புதன், 30 டிசம்பர், 2020

அதானி, அம்பானிக்கு சொந்தமான 1,500 ... செல்போன் கோபுரங்களை அடித்து நொறுக்கிய விவசாயிகள்!!

Image may contain: one or more people, text that says 'இந்தியா X அதானி, அம்பானிக்கு சொந்தமான 1,500க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்களை அடித்து நொறுக்கிய விவசாயிகள்! 11:18 am Dec 29, 2020 |dotcom@dinakaran.com(Editor) f G fio जियो से जुड़ें বिলा अपला बदले செல்போன் கோபுரங்கள் அதானி அம்பானி'

 dinakaran  : சண்டிகர் : டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பஞ்சாபில் நடைபெற்ற போராட்டத்தின் போது, அம்மாநிலத்தில் உள்ள 1500க்கும் மேற்பட்ட செல்போன் டவர்கள் சேதப்படுத்தப்பட்டன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி, பஞ்சாப், அரியானா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 40 விவசா ய சங்கங்களை சேர்ந்தவர்கள் டெல்லி எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.நேற்று இந்த போராட்டம் ஒரு மாதத்தை கடந்தது.

இதனிடையே டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக பஞ்சாப்பில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், அதானி, அம்பானி போன்றவர்களின் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான செல்போன் கோபுரங்களை அடித்து நொறுக்கி வருகின்றனர். வேளாண் சட்டங்களால் பெருநிறுவனங்களுக்கே லாபம் என குற்றம் சாட்டி வரும் விவசாயிகள், தங்கள் கோபத்தை அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகளின் மீது காட்டுவதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.



நேற்று அவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 176க்கும் மேற்பட்ட ஜியோ செல்போன் டவர்களை அடித்து நொறுக்கினர். அங்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் இருந்த ஊழியர்களையும் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதுவரை 1,561 செல்போன் கோபுரங்கள் சேதப்படுத்தப்பட்டு இருக்கின்றன.இதனால் தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு பெருமளவில் பொருட்சேதம் ஏற்பட்டு உள்ளது. மேலும் மாநிலத்தில் ஜியோ போன்ற செல்போன் சேவைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளன.விவசாயிகள் இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கடந்த 25-ந்தேதி கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அவரது வேண்டுகோளையும் ஏற்காமல் விவசாயிகள் தொடர்ந்து வன்முறையில் இறங்கி வருகிறார்கள். இதனையடுத்து செல்போன் டவர்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு  முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக