சனி, 27 செப்டம்பர், 2014

தீர்ப்பு நெகடிவ் ! அசம்பாவிதங்களுக்கு இடம் கொடுக்க மாட்டோம் ! முதல்வர் சித்தராமையா உறுதி !

எவ்விதமான அசம்பாவிதங்களும் நடக்க விடமாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று (சனிக்கிழமை) பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.தீர்ப்பையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக பெங்களுரு காவல்துறை ஆணையர் எம்.என்.ரெட்டி தெரிவித்துள்ளார்.இந்தநிலையில் கர்நாடகாவில் எவ்விதமான அசம்பாவிதங்களும் நடக்க விடமாட்டோம் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்படும் எனவும் அவர் கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக