செவ்வாய், 29 டிசம்பர், 2020

கமல் : சட்ட மன்ற தேர்தலில் மாற்று திறனாளி ஒருவரை வேட்பாளராக நிறுத்துவோம்

Image may contain: 3 people, text that says 'தற்போதைய செய்தி நாள் 127.12.2020 மாற்றுத்திறனாளி ஒருவரை சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவோம் -மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தந்தி ft சுப. மதியரச @ExMLA4 Ex. MLA அய்யா கமல் அவர்களே நான் ஒரு மாற்றுத் திறனாளி என்னை 1997லிலேயே இளையான்குடி தொகுதி இடைத் தேர்தல் வேட்ப்பாளராக அறிவித்து வெற்றி பெற வைத்து அழகு பார்த்துவிட்டார் கலைஞர் அவர்கள்! Translate Tweet 22:19 28/12/2020 Twitter for Android'
செல்லபுரம் வள்ளியம்மை: கலைஞரே ஒரு மாற்று திறனாளிதான். எழுபதுகளில் ஒரு விபத்தில் பாதிக்கப்பட்டு அவரது ஒரு கண் நீக்கப்பட்டு விட்டது அதற்கு பின்பு அவர் எத்தனை போராட்டங்களை சந்தித்தார் எத்தனை நூல்களை எழுதினார் . தினசரி முரசொலியில் எழுதினர் ..இன்னும் எண்ணிக்கையில் அடங்காத அளவு கடுமையாக உழைத்தார் . இவை ஒரு புறம் இருக்க ..
மாற்று திறனாளி என்ற சொல் தமிழகத்தில் அறிமுக படுத்தியது கலைஞர்தான் .
அதுவரையில் ஊனமுற்றோர் என்ற சொல்தான் பாவனையில் இருந்தது.
உலக அரங்கில் handicap என்ற சொல்லுக்கு பதிலாக differently able என்ற சொல் அறிமுகப்படுத்த பட்டுள்ளது
இந்த செய்தியை கலைஞர் தொலைக்காட்சியில் "ஒன்றே சொல் நன்றே சொல்" என்ற தினசரி நிகழ்ச்சியில் பேராசிரியர் சுப வீரபாண்டியன் அவர்கள் பேசியதை கேட்டார் கலைஞர்.
அன்றைய தினமே அதை பேராசிரியரிடம் உறுதி படுத்திவிட்டு சட்டப்பேரவையில் இதை அறிவித்தார் . மேற்கண்ட அந்த அறிவிப்பில் பேராசிரியர் சுப வீரபாண்டியன் பெயரையும் குறிப்பிட்டே அறிவித்தார்
இன்று முதல் மாற்று திறனாளிகள் என்று அறிவிக்கப்படவேண்டும் என்ற பிரகடனத்தில் பேராசிரியரின் பெயரும் இருக்கிறது
இத்தனை விபரங்கள் இருக்கும்பொழுது இது பற்றி எல்லாம் எதுவுமே தெரியாமல் வெறும் பொடியன் போல புதிதாக ஏதோ சொல்லுகிறேன் பேர்வழி என்று சொல்லுகிறீர் திரு .கமல் ஹசன்.
உங்களை விட  விபரம் தெரிந்தவர்கள் இங்கு ஏராளம் இருக்கிறார்கள் !
ஒருவேளை உங்கள் கர்நாடக ஹசன் மாவட்டம் போலத்தான் தமிழ்நாடு என்று கருதிவீட்டீரோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக