சனி, 27 செப்டம்பர், 2014

ஜெயலலிதா தண்டிக்கப்பட்டால் 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம்


பெங்களூர்: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அவருக்கு 1 ஆண்டு முதல் அதிக பட்சம் 7 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது. 66 வயதாகும் ஜெயலலிதாவுக்கு இப்படி ஒரு தண்டனை கிடைத்தால், அது தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் அகில இந்திய அளவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா தண்டிக்கப்பட்டால் 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம் ஏற்கனவே 1996ம் ஆம்டு இந்த வழக்கில் ஜெயலலிதா கைதாகி சில நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைக்கும்பட்சத்தில் அவர் உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டி வரும். அப்படி இல்லாமல் அவர் விடுதலை செய்ய்பட்டால், அடுத்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெறும் வாய்ப்பு பிரகாசமாகும்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக