திங்கள், 28 டிசம்பர், 2020

முகநூல் இந்திய சந்தை .. 310 மில்லியன் பேஸ்புக் Ac அராஜக ஹிந்து வெறி காவி கும்பலை facebook க்கால் எதிர்க்க முடியாது.

Image may contain: text that says 'WรJ NEWS EXCLUSIVE TECH In India, Facebook Fears Crackdown on Hate Groups Could Backfire on Its Staff Social media giant's security team cites possible attacks if extremist Hindu groups are kicked off platform'

  Narain Rajagopalan : · ஜுன் 2020. புது தில்லிக்கு வெளியே இருந்த ஒரு பெந்தகொஸ்தே தேவாலயத்திற்கு ஒரு ஹிந்து தீவிரவாத கும்பல் வருகிறது. அந்த கும்பல், இந்த தேவாலாயம் ஒரு புதைந்து போன ஹிந்து கோவிலுக்கு மேலே கட்டப்பட்டது என்று சொல்லிக் கொண்டே, வலுக்கட்டாயமாக ஒரு ஹிந்து தெய்வ சிலையை தேவாலயத்தில் நிறுவுகிறது. 

அந்த தேவாலாயத்தின் பாதிரியாரை முகத்தில் குத்துகிறது. தேவாலாய நிர்வாகிகளும், அமைப்பும் காவல்துறையிடம் புகார் கொடுத்தால், அதை வாங்க மறுக்கிறார்கள். அந்த ஹிந்து தீவிரவாத கும்பல் - பஜ்ரங் தள். பஜ்ரங் தள் இந்த வன்முறையை செய்ததோடு மட்டுமல்லாமல், இதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் போட்டு இருக்கிறார்கள். அதை 2.5 இலட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள், கொண்டாடி இருக்கிறார்கள். ஆனால், பேஸ்புக்கின் நெறியாளுகை இதை கண்டு கொள்ளாமல் விட்டு இருக்கிறது. இத்தனைக்கும் பேஸ்புக்கின் சமூக பாதுகாப்பு டீம், பஜ்ரங் தள் உள்ளிட்ட ஹிந்து திவிரவாத கும்பல்களை “ஆபத்தான மததீவிரவாதிகள்” என்று உள்ளேயே குறிப்பெடுத்து சொல்லி இருக்கிறார்கள்.

பேஸ்புக்கிற்கு இந்திய சந்தை மிக முக்கியம். 310 மில்லியன் பேஸ்புக் கணக்குகள். 120 மில்லியன் இன்ஸ்டாகிராம் கணக்குகள். ஆளும் அராஜக ஹிந்து வெறி பிடித்த காவி கும்பலை பேஸ்புக்கால் எதிர்க்க முடியாது. சந்தை தேவை, அதனால் இவை எல்லாம் “கண்டு கொள்ளப் படுவதில்லை”.
அவர்களுடைய பயம் எங்கே பேஸ்புக் அலுவலகத்துக்குள் இந்த தீவிரவாத கும்பல் புகுந்து பணியாளர்களை தாக்குமோ என்பது தான். ஆனால் இந்த பயம் உருவாக்கும் சமூக சீரழிவு பற்றிய கவலை அவர்களுக்கு இல்லை. தங்களை block செய்ய மாட்டார்கள் என்கிற துணிச்சலில் இந்த அடிப்படைவாத கும்பல்கள் மேலும், மேலும் வன்முறையை தூண்டி அதை படம் வரைந்து பாகங்கள் குறிப்பார்கள்.
//
Members of a Hindu nationalist organization known as Bajrang Dal claimed responsibility in a video describing the incursion that has been viewed almost 250,000 times on Facebook. The social-media company’s safety team earlier this year concluded that Bajrang Dal supported violence against minorities across India and likely qualified as a “dangerous organization” that should be banned from the platform, according to people familiar with the matter.
Facebook Inc. balked at removing the group following warnings in a report from its security team that cracking down on Bajrang Dal might endanger both the company’s business prospects and its staff in India, the people said. Besides risking infuriating India’s ruling Hindu nationalist politicians, banning Bajrang Dal might precipitate physical attacks against Facebook personnel or facilities, the report warned.
....
Facebook’s human-rights staff have internally designated India a “Tier One” country, meaning it is at the highest risk of societal violence and therefore requires heightened efforts by the company to protect vulnerable populations, according to people familiar with the matter. This ranks it alongside Myanmar, Sri Lanka and Pakistan.
// via Wall Street Journal Investigation
மோடி என்ன சாதித்தார் என்று இனிமேல் யாரும் பேச முடியாது. மோடி சமூக பாதுகாப்பு அளவில் இந்தியாவை, இந்தியாவில் இருக்கும் மத, சாதி சிறுபான்மையினர்களை இலங்கை, மியான்மர், பாகிஸ்தான் அளவுக்கு கொண்டு போய் விட்டு இருக்கிறார் என்பது தான் அந்த மகா கேவலமான சாதனை. இதை போன்ற அளப்பரிய சாதனைகளை செய்வதனாலேயே அவர் 2024-இல் திரும்ப ஆட்சி அமைப்பார்.
இந்த நாடும், நாட்டு மக்களும்.....
முழு செய்தி முதல் பின்னூட்டத்தில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக