ஷங்கரின் ஐ திரைப்படம்.
இரண்டரை வருடங்களாகநடைபெற்ற ஷூட்டிங் ஏமி ஜாக்சன்
நடனமாடிய 'LADIO' பாடல் படப்பிடிப்புடன் முடிவிற்கு வந்துள்ளது.இந்த
பாடல் படத்தில் ஏமி ஜாக்சனின் அறிமுகப் பாடலாக இருக்குமாம். 20-க்கும்
மேற்பட்ட வெளிநாட்டு நடன நடிகைகளுடன் ஏமி ஆடும் இந்த நடனம், மிகப்பெரிய
செட் போடப்பட்டு படமாக்கப்படுள்ளது.ஐ
படத்தின் வெற்றியில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கும் விக்ரம், அதற்கு
காரணமான ஐ படக்குழுவினருக்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில்
சமீபத்தில் பார்ட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். ஷங்கர், விக்ரம், ஏமி
ஜாக்சன் உட்பட பலரும் கலந்துகொண்ட இந்த பார்ட்டியில் உணர்ச்சிவசப்பட்டு
காணப்பட்டிருக்கிறார்கள் அனைவரும்.
சனி, 27 செப்டம்பர், 2014
ஜெயலலிதா ஜாமின் விண்ணப்பிக்க இயலாது:3 ஆண்டுகளுக்கு மேல் விதிக்கப்பட்டதால்! அரசு வழக்கறிஞர் பேட்டி!
பெங்களூரு: 3 ஆண்டுகளுக்கு மேல் சிறை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதா உடனடியாக ஜாமினுக்கு விண்ணபிப்க்க இயலாது என அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா
மற்றும் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள்
சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும்,
சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம்
விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் வாதாடி அரசு வழக்கறிஞர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதன் பிறகு அவரது ஜூனியர் முருகேஷ் மராவடி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்தபோது சொத்து சேர்த்தது நிரூபணமானதால் அவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜெ. கைதி எண்: 7402- சிறைக்கு வெளியே கண்ணீரும், கம்பலையுமாக அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்
10 வருடங்களுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது!
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்
ஜெயலலிதாவுக்கு கைதி எண் 7402 அளிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு எதிராக கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக்குவிப்பு
வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா,
இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில்
அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும்
ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்றவர்களுக்கு தலா ரூ.10 கோடியும்
அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த தண்டனை வழங்கப்பட்டதையடுத்து ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை இழந்தார்.
தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் பரப்பன அக்ரஹாராவில்
உள்ள அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு கைதி எண் 7402 அளிக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு 7403,
சுதாகரனுக்கு 7404, இளவரசிக்கு 7405 ஆகிய எண்கள் அளிக்கப்பட்டுள்ளன.
அவர்கள் நான்கு பேரும் சிறைக்குள் இருக்க அதிமுக அமைச்சர்களும்,
எம்.எல்.ஏ.க்களும் சிறைக்கு வெளியே கவலையுடன் அமர்ந்துள்ளனர்.
சிறைக்கு வெளியே கவலையும், கண்ணீருமாக அதிமுகவினர் உள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
உணவு: சிறையில் அறை எண் 23ல் அடைக்கப்பட்ட ஜெயலலிதா இரவில் சாப்பிட உணவும்,
பழங்களும் வாங்கினார் ஓ. பன்னீர் செல்வம். அதை அவர் சிறை வளாகத்திற்குள்
சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் அளித்து ஜெயலலிதாவிடம் கொடுக்குமாறு
கேட்டுக் கொண்டார். tamil.oneindia.in/
ஜெயாவின் முதலாம் ஆட்சியே தமிழக திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளின் பொற்காலம்
ஜெயா சசி கும்பல் முழு தமிழகத்தை மொட்டை அடித்து பழனி படிக்கட்டு ஆண்டிகளோடு உட்காரவைத்தது.
தமிழ்நாடு சட்டசபையில் “ ஆமாம் நான் பாப்பாத்தி”யென்று பகிரங்கமாக பெருமையுடன் அறிவித்தவர் ஜெயலலிதா. சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளியென்று பெங்களூருவில் உள்ள பாரப்பன அக்கிரஹாரா என்று அழைக்கப்படும் பார்ப்பன அக்கிரஹாரத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தீர்ப்பின் போது அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிலையில் தனது பாதுகாப்பு பிரச்சினைகளை முன்வைத்து ஜெயா தரப்பில் சுட்டிக்காட்டியதன் பேரில் தான் பார்ப்பன அக்கிரஹாரத்தில் அமைந்துள்ள கருநாடக சிறை வளாகத்திற்குள் சிறப்பு நீதிமன்றம் இடம் மாற்றப்பட்டது. தமிழினவாதிகளால் “ஈழத்தாய்” என்று போற்றப்பட்ட ஜெயலலிதா தனது உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் பாப்பாத்தியின் பெருமையையும், பாதுகாப்பையும் பார்ப்பன அக்ரஹாரம் ‘பாதுகாக்க’வே செய்திருக்கிறது.
மூன்று நீதிமன்றங்களையும், 14 நீதிபதிகளையும், எண்ணற்ற அரசு வழக்கறிஞர்களையும், கணக்கற்ற வாய்தாக்களையும் தாண்டி வானத்து நட்சத்திரங்களையும் விஞ்சும் கோப்புகளையும், ஏழு கடல்களை நிறைக்கும் மசியையும் விழுங்கி சட்டத்தின் சகல சந்து பொந்துகளிலும் புகுந்து புறப்பட்ட பின் – உலகம் உருண்டை என்கிற உண்மையை ‘புதிதாக’ உரைத்துள்ளது நீதிமன்றம்.

ஜெயலலிதாவுக்கு நெஞ்சுவலி: பெங்களூர் சிறைச்சாலை மருத்துவமனையில் பரிசோதனை
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா,
சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை
விதிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாயும், மற்றவர்களுக்கு தலா 10
கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் கூடுதலாக
ஒரு வருடம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில்
கூறப்பட்டுள்ளது.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பையடுத்து 4 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.
அப்போது ஜெயலலிதா தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும், மயக்கம் வருவதாகவும்
கூறினார். இதையடுத்து அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ
பரிசோதனை செய்யப்பட்டது maalaimalar.com
அதிமுக ரவுடிகள் அட்டகாசம் : கலைஞர் வீடு உட்பட திமுக தலைவர்கள் வீடுகள் தாக்குதல் ! போலீசார் பாராமுகம் !
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில்
பெங்களூர் தனிக்கோர்ட்டில் நேற்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு விவரங்களை
தந்தி டிவி உள்பட பல்வேறு சானல்கள் ஓளிபரப்பின. .இதற்கிடையில்
முதல்-அமைச்சர் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதாக தகவல் பரவியது.
உடனடியாக மாநிலம் முழுவதும் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டது இதனால்
பொதுமக்களால் டி.வி. சேனல் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்க்க முடியாத நிலை
ஏற்பட்டது. போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரியாக செய்திருந்தால் மின்சார
தடையை தடுத்திருக்கலாம் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தீர்ப்பு எதிரொலியால் மாநிலம் முழுவதும்
அ.தி.மு.க தொண்டர்கள் கொந்தளிப்பு அடைந்து உள்ளனர்.இதனால் தமிழ்நாடு
முழுவதும் தொண்டர்கள் ஆங்காங்கே சாலைமறியல் மற்றும் உருவ பொம்மை
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
திருத்த முடியாத தீர்ப்புக்களை தந்த நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா
பெங்களூர்: கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கின்
தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது.
நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்ட வழக்கு தீர்ப்பினை நெருங்கியதற்கு பெங்களூர்
சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவே மிக முக்கிய காரணம்.
வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கி நீதிபதியாக உயர்ந்தது வரை
நேர்மையானவராகவே இருந்து வந்துள்ள நீதிபதி குன்ஹா அளித்துள்ள தீர்ப்புக்கள்
சரியானதாகவே இருந்துள்ளதாம்.
6 நீதிமன்றங்கள்
1996-ம் ஆண்டு ஜூலையில் சென்னை மாநகர அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கிய
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை சிங்கார வேலர் சிறப்பு
நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், பெங்களூர் சிறப்பு
நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம் என கடந்த 18 ஆண்டுகளில் 6
நீதிமன்றங்களின் படிகளை ஏறி இருக்கிறது.
90 நீதிபதிகள் விசாரணை
சென்னை நீதிமன்ற நீதிபதி சம்பந்தம் என்பவரில் ஆரம்பித்து நீதிபதி ஜான்
மைக்கேல் டி'குன்ஹா வரை ஏராளமான நீதிபதிகள் இவ்வழக்கை விசாரித்துனர்.
ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை ! ஜெயலலிதாவை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு
vikatan :பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி நீதிபதி ஜான்
மைக்கேல் குன்ஹா தீர்ப்பளித்துள்ளார். இதன் மூலம்
ஜெயலலிதா தனது முதலமைச்சர் பதவியை இழக்கிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டதால் எம்.எல்.ஏ பதவியை இழக்கிறார். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஜெயலலிதா குற்ற்வாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். சொத்து குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பை சந்திக்க முதலமைச்சர் ஜெயலலிதா பெங்களூரு சென்றடைந்தார். போயஸ் தோட்டத்தில் இருந்து புறப்பட்ட ஜெயலலிதா தனி விமானம் மூலம் பெங்களூரு சென்றார். முதல்வர் ஜெயலலிதாவுடன், சசிகலா, இளவரசியும் சென்றடைந்தனர். ஹெச்.ஏ.எல். விமானநிலையத்தில் இருந்து பரப்பன அக்ரஹார சிறை வளாகத்திற்கு செல்கிறார். காலை 11 மணிக்கு நீதிபதி ஜான்மைக்கேல் டீ.குன்ஹா தீர்ப்பை படிக்க ஆரம்பிக்கிறார். இதனால் பரப்பன அக்ரஹார வளாகத்தில் ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி பெங்களூரு வந்தனர்.

ஜெயலலிதா சசிகலா சுதாகரன் இளவரசி ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு ! - தமிழகம் முழுக்க அதிமுகவினர் போராட்டத்தில் குதித்தனர்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சட்டம் 13(2), 13 (1) (E) பிரிவின் கீழ் குற்றவாளி என அறிவிப்பு!
குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்கிறார்
விமானத்தில் சென்னை கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்!
தமிழ்நாட்டில் பல இடங்களிலும் பள்ளி கூடங்கள் மற்றும் கடைகள் மூடப்படுகின்றன
கலவரம் எந்த நேரமும் வெடிக்கலாம் .
சுப்பிரமணியம் சாமியின் படத்துக்கு அதிமுக தொண்டர்கள் குண்டர்கள் செருப்படி
பரவலாக மின்தடை ! தொலைகாட்சி பார்ப்பதை தடுக்கும் நோக்கில் விஷமிகள் கைவரிசை

தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமாக இல்லை ! அடுத்த முதல்வர் யாரென்று கன்னட சானல்களில் விவாதம்!
தீர்ப்பு விபரம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டாலும் வரப்போகும் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமாக இல்லை என்பது தற்போது நீதிமன்ற வழக்கத்தில் இருந்து தெரியவருகிறது, தீர்ப்பு ஆங்கிலம் கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் வாசிப்பதாலும் தாமதம் ஏற்படுகிறது,
தமிழ் நாடு முழுவதும ஓரளவு பதட்டம் காணப்படுகிறது. அதிமுக குண்டர்கள் பெரிய அளவில் கலவரத்தில் ஈடுபடுவார்கள் என்ற பயத்தில் மக்கள் வீடுகளில் முடங்கி கிடப்பதே பாதுகாப்ப்பு என்று தெரியவருகிறது. திமுக தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் கூட சரியான பாதுகாப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்,
திமுக தலைவர் கருணாநிதியின் வீடு மற்றும் திமுக தலைமையகமான அண்ணா
அறிவாலயம் ஆகியவற்றுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா தண்டிக்கப்பட்டால் 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம்
பெங்களூர்: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவர்
குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அவருக்கு 1 ஆண்டு முதல் அதிக பட்சம்
7 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது.
66 வயதாகும் ஜெயலலிதாவுக்கு இப்படி ஒரு தண்டனை கிடைத்தால், அது தமிழக
அரசியலில் மட்டுமல்லாமல் அகில இந்திய அளவிலும் பெரும் பாதிப்பை
ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா தண்டிக்கப்பட்டால் 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம்
ஏற்கனவே 1996ம் ஆம்டு இந்த வழக்கில் ஜெயலலிதா கைதாகி சில நாட்கள் சிறையில்
அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைக்கும்பட்சத்தில் அவர் உடனடியாக முதல்வர்
பதவியிலிருந்து விலக வேண்டி வரும். அப்படி இல்லாமல் அவர் விடுதலை
செய்ய்பட்டால், அடுத்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப்
பெறும் வாய்ப்பு பிரகாசமாகும்.
tamil.oneindia.in
tamil.oneindia.in
தீர்ப்பு நெகடிவ் ! அசம்பாவிதங்களுக்கு இடம் கொடுக்க மாட்டோம் ! முதல்வர் சித்தராமையா உறுதி !
எவ்விதமான அசம்பாவிதங்களும் நடக்க விடமாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று (சனிக்கிழமை) பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.தீர்ப்பையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக பெங்களுரு காவல்துறை ஆணையர் எம்.என்.ரெட்டி தெரிவித்துள்ளார்.இந்தநிலையில்
கர்நாடகாவில் எவ்விதமான அசம்பாவிதங்களும் நடக்க விடமாட்டோம் என கர்நாடகா
முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் சட்டம், ஒழுங்கு
பாதுகாக்கப்படும் எனவும் அவர் கூறி உள்ளார்.
ஜெயலலிதா மீதான தீர்ப்பு வாசித்துக்கொண்டிருக்கிறார் நீதிபதி ! விடுதலையாக வேண்டி அதிமுகவினர் தெப்பகுளத்தில் இறங்கி வழிபாடு !
தமிழக முதல்–அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மீதான
சொத்து குவிப்பு வழக்கில் இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் தீர்ப்பு
கூறப்படுகிறது.
இதில் நல்ல தீர்ப்பு வர வேண்டும் என மாநிலம் முழுவதிலும் உள்ள அ.தி.மு.க.வினர் கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் இன்று குமரி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும், பால்வள தலைவருமான எஸ்.ஏ. அசோகன் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலய சுவாமி கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்ததோடு கோவில் தெப்பக்குளத்தில் இறங்கி நூதன வழிபாட்டிலும் ஈடுபட்டார்.
அவருடன் நகர இளைஞரணி செயலாளர் பூங்கா கண்ணன், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் நல்லபெருமாள், சுசீந்திரம் பேரவை செயலாளர் கணபதி மற்றும் செல்வகணேஷ், வரதன், சபீக், வேல் ஆகிய 7 பேர் உடன் இருந்தனர்.மாலைமலர்.com

அரிசி பக்கெட் சவாலை ஏற்ற லட்சுமி ராய்
சென்னை:
அரிசி பக்கெட் சவாலை குடிசைப்பகுதியில் நிகழ்த்த முடிவு செய்துள்ளார் ராய்
லட்சுமி.நரம்பு சம்பந்தப்பட்ட நோய் விழிப்புணர்வுக்காகவும், நிதி
திரட்டவும் சர்வதேச அளவில் ஐஸ் பக்கெட் சேலன்ஜ் என்படும் ஐஸ் நீர் குளியல்
போட்டி நடைபெற்றது. இதில் நடிகை ஹன்சிகா உள்ளிட்ட ஏராளமான சினிமா
நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இதே பாணியில் ரைஸ் பக்கெட் சேலன்ஜ் (அரிசி
பக்கெட் சவால்) என்ற நிகழ்ச்சியில் சிலர் பங்கேற்றனர். பக்கெட் நிறைய
அரிசியை ஏழைகளுக்கு வழங்குவதாக இந்த நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இதில்
ராய் லட்சுமி பங்கேற்க முடிவு செய்துள்ளார். <
அவர் கூறியதாவது:
சிலருக்காவது நேரடியாக பயன்தரும் வகையிலான நிகழ்வில் பங்கேற்க
ஆசைப்படுகிறேன். எனவேதான் ரைஸ் பக்கெட் சேலன்ஜ் எடுக்க முன்வந்தேன்.
ஏற்கனவே இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பக்கெட் நிறைய அரிசி வழங்கி
இருக்கிறேன். விரைவில் மலேசியாவிற்கு செல்ல இருப்பதால் அதற்கு முன்பாக
இதில் பங்கேற்க உள்ளேன். மும்பை குடிசை பகுதியில் இந்த நிகழ்ச்சியில்
பங்கேற்று அதன் மூலம் குடிசை பகுதி மக்களுக்கு அரிசி வழங்க விரும்புகிறேன்.
இவ்வாறு ராய் லட்சுமி கூறினார். - See more at: .tamilmurasu.org<
இவ்வாறு ராய் லட்சுமி கூறினார். - See more at: .tamilmurasu.org<
மோடியின் கபடம் : வர்த்தக மாநாட்டில் விவசாயிக்காக ஒப்பாரி ! உள்நாட்டில் மானியங்களை வெட்டுவதில் மும்மரம் !
உலக வர்த்தகக் கழகக் கூட்டத்தில் ஏழை விவசாயிகளின் நலன் பற்றிப் பொளந்து
கட்டிய மோடி அரசு, உள்நாட்டில் மானியங்களை வெட்டுவதைத் தீவிரப்படுத்தி
வருகிறது.
உணவு மானியம்: மோடியின் கபடத்தனம்! இந்தோனேஷியாவிலுள்ள பாலி தீவில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த உலக வர்த்தகக் கழகத்தின் ஒன்பதாவது அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள் தமது விவசாயிகளுக்கு வழங்கி வரும் மானியங்களை அதிரடியாகக் குறைக்கக் கோரிய மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள், அது தொடர்பாக, “ஏழை நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் தமது ஒட்டுமொத்த விவசாய உற்பத்தியின் மதிப்பில் 10 சதவீத அளவிற்கே விவசாய மானியமாக வழங்கவேண்டும். இந்த மானியமும் 1985-88-ம் ஆண்டைய விவசாய உற்பத்தியின் மதிப்பைத் தாண்டக்கூடாது” என்ற நிபந்தனையை முன்வைத்தன. இந்த நிபந்தனையை ஏழை நாடுகள் முழுமையாகவும் உடனடியாகவும் ஏற்க மறுத்ததையடுத்து, “ஏழை நாடுகள் தற்பொழுது வழங்கிவரும் விவசாய மானியத்தை 2017-ம் ஆண்டு வரை தொடரலாம். அதற்குள் இப்பிரச்சினையில் ஓர் இறுதி முடிவை எட்ட வேண்டும்” என சமரச உடன்பாடு கொண்டு வரப்பட்டது.

வடகொரிய சர்வாதிகாரி கொடியவன் கிம் ஜோன்க் உன் மிஸ்ஸிங் ?
North Korea admits to Kim Jong-un’s ill-health for first time
வடகொரியாவின் அரசியல் அந்நாட்டின் ஒப்பில்லா தலைவர் என்று கருதப்படும் கிம் ஜோங்-உன்னையே சார்ந்துள்ளது. 31 வயதாகும் இவர், கடந்த மூன்றாம் தேதி அவரே தேர்ந்தெடுத்த ஒரு பெண்கள் இசைநிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்துகொண்டார். அதன்பின்னர் அந்நாட்டின் சட்டமன்ற கூட்டத்தொடர் இந்த மாத ஆரம்பத்தில் நடைபெற்றபோது அவர் அதில் இடம் பெறவில்லை. இங்குதான் 100 சதவிகித வாக்குகளுடன் அவர் கடந்த மார்ச் மாதம் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மீண்டும் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளாதது, அவரது இருப்பிடம் குறித்த புதிய ஊகங்களை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

என் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆவணமும் இல்லை: சிபிஐ கோர்ட்டில் கனிமொழி !
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்குகளில், தி.மு.க.வுக்கு சொந்தமான கலைஞர் டி.வி. பெற்ற ரூ.200 கோடி பற்றிய
வழக்கும் ஒன்றாகும். இந்த வழக்கை சி.பி.ஐ. நடத்தி வருகிறது. வழக்கு விசாரணை, டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று
வருகிறது.
இந்நிலையில், இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது தொடர்பான வாதம், டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி
ஓ.பி.ஷைனி முன்பு நேற்று நடைபெற்றது. சிறப்பு அரசு வக்கீல் ஆனந்த் குரோவர் வாதிடுகையில், ‘கலைஞர் டி.வி.க்கு வந்த
பணம், நேர்மையான வர்த்தக பரிவர்த்தனை அல்ல’ என்று கூறினார்.
கனிமொழி சார்பில் அவருடைய வக்கீல் சுஷில் பஜாஜ் ஆஜராகி வாதாடினார்.
அம்மா சிமென்ட் ! சலுகை விலையில் ! முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு !
சிமென்ட் விலை உயர்வால் குறைந்த, நடுத்தர
வருமானமுள்ள மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, சலுகை விலையிலான "அம்மா'
சிமென்ட் விற்பனைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா
அறிவித்தார்.
ஒரு மூட்டை சிமென்ட் ரூ.190 என்ற விலையில் விற்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
வீடு கட்டும் பொருள்களில் முக்கியமானதாக விளங்கும் சிமென்டினை குறைந்த விலையில் ஏழை மக்களுக்கு வழங்குவது குறித்து அரசு அதிகாரிகளுடன் விரிவாக விவாதித்தேன். அதன்படி, மலிவு விலையில் "அம்மா' சிமென்ட் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் வருமாறு:
தமிழ்நாட்டில் உள்ள தனியார் சிமென்ட் உற்பத்தியாளர்களிடமிருந்து மாதமொன்றுக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் சிமென்ட் கொள்முதல் செய்யப்படும்.

வெள்ளி, 26 செப்டம்பர், 2014
அவுஸ்த்ரேலியா வரும் அகதிகளை கம்போடியாவில் குடியமர்த்தும் ஒப்பந்தம் கைச்சாத்து !
இந்தோனேசியா பகுதிகளில் இருந்து ஆஸ்திரேலியாவில் குடிபுக வரும் அகதிகளின் அதிகரித்துவரும் எண்ணிக்கையைக்
கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு சர்ச்சைக்குரிய கொள்கைகளை அறிமுகப்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் தாங்கள்
நிராகரிக்கும் அகதிகளைப் பராமரிக்கத் தேவையான நிதிஉதவியை கம்போடிய அரசுக்கு அளித்து அவர்களை அந்நாடு
ஏற்றுக்கொள்ள வழி செய்யும் ஒரு ஒப்பந்தத்தை அந்நாட்டுடன் ஆஸ்திரேலியா மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்காட் மோரிசனும், கம்போடியாவின் உள்துறை அமைச்சர் சர்
கெங்கும் இன்று கையெழுத்திட்டனர்.
இதனைத் தொடர்ந்து இந்த அகதிகளுக்கான மீள்குடியேற்ற செலவுகளுடன் ஆஸ்திரேலிய
நாட்டுப் பண மதிப்பில் 40 மில்லியன் டாலர்களையும் வரும் நான்கு வருடங்களுக்குள் இந்தத் தென் கிழக்கு ஆசிய நாட்டிற்கு
வழங்குவதாக ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டுள்ளது. இதில் கவலைக்குரியவிடயம்என்னவென்றால் ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே சென்று அகதிஅந்தஸ்துபெற்று தற்போது பிரஜாவுரிமையும் பெற்று டாக்டர்களாக பொறியியலாளர்களாகஉள்ள நம்ப ஈழத்தமிழர் யாரும் சக ஈழ அகதிகளுக்காக ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளவில்லை .அவர்கள்தான்மேட்டுகுடிகளாகிவிட்டனரே ?
ஈரான் நடிகைக்கு எதிராக இஸ்லாமிய தீவிரவாதிகள் ! Nude activists supporting Golshifteh Farahani after the actress was banned from Iran
'கொல்ஷிஃப்தே ஃபரஹானி’... ஈரான் நாடே ஆச்சர்யமாக
முணுமுணுக்கும் நடிகை. ஈரான் சினிமாவில் 'கோல்டன் சைல்டு’ என தலை மீது
தூக்கிக் கொண்டாடப்பட்ட இந்த நடிகைக்கு கடந்த இரண்டு வருடங்களாக
நாட்டுக்குள் நுழையத் தடை விதித்துள்ளது ஈரான் அரசு. தற்போது பாரீஸ் நகரில்
வசிக்கும் ஃபரஹானி அப்படி என்னதான் செய்தார்?
2012ல் பிரெஞ்சுப் பத்திரிகையான 'மேடம் ஃபிகரோ’வில்
மேலாடை இல்லாமல் மார்பில் கையை வைத்து மறைத்துக் கொண்டு கொடுத்த கறுப்பு
வெள்ளை அதிரடி போஸ்தான் இந்தத் தடைக்குக் காரணம்.
போஸ் கொடுத்துவிட்டு லண்டன் விமான
நிலையத்தில் விமானத்துக்காகக் காத்திருந்தவர் கண்களில் பட்ட 'டெய்லி
டெலிகிராஃப்’ பத்திரிகையின் மூலம்தான் இந்த விஷயமே தெரிய வந்தது. ஈரான்
அரசின் கலாசாரத் துறை சார்பாக இப்படி ஓர் அறிவிப்பை ஐரோப்பா நாடுகளில்
வெளியாகும் சில பத்திரிகையில் வெளியிட்டிருந்தார்கள். 'இனி இப்படி ஒரு
நடிகை எங்கள் நாட்டுக்குத் தேவை இல்லை.
மோடிக்கு அமெரிக்க நியு யார்க் நீதிமன்றம் சம்மன் ! குஜராத் வன்முறை என்கவுண்டர் குற்றச்சாட்டு விசாரணை ?
2002ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தில் சிக்கி உயிருடன் மீண்ட இரண்டு பேர், நியூயார்க்கின் தெற்கு மாகாணத்தில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அந்த வன்முறைக்கு அப்போது முதல்வராக இருந்த மோடிதான் பொறுப்பு என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக இன்னும் 21 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு கூறி மோடிக்கு சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. dinamani.com
நடிகை சமந்தா சொந்தமாக படம் தயாரிக்க போகிறாராம் ! ம்ம் அனுபவம் பெறுவது பெருமை !
சென்னை:
சமந்தா சொந்தமாக படம் தயாரிக்க முடிவு செய்துள்ளார்.ரஜினி, கமல், பிரபு
தொடங்கி விஜய், விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ் நடிகர்கள் சொந்தமாக படம்
தயாரித்திருக்கின்றனர். நடிகைகள் தயாரிப்பு துறையில் இறங்குவது அரிது.
துணிச்சலாக இறங்கிய ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா போன்ற சில நடிகைகள் கையை
சுட்டுக்கொண்டனர். தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்ற ஆசை தற்போது சமந்தாவுக்கு
வந்திருக்கிறது. தமிழில் முன்னணி இடத்துக்காக போராடி வரும் அவர்
தெலுங்கில் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறார். சமீபத்தில் புதுமுக
இயக்குனர் ஒருவர் சமந்தாவிடம் கதை கூறினார். அது அவரை ரொம்பவே கவர்ந்தது.
இதையடுத்து, ‘படத்தை தயாரிக்க எவ்வளவு பட்ஜெட் ஆகும், எத்தனை நாட்களுக்குள்
படத்தை முடிக்க முடியும்‘ என்பதை கூறும்படி கேட்டிருப்பதுடன் அப்படத்தில்
தான் நடிக்கப்போவதில்லை என்றும் கூறி இருக்கிறார். பட்ஜெட் விவரம்
தெரியவந்தவுடன் படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஏற்க உள்ளாராம் சமந்தா.
வாய்வார்த்தையோடு நிற்காமல் தயாரிப்பு துறையில் சமந்தா இறங்குவாரா என்பதை
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். - See more at:
.tamilmurasu.org
ஸ்டாலினின் தொல்லைகளாக மாறிவிட்ட அவரது ஜால்ராக்கள் !
செப்டம்பர்
- பெரியார் மற்றும் அண்ணா பிறந்த நாள் விழா என தி.மு.க., அ.தி.மு.க ஆகிய
இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளுக்கும் கொண்டாட்டமான மாதம் எப்போதும்.
இப்போது, கோர்ட் மாதமாக மாறிவிட்டது!
தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆவதற்கு முன்பாக
தி.மு.க-வுக்கு தலைவர் ஆகிவிடுவோம் எனத் தனி ஆவர்த்தன குதிரையை
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகத் தட்டிவிட்டவர் மு.க.ஸ்டாலின். தேர்தல்
தோல்வி, 'இந்தக் குதிரையை நம்பி பணம் கட்டலாமா?’ என்ற பயத்தை தி.மு.க
நிர்வாகிகள் மத்தியிலேயே விதைத்தது. ஆனால், சில 'விடலை’களுக்கு இது
விளங்கவில்லை. ஸ்டாலினுக்கு நல்லது செய்வதாக நினைத்து அவரைத் தூக்கியும்
கருணாநிதியைப் பலவீனப்படுத்தியும் இணையதளங்களில் கருத்துக்களைப் பரப்பினர்.
இவையெல்லாம் தனது கையெழுத்துப் பத்திரிகைக் காலத்திலேயே கருணாநிதி
பயன்படுத்திய அஸ்திரங்கள்தான் என்பது, அந்தப் புதியவர்களுக்குப் புரிவதற்கு
முன், 'தலைவரை வீழ்த்த நினைக்கிறாரா தளபதி?’ என்ற கெட்ட பெயர் ஸ்டாலின்
மீது ஏற்பட்டது.
வாடிக்கையாளரை கேட்காமலேயே இன்சுரன்சை புதுப்பித்த விஜயா வங்கிக்கு நீதிமன்றம் தண்டனை !
வாடிக்கையாளரிடம் தெரிவிக்காமலேயே அவருடைய கார்
காப்பீட்டை புதுப்பித்ததற்காக விஜயா வங்கி நிர்வாகம் நஷ்டஈடு வழங்க
வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் என்.ராஜ்குமார், விஜயா வங்கியின் ரங்கராஜபுரம் கிளை மூலம் வாகனக் கடனில் கார் வாங்கி உள்ளார்.
மேலும், ரூ.36,478 செலுத்தி, ஒரு தனியார் பொது காப்பீடு நிறுவனத்தில் காருக்கு காப்பீடும் எடுத்துள்ளார். 2007 ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல், ஓராண்டுக்கு செல்லத்தக்க அந்த காப்பீட்டை 2008 ஆகஸ்ட் 13-ஆம் தேதி, விஜயா வங்கி நிர்வாகம் தன்னிச்சையாகப் புதுப்பித்துள்ளது.
வங்கியின் இந்த செயல்பாட்டை சேவைக் குறைபாடாகக் கருதிய ராஜ்குமார், இதற்கு உரிய நஷ்டஈடு கேட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு நாளை ! தப்பி தவறி அம்மாவுக்கு ஜெயில் என்றால் மீண்டும் கொலை கொள்ளை எரிப்புக்கள் அரங்கேறுமா ? மக்கள் பீதி !
சென்றமுறை தர்மபுரியில் கல்லூரி மாணவர்கள்
சென்ற பேருந்தை எரித்து அதில் பயணம் செய்த மாணவர்களில் சிலரை கொலை செய்தார்கள் அதிமுக கட்சிக்காரர்கள். இன்னும் கூட தண்டனை பெற்ற அந்த கொலைக் குற்றவாளிகளுக்கு அதிமுக ஆதரவு தருகிறது... இது ஒன்றே போதும் இவர்கள் அயோக்கியர்கள் என்று அறுதியிட்டு கூற... அம்மாஜிக்கு தண்டனை கிடைத்தால் கண்டிப்பாக ஏராளமான பொதுச்சொத்துகளுக்கும் பொது மக்களுக்கும் சேதம் விளைவிக்க தயங்கமாட்டார்கள். பொதுமக்கள் கவனமாக இருப்பதே நல்லது...
பெங்களூரு:தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், நாளை, தீர்ப்பளிக்கப்படுகிறது. இதனால், தீர்ப்பு வழங்கப்படும், பரப்பன அக்ரஹாரா தற்காலிக நீதிமன்றம் உட்பட பல பகுதிகளில், அதிக பட்ச பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஒசூர் வழியாக வரும் வாகனங்களை கட்டுப்படுத்த, போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

ஆறுகள் இணைப்பு திட்டத்துக்கு பதிலளிக்க தவறினால் பொதுப்பணி துறை செயலர் நேரில் ஆஜராக வேண்டும்
சென்னை:'தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டப் பணிகளை
விரைவில் முடிக்கக் கோரிய மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதில் அளிக்க
வேண்டும்; தவறினால், பொதுப்பணித் துறை செயலர், ஆவணங்களுடன் நேரில் ஆஜராக
வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., அப்பாவு தாக்கல் செய்த மனு:துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு, தாமிரபரணி ஆறு, குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. தாமிரபரணியில் செல்லும் தண்ணீரில், 13 டி.எம்.சி., வீணாக கடலில் கலக்கிறது.இந்த தண்ணீரை கால்வாய் மூலம், ராதாபுரம், திசையன்விளை, நாங்குநேரி, சாத்தான்குளம், திருச்செந்துார் பகுதிக்கு கொண்டு வந்தால், பல ஆயிரம் ஏக்கர் தரிசு நிலம் செழிக்கும். இந்த ஆட்சியில எல்லாமே கோர்ட் சொல்லி தான் செய்ய வேண்டியதா இருக்கு. அவ்வளவு ஏன் கட்சியின் தலைவிதியே இப்ப கோர்ட் கையில தான் இருக்கு..பேசாம கோர்டுகிட்ட ஆட்சிய கொடுத்துட்டா நல்லா இருக்கும்...

மகாராஷ்ட்ராவில் நான்கு முனை போட்டி ? சரத்பவார் காங்கிரஸ் தனித்தனியே போட்டி !
மும்பை: தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறியாலும், சுழற்சி முறை ஆட்சியில்
பங்கு கோரியதாலும் மகாராஷ்டிராவில் ஆளும் காங். -தேசியவாத காங்.கூட்டணி
முறிந்தது. தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. பா.ஜ.,சிவசேனாவிலும் கூட்டணி உடைந்ததால் நான்கு முனைப்
போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.மகாராஷ்டிரா சட்டசபைக்கு
அக்.15-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இம்மாநிலத்தில் தற்போது ஆளும் காங்.-
தேசியவாத காங். கூட்டணி சார்பில் முதல்வராக காங்.கட்சியைச் சேர்ந்த
பிருதிவ்ராஜ் சவான் உள்ளார்.துணை முதல்வராக தேசியவாத காங். கட்சியின்
அஜித்பவார் உள்ளார்.
இரு கட்சிகளும் மத்தியிலும்,மாநிலத்திலும் கடந்த 15 ஆண்டுகளாக கூட்டணியில் உள்ளன. தற்போது தேர்தலை கூட்டாக சந்திக்க உள்ள நிலையில் கடந்த சிலநாட்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவர்த்தைநடந்தது.
இதில் கூடுதல் தொகுதிகளை கேட்டு தேசியவாத காங். அடம்பிடித்ததை தொடர்ந்து இழுபறி ஏற்பட்டது.யாரப்பா அது அங்கேயும் யாராவது பிரவீன் குமார் மாதிரி ஆளுங்க இருப்பாக அவிங்களோட கூட்டணி வச்சவிங்க நிச்சயம் வெற்றி பெருவாய்ங்க ! ஆமா ?

வியாழன், 25 செப்டம்பர், 2014
Liar's Dice ! ஆஸ்கர் போட்டியில் நடிகை கீது மோகன்தாஸ் இயக்கிய படம்
திருவனந்தபுரம்: கீது மோகன்தாஸ் இயக்கிய படம் ஆஸ்கர் போட்டிக்கு
தெரிவாகி உள்ளது .நள தமயந்தி, பொய் படங்களில் நடித்தவர் கீது மோகன்தாஸ். மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். இவர் இயக்கிய மலையாள படம் ‘லயர்ஸ் டயஸ். இப்படம் ஆஸ்கர் விருது போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு படங்களின் போட்டி பிரிவில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ள ஒரே படம் இது என்று இந்திய திரைப்பட சம்மேளனம் அறிவித்துள்ளது. கங்கனா ரனாவத் நடித்த ‘குயின்‘, மராட்டிய படம் ‘எல்லோ‘ போன்ற படங்கள் இந்த பிரிவில் செல்வதற்காக போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 87வது ஆஸ்கர் விருது போட்டி வரும் பிப்ரவரி 22ம் தேதி நடக்கிறது.
இந்திய டாப் 10 பணக்காரர் வரிசையில் மீண்டும் முகேஷ் அம்பானி முதலிடம் !
டாப் 10 வரிசை
இந்திய பணக்காரர்களின் டாப் 10 வரிசையில், முகேஷ் அம்பானி 2,360 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் முதல் இடத்திலும், திலீப் ஷாங்வி 1,800 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் 2வது இடத்திலும், அசீம் பிரேம்ஜி 1,640 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் 3வது இடத்திலும், பல்லோன்ஜி மிஸ்த்ரி 1,590 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் 4வது இடத்திலும், லட்சுமி மிட்டல் 1,580 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் 5வது இடத்திலும் உள்ளனர். அதற்கு அடுத்து இந்துஜா பிரதர்ஸ் 1,330 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் 6வது இடத்திலும், ஷிவ் நாடார் 1,250 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் 7வது இடத்திலும், கோத்ரெஜ் குடும்பம் 1,160 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் 8வது இடத்திலும், குமார் பிர்லா 920 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் 9வது இடத்திலும், சுனில் மிட்டல் 780 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் 10வது இடத்திலும் உள்ளனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவில் உள்ள டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 8வது வருடமாக முதல் இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 260 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்ந்து 2,360 கோடி அமெரிக்க டாலராக உள்ளது என்று போர்ப்ஸ் செய்தி இதழ் தெரிவித்துள்ளது. மேற்கண்ட பணக்காரர்கள் அனைவரும் மிகவும் தன்னம்பிக்கையேடு நாணயத்தோடு கஷ்டப்பட்டு உழைத்து படிப்படியாக முன்னேறியவர்கள். மேலும் தாய் மீது பற்று நாட்டின் மீது அடங்காத தேசப்பற்று கொண்டவர்கள். ஏழைகளை கண்டால் உருகிவிடும் இளகிய மனது கொண்டவர்கள் . இப்படிதாய்ன் மீடியாக்காரன் எழுதுவான் வேறு என்ன புண்ணாக்கை எழுதுறது அத்தனையும் கேப்மாரிகள் மொள்ளை மாறிகள் முடிச்சவிக்கிகள்

சிவசேனா பாஜக கூட்டணி முறிந்தது ! மகாராஷ்ட்ராவில் 25 ஆண்டுகால கூட்டணி டமால் !
மகாராஷ்டிர மாநிலத்தில் 25 ஆண்டுகாலம் கூட்டணியாக இருந்த பா.ஜ.க.வும்,
சிவசேனாவும், அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,
தங்கள் கூட்டணியை முறித்துக்கொண்டுள்ளன.
இது குறித்து பா.ஜ.க. தலைவர் தேவேந்திர பத்னாவிஸ் அளித்த பேட்டி வருமாறு:-
நாங்கள் கூட்டணியை தக்க வைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் சிவசேனா தனது
நிலையிருந்து கீழிறங்கவில்லை. சிறிய கட்சிகளுக்கு தொகுதிகள் வழங்க அக்கட்சி
முன்வரவில்லை. அக்கட்சிகளை ஒதுக்கித் தள்ள முடியாது. எனவே, கூட்டணியில்
இருந்து வெளியேறுவது என்று முடிவு செய்துள்ளோம்.
இனி பேச்சுவார்த்தை நடத்த நேரமில்லை. கனத்த இதயத்துடன் தான் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
இனி எங்கள் பாதையில் ஐந்து சிறிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணியாக தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். மாலைமலர்.com
ஆயிரம் ஜென்மங்கள் ரஜினி – அரண்மனை சுந்தர் சி !
ஆயிரம்
ஜென்மங்கள் தான் அரண்மனை. அதில் ரஜினி நடித்த வேடத்தில்தான் இதில் சுந்தர்
.சி, நடித்திருக்கிறார். அதனால்தான் ரஜினி போலவே கண்ணாடி போலும். அதில்
ரஜினி டாக்டர், இதில் சுந்தர் சி வக்கில்.
மத்த ‘மகாபெரியவா’ எல்லாம் ஹாலிவுட்,
அய்ரோப்பிய, ஈரானிய, கொரிய படங்களை அவர்கள் பெயரிலேயே கதை, திரைக்கதை,
இயக்கம் என்று போட்டுக் கொண்டால்…சுந்தர் சி மட்டும் ‘அம்மையப்பன் தான்
உலகம். உலகம் தான் அம்மையப்பன்’ என்று தமிழ் படங்களையே சுட்டு தன் பெயரில்
போட்டுக் கொள்வார்.
ஆவின் பால் கலப்பட வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு மாற்ற கோரிக்கை
ஆவின்
பால் கலப்படம் தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என
தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து
தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி
வெளியிட்ட செய்திக்குறிப்பு: டேங்கர் லாரிகள் மூலம் ஆவின் நிறுவனத்துக்கு
கொண்டு வரப்பட்ட பாலில் தண்ணீர் கலந்து, 10 ஆண்டுகளுக்கும் மேலாக மோசடியில்
ஈடுபட்டவர்கள் மீது உணவு கலப்பட தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு
செய்யக் கூடாது.மாறாக
தமிழக அரசு கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய
வேண்டும். ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் தவறுகளை தடுக்கும்,
கண்டுபிடிக்கும் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தெரியாமல் இந்த
தவறுகள் பல ஆண்டுகள் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை.ஆகையால்
ஆவின் நிறுவனத்திலுள்ள ஊழல் தடுப்பு அதிகாரிகள் அனைவரையும் இந்த வழக்கின்
விசாரணை முடியும் வரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
சகாயத்துக்கு அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்காது ?
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கனிம வள முறைகேடு குறித்து விசாரிக்க
உள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திற்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு கிடைக்குமா
என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.கிரானைட் உட்பட கனிம வள முறைகேடு
குறித்து விசாரிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை, சிறப்பு அதிகாரியாக
நியமிக்க உத்தரவிடக் கோரி, சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி, சென்னை உயர்
நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதிகள், கனிம வள
கொள்ளை குறித்து விசாரிக்க, சகாயத்தை சிறப்பு அதிகாரியாக நியமித்தும்,
அவருக்கு தேவையான உதவிகளை, அரசு செய்து கொடுக்க வேண்டும் என்றும்
உத்தரவிட்டனர். அவிங்களே பால்ல தண்ணி கலந்து குழந்தைகளை வாட்டுராய்ங்க அவிங்க போயி ஒத்துழைப்பு ?
214 சுரங்கங்களின் உரிமங்களை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: கடந்த, 1993 முதல் 2010 வரை, பல்வேறு நிறுவனங்களுக்கு,
சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட, 214 நிலக்கரி சுரங்கங்களுக்கான
அனுமதியை, சுப்ரீம் கோர்ட் அதிரடியாக ரத்து செய்து, நேற்று உத்தரவிட்டது.
முந்தைய,
ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தில், தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி
சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
மத்திய கணக்கு தணிக்கை துறை தாக்கல் செய்த அறிக்கையில், 'சட்ட விரோதமாக
சுரங்க ஒதுக்கீடு செய்யப்பட்டதால், அரசுக்கு, 1.86 லட்சம் கோடி ரூபாய்
இழப்பு ஏற்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.
ஐ.மு., கூட்டணி ஆட்சி: கடந்த,
2012ல், இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு எடுத்தது. சுப்ரீம் கோர்ட்,
இந்த விசாரணையை கண்காணித்தது. விசாரணையின் இடையில், ஐ.மு., கூட்டணி ஆட்சி
காலத்துக்கு முன், தே.ஜ., கூட்டணி ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சுரங்க
ஒதுக்கீட்டிலும், முறைகேடு நடந்தாக புகார் கூறப்பட்டது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடும் 1. 86 லட்சம் கோடி இழப்பு ? சுரங்க முறைகேடுகளிலும் 1.86 லட்சம் கோடி இழப்பு ? எப்படி இரண்டிலும் அச்சொட்டாக ஒரே அளவு ? எள்ளளவும் பிசகாமல் இழப்பு ஏற்பட்டது ? சும்மா சும்மா ஜோக் அடிக்கக்கூடாது , முதல்ல இந்த இலக்கத்தை கண்டு பிடிச்சவிங்களை தூக்கி ஜெயில்ல போடணும் . முரளி மனோகர் ஜோஷி முதல்ல உள்ள போகணும் அவருதாய்ன் ராஜா இவ்வளவு கோடின்னு வலியுறுத்தினாராம் எல்லாம் பார்ப்பான் சேட்டை . அடுத்தது நம்ப பக்கத்துக்கு மலையாள டெல்லி ஜால்ராக்கள் ? நம்மக்கு என்னவோ இது கம்பியுட்டர் பண்ணின முறைகேடுன்னு தோணுது ! அதாய்ன் சேம் நம்பர் சேம் தொகை , மனுஷனால இது சாத்தியமே இல்லை / இந்த இலக்கத்துக்கு எதோ நியு மோராலாஜி விவகாரம் இருக்கு ?
புதன், 24 செப்டம்பர், 2014
புலியின் மீது எந்த தவறும் இல்லை; இளைஞர் மீது தான் தவறு : டெல்லி உயிரியல் பூங்கா விளக்கம்
டெல்லி
உயிரியல் பூங்காவில் இளைஞரை புலி தாக்கி கொன்ற விவகாரத்தில், புலி மீது
எந்த தவறும் இல்லை என்றும் தடுப்பு வேலியை தாண்டி சென்ற இளைஞர் மீதே முழு
தவறும் உள்ளது என்று டெல்லி உயிரியல் பூங்கா அறிவித்துள்ளது.தலைநகர்
டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவில் நேற்று வெள்ளைப்புலியின் வசிப்பிட
பகுதிக்குள் தவறிவ் விழுந்த 20 வயது இளைஞர் ஒருவரை, அங்கு வந்த
வெள்ளைப்புலி அந்த வாலிபரை தனது வாயால் கவ்வி சென்றதுபலியான வாலிபர்,
டெல்லி ஆனந்த் பர்பாத் பகுதியை சேர்ந்த மக்சூத் என தெரிய
வந்துள்ளது.வாலிபரின் கழுத்து, தலையை கடித்துக் குதறிய வெள்ளைப்புலி, அவரது
தலையின் சில பகுதிகளை தின்று விட்டதாக பூங்கா ஊழியர்கள் சிலர்
தெரிவித்தனர். இந்த சம்பவத்தையடுத்து மத்திய பூங்கா மற்றும் சுற்றுசூழல்
அதிகாரிகள் டெல்லி உயிரியல் பூங்காவிற்கு வருகை புரிந்து பாதுகாப்பு
அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தனர். இதுதாண்டா பொறுப்பான பதில் !
பாவனாவின் காதலன் வேறு பெண்ணை திருமாணம் ?
சென்னை:
பாவனா பாய்பிரண்ட் அனூப் மேனன் திடீர் திருமண அறிவிப்பு
வெளியிட்டார்.‘சித்திரம் பேசுதடி, ‘ஜெயம் கொண்டான், ‘தீபாவளி படங்களில்
நடித்திருப்பவர் பாவனா. கோலிவுட்டில் மார்க்கெட் இல்லாததால் மலையாளம்,
கன்னட படங்களில் நடித்து வருகிறார். இவரது திருமண செய்தி கடந்த ஒரு
வருடமாகவே உலவி வருகிறது. மலையாள நடிகர் அனூப் மேனனை பாவனா காதலிப்பதாகவும்
இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் அவ்வப்போது கிசுகிசு வந்த
வண்ணம் இருந்தது. 35 வயதை கடந்த அனூப் மேனன் தனது திருமண முடிவை திடீர்
என்று அறிவித்தார்.
ராமன் ஒரு கோழை மன்னன் ! பொய்புலவர்களால் ஊதி ஊதி பெருசாகிய பலூன்தான் ஸ்ரீ ராமன் என்பவன் !
இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – டாக்டர் அம்பேத்கர் – 2
சுக்ரீவனும், அனுமானும் இராமனுக்காக திரட்டிய (வானர)
சேனையோடு இலங்கை மீது இராமன் படையெடுக்கிறான். அப்போதும் வாலி-சுக்ரீவன்
ஆகிய இரு சகோதரர்களிடையே கையாளப்பட்ட மிகக் கேவலமான வழிமுறையைத்தான் இராமன்
கையாளுகிறான். பேரரசன் இராவணனையும் அவன் மகனையும் கொன்றுவிட்டு இராவணனுடைய
தம்பி விபீஷணனை அரியணை ஏற்றுவதாய்ச் சொல்லி விபீஷ்ணனின் உதவியைப்
பெறுகிறான். அதன்படி இராவணனையும் அவனுடைய மகன் இந்திரஜித்தையும் இராமன்
கொன்று விடுகின்றான். போர் ஓய்ந்தபின் இராமன் செய்கிற முதற் காரியம்
பேரரசன் இராவணனின் உடலை நல்லடக்கம் செய்வது தான். அதன் பின்னர் இராமனின்
நோக்கமெல்லாம் விபீஷணனை அரியணையிலேற்றுவதிலேயே இருந்தது. ஆட்சி அரங்கேறிய
பின், தானும் இலட்சுமணன் சுக்ரீவன் ஆகியோரும் சுக மகிழ்வோடு இருப்பதாகவும்
இராவணன் கொல்லப்பட்ட சேதியையும் அனுமான் மூலம் சீதைக்கு அனுப்புகிறான்.
நடிகைகளின் சம்பள பட்டியல் இதோ ! நடிகர்களின் சம்பளத்தை விட எகிறியது ! அனுஷ்கா நயன்தாரா .........
கதாநாயகிகளின் இந்த வருடத்திய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. பல நடிகைகள் இளம் கதாநாயகர்கள் சம்பளத்தைவிட அதிகம் வாங்குகிறார்கள்.
கடந்த வருடம் வரை முன்னணி நடிகைகள் பலருடைய சம்பளம் ரூ.1 கோடிக்கு கீழ்தான் இருந்தது. இந்த வருடம் ரூ.2 கோடியை எட்டி உள்ளது.
நயன்தாராதான் இதுவரை அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதல்
இடத்தில் இருந்தார். தற்போது அவரை பின்னுக்கு தள்ளி விட்டு அனுஷ்கா
முதலாவதாக வந்துள்ளார். தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கும் அவர்
ரூ.2 கோடியில் இருந்து 2½ கோடி வரை வாங்குகிறாராம்.
தெலுங்கில் மெகா பட்ஜெட்டில் தயாராகும் சரித்திர படமான ‘ருத்ரமா தேவி’
படத்தில் நடிக்க ரூ.2½ கோடி வாங்கியுள்ளாராம். இந்த படம் தமிழிலும்
வருகிறது. தமிழில் ரஜினியுடன் ‘லிங்கா’ மற்றும் கவுதம்மேனன் இயக்கும்
படத்தில் அஜீத் ஜோடியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். தெலுங்கு, தமிழில்
தயாராகும் ‘பாகுபலி’ படமும் கைவசம் உள்ளது.
கடத்தல், கொலை ! Ex திமுக அமைச்சர் பெரியசாமி மகள் மதுரையில் கைது
மதுரை: மதுரை ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஜமால்முகமது, (61) சொத்துக்காக
கடத்தப்பட்டு செப்டம்பர் 2ல் கொடைக்கானலில் கொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கில், சொத்து வாங்கிய தி.மு.க. முன்னாள் அமைச்சரும் தற்போதைய
எம்.எல்.ஏவுமான ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா, (36) உட்பட மூவரை போலீசார்
கைது செய்தனர்.
மதுரை சின்ன சொக்கிக்குளத்தை சேர்ந்தவர் ஜமால் முகமது. ரியல் எஸ்டேட்
அதிபரான இவர் கடந்த 2ம் தேதி கொடைக்கானலுக்கு கடத்திச்செல்லப்பட்டு கொலை
செய்யப்பட்டார்.
இது தொடர்பாக, தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி, திருப்பரங்குன்றத்தை
சேர்ந்த பூங்கொடி(39) என்பவரை முதலில் கைது செய்தனர். இதையடுத்து, மதுரை
முனிச்சாலை பகுதியை சேர்ந்த சங்கர் (26) என்பவர் மேலூர் கோர்ட்டில் சரண்
அடைந்தார். அவர் அளித்த தகவலின்பேரில், போலீசார் கொடைக்கானலுக்கு சென்று
ஜமால்முகமது உடலை மீட்டனர்.
திமுக தலைவர் கலைஞரும் பாமாக தலைவர் ராமதாசும் சந்திப்பு !
திமுக தலைவர்
கலைஞரை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புதன்கிழமை காலை சந்தித்தார்.
இச்சந்திப்பு சென்னை கோபாலபுரம் வீட்டில் நடந்தது. அன்புமணி ராமதாஸ் மகள்
திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கி, அழைப்பு விடுத்தார்.வெறும் மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு என்று இதை ஒதுக்கிவிடமுடியாது, அன்புமணியின் மகளின் திருமணத்திற்கு அன்புமணி அல்லவா வந்திருக்கவேண்டும்? .நிச்சயமாக இரு கட்சிகளும் நெருங்கிவருகிறது , அது மட்டுமல்ல வெறும் கட்சிகளின் கூட்டணி என்பதையும் தாண்டி தொண்டர் மட்டத்திலும் சுமுகஉறவு ஏற்பட்டால்தான் கூட்டணி அமைப்பதன் நோக்கம் நிறைவேறும் என்ற அரசியல் பாலபாடத்தை காலம் கடந்தாவது புரிந்து கொண்டிருப்பது நல்லதே.
ஜிகிர்தண்டாவை தேடி பிடித்து பாராட்டிய பாரதிராஜா !
சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம்
‘ஜிகர்தண்டா’. இப்படத்தை கார்த்திக் சுபாராஜ் இயக்கியிருந்தார்.
சித்தார்த்-லட்சுமி மேனன் ஜோடியாக நடித்திருந்த இப்படத்தில் சிம்ஹா முக்கிய
கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் அனைவரிடையே
அதிகம் பேசப்பட்டது. ஆக்ஷன் கலந்த காமெடி படமாக உருவாகிய இப்படத்திற்கு
சந்தோஷ் நாராயணன்
இசையமைத்திருந்தார்.
இசையமைத்திருந்தார்.
சாதனை ! செவ்வாய் கிரகத்தில் மங்கள்யான் நிலைநிறுத்தப்பட்டது !
பெங்களூர்: செவ்வாய் கிரகத்தில் இந்தியாவின் மங்கள்யான் விண்கலம்
வெற்றிகரகமாக நிலைநிறுத்தப்பட்டது. வெண்கலத்தில் உள்ள 8 இஞ்சின்களையும்
இயக்கி சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. முதல் சோதனையிலேயே
இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்திய விஞ்ஞானிகள் மங்கள்£யன் விண்கலத்தை
இன்று காலை 8 மணயளவில் செவ்வாய் கிரக சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்தி
புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளனர். முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரக
சுற்றுவட்டபாதையில் வெண்கலத்தை நிலைநிறுத்திய முதல் நாடு என்ற வரலாற்று
சாதனையை தான் இஸ்ரோ நிகழ்த்தியுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான முந்தைய தீர்ப்பை திருத்தம் செய்த சென்னை ஐகோர்ட்
ஐகோர்ட்டின் பதிவாளர் அலுவலகம் தகவல்களை வழங்குவதற்காக பணி நேரத்தை செலவு
செய்ய முடியாது. எனவே, மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து
செய்கிறோம்.
இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
சென்னை ஐகோர்ட்டின் இந்த கருத்தானது, தகவல் அறியும் சட்டத்தை நல்ல நோக்கத்துக்காக பயன்படுத்தும் சில சமூக ஆர்வலர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
சென்னை ஐகோர்ட்டின் நிர்வாக பதிவாளராக இருப்பவர் வி.விஜயன். இவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:- புதுச்சேரியை சேர்ந்த பி.பாரதி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு தகவல்களை கேட்டு 53 மனுக்களை அனுப்பியுள்ளார். அதில், சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டுக்கு எதிரான புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கேட்டுள்ளார். தலைமை மாஜிஸ்திரேட்டுக்கு எதிரான புகார் முடித்து வைக்கப்பட்டது பற்றிய விவரமும், தலைமை பதிவாளர் நியமனத்தில் தனி நடைமுறைகள் இல்லை என்ற விவரமும் அவருக்கு பதிலாக வழங்கப்பட்டது.

பயனில்லாத சட்டங்களைத் திரும்பப் பெற புதிய மசோதா: ரவி சங்கர் பிரசாத்
பயனில்லாத நூற்றுக்கணக்கான சட்டங்களையும், சட்டத்
திருத்தங்களையும் திரும்பப் பெறுவதற்கான புதிய மசோதாவை நாடாளுமன்ற
குளிர்காலக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய சட்டத் துறை
அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, பயனில்லாத 32 சட்டங்களை திரும்ப பெறுவதற்கான மசோதாவை அறிமுகப்படுத்தியது. முன்னதாக 2001ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இதே போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:
பயனற்ற 32 சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதா ஏற்கெனவே நிலுவையில் உள்ளது. பயனில்லாமல் உள்ள நூற்றுக்கணக்கான சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான மற்றொரு மசோதாவை அடுத்த மக்களவை கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த உள்ளேன் என்று ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார். ஆனால் யாரும் பேசாத சமஸ்கிருதத்தை ஊக்குவிக்க புதிய சட்டங்கள் உருவாக்கப்படும் ? இந்துதத்வாவை வலியுறுத்தும் புதிய சட்டங்களும் இயற்றப்படும் ? ரொம்ப நல்ல இருக்கு உங்க ரூட்டு ? சிம்ப்ளி உருப்படாது படாது ?

20 ஆண்டுகளாக துப்பரவு பணியாளர்கள் சம்பளம் வெறும் 100 ரூபாய் மாத்திரமே ! ம்ம்ம் மங்கல்யான் செவ்வாயை தொடுகிறது !
அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில், 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து
வரும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு,
மாதத்திற்கு வெறும், 100 ரூபாய் மட்டுமே, தமிழக அரசு சம்பளம் வழங்கி
வருகிறது. 'கடைநிலை ஊழியர்களின் பிரச்னையை, தமிழக அரசு கண்டுகொள்ளாமல்
இருப்பது வேதனை அளிக்கிறது' என, துப்புரவு பணியாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த, 1990களுக்கு முன் வரை, கல்வித்துறை, உள்ளாட்சி அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. வட்டார வளர்ச்சி அலுவலகம் (பி.டி.ஓ.,) மூலம் தான், ஆசிரியர்கள் சம்பளம் பெற்றனர். கல்வித்துறை, தனியாக உருவாக்கப்பட்ட பின், கல்வித்துறை அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர் அனைவரும், கல்வித்துறையின் கீழ் சேர்க்கப்பட்டனர். ஆனால், பள்ளிகளில், துப்புரவு வேலை பார்த்த பணியாளர்களை மட்டும், கல்வித்துறை கீழ் கொண்டுவராமல் விட்டு விட்டனர்.இதனால், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இப்போதும், வெறும், 100 ரூபாய் சம்பளம் பெறும் அவலத்தில், துப்புரவு பணியாளர்கள் இருக்கின்றனர். சம்பளத்தை உயர்த்துவது மட்டும் போதாது...கட்டாயம் இந்த உயர்வு 20 ஆண்டு காலம் முன்தேதி இட்டு,,,அதற்கான வட்டியும் முதலுமாக சேர்த்து சில பல லகரங்களை இத்தனை ஆண்டு காலம் பொறுமையோடு இந்த கொடுமைகளை அனுபவித்தவர்களுக்கு உடனே வழங்கப்பட வேண்டும்??? ஆசிரியர், தலைமை ஆசிரியர்,டி இ ஒ , சீ இ ஒ ,தாசில்தார்,கலெக்டர், கவுன்சிலர், எம் எல் எ , எம் பீ....தோளான் துருத்தி ஒருத்தருக்குமா இவர்கள் நிலை இதுவரை தெரியவில்லை.... ஏழைகள் என்றால் என்ன அவ்வளவு இளப்பமா???

தாம்பத்திய உறவுக்கு மறுத்தால் விவாகரத்து ! சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு !
தமிழ்நாட்டைச்
சேர்ந்த ஒரு தம்பதிகள் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். லண்டனில் வசித்து
வரும் கணவர், மனைவியிடம் விவாகரத்து கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
தொடர்ந்து இருந்தார். அதில், தாம்பத்திய உறவுக்கு உடன்பட மறுப்பது உள்ளிட்ட
பல்வேறு வழிகளில், தன் மனைவி தன்னை மனரீதியாக கொடுமைப்படுத்தியதாக அவர்
குற்றம் சாட்டி இருந்தார்.அதற்கு
அப்பெண் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தனக்கு குழந்தை பெற
விருப்பம் இல்லாததால், தாம்பத்திய உறவுக்கு உடன்பட மறுத்ததாக கூறி
இருந்தார். ஆனால் அதை ஐகோர்ட் ஏற்றுக்கொள்ளவில்லை.நீங்கள்
இருவரும் படித்தவர்கள். எத்தனையோ கருத்தடை முறைகள் உள்ளன. நீங்கள்
விரும்பினால், அதை பயன்படுத்தி, கர்ப்பத்தை தடுத்து விடலாம்’ என்று கூறிய
நீதிபதிகள், இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பு அளித்தனர்.அதை
எதிர்த்து, அப்பெண் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். அம்மனு,
நீதிபதி எஸ்.ஜே.முகோபாத்யாயா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரிக்கப்பட்டது.
சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்திய நீதிபதிகள், பெண்ணின்
அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தனர்.நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:–கணவனோ
அல்லது மனைவியோ, போதிய காரணம் இல்லாமல், ஒருவர் மற்றவருடன் நீண்ட காலமாக
தாம்பத்திய உறவுக்கு உடன்பட மறுத்து வருவது மனரீதியாக
கொடுமைப்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கும். இதன் அடிப்படையில், விவாகரத்து
வழங்க முடியும்.தாம்பத்திய
உறவுக்கு உடன்பட மறுத்ததற்கு அந்த பெண் கூறிய காரணத்தை ஏற்க முடியாது.
இருப்பினும், இந்த வழக்கின் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும், இருதரப்பின்
பொருளாதார சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, அந்த பெண்ணுக்கு அவருடைய கணவர்
ஒரே முறை ஜீவனாம்சமாக ரூ.40 லட்சம் வழங்குமாறு உத்தரவிடுகிறோம். இவ்வாறு
நீதிபதிகள் கூறினர். nakkheeran.in
செவ்வாய், 23 செப்டம்பர், 2014
‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜாவில் நடிகை விசாகா சிங்
அகதிகள் முகாமிலும் தங்கி இருந்து அருண் செல்வராசன் வேவு பார்த்தான் !
தூத்துக்குடி: எட்டயபுரம் இலங்கை அகதிகள் முகாமில் பாகிஸ்தான் உளவாளி
அருண் செல்வராசன் தங்கியிருந்து தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் 3
இடங்களில் வேவு பார்த்து ரகசிய தகவல்கள் சேகரித்தது என்ஐஏ அதிகாரிகள்
விசாரணையில் தெரியவந்துள்ளது.பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்காக
தமிழகத்தில் உளவு பார்த்த இலங்கையை சேர்ந்த அருண் செல்வராசனை தேசிய
புலனாய்வு துறையினர்(என்ஐஏ) சமீபத்தில் சென்னையில் கைது செய்தனர்.
இலங்கையில் இருந்து வந்த இவர், சாலிகிராமத்தில் குடியேறி, பல விஐபிகளுடன்
தொடர்பு ஏற்படுத்தியிருக்கிறார். பின்னர், இதை பயன்படுத்தி உளவு வேலைகளில்
ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர
விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுப்ரமணியம் சாமி மீது ஜெயா மேலும் இரண்டு கிரிமினல் வழக்குகள் ! சு சாமியை கைது பண்ணும்வரை ஓயமாட்டார் ?
சுப்பிரமணியசாமி மீது மேலும் 2 கிரிமினல் அவதூறு
வழக்குகள் சென்னை செசன்சு கோர்ட்டில் ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
ஆதாரமற்ற கருத்துக்கள்
சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா
சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்துள்ள கிரிமினல்
அவதூறு வழக்கில் கூறியிருப்பதாவது:
பாரதீய ஜனதா
கட்சியை சேர்ந்த சுப்பிரமணியசாமி, தன்னுடைய டுவிட்டர் இணையதளம் பக்கத்தில்
கடந்த 20-ந் தேதி, ”ஜெயலலிதாவுக்கு ஜெயில்”என்ற தலைப்பில் கட்டுரை
வெளியிட்டுள்ளார். அதில், முதல்-அமைச்சரை பற்றி அவதூறான கருத்துக்களை
தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கள் அனைத்தும் தவறான, ஆதாரமற்றதாகும். சு சாமிமீது ஜெயா கொண்டிருக்கும் கோபத்தின் பின்னணியில் எதோ ஒரு உள்குத்து இருக்கிறது, இரண்டு பேருமே பிராடுகள் . இருவருமே பல விடயங்களை மறைக்கிறார்கள் ? சாமியை ஒரு வழிபண்ணுவதில் ஜெயா மிக தீவிரமாக இருப்பது தெரிகிறது , பல நாள் கள்ளர் இருவரும் மாட்டிகிடும் நாள் வந்துவிட்டது ?
கோவை கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை !
அதிமுகவின் உள்ளாட்சி தேர்தல் வெற்றியை பார்த்து நாடே சிரிக்கிறது !
ஆளும் கட்சியினரைப் பார்த்து தமிழகமே சிரிக்கின்றது: விஜயகாந்த் குற்றச்சாட்டுதமிழகத்தில்
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், அதன் முடிவுகள்
குறித்தும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை 23.09.2014
செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,>தமிழகத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி இடைத்தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறவில்லை என நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். முறைகேடாக பெற்ற வெற்றிக்கு விழா கொண்டாடும் ஆளும் கட்சியினரைப் பார்த்து தமிழகமே சிரிக்கின்றது.&இந்த இடைத்தேர்தலில் 45 சதவீதம் 50 சதவீதம் என வாக்குப்பதிவு குறைவாக நடந்துள்ளது. பெரும்பாலான மக்கள் ஆளும்கட்சியின் மீது நம்பிக்கை இல்லாமல், அதிமுகவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதால்தான் வாக்காளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கவே வாக்குச்சாவடி மையங்களுக்கு வரவிலலை.
வீட்டு பணிப்பெண்களுக்கு உரிய மரியாதை இல்லை ! பலரும் குழந்தை தொழிலாளர்கள் !
சில
நாட்களுக்கு முன்பு வரை தொலைக்காட்சிகளில் பரவலாகவும் தொடர்ச்சியாகவும்
ஒளிபரப்பப்பட்ட விளம்பரம் அது. அந்த வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவி
திடீரென்று ஞானம் உதித்ததுபோல தனது வீட்டில் வேலை செய்யும்
பணிப்பெண்ணுக்குத் தான் அருந்தும் அதே கோப்பையில் தேநீர் தருவார்.
‘எஜமானி’யின் கையில் இருக்கும் கோப்பையையும் தனது கோப்பையையும் பார்த்துப்
பரவசப்பட்டுப்போவார் பணிப்பெண். சில பெண் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக
இப்போதெல்லாம் அந்த விளம்பரம் வருவதில்லை. வீட்டு வேலை செய்யும்
பெண்களுக்கான கருத்தரங்கில் இதுபற்றிப் பேசும்போதே குரல் உடைகிறது
சாந்திக்கு. “விளம்பரங்கள்ல மட்டுமில்ல, சீரியல்ல தொடர்ந்து எங்கள
வேலைக்காரி வேலைக்காரின்னுதான் சொல்லுவாங்க. நாங்களும் பல சேனல்களுக்கு மனு
போட்டுப் பார்த்துட்டோம். அவங்க மாத்திக்கிற மாதிரி தெரியல. நாங்க
வேலைக்காரின்னா நீங்க எல்லாம் யாரு?” என்கிறார். ஜெயலலிதா வீட்டில் கூட இப்படி குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாக ஒரு பேச்சு இருக்கிறது ! யார்தான் அங்கு ஆய்வு நடத்த முடியும் ? ஹீல்ஸ் செருப்பினால் அடிவாங்க முடியுமா ?
செல்வராகவனின் மாலை நேரத்து மயக்கத்தை தனுஷ் தயாரிக்கிறார் !
இயக்குனர்
செல்வராகவன் இயக்கும் படத்தை தயாரிக்கிறார் தனுஷ்.‘ஆயிரத்தில் ஒருவன்‘,
‘இரண்டாம் உலகம்‘ என அதிக பொருட்செலவில் படங்களை இயக்கியவர் செல்வராகவன்.
இப்படங்கள் எதிர்பார்த்தளவுக்கு கைகொடுக்கவில்லை. அடுத்து தனுஷ் நடிக்க
‘இது மாலை நேரத்து மயக்கம்‘ என்ற படத்தை இயக்க முடிவு செய்தார். அதற்கான
வேலைகளும் தொடங்கிய வேகத்திலேயே நின்றுபோனது. இந்நிலையில் செல்வராகவனின்
மனைவி கீதாஞ்சலி ‘மாலை நேரத்து மயக்கம்‘ என்ற படத்தை இயக்கும் பொறுப்பை
ஏற்றார். இவர் இயக்கும் முதல் படம் இது. செல்வராகவன் இயக்கவிருந்த
படத்தைத்தான் கீதாஞ்சலி இயக்குகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் அதை
செல்வராகவன் மறுத்தார். ‘நான் இயக்கவிருந்த ஸ்கிரிப்ட்டை கீதாஞ்சலி
இயக்கவில்லை.
மது அருந்திய பின் பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட 11 பயிற்சி நீதிபதிகள் பணி நீக்கம் !
லக்னோ: விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பயிற்சி பெண்
நீதிபதியிடம் தவறாக நடந்து கொண்ட 11 பயிற்சி நீதிபதிகளை உத்தரபிரதேச அரசு
அதிரடியாக நீக்கம் செய்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் 2012 ஆம் ஆண்டு 40 மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட
வேண்டிய சிவில் நீதிபதி, ஜூனியர் சிவில் நீதிபதி மற்றும் மாஜிஸ்திரேட்டு
பதவிகளுக்காக 22 பெண்கள் உள்பட 74 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள்
அனைவருக்கும் லக்னோ நகரில் உள்ள மாநில நீதித்துறை பயிற்சி மற்றும்
ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி தொடங்கி 4 மாத கால
பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்கிடையே பயிற்சி முடிவடைவதற்கு முதல்நாள் லக்னோ நகரில் உள்ள ஒரு
உணவகத்தில் பயிற்சி நீதிபதிகள் அனைவருக்கும் ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு
ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது, பயிற்சி நீதிபதிகளில் 40 பேர்
அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளனர். பின்னர் அவர்கள், அங்கிருந்த
பயிற்சி பெண் நீதிபதி ஒருவரிடம் தகாத முறையிலும், நெறிமுறைகளை மீறி
அநாகரீகமாகவும் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
பாஜக பிரெஞ்சு கூட்டணியில் டெல்லி மெட்ரோ ஊழல்
டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒப்பந்தம்
பெறுவதற்காக ‘அல்ஸ்டோம் இங்கிலாந்து’ என்ற பிரெஞ்சு ரயில் மற்றும் டர்பைன்
உற்பத்தி நிறுவனத்தின் இங்கிலாந்து கிளை லஞ்ச ஊழலில் ஈடுபட்டது இங்கிலாந்து
அரசால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2000-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை
டெல்லி மெட்ரோ பணி, மற்றும் போலந்து, துனிசியா நாடுகளில் டிராம் சேவை
கட்டுமானங்களுக்கான ஒப்பந்தப் பணி பெறுவதற்காக ஊழல், ஊழலுக்கான சதி செய்தல்
போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக இந்நிறுவனத்தின் மீது வழக்கு
போடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும்
முதலாளித்துவத்துவத்திற்கே உரிய முறைகளில் ஆட்சியாளர்களை ஊழல்மயப்படுத்தி
வளர்ந்துள்ளது இந்நிறுவனம்.
டெல்லி மெட்ரோ திட்டத்தின் முதல் கட்டத்தில் ரயில் கட்டுப்பாடு, சிக்னல் மற்றும் தொலைதொடர்பு கட்டுமானம் போன்ற பணிகளுக்கான ஒப்பந்தங்களை பெறுவதற்காக 30 லட்சம் யூரோக்களை (சுமார் ரூ 24 கோடி) லஞ்சமாக கொடுத்துள்ளது அல்ஸ்டோம்.