Saadiq Samad Saadiq Samad : · பகுத்தறிவு பரிதாபங்கள்.. அண்மையில் வெளியான "பாவக்கதைகள்" என்ற திரைப்படத்தில் வரும் 'தங்கம்' என்ற திரைக்கதை தொடர்பாக திரு மதிமாறன் அவர்கள் ஒரு காணொளி வெளிடிட்டிருந்தார் அதில் எங்களுக்கு எழுந்த கேள்விகளும் சமூகத்திற்கான சில புரிதல்களும் . ஒருவர் திருநங்கையாக உருமாறுகிற பொழுது ஊர் அவர்களை எப்படி புறக்கணிக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இதற்கு இந்து முஸ்லிம் என்ற பின்னணி அவசியமில்லாதது. இஸ்லாமிய பின்னணி அல்லது இந்து பின்னணி என்று மட்டும் காட்டியிருக்கலாம். " யார் யார் எப்படி படம் எடுக்க வேண்டும், எப்படி சிந்திக்க வேண்டும் என்பதை தோழர் மதிமாறன் பாடம் எடுக்க வேண்டியதில்லை. அது ஒரு இயக்குனரின் சிந்தனை சுதந்திரம். இஸ்லாத்தில் திருநங்களின் நிலை என்னவென்பதை அறிந்திருந்தால் மதிமாறன் அவர்களுக்கு இப்படியொரு கருத்து தோன்றியிருக்காது.
ஞாயிறு, 27 டிசம்பர், 2020
இஸ்லாமியராக மாற வேண்டும் என்றால் ஸுன்னியாகவா? ஷியாவாகவா? அஹ்மதியாகவா? தப்லீக்காகவா? அல்லது ஸூஃபியாகவா? பகுத்தறிவு பரிதாபங்கள்.. Part 1
மதிமாறன் அவர்களுக்கு இஸ்லாம் பற்றித் தெரியவில்லையா? அல்லது தெரிந்து கொள்ள விரும்பவில்லையா? என்று தேடினால் தோழர்மதி மாறனுக்கு இஸ்லாம் பற்றிய கடுகளவு புரிதல்கள் கூட இல்லை என்று உறுதியாக கூறலாம் தமிழகத்தில் இப்படிப்பட்ட "மதிமாறன்கள்" அதிகமாகவே இருக்கிறார்கள். இவர்கள் இஸ்லாம் பற்றி அறிந்து விட்டு பிறகு பொது வெளியில் பேசினால் சிறப்பாக இருக்கும். இனியாவது அவர்கள் முயற்சிக்கட்டும்.
//கிராமங்களில் ஹிந்துக்கள் முஸ்லிம்கள் ஒன்றாக வாழ்வதில்லை. அரிதாகவே அப்படி இருக்கும்//
இந்துக்களும் முஸ்லிம்களும் கிராமங்களில் ஒன்றாக வாழ்வது அரிது என பதிவு செய்யத் தெரிந்த மதிமாறன் அதன் பின்னால் இருக்கக்கூடிய அரசியலை மட்டும் ஏன் பேச மறுக்கிறார் ? அல்லது மதிமாறனுக்கு வயதுக்கேற்ற அனுபவம் இல்லையோ ? தமிழக ஹிந்து முஸ்லிம்களுக்குள் பிளவு ஏற்ப்பட்ட தோற்றுவாய்கள் பற்றியும் நீங்கள் அறிவது நலம்.
அதன் ஆரம்பப் புள்ளி 1980 களிலிருந்து தொடங்குகிறது. சவூதியில் உருமாறிய இஸ்லாம் வஹாபிஸமாக இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் நுழைந்து வேரூன்றிய பிறகுதான் இஸ்லாமியர்கள் தங்களை ஒரு இனக்குழுக்களாக தனித்து அடையாளப்படுத்தி ஹிந்து கிருத்துவ சமூகத்தில் இருந்து பிரிந்து தங்களுக்குள்ளையே கூட்டம் கூட்டமாக வாழ துவங்கினார்கள்.
ஒவ்வொன்றிலும் ஹலால் ஹராம் தீண்டாமைகள் நிலை நிறுத்தப்பட்டது. பெண்கள் மீது " கருப்பு" புர்கா சுமத்தப்பட்டது. பல அரசு பணிகளை ஹராம் என்ற தீட்டு மூலம் இழக்க வைத்தார்கள் .இந்த நிலை தற்பொழுது தமிழகத்தின் அனைத்து நகர,கிராமங்களிலும் காணமுடிகிறது. அதற்கு முன் மூன்று சமூகங்களிடையிலும் இணக்கமான போக்கு இருந்தது. என்பதை "மதிமாறன்களுக்கு" நினைவு படுத்துகிறோம்.
சத்தார் கதாபாத்திரத்தை முழுக்க முழுக்க இந்து பின்னணியிலேயே அமைத்திருக்கலாம். அதில் சாதிய கொடுமைகளை புகுத்தி இருக்கலாம். அதுதான் வீரியமாக இருக்கும். சாதியை மையப்படுத்தி எடுத்திருந்தால் ஆணவப்படுகொலை என்பதற்கு மிகப் பொருத்தமாக இருந்திருக்கும்//
"தாராளமாக மதி மாறனுக்கு அப்படி ஒரு படத்தை எடுக்க விருப்பம் இருந்தால் எடுக்கலாம். இது சுதா கொங்கரா எடுக்க விரும்பிய கதை. அவருக்கு தேவைப்பட்ட பின்னணி. ஒவ்வொரு இயக்குனர்களும் "மதிமாறன் மீடியாக்களுக்கு" கொள்கை பரப்புச் செயலாளராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா? இது ஒரு வித மன நோய் என்றே கருதவேண்டி இருக்கிறது.
மேலும் ஆணவப் படுகொலைகளென்பது சாதியம் சார்ந்து மட்டுமே இருக்கவேண்டுமென்பது என்ன வகையான சிந்தனை? தோசைகளுக்கே சாதி சட்னி அரைத்தவர் தான் இந்த மதிமாறன். சாதியவாதிகளை விட இப்படிப்பட்டவர்களிடமே சாதிய வீச்சம் வேகமாக இருப்பது வேதனைக்குரியது."
இயக்குனருக்கு மதமாற்றம் என்பது பிடிக்காது. ஏனென்றால் இறுதிச்சுற்று திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் கிறித்துவராக மாறியதற்காக துடைப்பத்தால் அடிப்பது போன்ற காட்சியை வைத்தவர் அவர்//
"ஆம், அப்படிப்பட்ட காட்சியை வைத்தவர் தான். காசுக்காக மதம் மாறி அந்த காசில் மதுவருந்தி பொறுப்பற்று திரியும் கணவரை துடைப்பத்தால் அடித்தது மிக சரியான தேவையான காட்சி அமைப்பு தான். ஒரு சமூக மாற்ற சிந்தனையாளனின் பார்வை, மத மாற்றமா அல்லது மத மறுப்பா என்றால் மத மறுப்பு என்ற புள்ளியில் உறுதியாக இருக்க வேண்டுமே தவிர மத மாற்றத்திற்கு துணை செல்பவன் சமூக மாற்ற சிந்தனையாளனாக இருக்க முடியாது."
//இத்திரைப்படத்தில் இந்துவை திருமணம் செய்த இஸ்லாமிய பெண் மதம் மாறவில்லை. ஏனென்றால் அவரால் மதம் மாற முடியாது. காரணம், அந்தப் பெண் ஹிந்துவாக மாறினாலும் அந்த கணவனின் ஜாதியிலோ அல்லது எந்த
ஒரு சாதியிலுமே சேர முடியாது//
"அந்தப் பெண் மதம் மாற விரும்பினால் மதம் மாறிவிடலாம். உண்மையான மதமாற்றம் என்பது மன மாற்றம்தான். ஹிந்து ஆணைத் திருமணம் செய்து இந்துவாக மாறிய எத்தனையோ பெண்கள் இருக்கத்தான் (பிரபலமான சமீப உதாரணம் வேண்டும் என்றால் குஷ்பு, ஜோதிகாவை கூறலாம்) செய்கிறார்கள்.
இன்னும் ஹிந்து மதத்தால் ஈர்க்கப்பட்டு இந்துவாக மாறிய வெள்ளையர்கள் கூட இருக்கிறார்கள். அவர்களுக்கு சாதி தேவையில்லை. அப்படி சாதி வேண்டும் என்றால், அவர்கள் செய்யும் தொழில் அடிப்படையில் அவர்கள் என்ன சாதி என்று அடையாளப்படுத்திக் கொள்ளலாம். ஆதியில் இல்லாத சாதி பாதியில் வந்தது தான். அவள் ஆதி இந்துவாகவே இருந்துவிட்டு போகட்டுமே. எதற்காக அவள் ஒரு சாதியில் இணைந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம். ஹிந்துவாக இருந்தாலே அவரை ஏதாவது ஒரு சாதியில் திணிப்பது தான் பகுத்தறிவாதித்தனமா ? கடவுள் மறுப்பு என்பது தனி சிந்தனை. சாதிய மறுப்பு என்பது பொது சிந்தனை. சாதி இல்லாத இந்துவாக இருப்பதில் என்ன தவறு ?சமூக மாற்றம் என்பது சிறிது சிறிதாகதானே மாறும் ? இந்து மதத்தில் சாதி இருந்தே ஆகவேண்டும் என்பதுதான் பகுத்தறிவா?
இஸ்லாத்தில் மட்டும் ஜாதி இல்லையா ? பிரிவு இல்லையா? ஒருவன் இஸ்லாத்திற்கு மாற வேண்டும் என்றால் ஸுன்னியாக மாற வேண்டுமா? ஷியாவாக மாற வேண்டுமா? அஹ்மதியாக மாறவேண்டுமா? தப்லீக்காக மாற வேண்டுமா? ஸூஃபியாக மாற வேண்டுமா? மதிமாறனால் கூற இயலுமா? ஒருவன் இஸ்லாத்திற்கு மாறினால் அவன் மரைக்காயஇஸ்லாமியனா ? ராவுத்த இஸ்லாமியனா ? இல்ல லப்பை இஸ்லாமியனா ? தக்னி இஸ்லாமியனா? ஷாஃபி இஸ்லாமியனா? ஹனஃபி இஸ்லாமியனா இதில் எந்த சாதி கட்டத்திற்குள் அவனால் வர முடியும் ? எந்த பிரிவு அவனை மதம் மாற்றுகிறதோ, எந்த மௌலவி மதம் மாற்றுகிறானோ, மதம் மாறுபவன் அந்த பிரிவுக்குள்தான் இருப்பான் .இதுதான் எதார்த்த இஸ்லாமிய மத மாற்ற நிலை.
இன்னும் இலகுவாக இஸ்லாத்தில் சாதி இருப்பது புரியவேண்டும் என்றால் இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு எப்படி எதன் மூலம் கிடைக்கிறது என்பதை புரிந்தாலே இந்திய இஸ்லாத்தின் சாதி மூலம் தெரிந்துவிடும். ... தொடரும்
அருமை...
பதிலளிநீக்குஅருமையான பதிவு. உண்மையான பகுத்தறிவுவாதி எந்த ஒரு மதத்திற்கும் செம்பு தூக்க மாட்டான்.
பதிலளிநீக்கு