செவ்வாய், 29 டிசம்பர், 2020

வடஇந்திய போலி டாக்டர்களுக்கு தகுதி சான்றிதழ் கொடுக்க போகும் மத்திய அரசு

Image may contain: text that says 'India Doctors' protest intensifies as Modi govt allows Ayurvedic doctors to perform surgery By Shubhanshi Dimri December 08, 2020 at 4:57 PM f Indian Medical Association (IMA) along with Indian Dental Association, National Medicos Organisation (NMO), and with All Indian Institute of Medical'

செல்லபுரம் வள்ளியம்மை : வடஇந்தியாவில் ஏராளமான போலி டாக்டர்கள் இருக்கிறார்கள்
டெல்லி தெருக்களில் எந்த வித கல்வி வாசனையும் அற்ற ஏராளமான பல் டாக்டர்கள் ஊசி கத்தி சுத்தியல் மற்றும் பல கெமிக்கல்கள் சகிதம் இருக்கும் காட்சிகளை முன்பு நான் கண்டிருக்கிறேன் .
வடஇந்தியா எங்கும் ஏராளமானோர் வைத்தியர்கள் என்ற போர்வையில் அலோபதி மருந்துகளை வைத்து மக்களின் வாழ்வோடு விளையாடி கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு சட்ட ரீதியான அந்தஸ்தும் வருவாயும் மட்டுமல்ல,
இதுவரை இவர்கள் கையில் இருந்த கருவிகளை இனி சட்டவிரோதம் என்று யாரும் இவர்கள் மீது வழக்கு தொடர முடியாது .
இவர்களை போன்ற போலிகள் நிச்சயம் பாஜக ஆதரவாளர்கள்தான் சந்தேகமே கிடையாது...
ஒரு வாட்சப் அரசில் வாட்ஸப் மேதாவிகள்தான் சமூக வழிகாட்டிகளாகவும் தலைவர்களாகும் தொண்டர்களாகவும் குண்டர்களாகவும் இருப்பார்கள்.
இந்த இடத்தில் ஒரு வரலாறு செய்தியை கூறவேண்டிய தேவை இருக்கிறது. 
இலங்கையில் 1956 ஆண்டு இதே போன்ற ஒரு நிலைமைஇருந்தது.
அப்போது காலம் சென்ற பண்டாரநாயக்க ஆயுள்வேத வைத்தியர்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரத்தை வழங்கினார் .
அப்போது ஊருக்கு ஊர் வைத்தியர்கள் என்று டுபாக்கூர் வேலை பார்த்துக்கொண்டிருந்த பலரும் தகுதி சான்றிதழ் பெற்றார்கள்
குறைந்த பட்சம் அதை வைத்து லீவ் லெட்டர் கொடுக்கலாம் .
நீதிமன்றங்களில் கூட அவை செல்லுபடியானது அக்காலங்களில்.
எந்த விதமான வைத்திய அறிவு அற்றவர்கள் கூட பாரம்பரிய வைத்தியம் என்று கூறி இந்த தகுதி சான்றிதழ்களை பெற்றனர் .
இவர்களில் பெரும்பாலோர் பார்மசிகளில் மருந்துகளை வாங்கி ஆயுர்வேதம் மருந்துகள் போல அரைத்து பவுடராக்கி தேனில் குழைத்து உண்ணவும் என்று கொடுத்துவும் உண்டு
குறிப்பாக சிங்கள பகுதிகளில் இவர்கள் பண்டாரநாயக்கவின் அரசியலில் தொண்டர் அடிப்பொடிகள் ஆனார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக