புதன், 24 செப்டம்பர், 2014

நடிகைகளின் சம்பள பட்டியல் இதோ ! நடிகர்களின் சம்பளத்தை விட எகிறியது ! அனுஷ்கா நயன்தாரா .........

கதாநாயகிகளின் இந்த வருடத்திய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. பல நடிகைகள் இளம் கதாநாயகர்கள் சம்பளத்தைவிட அதிகம் வாங்குகிறார்கள். கடந்த வருடம் வரை முன்னணி நடிகைகள் பலருடைய சம்பளம் ரூ.1 கோடிக்கு கீழ்தான் இருந்தது. இந்த வருடம் ரூ.2 கோடியை எட்டி உள்ளது. நயன்தாராதான் இதுவரை அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். தற்போது அவரை பின்னுக்கு தள்ளி விட்டு அனுஷ்கா முதலாவதாக வந்துள்ளார். தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கும் அவர் ரூ.2 கோடியில் இருந்து 2½ கோடி வரை வாங்குகிறாராம். தெலுங்கில் மெகா பட்ஜெட்டில் தயாராகும் சரித்திர படமான ‘ருத்ரமா தேவி’ படத்தில் நடிக்க ரூ.2½ கோடி வாங்கியுள்ளாராம். இந்த படம் தமிழிலும் வருகிறது. தமிழில் ரஜினியுடன் ‘லிங்கா’ மற்றும் கவுதம்மேனன் இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். தெலுங்கு, தமிழில் தயாராகும் ‘பாகுபலி’ படமும் கைவசம் உள்ளது.


நயன்தாரா ரூ.1½ கோடி வரை சம்பளம் பெறுகிறார். சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’, உதயநிதி ஜோடியாக ‘நண்பேண்டா’ படங்களில் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறார். ஜெயம்ரவி, சூர்யா ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் சேதுபதியுடன் ‘நானும் ரவுடிதான்’ படத்திலும் நடிக்கிறார். இவ்வருட இறுதிக்குள் சம்பளம் ரூ.2 கோடியை தொடும் என்கின்றனர்.

சமந்தா ஒரு படத்துக்கு ரூ.1½ கோடியில் இருந்து ரூ.2 கோடி வரை சம்பளம் நிர்ணயிக்கிறாராம். தெலுங்கில் ‘அல்லுடு சீனு’ படத்தில் நடிக்க ரூ. 2 கோடி கேட்டுள்ளார் என்கின்றனர். சூர்யா ஜோடியாக நடித்த ‘அஞ்சான்’ படம் சமீபத்தில் ரிலீசானது. அடுத்து விஜய்யுடன் நடிக்கும் ‘கத்தி’ படம் தீபாவளிக்கு வருகிறது.

காஜல்அகர்வால் ரூ.1 கோடி முதல் ரூ.1½ கோடி வரை வாங்குகிறார். தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். சுருதிஹாசன் ரூ.1 கோடி சம்பளம் வாங்குகிறார். தமிழில் விஷால் ஜோடியாக ‘பூஜை’ படத்தில் நடிக்கிறார். இந்தியில் நான்கு படங்கள் கைவசம் உள்ளன.

ஹன்சிகா ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை சம்பளம் பெறுகிறார். இவர் நடிப்பில் வந்த ‘அரண்மனை’ படம் வெற்றிகரமாக ஓடுகிறது. ‘மீகாமன்’, ‘வாலு’, ‘ரோமியோ ஜுலியட்’, ‘வேட்டை மன்னன்’ உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளன.

தமன்னாவுக்கு கடந்த வருடம் படங்கள் பெரிதாக ஓடவில்லை. இந்தி, தெலுங்கு படங்களில் நடிக்கிறார். ரூ.1 கோடி சம்பளம் வாங்குகிறார். திரிஷா ரூ.1 கோடி சம்பளம் வாங்குகிறார். அஞ்சலி ரூ.70 லட்சமும், நித்யாமேனன், பிரியாமணி, டாப்சி போன்றோர் ரூ. 50 லட்சமும் சம்பளம் பெறுகிறார்கள். cinema.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக