வியாழன், 31 டிசம்பர், 2020

சன் டிவி குழுமம் மீது திமுக ஆதரவாளர்கள் கடுமையான விமர்சனம் ! ... உங்க பூஜாரிதனமும் வேண்டாம் ..பொங்கச்சோறும் வேண்டாம் .

Image may contain: 1 person, text that says 'நல் ஆளுமையில் No.1 மாநிலம் மா லை முரசு செய்திகள் 31.12.2020 சன் தொலைக்காட்சிக்கு திமுக எம்.பி. கண்டனம் ஒன்று தொழில் செய்யுங்கள், இல்லை கட்சிக்கு விசுவாசமாக இருங்கள், உங்கள் செயலை தொண்டர்கள் இலேசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் சன் தொலைக்காட்சியில் இடம்பெற்ற அதிமுக விளம்பரத்திற்கு திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார் கண்டனம் artત dishtv 556 146 ww.malaimurasu.com 566 556 60 AKSHATA JAK 112 172 109 195'
Elengovan K Dev : சன்டிவியில் அதிமுக விளம்பரமா? உடன்பிறப்புகளின் ஆதங்கம் அரசு விளம்பரத்தை வாங்க மறுத்தால் அரசுகேபிளில் பின்னுக்கு தள்ளப்படலாம் அதைவிட சன்டிவியின் பங்குகள் பொதுவில் இருப்பதால் பாதிக்கப்படலாம் என்பதை மறுப்பதற்கில்லை. சன்குழுமம் வியாபார நிறுவனம் லாபம் நோக்கே பிரதானம் இருந்துவிட்டுப்போங்கள் ஆட்சிக்கட்டிலில் வந்தவுடன் உங்கள் நெருக்கத்தை காட்டாதீர்கள.... குங்குமம் வார இதழில் இலவசபொருட்கள் கொடுத்து உங்கள் வியாபாரத்தை பெருக்க ஒட்டுமொத்த வார இதழ்களையும் திமுகவிற்கு எதிராக திருப்பினீர்கள்.... தினகரன் இதழை வாங்கி நாடார்இன ஓட்டுக்களை திமுகவிற்கு எதிராக திருப்பினீர்கள் அதைவிட ஒரு ரூபாய்க்கு விற்று உங்கள் வியாபாரத்தை உயர்த்தி ஒட்டுமொத்த தினசரி நாளிதழ்களை திமுகவிற்கு எதிராக திருப்பினீர்கள் ..
சன்டிவி மூலம் ஒட்டுமொத்த தொலைக்காட்சி நிறுவனங்களையும் திமுகவிற்கு எதிராக திருப்பினீர்கள் ..
சன்பிக்சர்ஸ் ஆரம்பித்து ஒட்டுமொத்த சினிமாத்துறையையும் திமுகவிற்கு எதிராக திருப்பினீர்கள். 
திமுக ஆட்சிக்கட்டிலில் இல்லாதபோது சன்பிக்சர்ஸ் எத்தனைபடங்களை எடுத்தீர்கள்? தொடர் சன்பிக்சர்ஸ் தயாரிப்பு விளம்பரத்தால் மக்களையே திமுகவின்பால் முகம்சுழிக்கசெய்தீர்கள்
கலைஞர் எடுக்கவேண்டாம் என்று கூறியும் கருத்துகணிப்பு நடத்தி மதுரை தினகரன் எரிப்பு சம்பவத்தால் ஆட்சிக்கு கெட்டபெயர் உருவாக்கினீர்கள் ...
2ஜி பொய்பிம்பத்தை ஊதி பெரிதாக்கி திமுகவிற்கு இழிவை ஏற்படுத்தினீர்கள் ...
திமுக ஆட்சிகட்டிலை பிடிக்க உள்ளநிலையில் ஓஓடி தளத்தை ஆரம்பிக்கபோகிறீர்கள் அதில் உங்களின் அதிகாரத்தால் மீண்டும் திமுகவிற்கு கெட்டபெயரே வரும்...
உங்கள் சொத்துக்கணக்கை திமுகமேல் சுமத்தி குற்றம் சுமத்தவே பயன்பட்டீர்கள்
உங்களால் ஓரே நல்லது கலைஞர் கைதின்போது நேரடி ஔிபரப்பு செய்ததே . அதுவும் அப்போது கலைஞரின் மனசாட்சி உயிரோடு இருந்ததால் ...
மொத்தத்தில் சொல்கிறோம் உங்க பூஜாரிதனமும் வேண்டாம் உங்கள் பொங்கச்சோறும் வேண்டாம்..
 
Velmurugan Balasubramanian : · சன்டீவி எடப்பாடி, மோடியை புகழ்ந்து பல வீடியோ விளம்பரங்களை ஒளிபரப்பி வருகிறது. அரசு விளம்பரங்கள் மட்டுமல்லாது எடப்பாடியின் தேர்தல் பரப்புரையையே சன் டீவி நேரலையில் ஒளிபரப்புகிறது. சன் டீவியை தோற்றுவித்தவர் முரசொலி மாறன். அவர் மத்திய அமைச்சராக இருந்த போது பல தொழில் நிறுவனங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர். துறைமுக திட்டங்கள் முதல் தொழில் வளர்ச்சி திட்டங்கள் வரை அவர் கொண்டு வந்தவை ஏராளம். அதனால் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், உட்கட்டமைப்பு என தமிழகம் பலவிதங்களில் வளர்ச்சி அடைந்தது.
ஆனால், முரசோலி மாறன் பற்றி தமிழ் நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.
அவர் கொண்டு வந்த திட்டங்களை சன் டிவியோ, தினகரன் நாளிதழோ எந்த விளம்பரமும் செய்யவில்லை.
முரசொலி மாறனை எந்த முகாந்திரமும் இல்லாமல் இரவில் கைது செய்தவர் ஜெயலலிதா. முரசொலி மாறன் இறந்தவுடன் அதிமுகவினரை பட்டாசு வெடித்துக் கொண்டாட வைத்தவர் ஜெயலலிதா.
முரசொலி மாறனின் மகன் கலாநிதி மாறன் தன் தந்தை செய்த சாதனைகள் எதையும் பரப்பியதில்லை. மாறாக, தன் தந்தையின் எதிரியை தொடர்ந்து பிரபலப்படுத்தி வருகிறார்.
நூறு கோடி கொடுத்தாலும் தினமலர் திமுகவின் சாதனைகளை ஒருபோதும் ஒளிபரப்பாது.
திமுகவினருக்கு இனமானத்தையும், சுயமரியாதையையும் போதித்த முரசொலி மாறன் தன் சொந்த மகனுக்கு அதை போதிக்க தவறிவிட்டார்.
அதிகார மையத்தை அணுசரித்து போகிறவர்கள் வியாபாரத்தில் முன்னுக்கு வருவார்கள் என்பது கலாநிதி மாறன் மற்றவர்களுக்கு உணர்த்தும் பாடம். கலாநிதியை போல அனைவரும் இருந்து விட்டால் இன்று திமுகவிற்கு பதிவு போட யாரும் இருக்க மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக