செவ்வாய், 29 டிசம்பர், 2020

மருத்துவர்களை அம்பட்டர்களாக அழைத்த பார்ப்பனீய மனு அநீதி! அம்பட்டர், நாவிதர், பரியாரி போன்ற .

Barber workers with no income as salon shops and beauty salons are not open  || சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறக்கப்படாததால் வருவாய் இன்றி தவிக்கும்  முடிதிருத்தும் ...
Sundar P · யார் அம்பட்டர்? அம்பட்டர், நாவிதர், பரியாரி போன்ற சொற்களால் அழைக்கப்படும் ஒரு சாதியினர் அவ்வவ்வட்டாரத்தில் மருத்துவர்களாகவும் மருத்துவச்சிகளாகவும் இருந்தனர், இருக்கின்றனர். இந்த மருத்துவரையும் மருத்துவச்சியையும் சூத்திரராக்கிய பெருமை வர்ணாசிரம தர்மத்திற்கே உண்டு, வர்ண தர்மத்தின் படி மருத்துவ தொழில் என்பது தீட்டு, அதாவது தீண்டத்தகாத தொழில். ஐரோப்பியர்கள் இந்தியாவிற்குள் வந்த பின் ஏற்பட்ட கல்வி கொள்கையின் அடிப்படையில் பிறாமணர்கள் இந்த தீண்டத்தகாத தொழிலான மருத்துவத்தை கைப்பற்றிக்கொண்டனர்.
அம்பட்டர் என்ற சொல் அம்பஷ்ட என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து வந்தது என்று சொல்லுகின்றனர்,
ஆனால் அம்பஷ்ட என்றால் பிறாமண ஆணுக்கும் வைஷ்ய பெண்ணிற்கும் பிறந்த பிள்ளை என்று பொருள்,
பனிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களில் அம்பட்டர் என்பது ஒரு பொருளாழமிக்க தமிழ் சொல் என்று குறிக்கப்பட்டுள்ளது.
”அம்பட்டர் -> (அம் = அழகிய, பட்டர் = தொழிலாளி => அழகுக் கலைத் தொழிலாளி அல்லது பிறரை அழகுபடுத்தும் தொழிலாளி)” என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றும் வைணவ கோயில்களில் உள்ள குருக்கள்களை பட்டர் என்றே அழைப்பர் அதாவது அவர் கோயில் ஊழியக்காரர் என்று பொருள்,
கர்நாடக மாநிலத்தில் கோயில் குருக்கள்களை பட்டர் என்றே அழைக்கின்றனர்…
பட்டறை என்ற சொல்லும் பட்டர்களின் அறை என்ற பொருளாக உள்ளது.
பொருளாழமிக்க அழகிய தமிழ்ச் சொல்லை கொச்சைப்படுத்தி தமிழர்களே வெறுக்கும் அளவிற்கு செய்துள்ளது இந்த சமசுகிருதம் எனும் பிணம்,
அதேபோல் ”வண்ணார் - வண்ணத் துணிகளை பிறர் உடுத்தி வாழ வகை செய்யும் தொழிலாளி; துணியின் வண்ணங்கள் சிதையாமல் பாதுகாக்கும் ஆர்வமுடைய அக்கறையுடைய தொழிலாளி” என்ற குறிப்பையும் தருகிறார் ஞாலகுரு சித்தர்.
மேலும் ஞாலகுரு “மனித சமுதாயத்தின் இயக்கத்திற்கு இரு கால்கள் போன்று இருக்கும் இவர்களைத் ( வண்ணார்களும் அம்பட்டர்களும் ) தாழ்த்தி ஆழ்த்தி வீழ்த்தி அதன்மூலம்தான் பிறமண்ணினரான பிறாமணர் எனும் வடஆரியர்கள் தங்களுடைய வேதமதமான பொய்யான ஹிந்துமதத்தின் சாத்திறச் சம்பிறதாயச் சடங்குகளின் மூலமாகத் தமிழர்களை ஒற்றுமையற்றவர்களாக, தன்மான உணர்வற்றவர்களாக, இனப்பற்று அற்றவர்களாக, மொழிப்பற்று அற்றவர்களாக, வரலாற்றுப் பெருமித உணர்வு அற்றவர்களாக, விடுதலையுணர்வு அற்றவர்களாக, நாட்டுரிமையுணர்வு அற்றவர்களாக, பண்பாட்டுப்பாரம்பரிய பிடிப்பற்றவர்களாக, நாகரீகக் கூறுபாடுகளைக் காக்கும் நாட்டமற்றவர்களாக, இலக்கிய அறிவற்ற கருத்துக் குருடர்களாக,மத உணர்வற்ற விலங்குகளாக, ஆன்மீகப் பயிற்சி அற்ற அனாதைகளாக, … மாற்றி விட்டார்கள்.
எனவே, அம்பட்டரையும், வண்ணாரையும் ஆயுதங்களாகப் பயன்படுத்தித்தான் தமிழின விடுதலைப் போரை நிகழ்த்த வேண்டும்! …” என்ற பத்தாவது, பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் குருபாரம்பரிய வாசகங்களை” ஞாலகுரு குறிக்கின்றார்.
இந்தியாவின் பல மாநிலங்களில் இன்றும் கிராமப்புரத்தில் அம்பட்டர்கள்தான் அவர் வாழும் கிராமத்தில் திருமண அழைப்பிதழை வழங்குகின்றனர்; அது திருமண வீட்டார் நேரில் சென்று அழைப்பதற்கு ஒப்பாகும்.
இவர்களும் வண்ணார்களும் அந்தந்த கிராம மக்களின் முக்கியமான ஒரு அங்கத்தினராக இருந்தனர்.
கொங்கு வேளாளர்கள் திருமணத்திற்கு சடங்கு செய்ய பிறாமணர்களை அழைப்பதில்லை
அதற்கு பதிலாக அருமைகாரர் தலைமை தாங்குவர். பெரும்பாலும் அம்பட்டர்களே அருமைக்காரராக இருப்பர். இவரும் இவர் மனைவியும் சேர்ந்து தான் மணமகனுக்குத் தாலியை எடுத்துக் கொடுப்பர்.
பின் வண்ணார் தம்பதிகள் மணமக்களுக்கு ஆடை கொடுப்பர்.
பின் குயவர் தம்பதிகள் மணமக்களுக்கு ஒரு சோடி பானை கொடுப்பர்.
பின் சக்கிலிய தம்பதிகள் மணமக்களுக்கு அணிவதற்கு ஒரு சோடி காலணிகளைக் கொடுப்பர்.
மேற்கூறிய நால்வகை மக்களும் நான்கு தூண்களாக வாழ்க்கைக்கு தேவை என்ற அடிப்படையில் வாழ்ந்த இனம், இன்று நால்வரையும் தீண்டத்தகாதவராக மாற்றி சமுதாயத்தில் தன் சாதிப்பெருமையை மட்டுமே பேசி நம் சமூகம் வாழ வளம்பெற உய்வுற யாரெல்லாம் நம் தூண்களாக இருக்கின்றனர்
Published by
குத்தூசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக