வியாழன், 25 செப்டம்பர், 2014

Liar's Dice ! ஆஸ்கர் போட்டியில் நடிகை கீது மோகன்தாஸ் இயக்கிய படம்


திருவனந்தபுரம்: கீது மோகன்தாஸ் இயக்கிய படம் ஆஸ்கர் போட்டிக்கு
தெரிவாகி உள்ளது .நள தமயந்தி, பொய் படங்களில் நடித்தவர் கீது மோகன்தாஸ். மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். இவர் இயக்கிய மலையாள படம் ‘லயர்ஸ் டயஸ். இப்படம் ஆஸ்கர் விருது போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு படங்களின் போட்டி பிரிவில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ள ஒரே படம் இது என்று இந்திய திரைப்பட சம்மேளனம் அறிவித்துள்ளது. கங்கனா ரனாவத் நடித்த ‘குயின்‘, மராட்டிய படம் ‘எல்லோ‘ போன்ற படங்கள் இந்த பிரிவில் செல்வதற்காக போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 87வது ஆஸ்கர் விருது போட்டி வரும் பிப்ரவரி 22ம் தேதி நடக்கிறது.


இமயமலை பகுதி கிராமத்தை சேர்ந்த ஒரு பெண், தனது மகளுடன் காணாமல் போன கணவரை தேடுவதே இதன் கதை. லயர்ஸ் டயஸ் படத்தை இயக்கி இருக்கிறார் கீது மோகன்தாஸ். முழுநீள படமாக இவர்  இயக்கும் முதல் படம் இது. கடந்த 2008ம் ஆண்டு ‘கெல்குன்னுன்டோ‘ என்ற குறும்படத்தை இவர் இயக்கினார். ஆஸ்கர் போட்டியில் வெளிநாட்டு படங்கள் போட்டியில் இதுவரை இந்திய படங்கள் எதுவும் விருது வென்றதில்லை. தேர்வுக்கான நியமனம் செய்யப்படும் 5 படங்களில் ஒரு படமாக கடைசியாக ‘லகான் படம் இடம்பெற்றிருந்தது. அதேபோல் ‘மதர் இண்டியா, ‘சலாம் பாம்பே ஆகிய 2 படங்களும் நியமன பட்டியலில் இடம்பெற்றிருந்தது. - tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக