல்வித் துறை ஊழியர் கைது!
miinambalam :தமிழக பள்ளிப் பாடப்புத்தகங்கள் பழைய இரும்பு கடையில் விற்பனை செய்த விவகாரத்தில் பள்ளிக்கல்வி ஊழியர் மற்றும் இரும்பு கடை உரிமையாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை அருகே முத்துவக்கீல் சாலையில் பெருமாள்சாமி என்பவருக்குச் சொந்தமாகப் பழைய இரும்பு கடை உள்ளது. இங்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச புத்தகங்கள் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது.
மூட்டை மூட்டையாகப் பள்ளி மாணவர்களின் புத்தகங்கள் இருப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து கோட்டாட்சியர் மகாராணி தலைமையிலான குழு இரும்புக் கடைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டது. இதில் அங்கு 2019 - 2020 ஆம் கல்வி ஆண்டிற்குரிய, 6-12 ஆம் வகுப்பு வரையிலான 5 ஆயிரம் புத்தகங்கள் இருந்தது தெரியவந்தது.
ரஜினியின் வீடு முன்பு ரசிகர்கள் தர்ணா!
minnambalam :ரஜினியின் போயஸ் கார்டன் இல்லம் முன்பு அவர் அரசியலுக்கு வரக்கோரி ரசிகர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 30
ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினிகாந்தை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு வர
வேண்டுமென அழைத்துக் கொண்டு இருந்தனர். ஆனால், அப்போதெல்லாம் அரசியலுக்கு
வரும் நிலைப்பாட்டை எடுக்காத ரஜினிகாந்த் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம்
தேதி கட்சி ஆரம்பிக்கிறேன் என அறிவித்தார். ஆனால், கடந்த மூன்று வருடங்களாக
அதுதொடர்பான பணிகள் நடைபெறவில்லை.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ததால் கொரோனா பாதிப்பு கருதி அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால், மக்களுக்காக உயிரே போனாலும் பரவாயில்லை என அரசியல் கட்சி ஆரம்பிப்பதாகத் தெரிவித்தார் ரஜினி. சமீபத்தில் சீரற்ற ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை கொரோனா தாக்கும் எந்த செயலிலும் ஈடுபடக் கூடாதென மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்த ரஜினிகாந்த், மக்கள் மன்றம் செயல்படும் எனவும் கூறினார்.
பிரசாத் ஸ்டூடியோவை காலி செய்தார் இளையராஜா - 2 லாரிகளில் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன
>சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனி அரங்கத்தில் தனது இசைப்பணிகளை மேற்கொண்டு வந்தார்.இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது ஸ்டூடியோ அரங்கை பூட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறினார். இதன் பிறகு இளையராஜாவை எந்த பிரச்சினையும் இன்றி அங்கு எப்போதும் போல செயல்பட
அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரசாத் ஸ்டூடியோ முன்பு போராட்டங்களும் நடைபெற்றன. அதற்கு பிரசாத் ஸ்டூடியோ அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து இளையராஜா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. தனக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி இளையராஜா இந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.,,,,,
நடிகர் ரஜினிகாந்த் : கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை ! அதிரடி அறிவிப்பு வாழ்க தமிழ் மக்கள்! வளர்க தமிழ்நாடு!! ஜெய்ஹிந்த்!!!"
nakkheeran.in - பா. சந்தோஷ் ": இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் மூன்று பக்கங்களைக் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது; "என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம், ஜனவரியில் கட்சித் தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றேன்.
கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக்குழுவினருக்கு தினமும் கரோனா பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி, முகக்கவசம் அணிவித்து, மிகவும் ஜாக்கிரதையாக படப்பிடிப்பை நடத்தி வந்தோம். இவ்வளவு கட்டுப்பாட்டோடு இருந்தும் 4 பேருக்கு கரோனா இருக்கிறது என்று தெரிய வந்தது. உடனே இயக்குனர் படப்பிடிப்பை நிறுத்தி எனக்கு உட்பட அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்வித்தார். எனக்கு கரோனா நெகட்டிவ் வந்தது. ஆனால் எனக்கு இரத்தக் கொதிப்பில் அதிக ஏற்றத் தாழ்வு இருந்தது. மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக் கொண்டும் எனக்கு இரத்தக் கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது.
கர்நாடகா துணை சபாநாயகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
webdunia :கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் தர்மே கவுடா என்பவர் சற்றுமுன் ரயில் முன் பாய்ந்து மரணம் அடைந்ததாகவும், அவரது சடலமாக மீட்கப்பட்டதாகவும் வெளிவந்துள்ள தகவலால் கர்நாடகாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிக்மகளூரு அருகே ரயில் பாதையில் கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் அவர்களின் தர்மே கவுடா சடலம் கிடந்ததாகவும், சடலத்துடன் கடிதம் ஒன்றையும் மீட்டு போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது .மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர் தர்மே கவுடா அவர்கள் கடந்த 15ஆம் தேதி சபாநாயகர் இருக்கையில் தர்மே கவுடா அமர்ந்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது என்பதும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சபாநாயகர் இருக்கையில் அமர மறுத்துவிட்டதால் தர்மே கவுடா அமர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது..... ஆனால் தர்மே கவுடாவை வலுக்கட்டாயமாக காங்கிரஸ் உறுப்பினர்கள் அப்புறப்படுத்தினர் என்றும், இதனால் அன்றைய தினம் கர்நாடக சட்டமேலவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
2,000 ஆண்டுகளுக்கு முந்தைய துரித உணவுக் கடை கண்டுபிடிப்பு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி : கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்க மாட்டார்கள்
50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் : அரசு என்ஜினியர் மனைவி கைது
கொற்கைத் துறைமுகம், தமிழனின் அடையாளம்:- ..முனைவர் .தவசிமுத்து
கமல் : சட்ட மன்ற தேர்தலில் மாற்று திறனாளி ஒருவரை வேட்பாளராக நிறுத்துவோம்
ஆர் .வெங்கடராமனும் காஞ்சி சங்கரரும் எம்ஜியாரை மிரட்டி உருவாக்கிய அதிமுக
ஒரு சங்கர மடத்து டைரி குறிப்பு : உலகம் சுற்றும் வாலிபன் . எம்ஜியாரின் சொந்தபடம். பெரும் பொருட் செலவு. முழுக்க முழுக்க வெளிநாட்டில் படப்பதிவு. பணம் தண்ணீர் மாதிரி செலவழிக்கிறார் எம்ஜியார். ஒரு சின்ன சாம்பிள் அதில், ஜப்பானில் நடைபெறும் ஒரு கண்காட்சியை அடிப்படையாக கொண்டே கதை நரும்.
அதனால் அதனை ஒட்டியே பல காட்சிகள் எடுக்க வேண்டிய சூழல். ஆகையால் படக்குழு முதலிலே சென்றுவிடுகிறது. பின்னர் எம்ஜியார் அங்கிருந்து இங்கே உள்ள எம்எஸ்வியிடம் பாடல்கள் கேட்கிறார்கள். ஐந்து டியூன்கள் இங்கிருந்து ஒளிப்பதிவு செய்யப்பட்டு ஜப்பான் செல்லும். அதனை கேட்டு எம்ஜியார் கரெக்ஷன் செய்வார். ஒன்றை தேர்வு செய்வார். அது மீண்டும் ஒளிப்பதிவு செய்யப்பட்டு ஜப்பான் செல்லும். இப்படியே படத்தின் எல்லா பாடல்களும் சென்றன. இதில் சென்றன என்பதில், அப்போது ஈமெயிலோ, வாட்சப்போ கிடையாது. எல்லாமே விமான மார்க்கமாக பயணமாகும். யாரோ ஒருவர் எடுத்து செல்வார்கள். இதனை எம்எஸ்வி அவர்களே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்கள். படத்திற்கு காரைக்குடி செல்வந்தர் ஒருவர், மும்மைசேட் ஒருவர், பல விநியோகஸ்தர்கள் செலவை முன்பணமாக தந்தார்கள்.
மத்திய- மாநில அரசுகள் உறவில் சீர்கேட்டால் சோவியத் யூனியன் போல இந்திய மாநிலங்கள் சிதறலாம்; சிவசேனா சொல்கிறது
சிவசேனா தலைவர்: சோவியத் யூனியன் போல சிதறும் இந்திய மாநிலங்கள்
இதை கொஞ்சமாவது தடுக்கவேண்டும் என்று எண்ணுவோர்கள் இந்தியாவை ஒரு ஐரோப்பிய யூனியன் போல மாற்றுவதற்கு முயற்சியை ஆரம்பிக்க வேண்டும் .
இன்னும் சரியாக சொல்லப்போனால் , அந்த பாதையில் ஹிந்தி மொழி பேசாத மாநிலங்கள் ஏற்கனவே செல்ல தொடங்கி விட்டன என்றுதான் கருதுகிறேன்.
வெறுமனே அரசியல் சட்ட மாறுதல்கள் மட்டுமே ஒரு நாட்டின் அமைப்பு ரீதியான மாற்றமாக இருக்காது .மக்களை மதிக்காத அரசுகள் மக்களின் கருத்துக்களின் மாற்றங்கள் பற்றிய புரிந்துணர்வோ அதன் வலிமையோ புரிவதில்லை.
அது எவ்வளவு பெரிய நெருப்பு என்பதை வரலாறு சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது.
இந்திய ஒன்றியத்தின் ஒவ்வொரு தேசிய இனமும் இன்று தாம் காணாமல் ஆக்கப்பட்டு கொண்டிருக்கிறோமோ என்ற கருத்தில் உள்ளார்கள் .
வடஇந்திய போலி டாக்டர்களுக்கு தகுதி சான்றிதழ் கொடுக்க போகும் மத்திய அரசு
திங்கள், 28 டிசம்பர், 2020
சபாஷ் திருநங்கைகள்.. சென்னையை அசர வைத்து.. இரண்டு சிறுமிகளையும் மீட்டு.. புல்லரித்துப்போன போலீசார்
Velmurugan P - tamil.oneindia.com : சென்னை: இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாக பழகிய 19 வயது இளைஞனின் ஆசை வார்த்தையை நம்பி 13 வயது சிறுமி, 8வயது சிறுமியை துணைக்கு அழைத்துக்கொண்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்துள்ளார்.
இதை திருநங்கைகள் கண்டறிந்து சரியான நேரத்தில் போலீசாரிடம் தெரிவித்தால் குழந்தைகளை பத்திரமாக போலீசார் மீட்டனர், அத்துடன் கடத்தலில் ஈடுபட்ட வேளச்சேரியைச் சேர்ந்த 19 வயது இளைஞரை கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த 13 வயது சிறுமி, இன்ஸ்டாகிராமில் வேளச்சேரியைச் சேர்ந்த சூர்ய பிரகாஷ் என்ற 19 வயது இளைஞருடன் நட்பாக பழகி உள்ளார். வீட்டில் பெற்றோர் திட்டியதால், இளைஞரிடம் சிறுமி சொல்லியிருக்கிறார். இதை பயன்படுத்தி சூர்ய பிரகாஷ், எழும்பூர் ரயில் நிலையம் வந்துவிடுமாறு சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் போய்விடலாம் என்று அழைத்துள்ளார். இளைஞரின் ஆசை வார்த்தைகளை நம்பி அவருடன் ஊரைவிட்டு வெளியேறவும் சிறுமி முடிவு செய்திருக்கிறார். தனியாக செல்ல பயம் இருந்ததால் தன்னுடன் உறவுப்பெண்னான 8 வயது சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.
பங்களாதேஷ் இந்தோனிஷியா போன்ற முஸ்லீம் நாடுகளில் தாய்மொழியில்தான் பெயர்கள் ... பகுத்தறிவு பரிதாபங்கள். Part 2
இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ செல்லாதது.. மன உளைச்சலில் இருப்பதால் இன்று அவர் வரவில்லை
ரஜினி கட்சியை தொடங்குவதற்கான தேதியை மட்டும் அறிவித்தால் போதும் .. நேரில் வர வேண்டாம் என்று தமிழருவி மணியன் வேண்டுகோள்
இதனைத்தொடர்ந்து ரஜினியின் உடல்நிலை சீரானது. இருப்பினும் ஒரு வாரம் ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என ரஜினிகாந்தை டாக்டர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
புதிய வேளாண் மசோதா ... திருச்சி சிவா பேச்சு CA dmk protest - farmers act and farmers protest dmk trichy siva super speech
இந்த புதிய வேளாண் மசோதாவுக்கு எதிராக திருச்சி சிவாவும் ஏனையோரும் தொடுக்க இருக்கும் வழக்கில் பஞ்சாப் விவசாயிகளும் இணைத்து கொள்வதாக அறிவித்துள்ளார்கள் . மேலும் இது பற்றி அவர் கூறுகிறார் கேளுங்கள் :
அந்த அப்பாவி இளைஞர்கள் சில பல சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி வரும்.. ? light reading
Sivasankaran Saravanan : திமுகவிற்கு ஆதரவாக நிறைய புதிய நபர்கள் எழுத ஆரம்பித்துள்ளதை பார்க்கமுடிகிறது. ஒரு பக்கம் அது மகிழ்ச்சியாக இருந்தாலும், இந்த ரத்தபூமியில் காலடி எடுத்து வைத்திருக்கும் அந்த அப்பாவி இளைஞர்கள் சில பல சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
சங்கடம் 1: உங்களை உங்கள் வட்ட செயலாளருக்கு கூட தெரியாது. ஆனாலும் உங்களை திமுக சொம்பு , கருணாநிதி குடும்பத்து அடிமை என்றெல்லாம் சொல்வார்கள். அட இது கூட பரவாயில்லை “ஆமாய்யா நாங்க கலைஞர் சொம்பு தான்”னு சொல்லிட்டு போயிடலாம். உங்களை ஏதோ திமுகவின் பொதுச்செயலாளர் ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டு உங்க கட்சி இதுக்கு என்ன பண்ணுது ? ஸ்டாலின் இதுக்கு என்ன சொல்றாரு ? என்றெல்லாம் கேள்வி வரும்.
ஸ்டாலின் : பாலியல் குற்றங்களுக்கு ஒரு நாள்கூட தாமதம் இல்லாமல் தீர்ப்பு .. மாவட்டங்கள் தோறும் நீதிமன்றங்கள்
மின்னம்பலம் : பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களை விசாரிக்க மாவட்டம் தோறும் தனி நீதிமன்றம் உருவாக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயதே ஆன சிறுமியை அவரது உறவினர்கள் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பெண்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தி இந்து ஆங்கில நாளிதழின் நான்காவது பக்கத்தில், “And, they all fall down” என்ற முழுப்பக்கக் கட்டுரை வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “சிறுமி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக் குற்றத்தில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் - அவர்களில் ஒருவர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர். இன்னொருவர் காவல்துறை ஆய்வாளர் என்ற தகவல் ரத்தத்தை உறைய வைக்கிறது” என்று அதிர்ச்சியுடன் கூறியுள்ளார்.
ஐபேக் நிபுணர்களின் திறமைகளைப் பயன்படுத்துவது ஒன்றும் தப்பில்லையே! கனிமொழி எம்.பி
பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்... உலக சுற்றுச்சூழலியல் துறை ஆய்வாளர்கள்
Kamala Sivanraj - ஆறாம் அறிவு : கரையான் எறும்பு தேன் ஈ இது இல்லை என்றால் மனிதன் வாழவே முடியாது.. கரையான் புற்றில் பாம்பு கடவுள் வாழ்கிறான் என்று கயவரகளின் ஏமாற்று
இதே உண்மையின் ஆராய்ச்சி கட்டுரை.. பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள் கிராமப்புறங்களில், கரையான்கள் உயரமாகக் கட்டியிருக்கும் கரையான் புற்றுகளைக் காணலாம். அந்தக் கரையான் புற்றுகளைக் கொண்டு பருவ மாற்றம்,சுற்றுச்சூழல் மாற்றத்தை கணிக்கலாம் என்ற புதிய தகவலைக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். கார்னகி நிறுவனத்தின் உலக சுற்றுச்சூழலியல் துறை ஆய்வாளர்கள், இது தொடர்பான ஆய்வை ஆப்பிர்க்காவின் சவான்னா புல்வெளிகளில் மேற்கொண்டனர். அவர்கள் இதற்கென்று வானில் இருந்து படமெடுப்பது, வரைபடங்களை அலசுவது போன்ற நவீன உத்திகளைப் பயன்படுத்தினர். அவற்றின் மூலம், 192 சதுர மைல் பரப்பளவில் அமைந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரையான் புற்றுகள் ஆய்வு செய்யப்பட்டன. கரையான் புற்றுகளின் அளவு, அவை ஒரு பகுதியில் அதிகமாக அல்லது குறைவக அமைந்திருக்கும் விதம் ஆகியவற்றுக்கும், வருடாந்திர மழையளவுடன் இணைந்த தாவரவியல், நில அமைப்பு ஆகியவற்றுக்கும் தொடர்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
முகநூல் இந்திய சந்தை .. 310 மில்லியன் பேஸ்புக் Ac அராஜக ஹிந்து வெறி காவி கும்பலை facebook க்கால் எதிர்க்க முடியாது.
Narain Rajagopalan : · ஜுன் 2020. புது தில்லிக்கு வெளியே இருந்த ஒரு பெந்தகொஸ்தே தேவாலயத்திற்கு ஒரு ஹிந்து தீவிரவாத கும்பல் வருகிறது. அந்த கும்பல், இந்த தேவாலாயம் ஒரு புதைந்து போன ஹிந்து கோவிலுக்கு மேலே கட்டப்பட்டது என்று சொல்லிக் கொண்டே, வலுக்கட்டாயமாக ஒரு ஹிந்து தெய்வ சிலையை தேவாலயத்தில் நிறுவுகிறது.
அந்த தேவாலாயத்தின் பாதிரியாரை முகத்தில் குத்துகிறது. தேவாலாய நிர்வாகிகளும், அமைப்பும் காவல்துறையிடம் புகார் கொடுத்தால், அதை வாங்க மறுக்கிறார்கள். அந்த ஹிந்து தீவிரவாத கும்பல் - பஜ்ரங் தள். பஜ்ரங் தள் இந்த வன்முறையை செய்ததோடு மட்டுமல்லாமல், இதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் போட்டு இருக்கிறார்கள். அதை 2.5 இலட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள், கொண்டாடி இருக்கிறார்கள். ஆனால், பேஸ்புக்கின் நெறியாளுகை இதை கண்டு கொள்ளாமல் விட்டு இருக்கிறது. இத்தனைக்கும் பேஸ்புக்கின் சமூக பாதுகாப்பு டீம், பஜ்ரங் தள் உள்ளிட்ட ஹிந்து திவிரவாத கும்பல்களை “ஆபத்தான மததீவிரவாதிகள்” என்று உள்ளேயே குறிப்பெடுத்து சொல்லி இருக்கிறார்கள்.
ஞாயிறு, 27 டிசம்பர், 2020
சிங்கப்பூரில் செயற்கை இறைச்சியை உருவாக்கும் முயற்சி வெற்றி! .Singapore approves sale of lab-grown chicken meat
உண்மையான திராவிடர் ஆட்சி - தி.மு.க. தலைமையில் அமைய உழைப்போம்.. கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்.
இஸ்லாமியராக மாற வேண்டும் என்றால் ஸுன்னியாகவா? ஷியாவாகவா? அஹ்மதியாகவா? தப்லீக்காகவா? அல்லது ஸூஃபியாகவா? பகுத்தறிவு பரிதாபங்கள்.. Part 1
Saadiq Samad Saadiq Samad : · பகுத்தறிவு பரிதாபங்கள்.. அண்மையில் வெளியான "பாவக்கதைகள்" என்ற திரைப்படத்தில் வரும் 'தங்கம்' என்ற திரைக்கதை தொடர்பாக திரு மதிமாறன் அவர்கள் ஒரு காணொளி வெளிடிட்டிருந்தார் அதில் எங்களுக்கு எழுந்த கேள்விகளும் சமூகத்திற்கான சில புரிதல்களும் . ஒருவர் திருநங்கையாக உருமாறுகிற பொழுது ஊர் அவர்களை எப்படி புறக்கணிக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இதற்கு இந்து முஸ்லிம் என்ற பின்னணி அவசியமில்லாதது. இஸ்லாமிய பின்னணி அல்லது இந்து பின்னணி என்று மட்டும் காட்டியிருக்கலாம். " யார் யார் எப்படி படம் எடுக்க வேண்டும், எப்படி சிந்திக்க வேண்டும் என்பதை தோழர் மதிமாறன் பாடம் எடுக்க வேண்டியதில்லை. அது ஒரு இயக்குனரின் சிந்தனை சுதந்திரம். இஸ்லாத்தில் திருநங்களின் நிலை என்னவென்பதை அறிந்திருந்தால் மதிமாறன் அவர்களுக்கு இப்படியொரு கருத்து தோன்றியிருக்காது.