திங்கள், 28 டிசம்பர், 2020

அந்த அப்பாவி இளைஞர்கள் சில பல சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி வரும்.. ? light reading

Sivasankaran Saravanan : திமுகவிற்கு ஆதரவாக நிறைய புதிய நபர்கள் எழுத ஆரம்பித்துள்ளதை பார்க்கமுடிகிறது. ஒரு பக்கம் அது மகிழ்ச்சியாக இருந்தாலும், இந்த ரத்தபூமியில் காலடி எடுத்து வைத்திருக்கும் அந்த அப்பாவி இளைஞர்கள் சில பல சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். 

சங்கடம் 1: உங்களை உங்கள் வட்ட செயலாளருக்கு கூட தெரியாது. ஆனாலும் உங்களை திமுக சொம்பு , கருணாநிதி குடும்பத்து அடிமை என்றெல்லாம் சொல்வார்கள். அட இது கூட பரவாயில்லை “ஆமாய்யா நாங்க கலைஞர் சொம்பு தான்”னு சொல்லிட்டு போயிடலாம். உங்களை ஏதோ திமுகவின் பொதுச்செயலாளர் ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டு உங்க கட்சி இதுக்கு என்ன பண்ணுது ? ஸ்டாலின் இதுக்கு என்ன சொல்றாரு ? என்றெல்லாம் கேள்வி வரும்.

சங்கடம் 2:
இது வேறு மாதிரியான சங்கடம். நன்றாக பேசுவார்கள், நட்புடன் பழகுவார்கள். பிறகு “உங்களைப்போன்ற அறிவார்ந்த இளைஞர்கள் போயும் போயும் திமுகவிற்கு சொம்பு தூக்கலாமா?” என நம்மை ஏதோ ஐன்ஸ்டீன் ரேஞ்சுக்கு தூக்கிவிட்டு...திமுக என்னவோ ஆறாங்கிளாஸ் பெயில் போல இறக்கி வைப்பார்கள்.
சங்கடம் 3:
திடீரென ஒருநாள் உங்களை ஏதோ வில்லன் ரேஞ்சுக்கு காட்டி திமுக என்ற அரும்பெரும் இயக்கம் பாழாவதே உங்களைப் போன்ற ஆட்களால் தான் என்பார்கள்.
அட! இவன் நம்மை விட அதிகமா திமுக மேல பாசம் வச்சிருக்கானேப்பா!!! என்று உங்களையே கூச்சப்பட வைப்பார்கள்.
உங்களால் திமுகவிற்கு ஏற்படுகிற இழப்புகளை பொறுக்க முடியாமல் உங்களைப் பற்றி திமுக தலைமை நபர்களிடம் புகார் சொல்லக்கூடிய நிலை கூட வரலாம்.
சங்கடம் 4:
அடடா! நம்ம கட்சியின் வெற்றி தோல்வியே நம்ம கையில் தான் இருக்கு போல என்ற ஒரு தெனாவட்டு கெத்துடன் திமுக கட்சி ஆபீசான அண்ணா அறிவாலயத்துக்கு போனால் அங்கே உங்களை பார்த்து...நீங்க யார் தம்பி? என்று கேட்டு உங்களுக்கு பிராண சங்கடத்தை ஏற்படுத்துவார்கள்.
ஆக இப்படிப்பட்ட சங்கடங்களை எல்லாம் கடந்து வந்தால் தான் இணைய திமுக ஆதரவாளர் என்ற அரியவகை சோப்பு டப்பா உங்களுக்கு பரிசாக கிடைக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக