புதன், 24 செப்டம்பர், 2014

பயனில்லாத சட்டங்களைத் திரும்பப் பெற புதிய மசோதா: ரவி சங்கர் பிரசாத்

பயனில்லாத நூற்றுக்கணக்கான சட்டங்களையும், சட்டத் திருத்தங்களையும் திரும்பப் பெறுவதற்கான புதிய மசோதாவை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, பயனில்லாத 32 சட்டங்களை திரும்ப பெறுவதற்கான மசோதாவை அறிமுகப்படுத்தியது. முன்னதாக 2001ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இதே போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது: 
பயனற்ற 32 சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதா ஏற்கெனவே நிலுவையில் உள்ளது. பயனில்லாமல் உள்ள நூற்றுக்கணக்கான சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான மற்றொரு மசோதாவை அடுத்த மக்களவை கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த உள்ளேன் என்று ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.  ஆனால் யாரும் பேசாத சமஸ்கிருதத்தை ஊக்குவிக்க புதிய சட்டங்கள் உருவாக்கப்படும் ? இந்துதத்வாவை வலியுறுத்தும் புதிய சட்டங்களும் இயற்றப்படும் ? ரொம்ப நல்ல இருக்கு உங்க ரூட்டு ? சிம்ப்ளி உருப்படாது படாது ?

முன்னதாக பயனற்ற சட்டங்களை கண்டறிவதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் ஒரு குழுவை அமைத்தார்.
பழைய பரிந்துரைகள் ஆய்வு: வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, நிர்வாக சட்டங்களை ஆய்வு செய்ய 1998ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழுவானது, 1,382 சட்டங்களை திரும்பப்பெற பரிந்துரைத்தது. அதில், 415 சட்டங்கள் இதுவரை திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இந்நிலையில் மோடியால் அமைக்கப்பட்டுள்ள புதிய குழு வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளையும் ஆராய உள்ளது.
72 பயனற்ற சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற கடந்த 12ஆம் தேதி சட்ட அமைச்சகம் பரிந்துரைத்திருந்தது. dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக