செவ்வாய், 23 செப்டம்பர், 2014

செல்வராகவனின் மாலை நேரத்து மயக்கத்தை தனுஷ் தயாரிக்கிறார் !

இயக்குனர் செல்வராகவன் இயக்கும் படத்தை தயாரிக்கிறார் தனுஷ்.‘ஆயிரத்தில் ஒருவன்‘, ‘இரண்டாம் உலகம்‘ என அதிக பொருட்செலவில் படங்களை  இயக்கியவர் செல்வராகவன். இப்படங்கள் எதிர்பார்த்தளவுக்கு கைகொடுக்கவில்லை. அடுத்து தனுஷ் நடிக்க ‘இது மாலை நேரத்து மயக்கம்‘ என்ற படத்தை இயக்க  முடிவு செய்தார். அதற்கான வேலைகளும் தொடங்கிய வேகத்திலேயே நின்றுபோனது. இந்நிலையில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி ‘மாலை நேரத்து மயக்கம்‘  என்ற படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றார். இவர் இயக்கும் முதல் படம் இது. செல்வராகவன் இயக்கவிருந்த படத்தைத்தான் கீதாஞ்சலி இயக்குகிறார் என்று  கூறப்பட்டது. ஆனால் அதை செல்வராகவன் மறுத்தார். ‘நான் இயக்கவிருந்த ஸ்கிரிப்ட்டை கீதாஞ்சலி இயக்கவில்லை.


அவர் இயக்குவது வேறு ஸ்கிரிப்ட். படத்தின் தலைப்பு நன்றாக இருப்பதாக கேட்டதால் அதை வைத்துக்கொள்ள அனுமதி தந்தேன்‘ என்றார். இதனிடையே படம்  இயக்குவதற்கு சில காலம் ஓய்வு தந்துவிட்டு பிள்ளைகளுடன் பொழுதை கழிக்க எண்ணி இருந்தார் செல்வராகவன். ஆனால் யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர்  அரவிந்த் கிருஷ்ணாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது விருப்பத்தை கீதாஞ்சலியிடம் தெரிவித்திருந்தார். இந்த விஷயம் தனுஷ் காதுக்கு  போனது. அண்ணன் நினைத்ததை செயல்படுத்த முடிவு செய்தார் தனுஷ். பைனான்ஸ் பிரச்னையில் செல்வராகவன் இருப்பதால் அப்படத்தை தனுஷே தயாரிக்க முடிவு  செய்திருக்கிறாராம். - See more at: tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக