செவ்வாய், 23 செப்டம்பர், 2014

‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜாவில் நடிகை விசாகா சிங்

ஒரு ஊர்ல ரெண்டு ராஜாவில் நடிக்க நடிகை விசாகா சிங்கிடம் கால்ஷீட் பெற்றார் பிரியா ஆனந்த்.இதுபற்றி இயக்குனர் ஆர். கண்ணன் கூறியது:ஊரை வெட்டியாக சுற்றிவரும் 2 இளைஞர்கள் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு ரயிலில் புறப்படுகின்றனர். அங்கு ஒரு பெண்ணை சந்திக்கின்றனர். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை, இதில் விமல், பிரியா ஆனந்த், விசாகா சிங், தம்பி ராமையா, நாசர் நடிக்கின்றனர். இப்படத்தில் வரும் இரண்டு முக்கியமான கேரக்டர்களுக்கு நடிகைகளை தேர்வு செய்து பார்த்தபோது ஒருவரும் சிக்கவில்லை. பிறகு ஏற்கனவே ஹீரோயினாக நடிக்கும் ஒருவரை போடலாம் என்று முடிவானது. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா‘ படத்தில் நடித்த விசாகா சிங் பொருத்தமாக இருப்பார் என்று முடிவானது. இதையறிந்த பிரியா ஆனந்த் மகிழ்ச்சி அடைந்தார். விசாகா சிங் எனக்கு நெருங்கிய தோழி. நானே பேசி நடிக்க வைக்கிறேன் என்றார். அதன்படி அவரிடம் பேசி கால்ஷீட் பெற உதவினார். அவரும் கெஸ்ட் ரோல் என்பதால் அதற்கான சம்பளம் மட்டுமே பெற்றுக்கொண்டு நடித்தார். மைக்கேல் ராயப்பன் படத்தை தயாரிக்கிறார்.இவ்வாறு டைரக்டர் கண்ணன் கூறினார். tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக