புதன், 24 செப்டம்பர், 2014

பாவனாவின் காதலன் வேறு பெண்ணை திருமாணம் ?

சென்னை: பாவனா பாய்பிரண்ட் அனூப் மேனன் திடீர் திருமண அறிவிப்பு வெளியிட்டார்.‘சித்திரம் பேசுதடி, ‘ஜெயம் கொண்டான், ‘தீபாவளி படங்களில் நடித்திருப்பவர் பாவனா. கோலிவுட்டில் மார்க்கெட் இல்லாததால் மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருகிறார். இவரது திருமண செய்தி கடந்த ஒரு வருடமாகவே உலவி வருகிறது. மலையாள நடிகர் அனூப் மேனனை பாவனா காதலிப்பதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் அவ்வப்போது கிசுகிசு வந்த வண்ணம் இருந்தது. 35 வயதை கடந்த அனூப் மேனன் தனது திருமண முடிவை திடீர் என்று அறிவித்தார்.


 இதுபற்றி அவர் கூறும்போது,‘விரைவில் எனது திருமணம் நடக்க உள்ளது. ஆனால் மணப்பெண் சினிமா துறையை சேர்ந்தவர் இல்லை. 26 வயதாக இருக்கும்போது நான் திரையுலகுக்கு வந்தேன். ஒரு டஜன் படங்களுக்கு மேல் கதையும் எழுதி இருக்கிறேன். இதில் பிஸியாக இருந்ததால் நிறைய விஷயங்களை நான் அனுபவிக்கவில்லை. குறிப்பாக எனக்கு பிடித்தமான புத்தகங்கள் படிப்பது, பயணம் செல்வதை குறிப்பிடலாம். இதற்கெல்லாம் விரைவில் நேரம் ஒதுக்க முடிவு செய்துள்ளேன். அப்போது இழந்த சந்தோஷங்களை அனுபவிப்பேன் என்றார். பாவனாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட அனூப் திடீரென்று திருமண அறிவிப்பை வெளியிட்டிருப்பது திரையுலகினருக்கு ஷாக் அளித்துள்ளது. - See more at: .tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக