வியாழன், 25 செப்டம்பர், 2014

சிவசேனா பாஜக கூட்டணி முறிந்தது ! மகாராஷ்ட்ராவில் 25 ஆண்டுகால கூட்டணி டமால் !

மகாராஷ்டிர மாநிலத்தில் 25 ஆண்டுகாலம் கூட்டணியாக இருந்த பா.ஜ.க.வும், சிவசேனாவும், அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தங்கள் கூட்டணியை முறித்துக்கொண்டுள்ளன. இது குறித்து பா.ஜ.க. தலைவர் தேவேந்திர பத்னாவிஸ் அளித்த பேட்டி வருமாறு:- நாங்கள் கூட்டணியை தக்க வைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் சிவசேனா தனது நிலையிருந்து கீழிறங்கவில்லை. சிறிய கட்சிகளுக்கு தொகுதிகள் வழங்க அக்கட்சி முன்வரவில்லை. அக்கட்சிகளை ஒதுக்கித் தள்ள முடியாது. எனவே, கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்று முடிவு செய்துள்ளோம். இனி பேச்சுவார்த்தை நடத்த நேரமில்லை. கனத்த இதயத்துடன் தான் இந்த முடிவை எடுத்துள்ளோம். இனி எங்கள் பாதையில் ஐந்து சிறிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணியாக தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக