வியாழன், 25 செப்டம்பர், 2014

இந்திய டாப் 10 பணக்காரர் வரிசையில் மீண்டும் முகேஷ் அம்பானி முதலிடம் !

டாப் 10 வரிசை
 இந்திய பணக்காரர்களின் டாப் 10 வரிசையில், முகேஷ் அம்பானி 2,360 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் முதல் இடத்திலும், திலீப் ஷாங்வி 1,800 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் 2வது இடத்திலும், அசீம் பிரேம்ஜி 1,640 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் 3வது இடத்திலும், பல்லோன்ஜி மிஸ்த்ரி 1,590 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் 4வது இடத்திலும், லட்சுமி மிட்டல் 1,580 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் 5வது இடத்திலும் உள்ளனர். அதற்கு அடுத்து இந்துஜா பிரதர்ஸ் 1,330 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் 6வது இடத்திலும், ஷிவ் நாடார் 1,250 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் 7வது இடத்திலும், கோத்ரெஜ் குடும்பம் 1,160 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் 8வது இடத்திலும், குமார் பிர்லா 920 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் 9வது இடத்திலும், சுனில் மிட்டல் 780 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் 10வது இடத்திலும் உள்ளனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவில் உள்ள டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 8வது வருடமாக முதல் இடத்தில் உள்ளார்.  அவரது சொத்து மதிப்பு 260 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்ந்து 2,360 கோடி அமெரிக்க டாலராக உள்ளது என்று போர்ப்ஸ் செய்தி இதழ் தெரிவித்துள்ளது.  மேற்கண்ட பணக்காரர்கள் அனைவரும் மிகவும் தன்னம்பிக்கையேடு  நாணயத்தோடு கஷ்டப்பட்டு  உழைத்து படிப்படியாக முன்னேறியவர்கள்.  மேலும் தாய் மீது பற்று நாட்டின் மீது அடங்காத தேசப்பற்று கொண்டவர்கள். ஏழைகளை கண்டால் உருகிவிடும் இளகிய மனது கொண்டவர்கள் . இப்படிதாய்ன் மீடியாக்காரன் எழுதுவான்  வேறு என்ன புண்ணாக்கை எழுதுறது அத்தனையும் கேப்மாரிகள் மொள்ளை மாறிகள் முடிச்சவிக்கிகள்


டாப் 100 பணக்காரர்கள்

இது குறித்து அந்த இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் உள்ள டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் அனைவரும் முதல் முறையாக பில்லியனர்களாக (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) உள்ளனர்.  இந்தியாவில் உள்ள 100 பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு 34 ஆயிரத்து 600 கோடி அமெரிக்க டாலர்.  இது கடந்த 2013ம் ஆண்டில் இருந்த 25 ஆயிரத்து 900 கோடி என்ற சொத்து மதிப்பை விட 3ல் ஒரு பங்கு அதிகம்.

பங்கு சந்தை ஏற்றம்இது குறித்து போர்ப்ஸ் ஏசியாவின் இந்திய பொறுப்பாசிரியர் நாஜ்னீன் கர்மாலி கூறுகையில், இந்தியாவின் வளர்ச்சி 2014ம் ஆண்டில் இருளில் இருந்து பிரகாசமான நிலைக்கு மிக விரைவாக முன்னேற்றம் கண்டுள்ளது.  புதிய மத்திய அரசு அமைந்த பின்பு பங்கு சந்தை ஏற்றம் அடைந்து இந்தியர்களின் சொத்து மதிப்பு இவ்வருடம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

லட்சுமி மிட்டலுக்கு 5வது இடம்

இந்த பட்டியலில் ஸ்டீல் தொழிலதிபர் லட்சுமி மிட்டலை 2வது இடத்தில் இருந்து பின்னுக்கு தள்ளி இந்தியாவின் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமான சன் பார்மசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் திலீப் ஷாங்வி 2வது இடத்துக்கு புதிதாக முன்னேறியுள்ளார்.  மிட்டல் 5வது இடத்துக்கு சென்று விட்டார்.

ஜப்பானின் டாய்ச்சி சாங்கியோ நிறுவனத்திடம் இருந்து கடந்த ஏப்ரலில் 400 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிற்கு தனது தொழில் போட்டியாளரான ரான்பேக்ஸி லேபரட்டரீஸ் நிறுவனத்தை சன் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியதை அடுத்து அதன் பங்குகள் உயர்ந்ததாக போர்ப்ஸ் தகவல் தெரிவிக்கின்றது.  59 வயதான ஷாங்வியின் சொத்து மதிப்பு 410 கோடி அமெரிக்க டாலரில் இருந்து 1,800 கோடி அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.

லாபம் ஈட்டிய அதானி


இந்த பட்டியலில் 4வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறியுள்ள அசீம் பிரேம்ஜியின் மொத்த சொத்து மதிப்பு 1,380 கோடி அமெரிக்க டாலரில் இருந்து 1,640 கோடி அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.  கடந்த ஜூலையில் அவரது விப்ரோ நிறுவனம் 10 கோடி அமெரிக்க டாலரை அவரின் மகன் ரிஷாத் தலைமையிலான புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட தொழிலுக்கு முதலீடாக அளித்தது.

அதிகம் லாபம் ஈட்டியவர் என்ற பெருமையுடன் இந்த பட்டியலில் 11 இடங்கள் முன்னேறி 11வது இடத்துக்கு வந்துள்ள கவுதம் அதானியின் நிறுவன பங்குகள் 450 கோடி அமெரிக்க டாலரில் இருந்து 710 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்து உள்ளது.  கடந்த ஆண்டு பட்டியலில் இருந்தவர்களில் தொழிலதிபர்களான பிரிஜ் பூஷண் சிங்கால் மற்றும் விஜய் மல்லையா ஆகியோர் உட்பட 11 பேர் இந்த ஆண்டுக்கான பட்டியலில் இல்லை. dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக